Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கையும் கைப்பற்றியது கூட்டமைப்பு!!

Featured Replies

  • வலி.வடக்கையும் கைப்பற்றியது கூட்டமைப்பு!!
 
 

வலி.வடக்கையும் கைப்பற்றியது கூட்டமைப்பு!!

 

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சோ. சுகிர்தன் 20 வாக்குகளால் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்ப்பில் போட்டியிட்ட தா.நிகேதன் 6 வாக்குகளைப் பெற்றார்.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

http://newuthayan.com/story/80572.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலி.வடக்கிலும் கூட்டமைப்பு ஆட்சி – கை, யானை, வீணை கைகொடுத்தன

 

tna-300x200.jpgவலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை நடந்த சபையின் முதல் அமர்வில், தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.  இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சோ.சுகிர்தனும்,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தாயுமானவன் நிகேதனும் தவிசாளர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சோ.சுகிர்தனுக்கு 20 வாக்குகளும், தா.நிகேதனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.

ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக்கட்சி என்பன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரை ஆதரித்தன.

ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.  தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்தது.

இதையயடுத்து, உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பொன்னம்பலம் இராஜேந்திரம் தெரிவு செய்யப்பட்டார்.

வலி.வடக்கு பிரதேச சபையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களையும், ஈபிடிபி 8 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி , மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 2 ஆசனங்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/04/02/news/30167

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளக்கம் தேவை யாராவது விளக்கம் சொன்னால் பரவாயில்லை இந்த "கைப்பற்றியது " எனும் சொல்லுக்கு ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.