Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளவும் அதே வடிவத்தில்! அதே இடத்தில்! திலீபனது நினைவிடம்!

Featured Replies

மீளவும் அதே வடிவத்தில்! அதே இடத்தில்! திலீபனது நினைவிடம்!

 

 
 

அகிம்ஷை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபனது நினைவிடம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் ஜனநாயகபோராளிகள் கட்சியால் மீள்கட்டுமானம் செய்யப்படவுள்ளது.

New_Layout__3_.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் கௌரவமான அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்ஷை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபன் அவர்களது நினைவிடம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமானம் மேற்கொள்வதற்கான பூர்வாங்க பணிகள் யாழ் மாநகரசபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாநகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ்த் தேசியகூட்டமைப்பினரால் நிறுவப்பட்டிருக்கும் சூழ்நிலையில்  முதலாவது உத்தியோக பூர்வவேலைத்திட்டமாக இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

http://www.virakesari.lk/article/32218

  • தொடங்கியவர்

பழைய வடிவில் 23 அடி உயரத்தில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும்…

3.jpg?resize=640%2C360
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் , உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் இன்று ஆராய்ந்தனர்.

 

இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தி 1987ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவாக நல்லூரில் தூபி அமைக்கப்பட்டது. யுத்தகாலத்தில் அந்தத் தூபி அரச படைகளால் அழிக்கப்பட்டது. அதனை மீளவும் அதே வடிவில் சீரமைப்பது தொடர்பிலேயே இன்று ஆராயப்பட்டது.

இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

2-1.jpg?resize=640%2C4801-1.jpg?resize=640%2C480

http://globaltamilnews.net/2018/73638/

8 hours ago, நவீனன் said:

தமிழீழ விடுதலைப்புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் கௌரவமான அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்ஷை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபன் அவர்களது நினைவிடம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமானம் மேற்கொள்வதற்கான பூர்வாங்க பணிகள் யாழ் மாநகரசபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நல்ல விடயம்!

திருடர்கள், குறிப்பாக தமிழரசுகட்சிக் கயவர்கள், அரசியலில் மக்களை ஏமாற்ற இப்படி எதையாவது செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் ...இளயவர்கள் வரும் பொழுது சில நல்ல காரியங்களை செய்வார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.