Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது

Featured Replies

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது
 
 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 76 பேரும், வாக்களித்துள்ளார்கள். மேலும் 26 வாக்களிக்கவில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நம்பிக்கையில்லா-பிரேரணை-தோற்கடிக்கப்பட்டது/150-213905

 

  • தொடங்கியவர்

நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி

 

parliament-300x200.jpgசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை  சற்று முன்னர்,  46  வாக்குகளால் தோல்வியடைந்தது.

இன்று காலை 9 மணி தொடக்கம், நம்பிக்கையில்லா பிரேரணை  மீது  நடத்தப்பட்ட விவாதத்தை அடுத்து, இரவு 9.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 76  வாக்குகளும் அளிக்கப்பட்டன.  26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் எதிர்த்து வாக்களித்தனர். ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஆதரித்து வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜேதாச ராஜபக்ச எதிர்த்து வாக்களித்தார்.

 

http://www.puthinappalakai.net/2018/04/04/news/30221

இரண்டு தமிழின படுகொலைகாரக் கும்பல்களுக்கு இடையிலான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்தமையால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழின படுகொலைகாரக் கும்பல்களுக்கு இடையிலான இந்த வாக்கெடுப்பில் கைக்கூலி, ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் முண்டியடித்து வாக்களித்துள்ளனர். 

  • தொடங்கியவர்

பிரேரணையை வெற்றிகொண்ட பிரதமரின் அதிரடிக் கருத்து

 

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ranil-wickremesinghe.jpgபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில்  இடம்பெற்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்தது.

இதையடுத்த பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு சற்றுமுன்னர் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம்.

இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்ட செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/32245

  • தொடங்கியவர்

மேலதிக 46 வாக்குகளினால் வெற்றிபெற்றார் ரணில். கொழும்பில் வெடி கொழுத்தி ஆதரவாரம்

 

அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 46 மேலதிக வாக்குகளினால் வெற்றியடைந்துள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் பெறப்பட்டன. 26 உறுப்பினர்கள் வாக்கொடுப்பில் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் விவாதத்தில் பங்கொள்ளவில்லை. ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30க்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையில் அறிவித்தார்.

அதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கைட்டி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமைதியாக சபையை விட்டு வெளியேறினர். ஜே.வி.பி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் உரையாடினர்.

அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. சிவசக்தி ஆனந்தனும் ஆதரவாக வாக்களித்தார்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் ஏ.எச்எம்.பௌசி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலும் புநகர் பகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி மகிழ்ச்சி வெளியிட்டதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/Ranil-win

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.