Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நாளில் நிகழ்ந்தவை

Featured Replies

  • தொடங்கியவர்

மே 23 ஆண்டின் 143ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன

World Turtle Day

1844 - பஹாய் சமயம் பாரசீக நாட்டில் பாப் (Bab) அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

1873 - சான் பிரான்சிக்கோவில் முதல் தடவையாக தபாலட்டை விற்கப்பட்டது

1568 - ஸ்பெயினிடம் இருந்து நெதர்லாந்து விடுதலையை அறிவித்தது.

1949 - ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது

  • Replies 107
  • Views 19.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மே 24 ஆண்டின் 144ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.

எரித்திரியா: விடுதலை நாள்

  • 1738 - மெதடிஸ்த இயக்கம் ஜோன் வெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது. (Aldersgate Day).
  • 1956 - சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.
  • 1993 - எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.
  • 2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.
  • 2000 - இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
  • 2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது
  • 1893 - நயாகரா பார்க் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்ட தினம்
  • 1993 - Windows NT அறிமுகமான தினம்
  • 1941- பாடகர் பாப் டைலான் பிறந்த தினம்
  • 1844- சாமுவேல் மோர்ஸ் முதல் தந்தியை அனுப்பிய தினம்
  • 1954 - லுஃப்தான்சா விமான சர்வீஸ் ஆரம்பித்த தினம்

Edited by வானவில்

  • தொடங்கியவர்

மே 25 ஆண்டின் 145ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன

ஆர்ஜென்டீனா - மே புரட்சி நாள்

சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்

லெபனான் - விடுதலை நாள்

  • 1810 - புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
  • 1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது. டாங் சிங்-சுங் அதன் அதிபரானார்.
  • 1955 - ஐக்கிய அமெரிக்காவில் கான்சாஸ் மாநிலத்தில் உடால் நகரில் நிகழ்ந்த சூறாவளியில் 80 பேர் கொல்லப்பட்டு 273 பேர் காயமடைந்தனர்.
  • 1977 - ஸ்டார் வோர்ஸ் படம் வெளிவந்தது.
  • 1979 - சிக்காகோவில் அமெரிக்க விமானம் டிசி-10 விபத்துக்குள்ளாகியதில் 273 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1985 - வங்காள தேசத்தில் நிகழ்ந்த சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1997 - சியேரா லியோனில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதன் அதிபர் அஹமது கப்பா பதவியிழந்தார்.
  • 2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து முற்றாக வெளியேறினர்.
  • 2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 2002 - சீனாவைச் சேர்ந்த போயிங் விமானம் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2002 - மொசாம்பிக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

  • தொடங்கியவர்

மே 26 ஆண்டின் 146ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.

அவுஸ்திரேலியா - National Sorry Day

போலந்து - அன்னையர் நாள்

ஜோர்ஜியா - தேசிய நாள்

  • 1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1912 - இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
  • 1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
  • 1966 - பிரித்தானிய கயானா விடுதலை யடைந்து கயானா ஆனது.
  • 1987 - யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படைனரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
  • 2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
  • 1981 சத்ய பால் அசிஜா என்னும் இந்தியர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேருக்கான் முதல் Patent பெற்றநாள்
  • 1872 தீயணைப்புக் கருவிக்கான Patent வழங்கப்பட்ட தினம்

  • தொடங்கியவர்

மே 27 ஆண்டின் 147ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன

பொலீவியா - அன்னையர் நாள்

நைஜீரியா - சிறுவர் நாள்

  • 1965 - அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
  • 1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
  • 1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் (Alexander Solzhenitsyn) 20 வருடங்களின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.
  • 1997 - முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
  • 2006 - ஜாவாவில் நிகழ்ந்த (உள்ளூர் நேரம் காலை 5:53:58, UTC நேரம் மே 26 இரவு 10:53:58) நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.
  • 1964 - ஜவஹர்லால் நேரு இறந்த தினம்
  • 1977- மகெல ஜயவர்தன பிறந்த தினம்

  • தொடங்கியவர்

மே 28 ஆண்டின் 148ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன

அசர்பைஜான், ஆர்மீனியா - குடியரசு நாள்

பிலிப்பீன்ஸ் - தேசிய கொடி நாள்

1958 - இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்த்து.

1964 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

1987 - மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.

1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர்.

1995 - ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1923 - இந்திய நடிகர், அரசியல்வாதி என். டி. ராமராவ் பிறந்த தினம்

1980 - தமிழ் எழுத்தாளர் ம. சிவசுப்பிரமணியன், பிறந்த தினம்

1884 - ஈழத்தின் தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், இறந்த நாள்

1972 - ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் எட்டாம் எட்வேர்ட்,இறப்பு

  • தொடங்கியவர்

மே 29 ஆண்டின் 149ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன

நைஜீரியா - ஜனநாயக நாள்

  • 1453 - ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில்லைக் கைப்பற்றினர்.
  • 1886 - கொக்கக் கோலா மென்பானத்திற்கான முதலாவது விளம்பரத்தை ஜோன் பெம்பர்ட்டன் வெளியிட்டார்.
  • 1903 - சேர்பியாவின் மன்னர் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அரசி டிராகா இருவரும் புரட்சி ஒன்றில் கொல்லப்பட்டனர்.
  • 1914 - அயர்லாந்து பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1024 பேர் பலியாயினர்.
  • 1947 - இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1953 - சேர் எட்மண்ட் ஹில்லரி, செர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.
  • 1972 - டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியப் பிரஜைகள் சுட்டதில் 26 பேர் பலியாயினர்.
  • 1982 - சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1985 - பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1990 - போறிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
  • 2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

  • தொடங்கியவர்

மே 30 ஆண்டின் 150ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன

  • 1913 - அல்பேனியா தனி நாடாகியது.
  • 1941 - பிபிசி தமிழோசை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1966 - கொங்கோவின் முன்னாள் பிரதமர் எவறிஸ்டே கிம்பாவும் பல அரசியல்வாதிகளும் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
  • 1981 - வங்காள தேச அதிபர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1987 - கோவா தனி மாநிலமாகியது.
  • 1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
  • 2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
  • 1899 - தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர் மணிக்கொடி சீனிவாசன் (குப்புசாமி சீனிவாசன்) பிறந்த தினம்
  • 1931 - சுந்தர ராமசாமி பிறப்பு, நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர்
  • 1981 - ஸியாஉர் ரகுமான் இறப்பு, வங்காள தேச அதிபர் (பி. 1936)

  • தொடங்கியவர்

மே 31 ஆண்டின் 151ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன

  • புகையிலை ஒழிப்பு நாள்

1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் யுத்தம் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் வந்தது.

1970 - பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 47,000 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - யாழ் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.

2005 - இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.

  • தொடங்கியவர்

ஜூன் 1ஆண்டின் 152ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன.

சமோவா - விடுதலை நாள் (1962)

துனீசியா - அரசியல் நிர்ணய நாள், வெற்றி நாள் (1959)

  • 0193 - ரோமின் மன்னன் டிடியஸ் ஜூலியானஸ் கொல்லப்பட்டான்.
  • 1978 - டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
  • 1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
  • 1959 - நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
  • 1964 - சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
  • 1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
  • 1981 - யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
  • 2001 - நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1999 - கிறிஸ்தோபர் கொக்கரல், காற்று மெத்தை உந்தைக் கண்டுபிடித்தவர் இறந்தார்
  • 1996 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் இறந்தார்
  • 2001 - பிரேந்திரா, நேபாள மன்னர் இறந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன, ஆனி 3க்கு பிறகு காணவில்லை?

  • தொடங்கியவர்

என்ன, ஆனி 3க்கு பிறகு காணவில்லை?

ஹீ ஹீ யாரப்பா ஆனி 2 & 3 எழுதினது? :) :P

Edited by வானவில்

  • தொடங்கியவர்

ஜூன் 2 ஆண்டின் 153ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன.

சமோவா - விடுதலை நாள் (1962)

துனீசியா - அரசியல் நிர்ணய நாள், வெற்றி நாள் (1959)

  • 1965 - வியட்நாம் போர்: முதலாவது தொகுதி அவுஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது.
  • 1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1910 - இங்கிலாந்தை சேர்ந்த் C.S றோல்ஸ் என்பவர் ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் விமானத்தில் வலம் வந்தார்
  • 1842 - பி. கந்தப்பிள்ளை பிறப்பு, (ஆராய்ச்சிக் கந்தர்), யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை.
  • 1882 - கரிபால்டி பிறப்பு, நவீன இத்தாலியை உருவாக்கியவர்.
  • 1981 - தாவீது அடிகள் பிறப்பு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர்

  • தொடங்கியவர்

ஜூன் 3 ஆண்டின் 154ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.

1962 - ஏர் பிரான்சின் போயிங் 707 பாரிசில் வீழ்ந்து நொருங்கியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - எட்வேர்ட் வைட் (Edward H. White) விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கரானார்.

1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.

2006 - மான்டிநீக்ரோ நாடு செர்பியா - மான்டிநீக்ரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது

1924 - மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிறப்பு

1961 - லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர் பிறப்பு

1966 - வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர் பிறப்பு

1975 - Eisaku Sato, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901) பிறப்பு

1657 - வில்லியம் ஹார்வி (William Harvey), ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1578) இறப்பு

1925 - வ. வே. சு. ஐயர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (பி. 1881) இறப்பு

1963 - பாப்பரசர் 23ம் அருளப்பர் (Pope John XXIII) (பி. 1881) இறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 3 ஆண்டின் 154ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.

1962 - ஏர் பிரான்சின் போயிங் 707 பாரிசில் வீழ்ந்து நொருங்கியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - எட்வேர்ட் வைட் (Edward H. White) விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கரானார்.

1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.

2006 - மான்டிநீக்ரோ நாடு செர்பியா - மான்டிநீக்ரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது

1924 - மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிறப்பு

1961 - லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர் பிறப்பு

1966 - வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர் பிறப்பு

1975 - Eisaku Sato, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901) பிறப்பு

1657 - வில்லியம் ஹார்வி (William Harvey), ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1578) இறப்பு

1925 - வ. வே. சு. ஐயர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (பி. 1881) இறப்பு

1963 - பாப்பரசர் 23ம் அருளப்பர் (Pope John XXIII) (பி. 1881) இறப்பு

**********

இதையும் சேருங்கோப்பா

வல்வை மைந்தன் பிறந்தநாள்.

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்

**********

இதையும் சேருங்கோப்பா

வல்வை மைந்தன் பிறந்தநாள்.

முந்தி அன்றைய தினமே பதிவேன் அதனால் உறவுகலின் பிறந்த தினங்களையும் இணைத்தேன் இப்போ அது முடிவதில்லை மன்னிக்கவும் மைந்தா

  • கருத்துக்கள உறவுகள்

வானவில் இதுக்கெல்லாம் போய் மன்னிப்பா?

  • தொடங்கியவர்

ஜூன் 4 ஆண்டின் 155ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 210 நாட்கள் உள்ளன.

  • கிமு 780 - முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
  • 1039 - மூன்றாம் ஹென்றி ரோமாபுரியின் சக்கரவர்த்தியானார்.
  • 1707 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் ஒல்லாந்தரினால் அமுல்படுத்தப்பட்டது.
  • 1917 - முதலாவது புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டன.
  • 1943 - ஆர்ஜெண்டீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ (Ramón Castillo) பதவியிழந்தார்.
  • 1970 - தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதல அடைந்தது.
  • 1979 - கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
  • 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
  • 1989 - ரஷ்யாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை வாயுக் குழாய் ஒன்றைக் கடக்கையில் இடம்பெற்ற விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர்

.

  • தொடங்கியவர்

ஜூன் 5 ஆண்டின் 156ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன.

உலக சூழல் தினம்

டென்மார்க் - அரசியல் நிர்ணய நாள் (Constitution Day)

சீஷெல்ஸ் - விடுதலை நாள்

  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ரோம் கூட்டுப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
  • 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • 1959 - சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
  • 1967 - இசுரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்தான், சிரியா மீது ஒரே நேரத்தில் தாக்குதலை ஆரம்பித்தன.
  • 1968 - அமெரிக்க அதிபராகப் போட்டியிட்ட ரொபேர்ட் எஃப். கென்னடி சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
  • 1969 - அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
  • 1974 - ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
  • 1977 - சீஷெல்சில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 1977 - முதலாவது தனிக்கணினி அப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.
  • 1979 - இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
  • 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
  • 2002 - , தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் இறப்பு
  • 2004 - , அமெரிக்க முன்னாள் அதிபர்ரோனால்டு ரேகன் இறப்பு

  • தொடங்கியவர்

ஜூன் 6ஆண்டின் 157ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.

தமிழீழம் - மாணவர் எழுச்சி நாள்

சுவீடன் - தேசிய நாள்

தென் கொரியா - நினைவு நாள் (Memorial Day)

குயின்ஸ்லாந்து நாள்

  • 1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
  • 1752 - மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது.
  • 1844 - வை.எம்.சி.ஏ (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
  • 1882 - பம்பாயில் இடம்பெற்ற சூறாவளியில் (cyclone) 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
  • 1981 - இந்தியாவில் தொடருந்து விபத்தில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1984 - இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
  • 1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.
  • 2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

ஜூன் 7ஆண்டின் 158ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன.

  • 1692 - ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டு 3000 பேர் படுகாயமடைந்தனர்.
  • 1832 - கனடாவில் காலரா காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
  • 1863 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
  • 1893 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.
  • 1905 - நோர்வே சுவீடனுடனான இணைப்பைத் துண்டித்தது.
  • 2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் கண்ணிவெடி வெடித்ததில் ட்ராக்டர் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டதோடு ஏனையவர்கள் காயமடைந்தனர்

  • தொடங்கியவர்

ஜூன் 8 ஆண்டின் 159ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன.

உலகக் கடல் நாள்

  • 1624 - பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 1992 - முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.
  • 1995 - படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
  • 2006 - அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்ல்ப்பட்டார்.

  • தொடங்கியவர்

ஜூன் 9 ஆண்டின் 160ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன.

  • 68 - ரோமாபுரியின் மன்னன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.
  • 1903 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
  • 1923 - பல்கேரியாவில் இடம்பெற்ற புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது

  • 1946 - ஆனந்தா மஹிடோல் (Ananda Mahidol) இறப்பு, (ராமா VIII), தாய்லாந்து மன்னர் (பி. 1925)
  • 1974 - Miguel Ángel Asturias, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1890)
  • 1834 - வில்லியம் கேரி இறப்பு, பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர் (பி. 1761)

  • தொடங்கியவர்

ஜூன் 10 ஆண்டின் 161ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

போர்த்துக்கல் - தேசிய நாள்

  • 1801 - சிவகங்கையின் சின்னமருது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும் என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
  • 1886 - நியூசிலாந்தில் டரவேரா எரிமலை தீக்கக்கியதில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடனம் செய்தது.
  • 1956 - அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1967 - இஸ்ரேலும் சிரியாவும் யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.
  • 1986 - மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1998 - சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
  • 2000 - இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
  • 2006 - ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • கிமு 323 - மகா அலெக்சாண்டர் பிறந்தார்

  • தொடங்கியவர்

ஜூன் 11 ஆண்டின் 162ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன

  • 1994 - அ. துரைராசா மறைவு பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)
  • 1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் (Gerasim Izmailov) அலாஸ்காவை அடைந்தார்.
  • 1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
  • 1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை அறிமுகப்படுத்தினார்.
  • 1963 - தெற்கு வியட்நாமில் மதச் சுதந்திரத்தை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.