Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்தேவி, நீலகிரி ரயில்களுக்கு `கார்டியன் ' பத்திரிகை தந்த கௌரவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லகின் தலை சிறந்த ரயில் வழித்தடங்களில் யாழ்தேவி மற்றும் நீலகிரி மலை ரயில்கள் இடம் பிடித்துள்ளன. 

நீலகிரி மலை ரயில்

லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற `கார்டியன் ' பத்திரிகை உலகின் தலைசிறந்த 18 ரயில் வழித்தடங்களை வகைப்படுத்தியுள்ளது. அதில், யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்லும் யாழ்தேவி இடம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் இந்தச் சேவை  2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் இந்த பாதை 314 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இலங்கையின் கலாசாரம் மற்றும்  பண்பாட்டு அடையாளமாகவும் இது  ரயில் பார்க்கப்படுகிறது. இதில், பயணிக்க 30 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். தமிழ் கலாசாரத்தை வெளிநாட்டினர் அறிந்து கொள்ள யாழ்தேவி உதவிகரமாக இருப்பதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது. 

யாழ் தேவி  சேவை

பட்டியலில் தமிழகத்தில் அடையாளமாகப் பார்க்கப்படும் நீலகிரி மலை ரயிலுக்கும் இடம் கிடைத்துள்ளது. 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுர் வரை செங்குத்தான மலைப் பாதையில் பல் சக்கர உதவியுடன் மேல் ஏறுகிறது. மலை ஏற நிலக்கரி இன்ஜீன் பயன்படுத்தப்படுகிறது. குன்னுரிலிருந்து உதகைக்கு பர்னஸ் ஆயில் இன்ஜீன் மூலம் இயக்கப்படுகிறது 250 பாலங்கள், 200க்கும் மேற்பட்ட வளைவுகள் 16 சுரங்கப்பாதைகள் கொண்ட இந்தப் பாதை தேயிலைத் தோட்டங்கள் , அடர்ந்த காடுகள், அருவிகளைக் கடந்து செல்கிறது. 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக நீலகிரி மலை ரயில் அறிவிக்கப்பட்டது. 

https://www.vikatan.com/news/tamilnadu/124491-yal-devi-and-nilgiri-mountain-railway-best-train-routes-in-world.html

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு புகையிரந்தங்களுமே... தமிழ் பகுதிகளில் ஓடுவதால்  இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஒரு சில நாட்களுக்கு முன் பார்த்த காணொளி ஒன்றில்...  
யாழ்தேவியில் தனியே பயணித்துக் கொண்டிருந்த  தமிழ்ப் பெண் ஒருவரை,
புகையிரத ஊழியர் தகாத கெட்ட வார்த்தைகளால் பேசி, அவருக்கு அருகில் இருந்து பெரிய இம்சை கொடுத்ததை பார்த்தேன்.
காணொளி கிடைத்தால்... இணைத்து விடுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கார்டியன் பத்திரிகைக்கும் அனுப்பிவிடுங்கோ....

7 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு புகையிரந்தங்களுமே... தமிழ் பகுதிகளில் ஓடுவதால்  இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஒரு சில நாட்களுக்கு முன் பார்த்த காணொளி ஒன்றில்...  
யாழ்தேவியில் தனியே பயணித்துக் கொண்டிருந்த  தமிழ்ப் பெண் ஒருவரை,
புகையிரத ஊழியர் தகாத கெட்ட வார்த்தைகளால் பேசி, அவருக்கு அருகில் இருந்து பெரிய இம்சை கொடுத்ததை பார்த்தேன்.
காணொளி கிடைத்தால்... இணைத்து விடுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.