Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகள் தாக்குதல்.. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!!! -பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகள் தாக்குதல்.. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!!!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் முதல் தடவையாக வான் புலிப் படையைச் சேர்ந்த இரு விமானங்கள் பறந்துசென்று தலைநகரமான கொழும்புவில் உள்ள சிங்கள விமானப் படையைச் சேர்ந்த கட்டுநாயகா விமானத் தளத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துவிட்டு பத்திரமாகத் திரும்பியுள்ளன என்ற செய்தி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகாலமாக போர் நிறுத்த உடன்பாட்டினை விடுதலைப் புலிகள் உண்மையாக கடைப்பிடித்தனர். ஆனால் சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கத் தவறியதோடு தமிழர்கள் வாழும் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தியும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்து வந்தது. சிங்கள இராணுவத்தின் இந்த அட்டுழியத்தை சர்வதேச நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டியும் கூட எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் வான் புலிகள் நடத்தியிருக்கக்கூடிய வெற்றிகரமானத் தாக்குதலை கண்டிக்கவோ குறைசொல்லவோ யாருக்கும் தகுதி இல்லை.

கடந்த பல மாதங்களாக தொடர்ந்து ஆத்திரமுட்டப்பட்டு வந்தபோதிலும் விடுதலைப் புலிகள் அமைதிக் காத்தனர். அதன் விளைவாக இழப்புகளுக்கும் ஆளானார்கள். விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுவிட்டதாகக் கருதி இந்தியாவில் உள்ள சில தலைவர்களும் பத்திரிகைகளும் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டனர். ஆனால் இப்போது வான்புலிகள் தாக்குதலுக்குப் பிறகு பொய்ப்பிரச்சாரம் செய்தவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் வலிமை ஒருபோதும் குறையவில்லை. முன்னிலும் அதிகமாயிருக்கிறது என்பதை இப்போதாவது உணர்ந்து சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்தியா சிங்கள அரசை கண்டிக்கவும் இனப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை மேள்கொள்ளுமாறும் வலியுறுத்தவும் முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

-தென் செய்தி

துயரங்கள் பட்டு தமிழீழ மக்கள் அல்லல் படும் போதெல்லாம் சுயநலமில்லாமல் எம்மோடே துணை நின்ற உலக தமிழர்களின் தலைவா ஐயா உங்கள் மகிழ்ச்சியினைப் பார்த்து நாங்களுடன் சேர்ந்து குதுகளிக்கிறோம். உங்கள் இதயம் இந்த செய்தியால் ஆனந்தத்தில் மிதக்கட்டும்.

தமிழினத்தின் மீது உண்மையான பற்றுள்ள எவரும் மகிழ்யடைவார்கள். பழநெடுமாறன்

போன்ற ஈழத்தமிழரின்பால் அன்புகொண்ட இன்னும் பலர் நிச்சயமாக மகிழ்தேயிருப்பார்கள்

Edited by Iraivan

தமிழனுக்கு எங்கு அடிவிழுந்தாலும் அடி வாங்கும் தமிழனுக்கு வலிப்பதை விட எங்கள் பழ.நெடுமாறன் ஐயாவிற்குத் தான் முதலில் வலிக்கும்.

அந்தளவிற்கு தமிழின உணர்வு உள்ளவர். ஈழத்தமிழினம் விரைவில் விடுதலையடைந்து தனியரசை நிறுவி மகிழ்வுடன் வாழ்வதைப் பார்த்து ஐயா பெருமகிழ்வும், பெருநிறைவும் கொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் மீது உண்மையான பற்றுள்ள எவரும் மகிழ்யடைவார்கள். பழநெடுமாறன்

போன்ற ஈழத்தமிழரின்பால் அன்புகொண்ட இன்னும் பலர் நிச்சயமாக மகிழ்தேயிருப்பார்கள்

***********************************************************************

ஈழத்தில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வாழ்ந்த சில தமிழரே இந்த வெற்றியை ஜீரணிக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேனையிலே, தானாட தசையாடும் என்பது போல் எமது உடன் பிறப்புக்களின் அவலங்களின் பங்கெடுத்து பல தடவைகள் சிறைவாசம் இருந்தும் எங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களது தேசியத் தலைவர் அவர்களின் பாசத்திற் குரியவரான நெடுமாறன் ஜயா அவர்கட்கு நாம் தலை வணங்க கடமைப் பட்டுள்ளோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவித பங்களிப்புச் செய்யாமல் சிங்களவன் அடிக்கும் போது புலிகளைக் குறை குறும் ஈழத்தமிழர்களில் சிலர் இருக்கும் போது, தமிழகத்தில் எமக்காக, தமிழுக்காக, தமிழீழத்துக்காக பொடா சட்டத்தில் சிறைக் கைதியாகக் கஸ்டப்பட்டு இருந்த நெடுமாறன் அய்யாவுக்கு நாம் எப்பொழுதும் கடமைப் பட்டுள்ளோம்.தமிழை, தமிழ் மண்ணை நேசிக்கும் தமிழர்கள் எல்லொருக்கும் சந்தோசமான நாள் நேற்று. வை.கோ, திருமாவளவன் போன்றவர்களும் நேற்று செய்தி கேட்டு சந்தோசப்பட்டிருப்பீனம்.

இலங்கை துடுப்பாட்ட அணி இந்தியாவை வென்றபோது தொலைக்காட்சியில் ரஞ்சித் பெர்ணான்டோ, இங்கிலாந்து டெவிட் லோயிட்டிடம் இலங்கையில் இருப்பவர்கள் எல்லோரும் வீதிகளில் சந்தோசத்துடன் ஆட்டம் ஆடிக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்றார். ஆனால் உலகத்தமிழர்கள் எல்லோரும் நேற்றைய நிகழ்வினைக் கேள்விப்பட்டு இதை விட சந்தோசப்பட்டிருப்பீனம். வன்னியில் ஈழனாதம் பத்திரிகை வாங்க சென்ற மக்களினைப் பார்த்தீர்களா? எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவித பங்களிப்புச் செய்யாமல் சிங்களவன் அடிக்கும் போது புலிகளைக் குறை குறும் ஈழத்தமிழர்களில் சிலர் இருக்கும் போது, தமிழகத்தில் எமக்காக, தமிழுக்காக, தமிழீழத்துக்காக பொடா சட்டத்தில் சிறைக் கைதியாகக் கஸ்டப்பட்டு இருந்த நெடுமாறன் அய்யாவுக்கு நாம் எப்பொழுதும் கடமைப் பட்டுள்ளோம்.தமிழை, தமிழ் மண்ணை நேசிக்கும் தமிழர்கள் எல்லொருக்கும் சந்தோசமான நாள் நேற்று. வை.கோ, திருமாவளவன் போன்றவர்களும் நேற்று செய்தி கேட்டு சந்தோசப்பட்டிருப்பீனம்.

இலங்கை துடுப்பாட்ட அணி இந்தியாவை வென்றபோது தொலைக்காட்சியில் ரஞ்சித் பெர்ணான்டோ, இங்கிலாந்து டெவிட் லோயிட்டிடம் இலங்கையில் இருப்பவர்கள் எல்லோரும் வீதிகளில் சந்தோசத்துடன் ஆட்டம் ஆடிக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்றார். ஆனால் உலகத்தமிழர்கள் எல்லோரும் நேற்றைய நிகழ்வினைக் கேள்விப்பட்டு இதை விட சந்தோசப்பட்டிருப்பீனம். வன்னியில் ஈழனாதம் பத்திரிகை வாங்க சென்ற மக்களினைப் பார்த்தீர்களா? எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள்.

*******************************************

கந்தப்பு உங்களைப் போன்ற உணர்வுகள் இயற்கையாகவே உருவாகவேண்டும்.

நெடுமாறன் ஜ்யா சொன்னது உண்மை இங்கு பலர் தாகுட்தல் நடத்தும்பாலத்தை புலிகள் இழந்துவிட்டதாக வெளிப்படையாக கருத்து கூறினர் ஒருவர் கேட்டார் கொட்டான் பாவித்துதான் இனி புலிகள் சண்டை பிடிக்கவேணுமென ஆனால் புலிகள் காய்களாஇ வெகு ஜாக்கிரதையாக நகர்த்தி உள்ளனர்.தக்குதல் நடந்த போது அவசர அவசரமாக இந்த ட்தாக்குதல் நடத்தபட்டிருந்தால் சர்ர்வதேசம் குதியம் குத்தி இருக்கும் ஆனால் இன்று பெரும்பாலான நாடுகள் சம்பிராயபூர்வமாக்க கூட எந்த கண்டன அறிக்கையை கூட வெளியிடவில்லை.எம்மது போராட்டத்தின் நியாயபூர்வ காரணங்களை அங்கீகரித்ததாகத்தான் இதை எடுக்கவேண்டும்.அல்லது எம்மக்கள் கொல்லப்படுகையில் கண்டன அறிக்கை வெளியிடாதாவர்களுக்கு இது மனதை குத்தி இருக்கும்.இனியாவது புலிகளின் ராஜதந்திர நகர்வை புரிந்து கொண்டு அமைதியாக இருந்தால் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போல வெளி நாட்டில் ஒடி வந்து வாழ்பவர்கள் ஒருவருக்கும் புலிகளைப்பற்றி குறை சொல்ல உரிமையில்லை. அவர்கள் உயிரைக்குடுத்து காட்டிலும் சாப்பாடு இல்லாமல் சொந்த மண்ணுக்காக, தமிழுக்காத் தியாகம் செய்கிறார்கள். அவர்களின் கால் தூசுக்கு நான் உட்பட ஒருவரும் சமமல்ல. வெளினாட்டில் இருந்து புலிகளைக் குறை சொல்பவர்களுக்கு, ஏன் புலிகள் மெளனமாக இருக்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு - தலைவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. முக்கிய நேரத்தில் முக்கிய முடிவினை எடுப்பார். தலைவர் சொல்லி இருக்கிறார். இடையில் நடப்பது பற்றி கவலைப்பட வேண்டாம் என்று. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

எத்தனையோ வருடகாலமாக ஈழத்தமிழருக்கு உண்மையாக் குரல் கொடுக்கும் ஒரு மாமனிதர். தடைகள் எத்தனை வந்தபோதும் தயங்காது தனது உதவிக் கரங்களை எம் பால் நீட்டியவர். இன்று எததனையோ அரசியல் வாதிகள் எமக்குதவ முன்வந்தாலும் அதில் ஒரு சுயநலப் போக்கிருக்கும். தலைவருடன் தோள் மேல் கைவைததுப் படம் எடுத்தப் பம்பல காட்டியவர்கள் அரசியல் லாபத்திற்காகவே அதை உபயோகித்தனர். ஆனால் பல காலமாக ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்த வருபவன என்ற வகையில், இந்தப் பெரியவர் எந்த எதிர்பார்ப்போ சுயநலமோ இன்றி எமக்காய் உண்மையாய் உழைப்பவர் என்பதனை அறிய முடிந்தது. போற்றி முன்னிலைப்படுத்தக் கூடிய ஒரு தமிழீழப் பற்றாளர்.

ஈழத்திலிருந்து

ஜானா

ஐயா நான் இங்கு ஒரு என்னுமொரு புலிகள் பெரும் சப்போட்டர் வீடை இருந்து வந்து கருத்து எழுதுகீறேன். உங்களின் நண்பன் அவுஸ்திரேலியா வந்தா நீங்க அவரிட்ட தான் நேரவருவீர்களாம். அப்படி உங்களொட வாழ்ந்த மனிதன் இன்று வாழ்வுக்கு போராடுகிறார். உங்களுக்கு விளங்கும் நான் யார இங்கே குறிப்பிடுகிறேன். வேலைக்கு சாட்டுப்போக்கு சொல்லிப்போட்டு ஆவரின் ஆனந்தத்தில் சேர்ந்து கலந்திட போனேன். வீடெல்லாம் முந்தி பிரபாகரனின் படத்துடன் உங்களின் படத்தினை வத்திருந்த மனிதர். நான் சொன்னேன் இப்படி ஐயா சந்தோசப்பட்டாரெண்டு. தன் கல்யாண் படம் இருந்த இடத்தில் உங்கட என்னுமொரு படத்தினை கொண்டு வந்து போட்டு எனை அழ பண்ணிப்போட்டார். அப்படி ஐயா எங்கள் தமிழீழ மக்களின் நன்றி உணர்வு. உலகத் தமிழ்ழீழ போரவையினை உலகம் பூரா கொண்டு நடத்தி பிரபாகரனுக்கு வலுசேர்க்கும் உங்கள் கொள்கை உலகலாவிய படுத்தப்படவேண்டும் என்று ஒரு அன்புக்கட்டளை இட்டு என்னை ஆரத்தளுவி என்னை வழி அனுப்பி வைத்தார். ஐயா நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்.

தனது உயிரிலும் மேலாக தமிழையும் தாய் மண்ணையும் தமிழ் மக்களையும்

நேசிக்கும் அரும் பெரும் அற்புத போராளி. எந்த கலக்கமம் இன்றி எந்த துயரிலும்

ஈழ தமிழருக்காக பல கஸ்ட நஸ்ரங்களில் பங்கெடுத்து அந்த தோழர்களை காக்கவும் அந்த

மக்களிற்கு குரல் கொடுக்கவும் தவறியதேயில்லை.

மேற் சொன்ன கருத்தாளரின் கருத்துக்கள் போலவே சிறை சென்று

எம் தமிழருக்காக குரல் கொடுத்ததிற்காக. அந்த மக்களின் அவலத்தை இந்தியா

மக்களிற்கும் அரசிற்கும் சொன்ன குற்றத்திற்காக பொடாவில் தள்ளப்பட்டு

உடல் நலம் கன்றி இரந்த போதும் தொடர்ந்து ஈழத் தமிழருக்காய்

குரல் கொடுத்து வரும் ஒரு அற்புத போராளி.

எந்த வேளை தொலைபேசியில் அழைத்தாலும் சலிக்காது

பதில் தரும் ஒர மனிதர். உதவும் மனம் கொண்ட கொடையாளி.

இவர்களோடு ஒப்பிடும் போது நாமெல்லாம் எந்தளவு..??

அப்பாடியான அவரின் மகழ்வோடு இழுத் தமிழனமு;

சேர்ந்து பங்கேற்று பரிமாறி கொள்கிறது.

இந்த வேளையில் ஈழுத் தமிழினம் அவரை கையெடுத்து

வணங்கி நன்றி கூறிக் கொள்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுள்ள தமிழக அரசியலில் ,

நெடுமாறன் அவர்கள் ஒருவர் மட்டுமே நேர்மையான அரசியல்வாதி.

இவர்களைப் போன்றோருக்கு தமிழக மக்கள் முக்கியத்துவம் தராதது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் இழப்பேயென்றி அவரது கொள்கைக்கு அல்ல!!!

- கப்பல் பயணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவித பங்களிப்புச் செய்யாமல் சிங்களவன் அடிக்கும் போது புலிகளைக் குறை குறும் ஈழத்தமிழர்களில் சிலர் இருக்கும் போது....

.இவர்களை ஈழத்தமிழர்கள் என்று சொல்லத் தேவையில்லை...

கப்பலோட்டிய தமிழன் என்று தான் வரலாறு உண்டு ஈழத்தமிழனால் விமானப்படை கண்ட தமிழன் என்று வரலாறு பதிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.