Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோகணேசன் என்னை தீண்டினால், அவரின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் – சிவாஜி எச்சரிக்கை

Featured Replies

மனோகணேசன் என்னை தீண்டினால், அவரின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் – சிவாஜி எச்சரிக்கை

sivaji-vs-mano.jpg?resize=660%2C400
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக அமைச்சர் மனோகணேசன் இருப்பதனால் , அரசியல் நாகரிகம் இன்றி அவரை விமர்சித்தால் , அது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் இன்று விமர்சிக்கவில்லை. என்னை மீண்டும் சீண்டினால் விமர்சிப்பேன் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

வடமாகாண சபை உறுப்பினரை அமைச்சர் மனோகணேசன் ‘கோமாளி’ என விளித்து தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

என்னுடைய கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் , அதனை அரசியல் நாகரிகத்துடன் தெரிவிக்க வேண்டும். எனது கருத்துக்களில் விமர்சனங்கள் இருந்தால் அவை தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வரலாம். பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராகவே உள்ளேன்.

அமைச்சரை போல அரசியல் நாகரிகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கூட என்னால் விமர்ச்சிக்க முடியும். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக இருப்பதனால் அவரை விமர்சிப்பது மலையக மக்களை புண்படுத்தும் என்பதனால் விமர்சிக்க வில்லை. தொடர்ந்து என்னை சீண்டினால் , அமைச்சரின் கடந்த காலங்களை நான் தூசு தட்டுவேன்.

அவர் தான் ஏறி வந்த ஏணியை தற்போது எட்டி உதைத்துள்ளார். அவரை எறிவருவதற்கு , ஏணிப்படிகளாக இருந்த பிரபாகணேசன் , குமரகுருபரன் , வேலணை வேணியன் ஆகியோர் தற்போது எங்கே ? அவர்களை எட்டி உதைத்து விட்டார்.

நடந்தது இனவழிப்பு தான் என சொல்வதற்கு அரசாங்கத்திற்கு அடிமையாக இருக்கும் அடிமை புத்தி சொல்ல விடாது தடுக்கலாம். ஆனால் , நாம் இனவழிப்பு நடந்தது என்பதனை ஆணித்தரமாக சொல்லுவோம்.

மலையாக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனவழிப்பின் ஓர் அங்கம் தான் என்பதனை அமைச்சர் அறிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/80291/

உண்மையை சொன்னால் கோபம் வருவது தமிழர்களின் அடிப்படை இயல்புகளில் ஒன்று.

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கும் அவர்கள் விடுதலைப்போருக்கும் 
துரோகமிழைத்து பிழைக்கும் சில கூட்ட்ங்கள்  வாழும் காலத்தில் 

துரோகிகளுக்கு துரோகம் இழைத்த சிலரும் உண்டு 

அது இரண்டாம் நிலை.

மூன்றாம் நிலைதான் என்ன என்று புரியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.