Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா

Featured Replies

சிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா

 

uk-flag-300x200.jpgசிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் சிறிலங்கா படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ நாளிதழ் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், சிறிலங்காவின் நடந்த கொடூரமான போரின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய அரசு சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தப் பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

1978 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 200 கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும், இவை எப்போது- எங்கு- யாரால் அழிக்கப்பட்டன என்ற விபரங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிடவில்லை.

பிரித்தானியாவின் பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்த போதும், இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும் இவை பாதுகாக்கத் தேவையற்றவை என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணிகம் நியாயப்படுத்தியுள்ளது.

1978இற்கும் 1980இற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான 158 ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை வெளிவிவகாரப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால், சிறிலங்காவின் பாதுகாப்பு நடைமுறைகளில் பிரித்தானியாவின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக , மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறிலங்கா தொடர்பான நிபுணரும், குற்றவியல் நிபுணருமான Rachel Seoighe தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், உலகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

கென்யா போன்ற பல இடங்களில் நடந்த தவறுகளை மறைப்பதற்காக, அதிகாரபூர்வ ஆவணங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அழித்து விட்டனர் என்பது தெரியும்.  காணாமல் ஆக்கப்படுதல்கள் பாரிய கொடூரங்கள் நிகழ்த்தப்பட்ட சிறிலங்காவின் போரில், பிரித்தானியா எவ்வாறு உதவியது என்பது பற்றிய தகவல்களை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அழிக்கப்பட்ட ஆவணங்களின் தலைப்புகளை வெளிவிவகாரப் பணியகம் பாதுகாக்கின்றது. அதன்படி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆயுதங்கள் விற்பனை, வெளிநாட்டு உதவி, அரசியல் புகலிடக் கோரிக்கைகள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய விரிவான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள சில ஆவணங்களின் படி, சிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதக் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்ஐ 5 மற்றும் எஸ்ஏஎஸ் அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக அனுப்பப்பட்டமை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

எனினும், இவை தொடர்பான விரிவான விபரங்களை உள்ளடக்கிய பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ‘தி கார்டியன்’ சுட்டிக்காட்டியுள்ளது

http://www.puthinappalakai.net/2018/05/24/news/31043

  • தொடங்கியவர்
புலிகளை அழிக்க உதவிய பிரித்தானியா; ஆவணங்கள் அழிப்பு
 

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200  ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு - 5) மற்றும்  எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

‘தி கார்டியன்’ ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான யுத்தத்தின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தவொரு பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளபோதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அதாவது இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று மூன்று தசாப்தங்களின் பின்னரான காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அந்த கோப்புகள் எங்கு? யாரால்? எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடவில்லை.

இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையின் பாதுகாப்பு நடைமுறைகளில் பிரித்தானியாவின் பங்களிப்பு மற்றும் தொடர்புகள் குறித்த, தகவல்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக, மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இலங்கைத் தொடர்பான நிபுணரும், குற்றவியல் நிபுணருமான ரெச்சல் செயோக் (Rachel Seoighe) தெரிவித்துள்ளார்.

மேலும், கென்னியா போன்ற பல இடங்களில் நடந்த குற்றங்களை மறைப்பதற்காக, உத்தியோகபூர்வ ஆவணங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன என்பது தெரியும்.  காணாமல் ஆக்கப்படுதல் கொடூரங்கள் இழைக்கப்பட்ட, யுத்தத்தில் பிரித்தானியாவின் பங்கு எவ்வகையது? எவ்வாறு உதவியது என்பது தொடர்பில் அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு காணப்படுகின்றது, எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/80565/

அப்போ புலிகளை அழிக்க இறுதிக்காலத்தில் பணியாற்றிய ஆவணங்களை பத்திரமாக வைச்சிருக்கிறீங்கள் தானே.

பழசென்று நினைச்சு புதுசையும் எரிக்கப்போறீங்கள் கவனம் பார்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

அப்போ புலிகளை அழிக்க இறுதிக்காலத்தில் பணியாற்றிய ஆவணங்களை பத்திரமாக வைச்சிருக்கிறீங்கள் தானே.

பழசென்று நினைச்சு புதுசையும் எரிக்கப்போறீங்கள் கவனம் பார்த்து.

பழசை எரிப்பது குறியாக  இருந்திருக்க  வாய்ப்பில்லையே...???

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.