Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துத் தேசியமும் இலங்கையின் யதார்த்த அரசியலும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத் தேசியமும் இலங்கையின் யதார்த்த அரசியலும்.

சுயாந்தன்

வடமாகாணத்தில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டவன் என்ற முறையிலும், அங்குள்ள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்ற அபிலாஷையையும் கொண்டு இந்துத் தேசியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் இலங்கைக்கான தேவை பற்றிய சில பதிவுகளைக் கடந்த  காலங்களில் எழுதியிருந்தேன். அதனைத் தமிழகக் கட்சி அரசியல் மனநிலையிலும் இந்து என்பதே இல்லை என்ற தற்குறி மனநிலையிலும் அணுகிய பலரைக் காணமுடிந்தது. இன்னொருசாரார் இந்து-முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் சாத்தியம் என்றும் பகற்கனவு காண்கின்றனர். அப்படிக் கனவு காண்பவர்கள் யாரென்று பார்த்தால் தமது புத்தகங்கள் அதிகளவில் விற்கப்பட வேண்டும் என்றும், முகநூலிலும் இதர இடங்களிலும் தம்மைப் பற்றி நல்ல விதமாகப் பலர் பேசவேண்டும் என்றும் அரசியல் சரிநிலை எண்ணம் கொண்டவர்களேயாகும். இவர்களால்தான் இந்த நாட்டின் தமிழர்கள் இன்னும் இருள் சூழ்ந்த வாழ்க்கைக்குள் செல்கின்றனர். 

நான் இங்கே இந்துத் தேசியம் என்ற கருத்தியலையும் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பையும் முன்வைக்கக் காரணம் என்னவென்றால், இங்கே வறுமையிலும் யுத்தப் பாதிப்பிலும் தொடர்ந்து அதிகமாக மூழ்கியவர்கள் இந்துக்களாகும். இவர்களுக்கு ஆரம்ப காலங்களில் RSS அமைப்பின் சேவா பாரதி என்ற தொண்டு அமைப்பு வடகிழக்கில் பாரிய உதவிகளை வழங்கியது. ஆனால் கிறிஸ்த்தவ மிசனரிகள் கிறிஸ்த்தவ மக்களின் எழுச்சியையே விரும்பியது. இதனுடன் இல்லாமல் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட பல கிறிஸ்த்தவ மிஸனரிகள் மதமாற்றத்தைத் தொடர்ந்து மேற்கொள்கின்றன. இன்றுவரை இது தொடர்கிறது. எனக்குத் தெரிந்து நான் பேசியவர்கள் கூறியதும், நேரடியாகப் பார்த்ததுமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்த்தவத்தைத் தழுவியுள்ளனர். பலர் அற்பப் பணத்துக்கு மாறியுள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலியிலுள்ள தென்னிந்தியத் திருச்சபை அமைப்பினர் இந்த மதமாற்றத்தை இங்கே சமீபகாலமாகப் போட்டிபோட்டு நடாத்துகின்றனர். இவ்வாறு மாறுவதற்கு ஆட்சேர்ப்பவர்களுக்குக் கமிசன்கூட வழங்கப்படுகிறது. இங்குள்ள தமிழர்களில் பலர் பொதுவாகவே மதம் என்ற விடயத்தில் சகிப்புத் தன்மை கொண்டவர்கள். அதேநேரம் மதமாற்றம் என்று வந்தால் கடும் எதிர்வினை காட்டக்கூடியவர்கள் தான். 

 

 

aaa-sri-lanak-relgions.jpg

 

 

ஒருமுறை மத்தியதர வசதியுள்ள ஒரு குடும்பத்தின் வளவுக்குள் ஒரு கிறிஸ்த்தவ மிசனரியின் மதமாற்றுகை ஆட்கள் புகுந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமது சுவிஷேசங்களை ஏற்குமாறு வலியுறுத்தினர். தாங்கள் பாவம் செய்துள்ளீர்கள் அதன் பாவம் நீங்க கிறிஸ்த்தவம் சேருமாறும் பிரச்சாரம் வைத்தனர்.  அங்கிருந்த ஒரு இந்து இளைஞன் அந்த  மதமாற்றத்தில் ஈடுபட வந்த ஆண்களையும் பெண்களையும் சராமாரியாகத் தாக்கி  அனுப்பிவிடுகிறான். அதனை ஒரு எதிர்வினையாகத்தான் எடுக்கமுடியும். இங்குள்ள பல இந்து இளைஞர்களின் நிலைப்பாடு இதுதான். தாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ இல்லாதவர்களோ என்பது வேறுவிடயம். ஆனால் இந்து மரபு என்பது எப்போதும் எம்முடன் இருப்பது. இந்து மதம் இங்கே நிறுவனமயப்பட்டால் இந்த மிசனரிகளும் மதமாற்றுகைப் புரோக்கர்களும் தமது கடையை மூடவேண்டி வந்துவிடும். அதனால்தான் இந்த மிசனரிக்காரர்களும் கம்யூனிச சித்தாந்தக் காரர்களும் கடுமையான எதிர்வினையாற்றுகின்றனர். 

 

இங்குள்ள தமிழர்கள் தொடர்ந்தும் ஏழைகளாகவும் அரச சலுகைகளைச் சரியான முறையில் பாவிக்க முடியாமலும் இருக்கக் காரணம் இந்தத் தமிழ்த்தேசியம் என்கிற வரட்டு வாதம்தான். அத்துடன் தமிழர்களின் வாழ்க்கையை அடகுவைத்து மேற்கொள்ளப்படும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற கேலிக்கூத்தான கருத்தியலுமாகும். இதனை உடைத்து விடுவதற்கு இந்துத் தேசியத்தை இங்கே தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். அவ்வாறு வலியுறுத்துவதற்கு தமிழ் மாவட்டங்களிலுள்ள இந்து இளைஞர்கள் RSS என்கின்ற இந்துத் தேசியவாத அமைப்புடன் இணைந்து பணியாற்றவேண்டும். இங்கே தமிழ்த் தேசியம் பேசி தமிழகக் கூச்சல் மனநிலையில் தமிழர்களின் அடையாளங்களை அடகுவைக்கும் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பவேண்டும். அல்லது அவர்களை மாற்றுநிலைப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் தனியொருவனாக இயங்கிய எனக்கு சிலர் ஆதரவு வழங்கத் தொடங்கியுள்ளனர். நிச்சயமாக நான் எழுத்துமூலம் கொண்டு செல்வதைப் பலர் செயலில் காட்டுகின்றனர். அத்துடன் தொடர்ந்து வரும் காலங்களில் எழுத்தில் இயங்குவதுடன் நின்றுவிடாமல் மக்களுடன் இணைந்து பணியாற்றும் செயலை எனது வாழ்நாளின் மகத்தான காரியமாகக் கருதுகிறேன். எந்தச் சலுகைகளோ, யாருடைய அதிகாரங்களோ, யாருடைய பயமுறுத்தல்களோ இங்கே கவனத்தில் எடுக்கப்படாது.  இலகுவில் உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்த்து வந்துள்ளேன். அல்லது அந்த மரபு சில காலமாக மரத்துப் போயிருந்தது. ஆனால் சொந்த மக்கள் யுத்தம் முடிந்த பிறகும் எந்த நிலையில் உள்ளனர் என்பதைச் சென்று பார்த்த பிறகு உண்மையில் ஒரு மாற்றத்தை விரும்பாதவன் அந்த  மண்ணுக்கு உரியவனே அல்ல. அவன் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இங்குள்ள தாம் முன்வைக்கும் யதார்த்த அணுகுமுறையை நிராகரிக்கும் சொகுசு வாழ்க்கைக் காரன்தான். 

 

நான் சாதிய அரசியலையோ அல்லது வெறுப்பு அரசியலையோ இங்கே முன்மொழியவில்லை. பாதிக்கப்பட்ட சமூகம் மரபார்ந்த  முறையில் ஒரு மதத்தைப் பின்பற்றியுள்ளது. அது ஒரு காலத்தில் தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியலை ஏகபூர்வமாக நம்பியது. அதன் சாத்தியமின்மைகளால் அது அழிக்கப்பட்டது. அதன் எச்சங்களாகச் சில பிரதிநிதிகள் சொந்த மக்களை வஞ்சிக்கின்றனர். இதனை மாற்றுநிலைப்படுத்தவேண்டும். இலங்கையில் பிற மத ஆதிக்கத்தைத் தடுக்கவும், மதமாற்றங்களை நிறுத்தவும், தமிழ் மரபுகளைக் காப்பாற்றவும் இந்தியாவிலுள்ள RSS பிரமுகர்கள் பலருடன் உரையாடலைச் செய்துள்ளேன். இங்குள்ள நிலைமைகளை விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். அவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட இந்துச் சமூக எழுச்சிக்கு இளைஞர்களை ஒன்றிணைய அறைகூவல் விடுக்கின்றனர். இதனை வன்முறை அரசியல் என்று சில டயஸ்போராக்களும் தமிழக் கட்சி அரசியல் மனநிலையிலுள்ளவர்களும் காட்டுக்கூச்சல் மூலம் நிராகரிக்கின்றனர். ஆனால் இங்குள்ள மக்கள் இந்துத் தேசிய அரசியலையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ஆதரிக்கின்றனர். 

தொடர்ந்து இதனை இங்கே எம்மால் வெளிப்படுத்தியபடி இருக்க முடியாது. ஆதலால் இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனை கொண்ட இந்திய இந்துத்துவர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் நாம் பகிரங்கமான அழைப்பை விடுகிறோம். இலங்கையின் இந்து இளைஞர்களை தேசிய அரசியலுக்குள் மாற்றுநிலைப்படுத்தவும், தொடர்ந்தும் இந்துத் தமிழ் மரபுகளைக் காப்பாற்றவும் உங்களுடைய உதவிகளை நாடி நிற்கிறோம். நாம்  எமது இனத்தின் கடந்தகாலப் பேரழிவுக்குப் பிறகு எந்தவொரு குறுந்தேசியத்தையும் விரும்பவில்லை. குறிப்பாகத் தமிழகக் கூச்சல் மனநிலைகளை. அத்துடன் இந்தியப் பெருந்தேசியத்தை ஆழமாக நம்புகிறோம். அது இந்துத்தேசிய அரசியலாக இங்கே எழுச்சி கொள்ளும்போது தொடர்ந்த இந்திய ஆதரவு எமக்கு இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளோம். அதைத்தான் இலங்கைத் தேசியவாதிகளும் விரும்புகின்றனர். இங்குள்ள தமிழர்களும் விரும்புகின்றனர். 

 

woman%252Chindu%252Cgods%252Cvillage%252Csari%252Csrilanka-X2.jpg

 

வெளிநாட்டுக் கூச்சல்களை நாம் கணக்கில் கொள்ளவில்லை. 

குறிப்பு: இது இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவை பற்றிய குறிப்புகள். இனிவரும் நாட்களில் இந்த அரசியல் பதிவுகளைத் தவிர்க்க முயல்கிறேன். இதனை இந்திய - இந்துத் தேசியவாதிகளுக்கான பகிரங்க அழைப்பாக எடுத்துக்கொள்ளவும். தங்களது களப்பணிகளை இங்கே மேற்கொள்வதற்கு இங்குள்ள இந்து இளைஞர்கள் முழுமையான ஆதரவை வழங்குவர். 

 

இது தொடர்பான மேலதிக புரிதல்களுக்கு:

 

 

 

 

 

 

 

 

 

00

 

https://suyaanthan.blogspot.com/2018/05/blog-post_5.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்துத் தேசியம்: எதிர்வினைகள்.

இலங்கையில் இந்துத் தேசியம் பற்றிய உரையாடலை அச்ச உணர்வுடன் கொண்டு சென்றவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களது குள்ளநரித்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

1. முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் அடிப்படைவாதிகள்.
2. திராவிடக் கட்சி அரசியலை ஆதரிப்பவர்கள்.
3. தலித்தியம் பேசும் சந்தர்ப்பவாதிகள்.
4. புலம்பெயர்ந்த தமிழ் லிபரல்கள் புரட்சியாளர்கள்.
5. எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாத தற்குறிகள். 

இதில் இறுதியாகக் கூறப்பட்டவர்களைப் பற்றி எந்த அபிப்பிராயமும் என்னிடமில்லை. முதல் குறிப்பிட்ட நான்கு வகையினருக்கும் இந்து மதத்தையும் இந்துத் தேசியத்தையும் எதிர்ப்பதால் பெருமளவு நன்மை கிடைக்கிறது. எப்படியென்ற பார்வைதான் இது.

முஸ்லிம் அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் அநேகமானவர்கள் அடிப்படைவாதிகள்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வெறுமனே வாயால் முற்போக்கைப் பேசிவிட்டு மனதால் மத அடிப்படைவாதங்களை நிலைநிறுத்திச் செயலில் காட்டுபவர்கள். அவர்களுக்கு இலங்கையில் இந்துத் தேசியம் மற்றும் இந்து என்ற அடையாளத்தைத் தமிழர்கள் வலியுறுத்தும்போது பெரும் அச்சம் ஏற்படுகிறது. அதற்குக் காரணங்கள். 
1. இந்துத் தமிழர்களுக்கான இந்திய ஆதரவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பலமான உதவியும்.
2. பண்பாட்டு ரீதியில் ஒன்றுபட்டுள்ள இந்து-பௌத்த கூட்டணியால் ஏற்படும் அச்சுறுத்தல். 

இந்த இரண்டு விடயங்களின் மூலம் தமிழர்கள் தம்மை அமைப்பு ரீதியில் பலமானவர்களாகக் கட்டமைத்து விடுவர். இதனால் தமிழர் நிலங்களையோ இதர ஆக்கிரமிப்புகளையோ வெளிப்படையாக மேற்கொள்ள முடியாது. தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஈடுபட்டுவரும் இவர்களுக்கு இந்த இந்துத் தேசியம் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறுகிறது. அதாவது தமிழர்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இதனால் அண்மைய நாட்களாக ஒரே மொழி பேசுபவர்கள் நாம் என்று போலியான உரையாடல்களை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். ஒரே மொழி பேசுபவர்களான நாம் மத ரீதியில் வேறுபட்டு நிற்கிறோம். இந்த இரண்டு மதத்தையும் இணைத்துத் தரும் தீர்வு என்பது எப்போதும் தமிழர்களுக்கு ஆபத்தானதாகவே மாறும். அதாவது கம்யூனிசத்தையோ மதச்சார்பின்மையையோ தமிழர்கள் வலிந்து ஏற்கும்போது இஸ்லாமியர்கள் எப்போதும் அதனைப் பின்பற்ற மாட்டார்கள். அப்படியான சந்தர்ப்பத்தில் அதிகாரம் மதச்சார்பை விடாத ஒரு தரப்பை அடையும் போது இன்னொரு தரப்பினர் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. சமயத்தில் "நீ என்வழிக்கு வா. இல்லையென்றால் உன்வழி காலி" என்ற இஸ்லாமிய படையெடுப்பு மனோபாவம் அங்கு வேரூன்றுகிறது. இப்படியான நிலைகளின் பாதிக்கப்படுவது தமிழர்கள்தான். குறிப்பாக இந்துத் தமிழர்கள். இந்த நீண்டகாலக் குறிக்கோளின்படிதான் இலங்கையின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைச்சர்கள் பலர் தமிழர் பகுதிகளில் தமது பணிகளைத் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இங்கே சூஃபியிச எண்ணங்கொண்ட இஸ்லாமியர்களுடன் கூட இந்த இஸ்லாமிய மையங்கள் உடன்படுவதில்லை. அப்படி வஹாபியிசம் நாடு முழுக்க இஸ்லாமிய இளைஞர்களிடம் பரவி இருக்கும்போது இப்போது இந்த போலி நல்லிணக்கம் பெரும் வன்முறையையே தோற்றுவிக்கும். உதாரணமாக இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பாக அறிவித்துவிட்டார்கள். வடக்குகிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று. 

இரண்டாவது விடயம் திராவிடக் கட்சி அரசியலை முன்வைத்து இங்குள்ள தமிழர்களை உணர்சிவயப்பட வைப்பவர்கள். இவர்களுடன் புதிய தமிழ்த்தேசியவாதிகளும் இணைந்துள்ளனர். இது அவர்களது அரசியலையும் சீரழிப்பதுடன் இல்லாமல் இலங்கைத் தமிழரின் இருப்பையும் கேள்விக்கு உண்டாக்குகிறது. இங்குள்ள பௌத்த அதிகார மையங்களான மஹாநாயக்க தேரர்கள் தமிழ்த் தேசியம் என்பதை மிக அச்சுறுத்தலான ஒன்றாகவே பார்க்கின்றனர். இது தேசியத்தைப் பிளந்து நாட்டையே குட்டிச் சுவராக்கும் என்ற தூரநோக்கு அவர்களிடம் உண்டு. இதனை அங்குள்ள மஹா நாயக்கர்களில் ஒருவரின் திறந்த மனதுடனான உரையாடல் மூலம் அறிந்து கொண்டேன். அவர்கள் எப்போதும் தமிழ்-சிங்கள இணைவு என்பதைவிட பௌத்த-இந்து என்ற பண்பாட்டு ஒற்றுமையையே விரும்புகின்றனர். இது வெறுமனே அவர்கள் முன்வைக்கும் தீர்வு அல்ல. தேசியத்தைப் பிளந்து வன்முறையை தோக்கிக் கொண்டுசெல்லாத ஒன்றாகவே அவர்களால் நோக்கப் படுகிறது. இந்த அரசியலைத்தான் சேர்.பொன்.ராமநாதன் மேற்கொண்டிருந்தார். அவர் காலத்தில் தமிழர்கள் பாதுகாப்பையே உணர்ந்தனர். ஆனால் எப்போது திராவிடவாதம் இலங்கையில் காலூன்றியதோ அப்போது தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் வலுப்பெற்று வன்முறை அரசியல் ஒன்றே தீர்வு என்று தமிழர்கள் நம்பத் தொடங்கினர். இன்றும் நம்புகின்றனர். ஒருகாலமும் சிங்கள-பௌத்த தேசியவாதிகள் தமிழ்த் தேசியத்துக்கான தீர்வினை முன்வைக்க மாட்டார்கள். அங்குள்ள அதிகார பீடங்களை இயக்கும் மஹா நாயக்கர்கள் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. இந்த கட்சி அரசியலை முன்வைத்து இங்குள்ள மக்களையும் தமிழர்களையும் இப்போதும் தமிழகக் கட்சிகள் குழப்பியடிக்கின்றனர். காட்டுக்கூச்சல் போடுகின்றனர். இலங்கையின் நடைமுறை யதார்த்தம் அறியாத திராவிடக் கட்சி அரசியல்காரர்கள்தான் தமிழ்த்தேசியத்தை இங்கே முன்வைக்கின்றனர். இது எக்காலமும் சாத்தியமற்ற ஒன்று. 

மூன்றாவது தலித்திய அரசியலை இங்கே முன்வைப்பவர்கள். அ.மார்க்ஸ், ஷோபா சக்தி போன்ற சிலர் இலங்கையில் தலித்திய அரசியலை முன்வைப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். தலித் என்ற சொல்லை உணராத மக்களிடம் அதை முன்வைக்கப் போகும் இந்த அறிவுஜீவிகள் தம்மை பொதுவுடைமை வாதிகளாகக் காட்டிக்கொள்கின்றனர். இதன் மூலம் தமிழர்களில் ஒரு பிரிவையும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைப்பதற்கான முனைப்புத்தான் இது. மிக மோசமான வர்க்கவாதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான முயற்சிதான் இது. இங்குள்ள மக்கள் தம்மை இந்துக்களாகவும் தமிழர்களாகவும் கருதுகின்றனர். அதுபோலச் சிங்களவர்களிலும் பௌத்தர்களாகக் கருதுகின்றனர். இப்படியொரு சிறிய நாட்டில் இவ்வளவு உக்கிரமான நிகழ்த்துகையை இவர்கள் மேற்கொள்ளப் பார்க்கின்றனர்.
இதற்கு முதன்மையான தேவை இந்து மத எதிர்ப்பை முன்வைத்தல். அதனால்தான் எனது இந்துத் தேசியம் பற்றிய கட்டுரைகளுக்கும் கடுமையான தொணியில் எதிர்வினையாற்றியுள்ளனர். நான் எப்போதும் பெரும்பான்மை அங்கீகாரத்தை விரும்பாமல்தான் கட்டுரைகளையும் இலக்கியப் பதிவுகளையும் எழுதி வருகிறேன். ஆனால் எனது இந்தக் கட்டுரைகளின் உண்மைத்தன்மை இந்த போலி தலித்தியவாதிகளுக்கும் தேசியத்தைக் குழப்புவோருக்கும் மதமாற்றக்காரர்களுக்கும் பெரும் தலையிடியாக அமையும். அதனால்தான் இத்தனை எதிர்ப்பு. 

நான்காவது விடயம் புலம்பெயர்ந்த லிபரல்கள். இவர்களைப் பற்றிப் பெரிதாகப் பேச எதுவும் இல்லை. இவர்களது அரசியல் இரண்டு வகையானது. அதாவது அங்கிருந்து கொண்டு தமது கொள்கையை இரண்டு வகையில் எம்மீது திணிப்பர்.
1. தனிநாடு கோர இங்குள்ளோரை உசுப்புதல்.
2. Political Correctness நிலைப்பாட்டின் மூலம் இந்துத் தமிழர்கள் என்ற அடையாளத்தைக் களைதல். (போலி மதச்சார்பின்மை)

இந்த இரண்டும் எவ்வளவு அபாயகரமானது என்று இங்குள்ள யதார்த்த அரசியலை அறிந்தோரால் உணரமுடியும். ஆகவே புலம்பெயர்ந்தவர்கள் கருத்து எவ்வகையிலும் இங்கே வேலைக்கு ஆகாது. 

இலங்கையில் இந்துத் தேசியத்தை எதிர்ப்பவர்கள் எப்போதும் இங்குள்ள பெரும்பான்மைத் தமிழர்களின் இருப்பில் விளையாடி அடையாள அழிப்புக்குத் துணை போகின்றவர்கள் என்பதே உண்மை. 

00

 

https://suyaanthan.blogspot.com/2018/05/blog-post_4.html?m=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷோபா சக்திக்கு..

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் இந்துத் தேசியத்தையும் உண்டாக்கக் கூடாது என்றொரு எதிர்வினைய எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்கள் "இது இராவண ஜென்ம பூமி" என்ற உணர்ச்சி வயப்பட்டு எழுதி முடித்துள்ளார். முதலில் அவருக்கு ராவணன் என்றால் யாரென்ற விளக்கத்தை வழங்கிவிட்டு ஏனையவற்றைப் பார்க்கலாம். இவர் எந்த இராவணனைச் சொல்கிறார் என்று குழம்பினேன். ஏனென்றால் இங்கே ராவணன் என்ற பெயரில் ஏராளம் பேர் உள்ளனர். பிறகுதான் தெரிந்தது திராவிடக் கட்சிகளால் தமிழன் என்று கூறப்படும் ராவணனை இவர் விழித்துள்ளார். அவரது புள்ளியில் இருந்தே தொடங்கலாம். 

ராவணன் இந்தியாவின் ஆரம்பகால டெல்லியில் பிறந்தவர். இராவணன் ஒரு பிராமணர். இராவணன் தமிழரும் அல்ல. இங்குள்ள ஈவேரா தற்குறிகளும் திராவிட மூடர்களும் திரித்த கருத்துத்தான் இராவணன் தமிழன் என்பதெல்லாம். அவர் இலங்கையில் பிறந்தார் என்பதும். அவர் இறைவனிடம் கைலாயத்தில் வரம்பெற்று இலங்கையை ஆண்டதாகப் புராண வரலாறு கூறுகிறது. (கடைசியாக இப்படியும் பேச வைத்துவிட்டார் இந்த ஷோபா) இராவணன் ஒரு இந்து மதத்தவர்.சிவ பக்தர். ஆனால் இங்குள்ளவர்கள் அவரைத் திராவிடர் என்று கட்டமைக்கின்றனர். திராவிடம் என்பது அரசியலுக்காகப் போலியாக வெள்ளையர்கள் உருவாக்கிய இன வாதமேயொழிய வேறொன்றுமில்லை. நேற்றைய பதிவில் அந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. இலங்கையில் இந்துத் தேசியம் தேவையற்ற ஒன்று என்று ஷோபா சக்தி அரசியல் சரிநிலை விளக்கம் எழுதி அதற்காக் கீழே இது இராவண ஜென்ம பூமி என்று வரலாற்றைப் பிழையாகவும் கணித்துள்ளார். இராவண ஜென்மபூமி இந்தியா என்பதே என்ற வரலாற்றை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்குள் இருப்பது ஒரு மூர்க்கமான அரசியல். தொடர்ந்து முஸ்லிம்களின் ஜிகாதிப் படைகள் இங்கையில் இந்துத்தமிழர்கள் மீது மேற்கொண்ட படுகொலைகளை நியாயம் செய்பவர். அதுபற்றி வாய் திறக்காதவர். இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குப் பதறுகிறார். இருபது வருடங்களுக்கு முன்பாகவே நாட்டைவிட்டை வெளியேறியவரான ஷோபாசக்தி இங்கே என்ன நடந்தது நடக்கிறது என்பதை அரசியல் சரிநிலையில் வைத்தே பார்த்திருப்பார். பிறரின் கூற்றுக்களின் மூலமே அவர் இங்குள்ள அரசியலை அறிந்திருப்பார். அறிந்ததை அங்குள்ள லிபரல்களுடன் விவாதித்து இங்கே சாத்தியம் என்று பகற்கனவு காண்கிறார். அ.மார்க்ஸ் போன்றவர்கள் இலங்கையில் வஹாபிஸம் இல்லை என்றார்கள். இலங்கையில் வஹாபிஸம் 2007 ஆம் ஆண்டுகளில் பரப்பப்பட்டு இன்று சூஃபியிச முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஏனைய சமூகங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனையெல்லாம் வெளிநாட்டில் இருந்து போலி நல்லிணக்கம் பேசும் ஷோபா சக்தி அறிய வாய்ப்பில்லை. 

இலங்கையில் வடகிழக்கை இணைத்தாலே இரத்த ஆறு ஓடும் என்று வெளிப்படையாகவே ஒரு முஸ்லிம் அமைச்சர் கூறுகிறார். இன்று திரும்பவும் அவர் அமைச்சராகியுள்ளார். இப்படியான சந்தர்ப்பங்களில் இவரால் எப்படி இந்துத் தேசியம் மூலம் நாம் முன்வைக்கும் தேசிய அரசியல் நீரோட்டத்தை நிராகரிக்க முடிகிறது. 

ஷோபா சக்தி மிகச் சிறந்த படைப்பாளி. அவரது நாவல்களையும் சிறுகதைகளையும் தேடித் தேடி வாசித்துள்ளேன். பல சமயங்களில் அந்த எழுத்து ஆளுமைக்காகவே நான் பிரமித்துப் போவதுண்டு. சந்தேகமென்றால் அவருடைய கொரில்லா நாவலையும் தொகுக்கப்படாத கதைகளையும் வாசித்துப் பாருங்கள். அவர் கதைகளிலுள்ள அழகியல் நேர்த்தியை யாராலும் இலகுவில் புறந்தள்ள முடியாது.
ஆனால் அவருடைய அரசியல் ஞானம் என்பது வெறுமனே நடைமுறைக்கு ஒத்துவராததாகவே உள்ளது. எப்போதும் தமிழக அரசியலுடன் இலங்கை அரசியலைப் பொருத்திப் பார்க்கும் அவர் தேசிய அரசியலுடன் இதற்கான தீர்வை எப்படி முன்வைக்கலாம் என்று நடைமுறை யதார்த்தத்தில் யோசிக்காதவர். நல்லிணக்கம் என்ற பசப்புகளை வார்த்தையில் அவர் கூறுகிறார். அவரைப் பின்தொடர்பவர்கள் துவேசத்தை வெளிக்காட்டுகின்றனர். பொதுவாக அவர் முஸ்லிம்களின் உரிமைக்காகத் தீவிரமாகப் பிரான்சில் இருந்துகொண்டு களமாடுபவர். அவர் தமிழருக்கான தீர்வை முன்வைப்பார் என்பது சாத்தியமில்லை. அத்துடன் அவர் அடிக்கடி கூறும் வசனம் முஸ்லிம்களுடன் தமிழர்கள் சமரசம் செய்யவேண்டும் என்பதாகும்.  பலமுறை சமரசம் செய்ய முயன்றபோதும் அதன் பெறுபேறுகள் வெறும் பிரச்சனைகளாகவே இருந்துள்ளன. 

அத்துடன் தமிழ்த்தேசியம் மூலம் தீர்வு தர இலங்கையின் மஹா நாயக்கர்களும் இந்தியத் தேசியவாதிகளும் விரும்புவதில்லை. தமிழ்த்தேசியம் இலங்கைப் பெருந்தேசியத்தை உள்ளிருந்து பிளக்கும். தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நோக்கிச் செல்ல முனையும். ஆனால் இந்துத் தேசியம் எந்தத் தேசியங்களையும் உடைப்பதில்லை. இந்த நாட்டின் நிறுவன மயப்பட்ட பௌத்த மதம் இந்து மரபின் தொடர்ச்சியாகும்.  இந்த மரபு தமிழ் இளைஞர்களை வன்முறைக்குள் கொண்டு செல்லாது தேசிய அரசியலில் இலகுவாக ஒருங்கிணைத்துவிடும். ஆகவே இந்துத் தேசியம் மூலம் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்வதுதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு. இந்துத் தேசியத்தை இங்கே வளர்க்க ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ அமைப்பு தேவைப்படுகிறது. இல்லை நாம் தமிழ்த்தேசியம் மூலம்தான் தீர்வு காண்போம், பெருந்தேசியத்தைப் பிளக்கும் தீர்வினையே முன்வைப்போம் என்று கனவு காண்பவர்களுக்கான தீர்வினை எத்தனை தசாப்தம் போனாலும் இலங்கை அரசு தீர்வு வழங்காது. பௌத்த நிறுவனமயப்பட்ட தேசிய அரசு ஒருகாலமும் அதனை எதிர்க்கும் தேசியத்தை அரவணைக்காது. அதனைச் சேர்க்கும் இந்துத் தேசியத்தையே அரவணைக்கும். சேர்.பொன். ராமநாதன் மிகச் சிறந்த உதாரணம். இப்படியே நூறு வருடங்கள் தமிழ் என்று பசப்பிக் கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே கூறமுடியும். இந்துத் தேசியம் மூலம் தமிழர்கள் இணைந்து தீர்வுகளை முன்வைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் என்ற பலம்பொருந்திய அமைப்பினை இறையாண்மைக்கு உட்பட்டு இலங்கையில் அமைப்பதே சரியான வழி. இது தொடர்பான விளக்கங்களை இலங்கை மற்றும் இந்திய இந்துத் தேசியவாதிகளுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளேன். சில முரண்பாடுகளுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் சாதகத் தன்மைகளை உரையாடுகின்றனர். இங்கே தொடர்ந்து அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்து மதத்தை தேசிய நீரோட்ட இணைவு மூலமே தீர்க்க முடியும். அதற்கு நீண்ட கால ஆர்.எஸ்.எஸ் தொழிற்பாடு உதவியாக இருக்கும். 

தமிழ்த்தேசியம், இஸ்லாமியத் தேசியம் இந்த இரண்டுமே இலங்கைத் தேசியத்துக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடியது. தமிழ்த்தேசியத்தை இஸ்லாமியத் தேசியமோ இஸ்லாமியத் தேசியத்தைத் தமிழ்த் தேசியமோ சமரசம் செய்து ஏற்காது. அதுபோல இந்த இரண்டையும் பௌத்த தேசியம் ஏற்காது. தமிழர்களின் தீர்வுக்காகப் பௌத்த தேசியம் ஏற்பது இந்துத் தேசிய மரபு அரசியலையேதான். தமிழக வெத்துவேட்டுக் கூச்சல்களை இங்குள்ள தேசியவாதிகள் பொருட்படுத்தப் போவதில்லை. தொடர்ந்து வெட்டிக் கூச்சல்களும் கவர்ச்சிகர மேடைப் பேச்சுகளும் மீதமாகிப்போகும். 

இது இராவண ஜென்ம பூமி அல்ல. ஆறுமுகநாவலர் தோன்றி மறைந்த பூமி. இங்கு அவர் மூலம் இந்துத்தேசியம் வேர் கொள்வதை யார் தடுப்பார். அதன் தேவையை இயல்பாகவே தமிழர்கள் உணருவர்.

 

https://suyaanthan.blogspot.com/2018/05/blog-post_3.html?m=1

இந்து பொந்து என்று மிச்ச சொச்சத்தையும் காவுகொடுக்க ஆயத்தமாகின்றனர்

சிங்களத்தின் அடுத்த இலக்கு  இஸ்லாமியத் தமிழர்களின் தொகையை குறைக்கவேணும் அதுக்கு சிறந்த வழி இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் மோதவிடுவது ஒன்றுதான். 

சைவமும் தமிழும இந்துவாகி சிவசேன ஆர் எஸ் எஸ் ஆகின்றதெல்லாம் அழிவு ஒன்றைத் தவிர வேரொன்றும் இல்லை. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலரைப் பிராண்டாகப் பாவித்து இந்துத் தேசியத்தை உருவாக்க மறவன்புலவு சச்சிதானந்தனுடன் சிலர் முனைகின்றார்கள். சுயாந்தனது பல கட்டுரைகளில் சொல்லப்பட்டவற்றில் உடன்பாடு இல்லையென்றாலும், இந்தியப் பின்புலத்தோடு முளைவிடும் இந்துத் தேசியம் கருகாமல் எதிர்காலத்தில் பெருவிருட்சமாக மாறவும் கூடும் அல்லவா!

 

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் - இந்துத்தேசிய அரசியலின் நியாயப்பாடுகள்.

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ரெலோ தலைவர் கூறுவார் "இலங்கையின் அரசியல் இத்தியாவால் ஆனதென்று". இதையேதான் பத்மநாபாவும் சொன்னார். ஆனால் இந்தக் கருத்தைக் கூறியவர்களைப் புலிகள் படுகொலை செய்தனர். துரோகிகள் என்று பட்டம் சூட்டினர். ஏனென்றால் புலிகள் எப்போதும் இந்தியத் தேசியத்துடன் இணைந்து செல்வதை விரும்பவில்லை.  அவர்கள் விரும்பியது தமிழக- திராவிட தொடர்புகளை. மாபெரும் பிரிவினைவாதத்தையும் தேசியங்கள் உடைவதையும் அவர்கள் விரும்பினர். இதனால்தான் புலிகள் மவோயிச பயங்கரவாதிகளுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கினர். ஸ்ரீசபாரத்தினம் முதலானவர்கள் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தார்கள் இந்தியத்தின் துணையுடன். அப்போது இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய- தமிழக நிலைப்பாடு ஒரேமாதிரித்தான் இருந்தது. ஆனால் இவற்றை எல்லாம் சீரழித்து மக்களை அழிவுப் பாதையில் கொண்டு சென்றது புலிகள்தான். 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் சமஸ்த்தானங்களை இணைக்கும் பணி காவலம் மாதவன் பணிக்கரின் (K.M.Panicker) தலைமையிலான ராஜதந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைப்பதற்கான யோசனையை நேருவிடமும் சர்தார் வல்லபாய் பட்டேலிடமும் பணிக்கர் எடுத்துரைத்ததாக வரலாறு கூறுகிறது.  ஆனால் அவர்களுக்கு இந்தியாவின் உட் சமஸ்த்தானங்களை ராணுவத்தை அனுப்பித்தான் இணைக்கவேண்டியும் இருந்தது. அத்துடன் காஷ்மீர் என்பது தலையில் இருந்து பெரும் குடைச்சலை வழங்கியது.  அத்துடன் ஆங்கிலேய அரசு இலங்கையை இந்திய நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற எந்த வரைபையும்  முன்னெடுக்கவில்லை. இலங்கையை அரசியல் முறையில் தமது கட்டுக்குள் வைக்கவே இந்தியா எப்போதும் விரும்பியது. இன்றும் இனியும் விரும்பும். 

 

இலங்கையின் அரசியலில் இந்தியத்தின் தலையீடுகள் இன்றி எந்தவொரு காரியமும் இங்கே தீவிரமாக நடக்காது. இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட செல்வாக்கை இந்திய அரசியல் மேற்கொண்டுதான் வருகிறது. தமிழர்களுக்கான தீர்வுகூடக் கிடைக்கப் போவதில்லை. இந்த யதார்த்தத்தை இப்படியே எதிர்ப்பு அரசியல் என்று இவன்கள் போகும்போது பத்து வருடங்களில் உணரமுடியும். அடையாள அழிப்பை அதிகாரத்துணையுடன் நடாத்தும் இஸ்லாமியத்தை ஆதரித்து அரசியல் சரிநிலைகளில் கருத்தெழுதும் அறிவுஜீவிகளின் சிந்தனை நடைமுறைச் சாத்தியமற்றது. 
குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு அரசியல் எவ்வாறு அமையவேண்டும் என்று இந்தியத் தேசியவாதிகள் தொடர்ந்து கவனிக்கின்றனர். முப்பது வருட யுத்தத்தில் முதல் பத்து வருடங்கள் இந்திய-தமிழக கூட்டுச் சார்பில் இருந்த புலிகள் பிற்பட்ட இருபது வருடங்களில் வெறுமனே தமிழகச் சார்பில் இயங்கினர். இந்த இருபது வருடத்தை எப்படி இவர்கள் இயக்கினார்கள் என்பது ஆச்சரியம் கொள்ளக்கூடிய விடயம்தான். ஆனால் இந்த ஆச்சரியம்தான் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்டது. இது  உணர்ச்சிநிலையில் இருந்து அணுகி ஒரு சமூகத்தைத் தற்கொலைக்குக் கொண்டு செல்லும் முறை.

 

335139-srilankamodi-140315-ra9.jpg

                            
                         கடந்த வருடங்களில் இலங்கைக்கான விஜயத்தில் யுத்தப்பாதிப்புக்கு உள்ளான தமிழர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார் நரேந்திர மோடி. அருகில் இருப்பது வடக்கு முதல்வர்.
 

இந்தியத் தேசிய அரசியலை எதிர்த்து தமிழக-திராவிட உறவுகளை மாத்திரம் புலிகள் நம்பியது இந்தியத் தேசியவாதிகளை ஆத்திரம் கொள்ள வைத்தது. வடகிழக்குப் பகுதிகளைத் தமது கண்காணிப்பில் வைக்கவே இந்தியா விரும்பியது. இதனைப் புலிகள் இல்லாமல் செய்தனர். இந்தியத் தேசியம் வேறு. தமிழகத் திராவிடத் தேசியம் வேறு. முன்சொல்வது இணைத்துக்கொள்வது. பின்சொன்னது பிரித்தாள்வது. அது பரவலான பிரிவினைவாதம் மூலம் தேசியவாதங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது.

இந்தியத் தேசியம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றால் தமிழர்கள் திராவிடத் தேசியத்தில் மட்டும் தங்கியிருப்பது தமக்கு ஆபத்து என்று இந்தியத் தேசியவாதிகள் நம்பினர். அதுதான் உண்மை. பிராந்தியப் பாதுகாப்புப் பற்றிய தூரநோக்கினையே இந்திய ராஜதந்திரிகளும் இலங்கை அரசும் பலப்படுத்த விரும்பும். 

 

இந்திய தேசத்தை கடந்த மூன்று தசாப்தங்களில் ஆண்டவர்கள் இரண்டு வகையினர், 

 

1. இடதுசாரிய எண்ணம் கொண்ட இந்தியத் தேசியவாதிகள். 

2. இந்துத் தேசியத்தை வலியுறுத்தும் இந்தியத் தேசியவாதிகள். 

 

இதில் முதல் வகைக்கு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் முதலானவர்கள் உதாரணம். இவர்களது உதவியுடன்தான் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சி பெற்று அதன் எச்சம்கூட  இல்லாமல் வேரறுக்கப்பட்டது. இந்த அழிப்புக்கு மூலமாகத் துணை நின்றது மன்மோகன் சிங் தலைமையினால் ஆன காங்கிரஸ் கட்சியும் கருணாநிதி தலைமையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்த திராவிடக் கட்சிகளும். இலங்கையின் இன அழிப்புக்கு இடதுசாரிகளின் பங்குதான் அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

 

இரண்டாவது வகைக்கு உதாரணமாக இருப்பது அடேல் பீஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திரமோடி. இவர்கள் ஆர்.எஸ்.எஸ் (RSS) தொண்டர்படையில் உறுப்பினர்களாக இருந்து அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சி (BJP) மூலம் மக்கள் ஆதரவு பெற்ற தேர்தல் வழியாகப் பிரதமரானவர்கள். 1998 தொடக்கம் 2004 வரையான காலத்தில் வாஜ்பாயின் ஆட்சி இந்தியாவில் இருந்தது. இவர் ஒரு இந்துத்தேசியவாதி என்பதால் இலங்கை விடயத்தில் தனது பாதுகாப்பு அமைச்சரான ஜோர்ஜ் பெர்ணான்டஸ் மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க இராஜதந்திர உதவிகளை மேற்கொண்டார். விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) என்ற இந்துத்துவ அமைப்பை தமிழர் பகுதிகளுக்குள் அமைப்பது பற்றிப் புலிகளுடன் பேசினார். இந்த VHP அமைப்பு RSS இன் ஒரு துணைப்பிரிவாகும். ஆனால் எப்போதும் தமிழக- திராவிடத் தற்குறி அறிவுஜீவிகளை நம்பி தமது அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கும் புலிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். ஒரு இந்துத் தேசியவாதியாக தமிழர்களுக்கான தீர்வை அப்போதே முன்வைத்தவர் வாஜ்பாய். இதனை ஏற்காத முட்டாள்த்தனம்தான் மக்களின் பேரழிவு. இவ்வளவு இழிவாழ்க்கை. இந்த நுண் அரசியலை இங்கு புரிந்து கொள்ளாத தற்குறிகள் எப்போதும் இந்துத்துவத்தை எதிர்த்துக்கொண்டுள்ளனர். இப்போதுகூட ஆர்.எஸ்.எஸ் அரசியலை இங்கே முன்வைத்ததும் முற்போக்கு என்ற பெயரில் சில வெளிநாட்டு புரோக்கர்களும் முஸ்லிம் அறிவுஜீவி என்ற பெயரில் ஜிகாதிகளை ஆதரிக்கும் கோமாளிகளும் எதிர்ப்பை வெளிடத் தொடங்கியுள்ளனர்.  இன்றைய அரசியல் யதார்த்தத்தில் வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வலுப்படுத்த இந்துத் தேசியவாதிகள் விரும்புகின்றனர். நிச்சயமாக இது தமிழர்களுக்கான அடையாள அழிப்புக்கும் படிப்படியான தேசிய நீரோட்ட அரசியலுக்கும் தீர்வாக அமையும். இதன்மூலம் சிங்களத் தேசியத்தின் வெறுப்பு அரசியலை மாற்றுநிலைப்படுத்தவும் முடியும். அத்துடன் ஜிகாதியக் கும்பல்களின் அத்துமீறல்கள் மற்றும் அதிகார மையங்களின் செல்வாக்கை குறைக்க முடியும்.

 

jpeg.jpg

 

தற்போதைய மிதவாதத் தமிழ்த்தேசியம் இஸ்லாமியர்களுடன் இணைந்து சென்று தீர்வுகளை முன்வைக்கலாம். ஒன்றிணைந்த வடகிழக்கை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பகற்கனவையே காண்கிறது. இந்தப் பகற்கனவை வெளிநாடுகளில் இருந்து முகநூலிலும் வேறு வழிகளிலும் காட்டுக்கூச்சல் போட்டு நியாயப்படுத்தி வருகின்றனர். இதன் பின்னால் பணம் வாங்கி தமிழ் அடையாளங்களை அழிக்க நினைக்கும் புரோக்கர்கள் உள்ளடங்குகின்றனர். 

இலங்கையில் தமிழ்த்தேசியத்தை அரசாங்கம்  தீர்வாக வழங்காது. அதனை இங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களும் ஏற்கமாட்டார்கள். அதற்கான காரணங்கள்.

 

1. வடகிழக்கிலுள்ள தமிழ்ப் பிரிவினைவாத அடிப்படை ஊற்றுக்கள் முஸ்லிம்களை இன்றும் பெரும் எதிரிகளாகத்தான் கட்டமைத்துள்ளது. ஒரே மொழி என்று வரும்போது அவர்களைத் துரோகிகள் என்றும் கூறிச்செல்கிறது. 

 

2. இஸ்லாமிய வஹாபிய அடிப்படைவாதம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இதனை வளர்த்துவிட்டதில் அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களின் பங்கும் அதிகம். இந்த அடிப்படைவாதம் எந்தத் தேசியத்தையும் ஏற்றுக் கொள்ளாது. சுயவிமர்சனம்கூடச் செய்யாமல் மற்றச் சமூகம் மீது அதிகாரத்தைப் பிரயோகிக்கும்.

 

3. சர்வதேச அழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் இலங்கையுடன் இரண்டாயிரம் வருடம் பண்பாட்டுத் தொடர்பிலுள்ள இந்தியா முன்வைக்கும் தீர்வையே சர்வதேசமும் இலங்கை அரசும் ஏற்றுக்கொள்ளும். இதில் சர்வதேச ரீதியில் எத்தனை காட்டுக்கூச்சலை அங்குள்ளவர்கள் மேற்கொண்டாலும் அது இங்கே இம்மியளவுகூட மாற்றத்தைத் தராது.

 

4. வடகிழக்கில் இடதுசாரிய மற்றும் தமிழகக் கட்சிசார்ந்த மனநிலையில் மாகாண அரசு அமைவதை எந்தவொரு இந்தியத் தேசியவாதியும் விரும்பமாட்டார் என்பதே உண்மை. இதற்கு கடந்த முப்பது வருட யுத்தமும், யுத்தத்தின் பின்னரான தீர்வு முன்வைப்புக்களும் ஆதாரமாகவுள்ளது.

சிங்கள- தமிழ் ஒற்றுமை என்பதைவிட பௌத்த- இந்து ஒற்றுமையில் பழைய கொலைவெறிக் காழ்ப்புணர்வுகள் மறையத் தொடங்கிவிடுகிறது. பௌத்தம் இந்து மதத்தில் இருந்து விவாதம் செய்தே தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. இலங்கையிலுள்ள பௌத்தம் இந்துத் தமிழ்ப் பண்பாட்டின் மூலவேராகவே உள்ளதாகும். இதன் தாராளவாத எண்ணங்கள் பரஸ்பர நம்பிக்கையை நம்மிடையே தருகிறது. சிங்களவர்களில் பலர் தமது தவறை ஏற்கின்றனர். ஒருசிலர் ஏற்க மறுக்கின்றனர். ஆனால் முஸ்லிம்கள் செய்வது போல் ஒருகாலமும் தமது ஜிகாதியப் படுகொலைகளை நியாயப்படுத்தவில்லை. நாம் புலிகளின் படுகொலைகளை கண்டித்த அளவுக்கு முஸ்லிம்கள் வெளிப்படை மனதில் உரையாட வருவதில்லை. வெறும் பசப்புகளையே பேசுவர். ஆகவே பெரும் பான்மை சமூகத்துடன் ஒன்றிணைந்து போகக்கூடிய தீர்வையே பௌத்த தேசியவாதிகளும் விரும்புகின்றனர். இதில் எந்த அடிபணிவும் இல்லை. இது பரஸ்பர அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் நல்லிணக்கம். இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள் இன்னும் நூறுவருடங்கள் ஆனாலும் இப்படியேதான் கூச்சலிட்டபடி இருப்பர். 

 

இங்கு ஒரு கேள்வி எழுகிறது. வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கான தீர்வுதான் என்ன என்று. நிச்சயமாக அவர்களுக்கான தீர்வினை அவர்கள்தான் முன்வைக்கவேண்டும். எதனையும் முன்வைக்காமல் ஒன்றையே பேசியபடி இருப்பது எந்தவகையான அரசியல் அனுகூலங்களைச் சமூகங்களுக்கு வழங்கும். அவர்கள் அரசாங்கத்துடன் அமைச்சர்களாகப் பலகாலமாக உள்ளனர். ஒரு முஸ்லிம் என்று அல்ல. அனைத்து முஸ்லிம்களும் எந்த அரசு வந்தாலும் அந்த அரசுடன் சேர்ந்து கொள்கின்றனர் அல்லவா. அப்படியானால் அவர்களுடைய தேர்தல் பிரிவுகளையும் எல்லை நிர்ணயங்களையும் ஒட்டி அரசாங்கத்துடன் சேர்ந்துள்ளவாறே தீர்வுகளை முன்வைக்கலாம். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தமிழர்தான் காரணம் என்று சப்பைக்கட்டுக் கட்டி தொடர்ந்து தமிழர்களைக் குற்றம் சொல்லித் தம்மை உத்தம புருஷர்களாகக் கட்டமைப்பது முஸ்லிம்களின் வாடிக்கை. எனவே இத்தனை வருடம் அரசாங்கத்தில் இணைந்துள்ள உங்களால் ஏன் தீர்வுகளை முன்வைக்கவில்லை. வடகிழக்கு இணைப்பு என்று வரும்போது இரத்த ஆறு ஓடும் என்று கிழக்கிலுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் காட்டுக் கூச்சலிடுகிறார். செய்து காட்டுவோம் என்று இன்னொருவர் அறைகூவலிடுகிறார். ஜமாஅத் அமைப்புக்கள் ஒன்றுகூடி தமிழர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். 

 

sirisena-modi.jpg

 

 

அப்படியென்றால் இலங்கை முஸ்லிம்களான நீங்கள் முன்வைப்பது என்ன?. தமிழர்கள் எப்போதும் கண்ணீரையே ருசிக்க வேண்டும் என்றா?. தொடர்ந்து அதிகாரப் பிடியில் இருக்கவேண்டும் என்றா?

இங்கே இந்துக்களை ஒன்றிணைத்து அங்குள்ள சங்பரிவார ஒற்றுமை போல ஆர்.எஸ்.எஸ்  அரசியலை பிரிவினைவாதம் இல்லாமல் முன்னெடுக்க முனைகையில் அதனை வெள்ளாள- இந்து எழுச்சி என்று பக்கம் பக்கமாக  முஸ்லிம் அறிவுஜீவிகளும் நான்கைந்து தமிழ்ப் புரோக்கர்களும் எந்தத் தர்க்கமும் இல்லாமல்  எழுதத் தொடங்கியுள்ளனர்.  இவர்களுக்கு இப்போதைய தேவை தமிழர்களின் கண்ணீர். இந்தக் கண்ணீரை வைத்து வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையும் உள்நாடுகளில் சந்தர்ப்பவாத அரசியலும் செய்யவேண்டும். அதற்குத் தினமும் ஒரு தமிழர் இங்கே செத்துக்கொண்டு இருக்கவேண்டும். எதிர்ப்பு அரசியலைச் செய்து புலனாய்வுப் பிரிவினரின் சித்திரவதைக்கு ஆட்படவேண்டும். இந்துக்கோயில் கர்ப்பக்கிரகங்களில் மாட்டிறைச்சிக்கடை வைக்கவேண்டும். தமிழ் அடையாளத்தையே குழிதோண்டிப் புதைக்கவேண்டும். இதைத்தான் தமிழ்த்தேசியவாதிகளும், இடதுசாரிகளும், முஸ்லிம் அதிகார மையங்களும், தமிழக-திராவிட தற்குறிகளும் விரும்புகின்றனர். செய்துவருகின்றனர். இதைத்தானே கடந்த நாற்பது வருடமாகச் செய்தார்கள் என்ற தெளிவு மக்களிடம் ஏற்படும்போது அவர்கள் இந்த அரசியலை உணர்வார்கள். 

 

இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட இந்துத்தேசிய அரசியலின் அவசியத்தைப் பலர் இலங்கையில் உணரத் தொடங்கியுள்ளனர். இது ஒன்றுதான் இங்குள்ள இளைஞர்களை இரத்தம் சிந்த வைக்காமல் தேசிய நீரோட்டத்துக்குள் இட்டுச்செல்லும். மாறாகத் தமிழ்த்தேசியம் பிரிவினையையும் ரத்தக்கூச்சல்களையும் முன்வைத்துத் தமிழரை அழிவுப் பாதைக்குள் கொண்டு செல்லக்கூடியது. அதேநேரம் தமிழ்த்தேசியம் இந்துத் தேசிய அரசியலை ஏற்றுக்கொண்டால் அது ஆரோக்கியமான விடயத்தையே மக்களுக்கு ஏற்படுத்தும். ஆனால் ஏற்கமாட்டார்கள். தமிழக வெறிக்கூச்சல்காரர்கள் விடமாட்டார்கள்.  தமிழ்நாட்டுக் காரர்களின் கேலிக்கூத்தான விவாதம் ஒன்று உள்ளது. இந்து என்பது தமிழரைக் குறிக்காது. அது சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கானது. அது வடநாட்டுக்காரர்களுக்கானது என்று.  இதுதான் இருப்பதிலேயே ஆகப்பெரிய தற்குறித்தனமான நகைச்சுவை. சரிவரப் படித்த ஒருவன் இதனைக் கேட்டதும் கொலாலென்று சிரித்துவிடுவான். தமிழிலுள்ள 35 வீதமான சொற்கள் சமஸ்கிருதத்தை உள்வாங்கியவை. வடமொழிகலந்தவை. அத்துடன் தமிழ்ச்சொற்கள் பலவும் வேற்றுமொழியில் கலந்துள்ளன. பேசும் மொழிதான் வேறே ஒழிய. நம் பூர்வீகத் தெய்வ வழிபாடுகளின் படி நாம் இந்துக்கள்தான். இந்துத் தேசியம் நமது அரசியலுக்கும் இருப்புக்கும் வலுச்சேர்க்கும். அதனை இங்கே கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் என்ற தொண்டர்படைக்கான ஆதரவுகளை நாம் அளிக்க வேண்டும். அது இலங்ஙையின் இறையாண்மைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அதனை இங்குள்ள தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்
 

இழவு வீட்டிற்கு வந்து துக்கம் விசாரிக்காமல் அந்த துக்கமான மனநிலையில் உள்ள மக்களுக்கு மனதைரியத்தை அளிக்காமல் அதை  தீட்டு என்று ஒதுக்குபவர்கள் அந்தவீடுகளில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு மட்டும் வந்து தாம் பொ ருளீட்டி செல்வதுபோல், இலங்கை அரச பயங்கரவாதிகளால் தமிழர்கள் கொல்லப் பட்ட போது அதற்கு எல்லாவிதத்திலும் ஆதரவக இருந்த இந்து பயங்கரவாதிகள் இப்போது வந்துள்ளாரகள்.  இவர்களின் பிடியில் ஈழத்தமிழர்கள் சிக்கக் கூடாது. அடித்து விரட்ட வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.