Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்­கில் 33 ஏக்­கர் காணிகளுக்கு -விரை­வில் விடுதலை!!

Featured Replies

வலி.வடக்­கில் 33 ஏக்­கர் காணிகளுக்கு -விரை­வில் விடுதலை!!

 

Capture-40.jpg

 
 

வலி.வடக்­கில் பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­மி­ருந்து மேலும் 33 ஏக்­கர் காணி மற்றும் நல்ல நிலை­ யி­லுள்ள மக்­க­ளின் வீடு­கள் என்­பன சில தினங்­க­ளில் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

மாவிட்­ட­பு­ரம் கந்­த­சாமி கோயி­லி­ருந்து சில நூறு மீற்­றர்­கள் தொலை­வில், வலி. வடக்கு உயர் பாது­காப்பு வல­யம் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. காங்­கே­சன்­துறை வீதி­யின் கரை­யோ­ர­மாக, அந்­தப் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் தொடர்ந்­தும் நிலை கொண்­டி­ருந்­த­னர்.

33 ஏக்­கர் நிலப்­ப­ரப்பை விடு­விக்­கும் முக­மாக, அந்­தப் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த வேலி­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­க­ளில் பாது­காப்­புத் தரப்­பி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

 

இந்­தப் பகு­தி­யி­னுள், நல்ல நிலை­யில் சுமார் 16 வீடு­கள் வரை­யில் காணப்­ப­டு­கின்­றது. 40 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­யும் இத­னூ­டாக விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

http://newuthayan.com/story/09/வலி-வடக்­கில்-33-ஏக்­கர்-காணிகளுக்கு-விரை­வில்-விடுதலை.html

மகிழ்வான செய்தி.

  • தொடங்கியவர்

வலி.வடக்கில் – 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!!

34307247_223949564869078_847381622555253
 
 
 
 

வலி வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

வலி வடக்கில் பளை, வீமன்காமம் வடக்கில் உள்ள ஜே -.236 கிராம சேவகர் பிரிவில் 33 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம், யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணிகள் 27 ஆண்டுகளின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன்,  மாவிட்டபுரம் கோவிலினை கடந்து சென்று காங்கேசன்துறை சீமெந்து தொழற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிராகவுள்ளது.

 

விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/16/வலி-வடக்கில்-33-ஏக்கர்-இன்று-விடுவிப்பு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விடு­விக்­கப்­பட்ட வலி.வடக்­கில்- 3 இடங்­க­ளில் புத்­தர் சிலை­கள்!!

media-share-0-02-03-4e4b9a0f8d25e74073ee
 
 

வலி.வடக்­கில் இரா­ணு­வம் விடு­வித்த பகு­தி­க­ளில் பெரி­ய­ள­வி­லான விகாரை ஒன்­றும், வேறு இரு இடங்­க­ளில் புத்­தர் சிலை­க­ளும் காணப்­ப­டு­கின்­றன.

வலி.வடக்­கில் விடு­விக்­கப்­ப­டாத பகு­தி­யில் விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று கடந்த  காலங்­க­ளில் இணை­யத்­த­ளங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அந்­தப் விகாரை சட்­ட­வி­ரோ­த­மாக அமைக்­கப்­பட்­டது என்­றும் அந்­தச் செய்­தி­கள் தெரி­வித்­தி­ருந்­தன.

அந்த விகாரை இரா­ணு­வத்­தி­னர் வழி­ப­டவே அமைக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்­தி­னர் அந்த நிலத்தை விட்டு வெளி­யே­றும் போது விகாரை அங்கு இருக்­காது என்று அவர்­கள் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர்.

 

அந்­தப் பகு­தி­க­ளில் மக்­க­ளின் பாவ­னைக்­குத் தற்­போது விடு­விக்­கப்­பட்­ட­போ­தும், புத்­தர் சிலை­க­ளும், விகா­ரை­யும் அங்கு உள்­ளன என்று பொது­மக்­கள் தெரி­வித்­த­னர்.

விகா­ரையை விட­வும் இரு வேறு இடங்­க­ளில் புத்­தர் சிலை­கள் நிறு­வப்­பட்­டுள்­ளன என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர். இரா­ணு­வத்­தி­னர் தமது இருப்­பி­டங்­களை அகற்­றிச் சென்­றுள்­ள­போ­தும் விகாரை, புத்­தர் சிலை­களை அகற்­றப்­ப­ட­வில்லை என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/09/விடு­விக்­கப்­பட்ட-வலி-வடக்­கில்-3-இடங்­க­ளில்-புத்­தர்-சிலை­கள்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விடுவிக்க 33 ஏக்கர் காணிகளில்- 16 வீடுகளே வசிக்கக் கூடிய நிலமையில்!!

 

IMG-929e09f522e9fe7dfcb3b93d42323f0b-V-7

 
 

வலி.வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் வச­மி­ருந்த 33 ஏக்­கர் காணி­கள் நேற்று மக்­கள் பாவ­னைக்­குக் கைய­ளிக்­கப்­பட்­டன. ஜே/236 கிராம அலுவலர் பிரி­வில் பளை­வீ­மன்­கா­மத்­தில் உள்ள காணி­களே  விடு­விக்­கப்பட்­டுள்­ளன. அவற்­றைக் கைய­ளிக்­கும் ஆவ­ணத்தை தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­ல­ரி­டம் யாழ்ப்­பா­ணம் மாவட்ட இரா­ணு­வத் தலை­மை­ய­கம் வழங்­கி­யுள்­ளது.

27 ஆண்­டு­க­ளின் பின்­னர் இந்­தக் காணி­கள் மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளில் காணி உரி­மை­யா­ளர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர். காணி உரி­மை­யா­ளர்­கள் காணி­க­ளைப் பொறுப்­பேற்க வர வேண்­டும் என்று பிர­தேச செய­லர் ச.சிவஸ்ரீ கோரி­யுள்­ளார்.

விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் பெரும்­பா­லான வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன. 16 வீடு­கள் மக்­கள் வசிக்­கக் கூடிய நிலை­யில் காணப்­ப­டு­கின்ற என்று கூறப்­ப­டு­கின்­றது. அவை படை­யி­ன­ரின் பாவ­னை­யில் இருந்­தி­ருக்­க­லாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. விடு­விக்­கப்­பட்ட பகு­தி­யில் படை­யி­ன­ரின் பயன்­பாட்­டில் இருந்த விகாரை ஒன்­றும் உள்­ளது.

 

இது­வரை விடு­விக்­கப்­ப­டா­தி­ருந்த கிரா­மக்­கோட்­டடி வீதி­யும் நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வீதி 700 மீற்­றர் நீள­மு­டை­யது. விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களை பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன் பார்­வை­யிட்­டார். மக்­க­ளு­ட­னும் கலந்­து­ரை­யா­டி­னார்.

http://newuthayan.com/story/09/விடுவிக்க-33-ஏக்கர்-காணிகளில்-16-வீடுகளே-வசிக்கக்-கூடிய-நிலமையில்.html

Edited by நவீனன்

மிக்க மகிழ்ச்சி. விகாரை குமார கோவிலில் உள்ளது. மக்கள் விரைவில் குடியேறி நிலைமை வழமைக்கு திரும்பவேண்டும்.

  • தொடங்கியவர்

 

வலி.வடக்­கில்- 36 ஏக்­கர் காணிகளுக்கு இன்று விடிவு!!    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.