Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தனத்தை அழித்து முகத்தில் சேற்றைப் பூசிய தவராசா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்தனத்தை அழித்து முகத்தில் சேற்றைப் பூசிய தவராசா!

_15489_1528411132_bvbvv.jpg

கூட்டுக் கோபத்தைச் சரியாகச் செயற்படுத்திய கிழக்குப் பல்கலை. மாணவர்கள்

தயாளன்

வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஒரு தமிழனா? என்ற கேள்வி போய் மனிதனா என்ற கேள்வியே மேலோங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக சபை உறுப்பினர்களின் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் பங்களிப்பைப் பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இது அந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம்தான். இவர்களின் மன அழகு எப்படிப்பட்டதோ முக அழகுக்கு வைக்கப்பட்ட பொட்டுப் போன்றது அது. அங்கு சிந்தப்படும் கண்ணீரை ஒவ்வொருவரிடமும் சென்று துடைக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் இந்த நினைவேந்தலுக்கு எம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்தோம் என்ற மன ஆறுதலை சபை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. தவராஜா தனது பங்களிப்பான ஏழாயிரம் ரூபாவைத் திருப்பிக் கேட்டார். முகத்திலிருந்து சந்தனப் பொட்டை அகற்றி சேற்றைப் பூசித் தனது மன அழுக்கை வெளிப்படுத்தியுள்ளார் இவர்.

<>இவரது இக்கோரிக்கையானது வட, கிழக்கு மக்களிடம் ஏற்கனவே ஆழமாக உறைந்துபோயிருந்த தேசிய உணர்வை பொங்கியெழுந்து வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. வடக்கு மக்களுக்கு நேரில் அவரைக் காணக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. முகத்துக்கு நேரே காரி உமிழ அவர்களால் முடியும். கிழக்கு மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்துக்கு வாய்ப்பில்லை. இன்று இரப்போருக்குக்கூட ஒரு ரூபாய் போடுவதில்லை. குறைந்தபட்சம் ஐந்து ரூபாயேனும் வழங்குவார்கள். அதிகூடியளவு பேரின் கோபத்தை வெளிக்காட்டத்தான் தலா ஒரு ரூபாய் பெறுவதெனக் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்திருந்தனர். இன்றைய கால கட்டத்தில் ஐம்பது மற்றும் இருபத்தைந்து சதங்களின் பாவனை இல்லை. இருந்திருந்தால் தமது கூட்டுக் கோபத்தை இருபத்தெட்டாயிரம் அல்லது பதின்னான்காயிரம் பேரின் பங்களிப்பு மூலம் வெளிப்படுத்தியிருப்பர். நடைமுறையில் ஒரு ரூபா நாணயம் என்பது எல்லோரிடமும் இருப்பதில்லை - இருந்தால் உண்டியல்களின் தொகை கூடுதலாக இருந்திருப்பின் ஒரு மணி நேரத்துக்குள் அவற்றை நிரப்பித் தமது கோபத்தை வெளிப்படுத்தியிருப்பர். எனவே 'கிழக்கிலங்கையிலிருந்து தலா ஒரு ரூபா வீதம் பங்களித்த நாளாந்த உழைப்பாளர்கள், வணிகர்கள், மாணவர்கள், முஸ்லிம் பொதுமக்கள்ஆகிய எங்கள் ஏழாயிரம் பேரினதும் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்' என வடக்கு மாகாண சபை தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த கோரிக்கை புறந்தள்ளக்கூடியதல்ல.

ஏற்கனவே திரு. தவராசா அங்கம் வகித்த கட்சி யாழ். மாநகர சபையினை ஆட்சி புரிந்தது. அப்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமெனப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அங்கே கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகளே என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இப்பிரேரணைக்கு அனுமதி மறுத்தார். இம்முடிவினை அவர் சுயமாக மேற்கொண்டிருக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரது றிமோட் கொண்ட்ரோல் வேறிடத்தில் இருந்தது. இன்னும் ஒன்பது வருடத்துக்குள் இந்த நினைவேந்தலைப் பொறுப்பெடுத்து நடத்துவது யார் என்ற போட்டி அல்லது ஆர்வம் மேலோங்கி விடும் எனக் கணிப்பிட்டிருந்தால் அந்த றிமோட் கொண்ட்ரோல் பிரேரணை நிறைவேற்றப்படும் காட்சியைப் பார்க்க உதவியிருக்கும்.

மகிந்தவை யாராலும் அசைக்க முடியாது என்ற ஆழமான நம்பிக்கை அரசியல்வாதிகளிடம் இருந்தது. இப்பிரேரணை நிறைவேறினால் அமைச்சுப் பதவியும் பறிபோய்விடும். அமைச்சா எமது மக்களின் உணர்வா என்ற நிலை வந்தபோது அமைச்சே தெரிவாக இருந்தது. இறுதிப் போரில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என ஐ நா குறிப்பிட்டத்தற்கு   எதிர்ப்புத்தெரிவித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர். அரசுக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக ஜெனீவா வரை சென்றார் அக் கட்சி யின்  செயலர் . அங்குஅவருக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது     மக்களின் மறதி மீது ஆழமான நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு. ஆனால் தங்கள் மனதிலுள்ள வடுக்களைத் தமது சந்ததியினருக்கு மக்கள் வெளிப்படுத்தி விடுவர் என்ற நிலை குறித்து அவர்கள் சிந்திக்கவேயில்லை. கிழக்கில் தமது பெற்றோர் வெளிப்படுத்திய கோபத்தை கையில் உண்டியல் ஏந்தியதன் மூலம் தணிக்க முயன்றனர் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள். இந்த உண்டியலைக் குலுக்கும்போது எழுந்த ஒலி ஏழாயிரம் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததை விட மேலானது.

அங்கு கொல்லப்பட்ட நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் புலிகள்தான். இவர்கள் அஞ்சலிக்கப்படத் தகுதியானவர்கள் அல்ல என்ற முடிவை அன்று அக்கட்சித் தலைமை எடுத்தது. இதன் மூலம் எந்த நினைவேந்தலையும் அனுஷ்டிக்கும் தகுதியை தார்மீக ரீதியாக அக்கட்சி இழந்து விட்டது என்பதே காலம் உணர்த்தும் பாடம். அமைச்சுப் பதவி போனாலென்ன, மாநகரசபை கலைக்கப்பட்டாலென்ன என்று அன்று அந்தப் பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தால் சம்பந்தருக்கு மாற்றான தலைமயாக அன்று மக்கள் ஏற்றிருக்கக்கூடும். தென்னையிலோ பனையிலோ வட்டுக்குள் இருப்பதைப் பறிக்க முயல்பவனுக்கே பலன் கிடைக்கும். தேங்காயோ, நுங்கோ தலையில் விழுந்து விடுமே எனப் பயந்து கையை விடுபவன் கீழே விழவேண்டியதுதான். ஒரு அனுதாபம்தான் கிடைக்கும். என்ன இருந்தாலும் இவ்வளவு உயரத்துக்கு ஏறியவன்தானே என்று அவனைத் தலையில் தூக்கிக் கொண்டாட மாட்டார்கள்.

எது எவ்வாறிருந்தாலும் இனப் படுகொலையே இறுதிப் போரில் நிகழ்ந்தது என்ற தீர்மானத்தை முதல்வர் வடக்கு மாகாண சபையில் கொண்டுவந்து நிறைவேற்றியபடியால்தான் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து மக்கள் கொதித்தெழுந்தனர். இளைஞர் சக்தி அவருக்கு ஆதரவாகத் திரண்டது. இதெல்லாம் இயல்பாக நடந்தவை. மக்களின் நாடித்துடிப்பை - உணர்வெழுச்சியை உணரத் தவறினால் எந்த அரசியல்வாதியும் தோல்வியையே எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே கிழக்கு மக்கள் தமது கூட்டுக் கோபத்தை வெளிப்படுத்தும் வடிகாலாக இந்த உண்டியல் ஓட்டையைக் கண்டுபிடித்தார்கள்.

யாழ். நூலக எரிப்பு ஒரு பொட்டம்மானை உருவாக்கியது. அவரது உறவினரான திரு. சீ.வீ.கே. சிவஞானத்துக்கு இது நன்கு தெரியும். அன்று மக்களின் கோபத்துக்கு ஆயுதமாகக் கிடைத்தது வாக்குச்சீட்டு. யாழ். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் ஒன்றுதிரண்டு வாக்களித்தனர். நூலக எரிப்பின் கொதிநிலையில் இருந்த சண்முகநாதன் சிவசங்கர் என்ற பொட்டுவும், அவரது அண்ணா சிவஞானகுமார் (மகிந்த ஆட்சியின்போது யாழில் மரணமானவர் தங்கை, அம்மம்மா தங்கமுத்து ஆச்சி கூட வாக்களிப்புத் தொடர்பாக அதிதீவிரம் காட்டினர். அதுபோன்ற ஒரு நிலையே தவராசாவின் கூற்றும் அதைத் தொடர்ந்து கிழக்கு மக்களின் நிலைப்பாடும். இது புறம் தள்ளக்கூடியதல்ல என்பதை சபை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ். நூலக எரிப்பின்போதும், அதன் புனரமைப்பின்போதும் யாழ். மாநகர சபை ஆணையாளராக இருந்தவர் இவர். ஒரு வரலாற்று அழிவு என்ற வகையில் அதை அப்படியே எதிர்காலத்தினருக்குச் சொல்லும் சான்றாக வைத்திருக்க வேண்டும். இந்த விடயத்தை ஆனந்தசங்கரிக்கும் செல்லன் கந்தையனுக்கும் அவர் விளக்கியிருக்க வேண்டும். அந்தத் தடயத்தை மறைக்க தெரிந்தோ, தெரியாமலோ சங்கரியும் கந்தையனும் துணை போய்விட்டார்கள். தங்கள் பெயர் அந்தக் கட்டடத்தில் இருந்தால் போதும் எனத் தவறாக முடிவெடுத்துவிட்டனர். பிராயச்சித்தமாக அரசு ஏதாவது செய்ய விரும்பினால் அருகிலேயே இது போன்ற கட்டடத்தை அமைக்கலாம் என இவர்கள் இருவரும் வலியுறுத்தியிருக்க வேண்டும். நடந்ததைத் கதைத்துப் பயனில்லை. இனி நடப்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கிழக்கு மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளியவர் என்ற பெயர் தனக்கு வரக்கூடாது என இவர் முடிவெடுப்பார் என நம்புவோம்.

மேலும் நிதியைக் கையளிக்க முனைபவர்கள் வடக்கு முதல்வருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் போல இருக்கிறது. இனப்படுகொலை என்ற தீர்மானத்தை வட மாகாண சபையில் கொண்டுவந்ததற்காக தமது பெற்றோர் சார்பிலும் தமது சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதே இவர்களது நோக்கமாக இருப்பது போல உள்ளது. அவ்வாறான சந்திப்புக்கும் இவர் ஏற்பாடு செய்வார் என நம்புகிறோம்.

 

http://www.battinaatham.net/description.php?art=15489

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.