Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளைகுடா நாடுகளின் தடைகளிருந்து சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார்

Featured Replies

வளைகுடா நாடுகளின் தடைகளிருந்து சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார்

 
 
வளைகுடா நாடுகளின் தடைகளிருந்து தானே மீண்டெழும் கத்தார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கொட்டகையில் இருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரை கத்தாரில் ஒரு பால் பண்ணைகூட கிடையாது; அது முற்றிலும் சௌதி அரேபியாவையே சார்ந்திருந்தது.

ஆனால், தற்போது கத்தாரிலுள்ள பாலட்னா பண்ணையில் 10 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. அதில், பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டவை.

வளைகுடா நெருக்கடியின் காரணமாக மிகச் சிறிய நாடான கத்தார் தனது அண்டை நாடுகளின் தடை விதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் மூலம் பசுக்கள் இங்கு வந்தன.

கத்தார் நாட்டின் புதிய உந்துதலில் அவை ஒரு சின்னமாக மாறிவிட்டன.

"இதை கண்டிப்பாக செய்ய முடியாதென்று அனைவரும் கூறினார்கள்; ஆனால், நாங்கள் செய்துகாட்டியுள்ளோம்" என்று அந்த பண்ணையை நிர்வகிக்கும் பீட்டர் என்பவர் கூறுகிறார்.

"ஒரு வருடத்தில் நமக்கான தூய பாலை உற்பத்தி செய்வதில் நாம் தன்னிறைவு பெறுவோம் என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம்" என்று அவர் கூறுகிறார்.

கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் காத்தாருடனான தங்களது அனைத்து விதமான ராஜாந்திர, வர்த்தக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை நிறுத்தி கொண்டன.

கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், பிராந்திய ஸ்திரமற்ற தன்மையை தூண்டிவிட்டு, தங்களின் எதிரியான இரானுடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாகவும் கத்தாரை அந்நாடுகள் குற்றஞ்சாட்டின.

வளைகுடா நாடுகளின் தடைகளிருந்து தானே மீண்டெழும் கத்தார்படத்தின் காப்புரிமைISTOCK

கத்தார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும்என அந்த நாடுகள் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்பதற்கும் மறுப்புத் தெரிவித்தது.

செல்வந்த நாடான கத்தார் அதன் தனித்துவமான செல்வமான இயற்கை எரிவாயு முதல் பலவற்றை பயன்படுத்தி தனிப்படுத்தப்பட்ட தனது நாட்டை மீட்டெடுப்பதற்கான வழிகளை தேடியதோடு, அண்டை நாடுகளின் இந்த செயலை இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்பட்ட சவாலாக பார்த்தது.

"தங்களை விட வேறுபட்ட செயல்பாடுகளை கொண்ட நாடுகளை தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கு அவர்கள் தொடங்கினர்" என்று கத்தாரின் வெளியுறத்துறை அமைச்சரான ஷேக் முகமது கூறுகிறார்.

காத்தார் அரசு தான் நடத்தி வரும் செய்தித் தொலைக்காட்சியான அல் ஜசீரா மீது தொடுக்கப்பட்ட இணையத் தாக்குதலே கடந்தாண்டு ஏற்பட்ட வளைகுடா நெருக்கடிக்கு அடிப்படை காரணமென்று கூறுகிறது.

வளைகுடா நாடுகளின் தடைகளிருந்து தானே மீண்டெழும் கத்தார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

லெபனானின் ஹெஸ்புல்லா போராளிகளுக்கும், காசாவில் உள்ள ஹமாஸுக்கும் கத்தாரின் அரசர் அனுதாபத்தை தெரிவித்ததையும், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நீடிக்கமாட்டார் என்று கூறியதையும் அத்தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டதே இதற்கு காரணமென்று கூறப்படுகிறது.

ஆனால், கத்தாரின் அண்டை நாடுகள் உருவாக்கிய நெருக்கடிக்கான காரணத்தை அறிவதற்கு இன்னும் பின்னோக்கி செல்லவேண்டுமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்த விவகாரம் கடந்த 20 வருடங்களாக நீடித்து வந்தாலும், கடந்தாண்டுதான் வெளிப்பட்டது" என்று அரேபியா பௌண்டேஷன் அமைப்பின் நிறுவனரான அலி ஷெஹாபி கூறுகிறார்.

லிபிய முன்னாள் தலைவர் மம்மர் கடாபி கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டபோது வெளியான ஒலிநாடாவில் கத்தாரின் அரசர் சௌதி அரசர்களுக்கெதிராக சதித்திட்டத்தை தீட்டியது வெளிப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

"மூன்று லட்சம் மக்கள்தொகையை கொண்ட கத்தார் 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை எதிர்த்து செயல்பட்டது" என்று மேலும் கூறினார்.

"கத்தார் தன்னைவிட பெரிய நாடுகளை எதிர்த்து செயல்பட்டதால் அதற்கேற்ற எதிர்வினையை சந்திக்க நேரிட்டது" என்கிறார் அவர்.

இரானை நோக்கி திரும்பும் பார்வை

தனது நாட்டின் எல்லைப்பகுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ள கத்தார், தற்போது இரானின் வழியாக அதற்காக வழிகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.

தனது அண்டை நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி பொருளாதாரத்தை காக்கும் வகையில் வளைகுடா கடற்பகுதியில் சுமார் ஏழு பில்லியன் டாலர் செலவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் வேலை முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.

இரானை நோக்கி திரும்பும் பார்வைபடத்தின் காப்புரிமைREUTERS

வரும் 2022ஆம் ஆண்டு கத்தாரின் தலைநகர் தோகாவில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைக்கான கட்டுமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்த துறைமுகம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தனது கடல் எல்லையையும், மிகப் பெரிய எண்ணெய் வயல்களையும் பகிர்ந்து வரும் இரானுடன் நெருக்கம் காட்டும் நிலைக்கு கத்தார் தள்ளப்பட்டு வருகிறது. மேலும், தற்போது இரானிய வான்பரப்பை நம்பித்தான் கத்தாரின் விமான சேவைகள் உள்ளன.

"இரான் எங்களது அண்டை நாடாகும். எனவே, நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்பையும், தகவல் தொடர்பையும் கொண்டிருக்க வேண்டும்" என்று அல்-தானி கூறுகிறார். "இந்தப் பிராந்தியம் சார்ந்த கொள்கைகளில் நாங்கள் அவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம், ஆனால் இது மோதலால் தீர்க்கப்பட முடியாது."

இந்த விவகாரத்தின் துவக்கத்தில் சௌதி தலைமையிலான தரப்புக்கு ஆதரவளித்த அமெரிக்கா, தற்போது தான் இரானுக்கு எதிரான புதிய தடைகளை விதிக்கவுள்ளதால் வளைகுடா பிராந்தியத்தில் ஒற்றுமையை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கத்தாரில் அமெரிக்காவுக்கு சொந்தமான மிகப் பெரிய விமான தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துண்டிக்கப்பட்ட உறவுகள்

சாத் அல்-ஜெஸ்ஸிம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசாத் அல்-ஜெஸ்ஸிம்

வளைகுடா நாடுகளுக்கிடையே நிலவும் இந்தப் பிரச்சனையின் காரணமாக பிராந்தியத்தின் மற்ற பகுதிகளிலுள்ள தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறும் தோகா நகரவாசிகள், இந்த நிலைமை விரைவில் சீரடையும் என்று நம்புகின்றனர்.

"வளைகுடா நாடுகள் திருமணத்தின் வழியாக பிணைக்கப்பட்டுள்ளன" என்று கூறுகிறார் சௌதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒருவர். ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையின் காரணமாக ரியாத் நகரத்தில் வசிக்கும் தனது தாயை பார்க்க முடியவில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

"இதற்கு முன்னர் இருந்ததைவிட தற்போது சிறந்த நிலையை அடைந்துள்ளோம். மேலும், முன்பு பிற நாடுகளிடமிருந்து பெற்ற பொருட்களை நாங்களே உற்பத்தி செய்து வருகிறோம்" என்று 84 வயதாகும் சாத் அல்-ஜெஸ்ஸிம் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-44423682

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே கூறியிருந்தேன் கட்டார் அரபு உலகின் தலைமைத்துவத்தை படிப்படியாக தன்னகத்தே உள்வாங்கி கொண்டிருக்கிறது என்று.

கட்டாரின் ஈரானுடன் சமாதானத்துடன் ஒருவரை ஒருவர் மதிக்கும் உறவு அணுகு முறையும், கட்டர் ஈரானுடன் முழுமையாக சமரசம் இல்லாவிட்டாலும், அவசரமாந அந்தரமான காலகட்டங்களில், அமெரிக்கா கூட உதவி செய்வதத்திற்கு மறுத்த நேரத்தில், ஈரானுடனான உறவு உதவியும் ஊக்கமும் அளிக்க கூடியதாக வைத்திருந்தது அமெரிக்காவித்திற்கே மிகப் பெரிய கேந்திர தோல்வி ஆகும்.

அத்துடன், ஈரானின் சிரிய அரசை தக்க வைத்து நிலைத்தன்மையை ஏற்றப்படுத்தியது, அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபிய ஆகியவற்றின் அடுத்த கேந்திர தோல்வி ஆகும்.

அதனாலேயே அமெரிக்கா, தற்றபோது ஈரானின் பொருளாதாரத்தை கையில் எடுத்துள்ளது. அது கூட, சீன ஒத்துழைப்பின்னரி நிறைவேறாது.

இங்கே, கிந்தியப் புலம்பலான 2030 இல் சீன பொருளாதார வல்லரசு என்பது உண்மையானால்,அதாவது சீன யுவான் reserve currency நிலையை அடையுமானால், ஈரானின் மத்திய கிழக்கு அதிகம் முழுமை பெறும்.
 

கட்டாரின் தலைமுத்துவத்தின் நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் வரும் போது சாராம்சத்தை மொழிபெயர்த்து இணைத்து  விடுகிறேன்.

http://www.scmp.com/week-asia/geopolitics/article/2149915/china-pillar-strength-qatars-fightback-against-arab-blockade

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கட்டார் எனும்- ‘உழைப்பாளி’!!

 

 

6b71174f2583a2a09a6754b040b132e7b59266e3

 
 

 

 

அடர்ந்த பாலை­வ­னத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் குளிர்­சா­தன வசதி செய்­யப்­பட்ட பண்ணைகளில் இருந்து வெளியே செல்­லும் மாடு­கள் தங்­கள் மடி­யி­லி­ருந்து பால் கறப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் நவீன இயந்­தி­ரங்­களை நோக்­கிச் செல்­கின்­றன.

கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்பு வரை கட்­டா­ரில் ஒரு பால் பண்­ணை­கூட கிடை­யாது. பால் உணவுக்கான நுகர்வில் அது முற்­றி­லும் சவூதி அரே­பி­யா­வையே சார்ந்­தி­ருந்­தது.

ஆனால், தற்­போது கட்­டா­ரில் உள்ள பாலட்னா பண்­ணை­யில் 10 ஆயி­ரம் கால்­ந­டை­கள் உள்­ளன. அதில், பெரும்­பா­லா­னவை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்­டவை.

 

வளை­குடா நெருக்­க­டி­யின் கார­ண­மாக மிகச் சிறிய நாடான கட்­டார் தனது அண்டை நாடு­க­ளால் தடை விதிக்­கப்­பட்ட ஒரு மாதத்­துக்­குப் பிறகு, கட்­டார் ஏர்­வேஸ் வானூர்­தி­கள் மூலம் பசுக்­கள் அங்கு சென்­றன. கட்­டார் நாட்­டின் புதிய உந்­து­த­லில் அவை ஒரு சின்­ன­மா­கவே மாறி­விட்­டன.

‘‘இதை கண்­டிப்­பாக செய்ய முடி­யா­தென்று அனை­வ­ரும் கூறி­னார்­கள் ஆனால், நாங்­கள் செய்­து­காட்­டி­யுள்­ளோம். ஒரு வரு­டத்­தில் எமக்­கான தூய பாலை உற்­பத்தி செய்­வ­தில் நாம் தன்­னி­றைவு பெறு­வோம் என்ற வாக்­கு­று­தியை நாங்­கள் அளித்­தி­ருந்­தோம்’’ என்று அந்த பண்­ணையை நிர்­வ­கிக்­கும் பீட்­டர் என்­ப­வர் கூறு­கி­றார்.

நடந்­தது என்ன?
கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு நாடு­கள், பக்­ரைன் மற்­றும் எகிப்து ஆகிய நாடு­கள் கட்­டா­ரு­ட­னான தங்­க­ளது அனைத்து வித­மான உற­வு­க­ளை­யும், வர்த்­தக மற்­றும் போக்­கு­வ­ரத்துத் தொடர்­பு­க­ளை­யும் நிறுத்­திக் கொண்­டன. கட்­டார் தீவி­ர­வா­ தத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­க­வும், பிராந்­திய உறு­தித்­தன்மை அற்ற நிலை­யைத் தூண்­டி­விட்டு, தங்­க­ளின் எதி­ரி­யான ஈரா­னு­டன் நெருக்­க­மான உறவை கொண்­டி­ருப்­ப­தா­க­வும் கட்­டாரை அந்த நாடு­கள் குற்­றஞ்­சாட்­டின.

அத்­து­டன் ஈரா­னின் உள­வா­ளி­யாக வளை­கு­டா­வில் கட்­டார் செயற்­ப­டு­கி­றது என்­றும் அவை தெரி­வித்­தன. கட்­டார் இந்­தக் குற்­றச் சாட்­டு­ களை மறுத்­த­தோடு மட்­டு­மல்­லா­மல், அல்-­ஜ­சீரா தொலைக்­காட்­சியை மூட வேண்­டும்­என அந்த நாடு­கள் முன்­வைத்த நிபந்­த­னை­களை ஏற்­ப­தற்­கும் மறுப்­புத் தெரி­வித்­தது.

செல்­வந்த நாடான கட்­டார் அதன் தனித்­து­வ­மான செல்­வ­மான இயற்கை எரி­வாயு முதல் பல­வற்­றைப் பயன்­ப­டுத்தி தனி மைப்படுத்தப்பட்ட தனது நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்­கான வழி­க­ளைத் தேடி­ய­தோடு, அண்டை நாடு­ க­ளின் இந்­தச் செயலை இறை­யாண்­மைக்கு எதி­ராக விடுக்­கப்­பட்ட சவா­லா­கப் பார்த்­தது.

‘‘தங்­களை விட வேறு­பட்ட செயற் பா­டு­களை கொண்ட நாடு­களை தீவி­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்­கள் என்ற பிம்­பத்தை உரு­வாக்­கு­வ­தற்கு அவர்­கள் தொட ங்­கி­னர்’’ என்று கட்­டா­ரின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரான சேக் முக­மது கூறு­கி­றார்.

கட்­டார் அரசு தான் நடத்தி வரும் செய்­தித் தொலைக்­காட்­சி­யான அல் ஜசீரா மீது தொடுக்­கப்­பட்ட இணை­யத் தாக்­கு­தலே கடந்­தாண்டு ஏற்­பட்ட வளை­குடா நெருக்­க­டிக்கு அடிப்­படை கார­ண­மென்று கூறு­கி­றது. லெப­னா­னின் ஹெஸ்­புல்லா போரா­ளி­க­ளுக்­கும், காசா­வில் உள்ள ஹமா­ஸுக்­கும் கட்­டார் அர­சர் அனு­தா­பத்தை தெரி­வித்­த­தை­யும், அமெ­ரிக்க அதி­ப­ராக ட்ரம்ப் நீடிக்­க­மாட்­டார் என்று கூறி­ய­தை­யும் அந்­தத் தொலைக்­காட்சி செய்­தி­யாக வெளி­யிட்­டதே இதற்கு கார­ண­மென்று கூறப்­ப­டு­கி­றது.

வளை­குடா மோத­லுக்கு
பின்­னணி எங்­குள்­ளது?
ஆனால், கட்­டா­ரின் அண்டை நாடு­கள் உரு­வாக்­கிய நெருக்­க­டிக்­கான கார­ணத்தை அறி­வ­தற்கு இன்­னும் பின்­னோக்கி செல்­ல­வேண்­டு­மென்று ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். ‘‘இந்த விவ­கா­ரம் கடந்த 20 வரு­டங்­க­ளாக நீடித்து வந்­தா­லும், கடந்­தாண்­டு­தான் வெளிப்­பட்­டது’’ என்று அரே­பியா பௌண்­டே­சன் அமைப்­பின் நிறு­வ­ன­ரான அலி ஹொபி தெரி­விக்­கி­றார்.

லிபிய முன்­னாள் தலை­வர் கடாபி கடந்த 2011ஆம் ஆண்டு கொல்­லப்­பட்­ட­போது வெளி­யான ஒலி­நா­டா­வில் கட்­டா­ரின் அர­சர் சவூதி அர­சர்­க­ளுக்­கெ­தி­ராக சதித்­திட்­டத்தை தீட்­டி­யது வெளிப்­பட்­டது என்று அவர் குறிப்­பி­டு­கி­றார்.

‘‘மூன்று லட்­சம் மக்­கள் தொகை­யைக் கொண்ட கட்­டார் 22 மில்­லி­யன் மக்­கள் தொகை­யைக் கொண்ட சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு இராச்­சி­யம், பக­ரைன் மற்­றும் எகிப்து ஆகிய நாடு­களை எதிர்த்து செயல்­பட்­டது. கட்­டார் தன்­னை­விட பெரிய நாடு­களை எதிர்த்­துச் செயல்­பட்­ட­தால் அதற்­கேற்ற எதிர் வி­னையைச் சந்­திக்க நேரிட்­டது’ என்­கி­றார் அவர்.

ஈரானை நோக்­கித்
திரும்­பும் பார்வை
தனது நாட்­டின் எல்­லைப்­ப­கு­தி­கள் முற்­று­கை­யி­டப்­பட்­டுள்ள கட்­டார், தற்­போது ஈரா­னின் வழி­யாக அதற்­காக வழி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சித்து வரு­கி­றது. தனது அண்டை நாடு­க­ளால் விதிக்­கப்­பட்­டுள்ள தடை­களை மீறிப் பொரு­ளா­தா­ரத்தை காக்­கும் வகை­யில் வளை­குடா கடற்­ப­கு­தி­யில் சுமார் ஏழு பில்­லி­யன் டொலர் செல­வில் அமைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்ட துறை­ மு­கத்­தின் வேலை முன்­ன­தா­கவே முடிக்­கப்­பட் டுள்­ளது.

வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரின் தலை­ந­கர் டோகா­வில் நடை­பெ­ற­வுள்ள கால்­பந்து உல­கக் கிண்­ணத் தொட­ருக்­கான கட்­டு­மானப் பொருள்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு இந்த துறை­மு­கம் பெரு­ம­ள­வில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. தனது கடல் எல்­லை­யை­யும், மிகப் பெரிய எண்­ணெய் வயல்­க­ளை­யும் பகிர்ந்து வரும் ஈரா­னு­டன் நெருக்­கம் காட்­டும் நிலைக்கு கட்­டார் தள்­ளப்­பட்டு வரு­கி­றது. மேலும், தற்­போது ஈரா­னிய வான்­ப­ரப்பை நம்­பித்­தான் கட்­டா­ரின் வானூர்­திச் சேவை­கள் உள்­ளன.

‘‘ஈரான் எங்­க­ளது அண்டை நாடா­கும். எனவே, நாங்­கள் அவர்­க­ளு­டன் ஒத்­து­ழைப்­பை­யும், தக­வல் தொடர்­பை­யும் கொண்­டி­ருக்க வேண்­டும். இந்­தப் பிராந்­தி­யம் சார்ந்த கொள்­கை­க­ளில் நாங்­கள் அவர்­க­ளி­டம் கருத்து வேறு­பாடு கொண்­டுள்­ளோம், ஆனால் இது மோத­லால் தீர்க்­கப்­பட முடி­யாது’’ என்று அல்-­தானி கூறு­கி­றார்.

இந்த விவ­கா­ரத்­தின் ஆரம்­பத்­தில் சவூதி தலை­மை­யி­லான தரப்­புக்கு ஆத­ர­வ­ளித்த அமெ­ரிக்கா, தற்­போது தான் ஈரா­னுக்கு எதி­ரான புதிய தடை­களை விதிக்­க­வுள்­ள­தால் வளை­குடா பிராந்­தி­யத்­தில் ஒற்­று­மையை உரு­வாக்­கு­வ­தற்கு அழைப்பு விடுத்­துள்­ளது. கட்­டா­ரில் அமெ­ரிக்­கா­வுக்கு சொந்­த­மான மிகப் பெரிய வானூர்தி தளம் உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

துண்­டிக்­கப்­பட்ட உற­வு­கள்
வளை­குடா நாடு­க­ளுக்­கி­டையே நில­வும் இந்­தப் பிரச்­சி­னை­யின் கார­ண­மாக பிராந்­தி­யத்­தின் மற்­றப் பகு­தி­க­ளி­லுள்ள தங்­க­ளது உற­வி­னர்­கள் மற்­றும் நண்­பர்­க­ளுக்­கி­டை­யே­யான தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறும் டோகா நக­ர­வா­சி­கள், இந்த நிலைமை விரை­வில் சீர­டை­யும் என்று நம்­பு­கின்­ற­னர்.

‘‘வளை­குடா நாடு­கள் திரு­ம­ணத்­தின் வழி­யாக பிணைக்­கப்­பட்­டுள்­ளன’’ என்று கூறு­கி­றார் சவூ­தி­யைச் சேர்ந்த பெண்ணை திரு­ம­ணம் செய்து கொண்ட ஒரு­வர். ஆனால், தற்­போது நில­வும் சூழ்­நி­லை­யின் கார­ண­மாக ரியாத் நக­ரத்­தில் வசிக்­கும் தனது தாயை பார்க்க முடி­ய­வில்லை என்­றும் அவர் வேத­னைப்­ப­டு­கி­றார்.

‘‘இதற்கு முன்­னர் இருந்­த­தை­விட தற்­போது சிறந்த நிலையை அடைந்­துள்­ளோம். மேலும், முன்பு பிற நாடு­க­ளி­ட­மி­ருந்து பெற்ற பொருள்­களை நாங்­களே உற்­பத்தி செய்து வரு­கி­றோம்’ என்று 84 வய­தா­கும் சாத் அல்-­ஜெஸ்­ஸிம் தெரி­விக்­கி­றார்.

ஈரான் அமெ­ரிக்க மோத­லால்
கட்­டா­ருக்கு உள்ள சிக்­கல்­கள்
மத்­திய கிழக்கு நாடு­க­ளில் ஒன்­றான ஈரான் அணு­வா­யுத சோத­னை­க­ளில் ஈடு­பட்டு வரு­கி­றது என்று குற்­றம் சுமத்­தி­வந்த அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் ஒபாமா, ஈரா­னுக்கு எதி­ராக கடந்த 2015ஆம் ஆண்டு மிகப்­பெ­ரிய பொரு­ளா­தா­ரத் தடையை விதித்­தார்.

அமெ­ரிக்­கா­வு­டன் பிரிட்­டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்­மனி, சீனா ஆகிய நாடு­க­ளும் இணைந்து ஈரா­னுக்கு எதி­ரான நகர்­வு­க­ளைக் காட்­டின. இதை­ய­டுத்து அணு­வா­யு­தம் என்­கிற கொள்­கை­யில் இருந்து வெளி­வ­ரச் சம்­ம­தம் தெரி­வித்த ஈரான் மேற்­கு­றித்த ஆறு நாடு­க­ளு­ட­னும் ஒப்­பந்­தத்­தைச் செய்­து­கொண்­டது.

‘அணு­வா­யு­தப் பர­வல் தடை ஒப்­பந்­தம்’ என்று அழைக்­கப்­ப­டும் இந்த ஒப்­பந்­தத்­தின்­படி ஈரான் அணு­வா­யு­தச் சோத­னை­க­ளைக் கைவிட்டு, தன்­னி­டம் உள்ள செறி­வூட்­டப்­பட்ட யுரே­னி­யத்தை (அணு­வா­யு­தங்­க­ளைத் தயா­ரிப்­ப­தற்­கான மூலம்) வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பி­னால் பொரு­ளா­தா­ரத் தடை­கள் விலக்­கிக் கொள்­ளப்­ப­டும். இதற்கு ஈரான் சம்­ம­தம் தெரி­வித்­தது. ஈரா­னி­டம் இருந்த செறி­வூட்­டப்­பட்ட யுரே­னி­யத்­தின் பெரும் பகு­தியை ரஷ்யா பொறுப்­பேற்­றது.

ஆனால், அமெ­ரிக்க அதி­ப­ரா­கக் கடந்த வரு­டம் பொறுப்­பேற்­றது முதல் ஈரா­னுக்கு எதி­ரான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கி­றார் ட்ரம்ப். ஒப்­பந்­தத்தை மீறி ஈரான் தொடர்ந்து அணு­வா­யு­தச் சோத­னை­க­ளில் ஈடு­பட்டு வரு­கி­றது என்று குறிப்­பிட்ட அவர் ஈரா­னு­டன் அமெ­ரிக்கா கொண்­டுள்ள ஒப்­பந்­தத்தை முறித்­துக் கொண்­டுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வு­ட­னான ஒப்­பந்­தம் முறிந்­ததை அடுத்து மீண்­டும் அணு­வா­யு­தங்­க­ளைத் தயா­ரிக்க எத்­த­னித்து வரு­கி­றது ஈரான். அவ்­வாறு ஈரான் அணு­வா­யு­தங்­க­ளைத் தயா­ரித்­தால் அமெ­ரிக்கா ஈரான் மீது ஏகப்­பட்ட பொரு­ளா­தா­ரத் தடை­களை விதிக்க விழியை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும். ஈரா­னு­டன் நட்­புப் பாராட்­டும் கட்டாருக்கு எதி­ரா­க­வும் அமெ­ரிக்க செயற்­பட ஆரம்­பிக்­கும்.

சில வேளை­க­ளில் கட்­டா­ருக்­கும் அமெ­ரிக்கா பொரு­ளா­தா­ரத் தடை­களை விதிக்க வாய்ப்­புக்­கள் உள்­ளன. இது கட்­டா­ருக்­குப் பெரும் பின்­ன­டை­வைக் கொடுத்­து­வி­டும். ஆக, கடந்த வரு­டம் உச்­சக்­கட்­டப் பேசு­பொ­ரு­ளாக இருந்த வளை­குடா விவ­கா­ரம் சமீ­ப­கா­ல­மாக மீண்­டும் பெரி­ய­தொரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. அடுத்து என்­னென்ன நடக்­கப்­போ­கின்­றன என்­ப­தைப் பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாம்.

http://newuthayan.com/story/10/கட்டார்-எனும்-உழைப்பாளி.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.