Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணப்படுக்கையிலும் தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்திய மக்கள் காதர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணப்படுக்கையிலும் தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்திய மக்கள் காதர்

ஊடகவியலாளர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்
 
 
 
புதுப்பிப்பு: ஜூன் 10 20:30
மக்கள் காதரின் இறுதிச் சடங்கு
pencil icon
 
 
ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குமான உறவுக்கும் நல்லிணக்கத்திற்கும் தனது இறுதிக்கணம் வரை குரல் கொடுத்துவந்த மன்னாரைச் சேர்ந்த முன்னணி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ‘மக்கள் காதர்’ என்று அறியப்பட்ட முகைதீன் அப்துல் காதர் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 75 வது வயதில் இயற்கை எய்தினார். முற்போக்குச் சிந்தனையாளரான இவர் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் தற்புகழ்ச்சியின்றிச் செயலாற்றி வந்தார். 
 
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போருக்கு நீதிகேட்கும் பணியில் உறுதியாக நின்று செயலாற்றிய முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு உறுதுணையாக நின்ற மன்னார் வாழ் இஸ்லாமியப் பெருமக்களில் ஒருவர் மக்கள் காதர்.

 

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் தமிழ் முஸ்லிம் உறவுக்காகக் குரல் கொடுத்த அவர் மரணப்படுக்கையில் இருந்தவாறு கூர்மை செய்தித்தளத்திற்குத் தந்த பேட்டி இங்கு அவரின் நினைவாகப் பிரசுரமாகிறது.

 

 

 

மக்கள் காதர்
share-fb.png share-tw.png
பௌத்தர்களும் இந்துக்களும் மாத்திரமே இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்று தனது நண்பரான மறவன்புலவு சச்சிதானந்தன் ஏன் ஒரு புதிய பூகம்பத்தை ஊடகங்களூடாக ஏற்படுத்தி வருகிறார் என்ற கேள்வியை மிகவும் நிதானத்தோடு மக்கள் காதர் மரணப் படுக்கையில் இருந்தவாறு கூர்மை செய்தித்தளத்திடம் எழுப்பியிருந்தார்.

 

அவரது இந்தக் கேள்வி மிகவும் நியாயமானது. அனைவரதும் சிந்தனைக்குரியது.

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே இலங்கைத்தீவில் தமிழ் மொழி மூதாதையர்கள் இருந்திருக்க வேண்டும். பௌத்தம் புத்தபெருமானின் காலத்திலேயே, ஏறத்தாழ் 3000 வருடங்களுக்கு முன், இங்கு வந்துவிட்டதாக எடுத்துக்கொண்டாற்கூட இலங்கையின் பூர்வீக குடிகாளாக அக்காலத்தில் இருந்தோர் தமிழ் பேசுவோரின் மூத்த குடிகளே. இஸ்லாமியர் பிற்காலத்தில் வந்திருந்தாலும் அவர்கள் தமிழ் பேசும் மூத்தகுடிகளின் வழித் தோன்றல்களே என்று மக்கள் காதர் தனது இறுதிக் கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

இவர் கலைவாதி கலீல் என்று பிரபலமாக அறியப்பட்ட மூத்த எழுத்தாளரின் இரட்டைச் சகோதரர் ஆவார். இவரது அனைத்து சகோதரகளுமே கலை இலக்கியக் குடும்பமாக விளங்குபவர்கள்.

மன்னாரின் ஊடகப் பாரம்பரியத்தில் முத்திரை பதித்த முன்னோடிகளில் ஒருவாரான இவர் பின்னாளில் காலச்சுவடுகிள் எனும் இதழை நடாத்திவந்தார்.

ஊழல் குதங்களினதும் சமுதாயப் புல்லுருவிகளினதும் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய பத்திரிகையே மக்கள் பத்திரிகை என்று அன்னாரின் இணைச் சகோதரரான கலைவாதி கலீல் அவர்கள் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

1965களில் வெளிவந்த மக்கள் பத்திரிகையை ஆரம்பித்து, சவால்களுக்கு மத்தியில் எதிர்நீச்சலடித்து வெற்றிகரமாக நடாத்தியவர் என்ற வகையிலேயே அப்துல் காதர் நாளடைவில் மக்கள் காதர் என்று அழைக்கப்படலானார்.

பெரும் மக்கள் பங்களிப்போடு மன்னார் மூர் வீதியில் இவரது ஜனாசா ஞாயிறன்று அடக்கம் செய்யப்பட்டது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=83

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆருயிர் நண்பரும் கவிஞர் தோழர் கலைவாதி கலீலின் சகோதரரும் மன்னாரின் இருபக்க நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நெறி தழும்பாது தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு உழைத்தவருமான மக்கள் காதரின் மரணம் ஆழ்ந்த சோகத்தைத் தெருகிறது, நமக்கெல்லாம் தமிழ் முஸ்லிம் உறவின் தவிர்கொணா அவசியம்பற்றி வழிகாட்டி சென்றிருக்கும் நண்பனுக்கு தலை தாழ்த்தி அஞ்சலி செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மதவாதத்தினால் வரும் பிரச்சணை.

மதத்தினை ஓரமாக வைக்து விட்டு, மொழியினை தூக்கிப்பிடிக்காவிடில் பாக்கு நீரினையின் இருபக்கமும் வாழும் தமிழர்களுக்கு பிரச்சணை தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.