Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவம் வளர்த்தது: அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவம் வளர்த்தது: அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!

June 26, 2018
36040190_155226702015721_374032851231834

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவத்தினர் வளர்த்த சிறுத்தையென்பதை தமிழ்பக்கம் உறுதிசெய்துள்ளது. வன ஜீவராசிகள் திணைக்களமும் அதை உறுதிசெய்கின்ற போதும், இது குறித்து இதுவரை தகவலெதையும் வெளியடாமல் மூடிமறைத்து வருகிறது.

எனனும், எந்த இராணுவ முகாமில் அதை வளர்த்தார்கள் என்ற தகவலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அம்பாள்குளத்தை அண்டிய பிரதேசத்தை சேர்ந்த முகாமொன்றில் வளர்க்கப்பட்டிருக்கலாமென தெரிகிறது.

 

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

சிறுத்தையின் புகைப்படத்தை பார்த்ததுமே, வன விலங்குகள் மற்றும் வன்னி காடுகள் குறித்த அடிப்படையான அறிவுடையவர்கள் உண்மையை விளங்கி கொள்ளலாம் என்றார். அந்த சிறுத்தை மிக மினுமினுப்பான தோற்றத்தை கொண்டிருந்தது. வன்னி காட்டில் இப்படியான சிறுத்தைகளை காண முடியாது. காரணம்- வன்னிகாட்டின் பரப்பளவிற்குள் அதிகமான சிறுத்தைகள் இருப்பதாகவும், அவற்றின் இரைகள் குறைவாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, புகைப்படத்தை பார்த்ததுமே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுத்தையில் சந்தேகமடைந்ததாக குறிப்பிட்டார்.

இதேவேளை, அந்த சிறுத்தை கொல்லப்படுவதற்கு இரண்டு தினங்களிற்கு முன்னர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உத்தியோகபற்றற்ற முறையில் ஒரு தகவல் கிடைத்திருந்தது. இராணுவம் வளர்த்த சிறுத்தையொன்று தப்பிசென்றுவிட்டதென. ஆனால் உத்தியோகபூர்வமாக அது பற்றிய அறிவித்தலை இராணுவம் வழங்கியிருக்கவில்லை.

சிறுத்தை கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர் அம்பாள்குளம் பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் ஒன்றை நடத்தியிருந்தனர். அதற்கான காரணத்தை கேட்டபோது, முகாமில் வளர்த்த அல்சேசன் நாய் தப்பியோடிவிட்டதென கூறியிருந்தனர்.

 

சிறுத்தைப்புலி அம்பாள்குளத்தில் அடையாளம் காணப்பட்ட பின்னர், அங்கு சென்று கண்காணித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அறிக்கை மற்றும் சிறுத்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகளும் அந்த கருத்தை வலுப்படுத்துகிறது.

அந்த சிறுத்தைக்கு வேட்டையாட தெரியாதென்பது வனஜீவராசிகள் திணைக்களத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அம்பாள்குளத்தில் அது அடையாளம் காணப்பட்ட ஆறு மணித்தியாலத்தில் அது பசு மற்றும் கன்றுகளின் அருகில் சாதாரணமாக படுத்திருந்திருக்கிறது.

அம்பாள்குளத்தில் சுற்றிவளைக்கப்பட்டதும், அதன் நடத்தை மனிதர்களுடன் இணைந்து வளர்ந்ததென்பதை உறுதிசெய்வதாக சம்பவ இடத்தில் நின்ற வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளிற்கு அறிக்கையிட்டுள்ளனர்.

அந்த சிறுத்தையால் ஏற்பட்ட அதிகபட்ச காயமே ஒருவரின் முதுகில் ஏற்பட்ட சிறிய கீறல்தான். கிட்டத்தட்ட நாய்க்கடியொன்றினளவான பாதிப்பே அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், பெரிய சிறுத்தையொன்றிடம் தனியாக மாட்டியவர் பெரிய சேதத்தை சந்திருப்பார். அவரது தலைப்பகுதியையே சிறுத்தை குறிவைத்திருக்கும். எனினும் அம்பாள்குளத்தில் அப்படியெதுவும் நடக்கவில்லை.

 

சிறுத்தையை சுற்றிவளைத்து பிரதேசமக்கள் கலவரமூட்டி, அடித்து துன்புறுத்த ஆரம்பித்த பின்னரே எட்டு பேரை நகத்தால் பிறாண்டியுள்ளது.

சிறுத்தையின் பிரேத பரிசோதனையில் அது இரண்டு நாட்களாக உணவெதுவும் உட்கொள்ளவில்லையென்பது உறுதியாகியுள்ளது. அம்பாள்குளத்தில் அதிகாலையில் மாட்டுக்கு பக்கத்தில் நின்றும் அது வேட்டையாடவில்லை. பிரேத பரிசோதனையில் அது வேட்டையாடி வளர்ந்ததாக உறுதிசெய்ய முடியவில்லையென்றும் தெரியவந்துள்ளது.

எனினும், இராணுவத்தின் எந்த முகாமில் வளர்க்கப்பட்டதென்பதை தம்மால் உறுதிசெய்ய முடியவில்லையென்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

சிறுத்தை கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்பக்கம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுத்தையின் இணையாக இது இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக. அந்த தகவலையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளே தமிழ்பக்கத்திடம் தந்திருந்தார்கள். அதுகுறித்து, இந்த அதிகாரியிடம் விசாரித்தோம்.

கேப்பாபுலவில் சிறுத்தையொன்று கொல்லப்பட்டதை அவர் உறுதிசெய்தார். அதன் இணை கலவரமடைந்து வந்திருக்கலாமென, சம்பவம் நடந்த அதிகாலையில் தமது திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒரு அபிப்பிராயம் இருந்ததாகவும், எனினும், சிறுத்தையின் புகைப்படம் வெளியானதும் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், அவர் இன்னொரு அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டார். பூநகரிக்கு சமீபமாக, பல்லவராயன்கட்டு காட்டு பகுதியில் மிக அண்மையில் வேட்டைக்காரர்களால் ஒரு பெரிய சிறுத்தைப்புலி கொல்லப்பட்டு, அதன் பற்களும் நகங்களும் எடுக்கப்பட்டுள்ளன என. எனினும், தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லையென்றார்.

 

http://www.pagetamil.com/9697/

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் விசுகு அண்ணா சிறுத்தை செத்தது என்று கவலைப்படுவாரா???????????


 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/26/2018 at 2:41 PM, ரதி said:

இப்பவும் விசுகு அண்ணா சிறுத்தை செத்தது என்று கவலைப்படுவாரா???????????


 

எங்கு வாழ்ந்தாலும் புலி தன்னிலை தாளாது 
8 நாள் பசியோடு கிடந்தும் யாரையும் கடிக்க துணியவில்லை 
பசித்தாலும் புல்லை தின்னாது.

புலி கூட்டத்துக்குள் சில ஓநாய்கள் புகுந்ததுதான் 
பல பழிகளை புலிகள் சுமக்க வேண்டி வந்தது .....
வனத்துக்கு போயிருக்காத சில வேதாளங்களே ... எதோ புலியை  பார்த்ததாகவும் 
தம்மை புலி விரண்டியதாகவும் வில்லு பாட்டு பாடுகின்றன 

அதுகூட பரவாயில்லை ...........
சில பின்பு கேவலம் கேட்டு .... நாயிலும் கீழுறங்கி நக்கி பிழைக்கும் 
சில ஒட்டு ஒண்ணிகளுக்கு  வில்லை வைத்து வைத்து இழுக்கும் உலகில் 

ஒரு சிறுத்தைக்கு கவலைப்படாமல் போவதில் அப்படி என்ன தவறு இருக்க போகிறது ? 

மேலுள்ள தமிழ்பக்கம் செய்தி தளம் கூறுகின்ற செய்தியின் உண்மை பொய் தெரியவில்லை. நாங்கள் இணைக்கப்படுகின்ற செய்திகளின் பிரகாரம் எமது கருத்துக்களை கூறுகின்றோம். செய்திகளின் நம்பகத்தன்மையை எம்மால் உறுதி செய்யமுடியாமல் செல்கின்றது. மேலுள்ள பிந்திய தகவலை அறிய உண்மையில் மனதுக்கு மிகவும் பாரமாக உள்ளது. ? பாவம் அந்த வாய் பேச முடியாத ஜீவனின் வாழ்வு இப்படியாய் முடிந்துவிட்டதே. எதிர்காலத்திலாவது இப்படியான சம்பவங்கள் நடைபெறாவண்ணம் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பல கோழைகள் சேர்ந்து....சுத்தி வளைத்து...தப்பவேயிலாத நிலையில்...ஒரு அப்பாவிச்சிறுத்தையை அடித்துக் கொல்வது தான் வீரம் என்றால்....நான் ஒரு கோழையாகவே இருந்து விட விரும்புகின்றேன்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கலைஞன் said:

மேலுள்ள தமிழ்பக்கம் செய்தி தளம் கூறுகின்ற செய்தியின் உண்மை பொய் தெரியவில்லை. நாங்கள் இணைக்கப்படுகின்ற செய்திகளின் பிரகாரம் எமது கருத்துக்களை கூறுகின்றோம். செய்திகளின் நம்பகத்தன்மையை எம்மால் உறுதி செய்யமுடியாமல் செல்கின்றது. மேலுள்ள பிந்திய தகவலை அறிய உண்மையில் மனதுக்கு மிகவும் பாரமாக உள்ளது. ? பாவம் அந்த வாய் பேச முடியாத ஜீவனின் வாழ்வு இப்படியாய் முடிந்துவிட்டதே. எதிர்காலத்திலாவது இப்படியான சம்பவங்கள் நடைபெறாவண்ணம் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

தமிழ்ப் பக்கம் ஒரு பரபரப்பு ஊடகம் என்றுதான் தெரிகின்றது.

செய்திகளின் உண்மைத்தன்மையை அறிவதற்கு ஊடகக்காரர்கள் நான்கைந்து source இடம் பேசவேண்டும். ஆனால் சுடச்சுட செய்திகளைக் கொடுக்கவேண்டிய இணைய யுகத்தில் நேரம் எடுக்கும்போது பழைய செய்தியாகிவிடும் என்றும் நினைக்கலாம்.

போலிச்செய்திகள் அதிகம் உலவும் இக்காலத்தில் எதையும் இலகுவாக நம்பக்கூடாது என்றுதான் சொல்லமுடியும்.

 ஆரம்பத்தில் வந்த படங்கள், காணொளிகளைப் பார்த்தபோது சிறுத்தை வாடி வதங்காமல் மினுமினுவென்று இருக்கும் அளவிற்கு வன்னிக்காடுகளில் அதற்கு இரை சாதாரணமாகக் கிடைக்கின்றதே என்ற எண்ணம் உருவானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.