Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம்

Featured Replies

சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம்

 

 

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ja04.jpg

இந்த வீதி மறியில் போராட்டமானது இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ja05.jpg

ja03.jpg

ja06.jpg

http://www.virakesari.lk/article/35657

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆர்ப்பாட்டக்காரர்களுடன்- மாவை எம்.பி.சந்திப்பு!!

 

 

1111111-750x430.jpg

 
 

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சற்றுமுன்னர் சந்திப்பை மேற்கொண்டு வருகிறார்.

சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதி்யை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்ற போதும், இதுவரை எவரும் வருகை தராத நிலையில் மாவை எம்.பி . சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளார்.

222222222222-300x225.jpg

http://newuthayan.com/story/10/ஆர்ப்பாட்டக்காரர்களுடன்-மாவை-எம்-பி-சந்திப்பு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடக்கு கல்வி அமைச்சருக்காகக் காத்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்- சுழிபுரம் சிறுமி படுகொலை விவகாரம்!!

 

media-share-0-02-03-5907234cceb2d6952f75

 
 

 

 

சுழிபுரம் சிறுமி ரெஜீனா படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதிகோரி, அந்தப் பிரதேச மக்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வடக்கு கல்வி அமைச்சர் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தராத காரணத்தால் மக்கள் அவ்விடத்தை விட்டு விலகாமல் காத்திருக்கின்றனர்.

சிறுமியின் படுகொலைக்கு நீதி வழங்கி ஏனைய மாணவிகளதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் சுழிபுரம் சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குழப்ப நிலமை ஏற்படும் என்பதால் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து சமாதனப்படுத்த முயன்றனர். உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தி தீர்வு பெற்றும் தருவதாகவும் உறுதியளித்தனர்.

 

மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சம்பவ இடத்துக்கு வருகை தராத காரணத்தால் , ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/11/வடக்கு-கல்வி-அமைச்சருக்காகக்-காத்திருக்கும்-ஆர்ப்பாட்டக்காரர்கள்-சுழிபுரம்-சிறுமி-படுகொலை-விவகாரம்.html

 

 

 

காவல் துறையா? கஞ்சாத் துறையா – யாழ் பல்கலையில் திரண்ட மாணவர்கள்-சுழிபுரம் சிறுமிக்கு நீதி கோரி

36305668_1930331463747036_29907873081998
 
 
 
 

சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பல்கலைக்கழக முன்றலில் ஆரமம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்று இரு மருங்கிலும் ஆபர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காவல்துறை கயவர்களுடனா, காவல் துறையா கஞ்சா துறையா, இன்னும் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் இப்படி ஆவது? உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

36254879_1930331453747037_22777648967392

36264051_1930331423747040_37498278418107

36366268_1930331440413705_49177146746292

http://newuthayan.com/story/11/காவல்-துறையா-கஞ்சாத்-துறையா-யாழ்-பல்கலையில்-திரண்ட-மாணவர்கள்-சுழிபுரம்-சிறுமிக்கு-நீதி-கோரி.html

 

 

 

சுழிபுரம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் -அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு!!

media-share-0-02-03-7b7779a9e8a1819c6cd2
 
 

சுழிபுரத்தில் சிறுமி றெஜீனாவின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகளும் சற்றுமுன்னர் சந்தித்துள்ளனர்.

நாளை யாழ்ப்பாணத்தில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று சுழிபுரம் சந்தியில் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜீனாவுக்கு நீதிகோரி வீதியை மறித்து இன்று காலையில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது.

 

நிலமையைக் கட்டுப்படுத்துவற்கான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்திப்பதற்காக சுழிபுரத்துக்்கு வருகை தந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அவர்கள் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

media-share-0-02-03-6d011ba4111316fa1400media-share-0-02-03-2db4b268a9f1138862a9media-share-0-02-03-fffc212fc1ea3a5f7ddd

http://newuthayan.com/story/11/சுழிபுரம்-ஆர்ப்பாட்டக்காரர்களுடன்-அரசியல்-கட்சிகளின்-பிரதிநிதிகள்-சந்திப்பு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நடுவீதியில் வெய்யிலில் காத்திருக்கும் மாணவர்கள் -சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி- ஆர்ப்பாட்ட இடத்தில் அவலம்!!

 

media-share-0-02-03-d644916cbbed7ff38466

 
 

 

 

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி சுழிபுரம் சந்தியில் மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் பதிலுக்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 4 மணி நேரமாக வீதியில் காத்திருப்பதுடன், நடு வீதியில் சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு மத்தியிலும் பாதாகைகைத் தாங்கியவாறு சிறுவர்கள் காத்திருப்பது பலரையும் வேதனைப்படுத்தியுள்ளது.

 

இன்று காலையிலேயே போராட்டம் ஆரம்பித்தமையால் மாணவர்கள் சோர்வடைந்த நிலையில் உள்ளனர். கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்களும் பெரும் துக்கத்துடன் ஆர்ப்பாட்ட இடத்தில் கூடியுள்ளனர்.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் நிகழ்வொன்றுக்காக முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் அவரது பதில் கிடைக்கும் வரை தாம் கலைந்து செல்ல மாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடிவாதத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/12/நடுவீதியில்-வெய்யிலில்-காத்திருக்கும்-மாணவர்கள்-சுழிபுரம்-சிறுமிக்கு-நீதிகோரி-ஆர்ப்பாட்ட-இடத்தில்-அவலம்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிறுமியின் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்-வடமாகாண கல்வியமைச்சர்

 

சுழிபுரம் சிறுமியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களிற்கு கூடிய விரைவில் தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என வடமாகாண கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சர்  கந்தையா சர்வேஸ்வரன் பாடசாலை மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா வின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்ததன் பின்னர்  ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப் பட்டார். ஆறு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த இக் கதியானது மிகுந்த அதிர்ச்சியையும்இ கலலையையும் ஏற்படுத்தி யுள்ளது.

. இத்தகைய துன்பகர மான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாது இருக்க சிறுபிள்ளைகள் தொடர்பான பெற்றோர்களின் விழிப்புனர்வு அவசியமானதாகும்.

sarwes.jpg

.எனினும் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடிய வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சு தனது வரையறை களுக்குள் நடவடிக்கைகள் மேற் கொள் வதற்குத் தீர்மானித்துள்ளது என்ற வகையில் வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ  அல்லது பெற்றோர்களினால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையைச் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம். இது எதிர்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற் கான ஒரு நடைமுறையாகவும் இருக்கும்.

இவ்வேளையில் இச் சிறுமியின் படுகொலை தொடர்பில் காவல்துறையினர் நடுநிலையுடனும் நீதியாகவும் செயற்பட்டு அனைத்துக் குற்றவாளிகளையும் நீதி மன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும் கடமையைக் கூடிய விரைவில்  நிறை வேற்ற வேண்டும் என வடமாகாணக் கல்வி அமைச்சு கேட்டுக் கொள்கின்றது.

எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாதிருக்க பொலிசாரினதும்நீதி மன்றத்தினதும் இக் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையானது இத்தகையவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்க வேண்டும். 

 

http://www.virakesari.lk/article/35695

  • கருத்துக்கள உறவுகள்

பல தசாப்தங்களாக ஊடகதுறையில் இருக்கும் வீரகேசரி எந்த ஆதாரத்தை வைத்து சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார் என்று செய்தி வெளியிட்டது?

மருத்துவ அறிக்கையே அப்படி எதுவும் துஷ்பிரயோகத்திற்கு அவர் உள்ளாக்கப்படவில்லை என்று கூறும்போது, அவசர அவசரமாக செய்தி வெளியிடும் இவர்களின் நோக்கம் வக்கிர புத்தி இல்லாமல் வேறேதும் இருக்குமா?

பல்கலைகழகத்திலிருந்து , பாடசாலைவரை,கடைகள் பொது நிர்வாகங்களை முடக்கி போராட்டம் நடத்துபவர்களை கேட்க நினைப்பது,

இலங்கை காவல்துறை, அரச நிர்வாகம் ஒன்றும் உத்தமபுத்திரர்கள் இல்லைத்தான்,

ஆனால் சொந்தக்காரர்களால் அவர்களின் தனிப்பட்ட தகராறுக்காக சிறிய தந்தை உறவில் உள்ளவராலேயே ஒரு சிறுமி படுகொலை செய்யப்படும்போது அவர்களால் என்னதான் செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன....... க்கு இந்த ஆர்ப்பாட்டம்? சந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்கள். எல்லாவற்றையும் அரசியலாக்கும் வக்கற்ற நிலை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.