Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சன் ராமநாயக்க துரோகம் இழைத்துள்ளார்- முன்னாள் அமைச்சா் விஜயகலா!

Featured Replies

ரஞ்சன் ராமநாயக்க துரோகம் இழைத்துள்ளார்- முன்னாள் அமைச்சா் விஜயகலா!

 

 
 

ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்சியில் தெரிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டு உங்களுடன் (விஜயகலா) தொலைபேசியில் பேசும் போது ஊடகங்களுக்கு நேரடியாக செய்தி வழங்கிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,

பதில்-- அவர் ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவையில்லை. நான் இன்று பிரச்சினைகள் முடிந்த பின் தொலைக்காட்சி க்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்திருக்கு அதற்கு ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு கொண்டுவர அவசியம் இல்லை.

அவர் பாராளுமன்றத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் சிநேகித அடிப்படையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன். அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு தெரியாது இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியில் கதைப்பது தெரியாது.

அவர் வைத்த பின் எனக்கு வந்த அழைப்பின் ஊடாகவே கேட்டறிந்தேன். பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேய எனது சிறப்புரிமையை மீறுவதாக அமைந்துள்ளது. இவர் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது.

இப்படியானவர்கள் தான் இந்த பாராளுமன்றில் இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எப்படி பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் செவிமடுக்க இயலும் .

பாராளுமன்ற உறுப்பினராகிய ரஞ்சன் ராமநாயக்க முற்றுமுழுதாக நூற்றுக்கு 52 வீதமாக பெண்கள் வாழுகின்ற இடத்திலேயே துரோகம் செய்திருக்கின்றார். என்பதையே நான்உண்மையில் வெளியில் கொண்டுவரவிரும்புகின்றேன். இதற்கான நடவடிக்கையை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் அதேவேளை, கணவனை இழந்து தனிய வாழ்ந்து கொண்டிருக்கும் வேளைகளில் என்னுடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாககத்தான் அது இருக்கின்றது.

அதை உரிய இடங்களுக்கு நான் சமர்ப்பிப்பேன் என தனியார் தொலைக்காட்சிக்கு சற்று முன்னர் (காலை 9.45) வருகை தந்து நேர்காணல் நேரலை நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/102923

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் விஜயகலா தொடர்பில் யு ரியுப்பில்.. சிங்கள அரச பயங்கரவாத ஆதரவுக் காடைக்குழுக்கள்.. ரஞ்சன் ராமநாயக்கா தலைமையில்.. மிக மோசமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. மிகவும் கீழ்த்தரமான பெண்களுக்கு எதிரான வார்த்தைகளும்.. கார்டூன்களும்.. மிம்ஸ் களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவை குறித்து சமூக ஊடகங்களுக்கு உங்களால் முடிந்த முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

உலகில் பலகோடி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான ஹிட்லரின் பெயரை உச்சரிக்க.. உலகில் எந்த கெடுபிடியும் கொடையாது. அதேபோல்.. பல ஆயிரம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் எல்லாம் சிங்களவர்களின் ஹீரோக்களாக வலம் வர..

ஒரு பேச்சில்.. விடுதலைப்புலிகளையும்.. அவர்களின் தேவையையும் சொன்னதற்காக சிங்கள காட்டுமிராட்டி இனவாதப் பயங்கரவாதிகள்.. ஒரு தமிழ் பெண்மணி மீது நடத்தும் சட்டவிரோத.. சமூகவிரோத.. பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.

சொறீலங்காவை.. ஒரு சன நாயக நாடு என்று சொல்லி அதுக்கு ஆயுதமும்... இராணுவ பயிற்சியும்.. ஆலோசனையும் வழங்கும் சர்வதேச நாடுகள் மத்தியில் சொறீலங்காவின் அரச இனவாதப் பயங்கரவாதம் குறித்த சரியான தகவல்கள் போய்ச் சேர இந்தச் சூழ்நிலைகளை தமிழ் மக்கள் பாவிக்க வேண்டும். 

  • தொடங்கியவர்

 

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடன் ஒரு நேரடி கலந்துரையாடல்-மக்களுக்காக என்னுடைய உயிரையும் தியாகம் செய்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தனியிரிமை(privacy) பாதுகாக்க முடியாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். முடிவுகள் மட்டும் சாதகமாக வரும் என தமிழ் அமைச்சர் விஜயகலா அவர்கள் நினைக்க தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

90 களில் அடுத்தடுத்து இரண்டு இராணுவபோக்குவரத்து விமானங்கள்  நூற்றுக்கணக்கான படையினருடன் சுட்டுவீழ்த்தப்பட்டபோது இலங்கை வான் பரப்பு முழுவதும் விமானங்களின் பறப்புக்கள் நிறுத்தப்பட்டன,

விமானங்களுடன் மேலே எழுவதற்கு சிங்கள விமானிகள் அனைவரும் அஞ்சினர்,விமானப்படையே பீதியில் இருந்தநேரம் யாரும் பறப்பை துணிந்து மேற்கொள்ள முன்வராத நேரம், பத்மநாதன் என்ற ஒரு தமிழர் துணிச்சலோடு முன்வந்து முதல்பறப்பை மேற்கொண்டு தனது சிங்கள தேசத்து விசுவாசத்தை காண்பித்து அவர்களை உற்சாக படுத்தினார். 

அதே பத்மநாதன் சில மாதங்களின்பின் அன்ரனோவ் விமானம் ஒன்றை ஓட்டி செல்லும்போது விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் புத்தளம் ஏரிக்குள்ள விழுந்துபோனார்..

உடனே சிங்கள தேசத்தில் ஒருபகுதியினர் அவர் புலிகளின் உளவாளியாக செயற்பட்டிருக்கலாம் அதுதான் விமானத்தை கொண்டுபோய் விழுத்திபோட்டார் என்று கொந்தளித்தது பழிபோட்டது.

பல தசாப்தங்களாக இலங்கை கடற்படைக்கு இனம் மறந்து ஊழியம் செய்த தமிழர் ஒருவரை அண்மையில் கடற்படை தளபதியாக்கியது, அதற்கு சிங்களவர்களினுள் எழுந்த எதிர்ப்புக்கள் யாரும் சொல்லி அறியவேண்டிய தேவையில்லாதது

இதுக்கும்மேல் அதிகமாக தமிழரில் இருந்து சிங்களவர்களுக்கு உதவி செய்யமுடியாது என்ற அளவில் அதியுச்ச விசுவாசம் காண்பித்த கருணாமீது இன்றுவரை அவர் 600 பொலிசாரை கொன்றார், 90 பிக்குகள் படுகொலையில் தொடர்பு வைத்திருந்தார் என்று வன்மம் வைத்திருக்கிறது.

சரி அகிம்சை,அரசியல் என்று சிங்களவர்களை டீல் பண்ணினாலும் ஏதோ ஒரு கட்டத்தில் இவர்கள் புலிகள் ஆதரவாளர்கள், இவர்களது கட்சியே தடைசெய்யப்படவேண்டும் என்று சினக்கிறது அதில் விக்னேஸ்வரன்,சுமந்திரன்,சம்பந்தன் தலைமை தாங்கும் தமிழ்கூட்டமைப்பும் அடங்கும்.

சிங்களவர்களுக்கு எதிராக ஓர்காலத்தில் ஆயுதம் ஏந்தியதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று காலில் விழுந்து விசுவாசம் காண்பித்த டக்ளசையாவது உயரத்தில் வைத்திருக்கிறதா? இப்போ எல்லாம் அவர் என்ன செய்யுறாரென்றே பலருக்கு தெரியாது.

ஆயுதபோராட்ட காலங்களில் அடிக்கடி சர்வதேசங்களுக்கு புலிகள்பற்றி கடிதம் எழுதி சிங்களவர்களுக்கு ஆடிபோன வயசிலயும் விசுவாசம் காண்பித்து நின்ற ஆனந்த சங்கரியையாவது உயர்ந்த இடத்தில் வைத்திருக்குதா என்றால் அதுவும் இல்லை

 வன்முறை எதுவும் வேண்டாம் சிங்களவர்களுடன் ஒற்றுமையாய் நின்று அரசியல்  செய்து உரிமைகளை பெறுவோம் என்ற அரசியல் பழம் சம்பந்தன் ஐயாவின் எதிர்கட்சி தலைவர் பதவியையும் பறிக்கவேண்டும் என்றரீதியில் திட்டம்போட்டு செயல்படுகிறது

இன்று  யுத்தம்முடிந்த கையோடு சிங்கள அரசியல்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஓர்கட்டத்தில் அமைச்சருமாகி, சிங்களவர்கள் தமிழர்களை சேர்த்து வாழ்கிறார்கள் என்று சர்வதேசத்திடம் அவர்களுக்கு நற்சான்றிதழ் பெற்றுக்கொடுக்க உதவிய விஜயகலாவையாவது விட்டு வைத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை..

ஆகமொத்தம் ஆயுதமேந்தி போராடினாலும் சாரி, அகிம்சை அரசியல் செய்தாலும் சரி சிங்களவனை பொறுத்தவரை உங்கள் போராட்ட வடிவங்கள் அவனுக்கு எதிரியல்லஅவன் முன்னால் நிற்கும் ஒவ்வொரு தமிழனயும் அவன் எதிரியாகதான் பார்க்கிறான்  என்பதை ,

இன்றும் சிங்களத்தின் கை கால் கழுவிவிட்டு விருந்து சாப்பாடுபோட்டு பக்கத்தில் இருந்து விசிறிவிட்டு  வெற்றிலை பாக்கும் மடித்துக்கொடுக்கும் வீர தமிழர்கள் உணர்ந்தால் சரி!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.