Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்­டைக்­குள் இரா­ணு­வம்- தற்­கா­லிக முகாம் அமைக்­க­லாம் -வடக்கு முதல்­வர்!!

Featured Replies

கோட்­டைக்­குள் இரா­ணு­வம்- தற்­கா­லிக முகாம் அமைக்­க­லாம் -வடக்கு முதல்­வர்!!

CV-Wigneshwaran.jpg

வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னர் நிரந்­த­ர­மாக வெளி­யே­று­வார்­க­ளா­யின், கோட்­டைக்­குள் அவர்­கள் தற்­கா­லிக முகாம் அமைக்­க­லாம். ஒரு­போ­தும் நிரந்­தர முகாம் அமைத்­துத் தங்­கு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக் னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

இதே­வேளை, கோட்­டைக்­குள் இரா­ணு­வம் முகாம் அமைப்­ப­தற்கு தாம் ஒரு­போ­தும் அனு­மதி வழங்­க­வில்லை என்று வடக்கு மாகாண ஆளு­நர் குரே நேற்­றுக் குறிப்­பிட்­டார்.

யாழ்ப்­பா­ணம் கோட்­டை­யில் இரா­ணு­வம் முகாம் அமைப்­பது தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் கேள்வி எழுப்­பி­ய­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்­பா­ணக் கோட்­டையை இரா­ணு­வத்­துக்கு கொடுப்­பது என்று சட்­ட­மாக வர­வில்லை. பல­ரா­லும் பேசப்­ப­டு­கின்­றது. இதனை ஆரம்­பித்து வைத்­த­வர் வடக்கு மாகாண ஆளு­நர். கோட்­டையை இரா­ணு­வத்­துக்கு கொடுக்­க­வேண்­டு­மா­யின் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும்.

வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னர் முற்­றாக வெளி­யே­று­வார்­க­ளா­யின், கோட்­டைக்­குள் தற்­கா­லிக முகாம் அமைப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு அனு­ம­திக்க முடி­யும். நிரந்­தர முகாம் அமைக்க அனு­ம­திக்­க­மு­டி­யாது. கோட்டை தொல்­பொ­ருள் சின்­னம் என்­ப­தால், அங்கு இரா­ணு­வத்­தி­னரை முகாம் அமைக்க அனு­ம­திப்­ப­தி­லும் பிரச்­சி­னை­யுள்­ளது.

கோட்­டைக்­குள் வடக்கு மாகாண சுற்­றுலா மையம் அமைக்க நாம் கோரி­ய­போது தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் அனு­மதி வழங்­க­வில்லை. இரா­ணு­வத்­தி­னர் முகாம் அமைப்­ப­தற்கு ஏன் எதிர்ப்­புத் தெரி­விக்­க­வில்லை என்­பது புரி­ய­வில்லை – என்­றார்.

http://newuthayan.com/story/10/கோட்­டைக்­குள்-இரா­ணு­வம்-தற்­கா­லிக-முகாம்-அமைக்­க­லாம்-வடக்கு-முதல்­வர்.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தமிழரசு கட்சி லூசுகள் விளங்காமல் வந்து உளறி கொட்டி மாட்டுவினம் பாருங்க.

12 hours ago, பெருமாள் said:

இதுக்கு தமிழரசு கட்சி லூசுகள் விளங்காமல் வந்து உளறி கொட்டி மாட்டுவினம் பாருங்க.

ஆமா சிங்கள மகாவித்தியாலயத்தில் இருக்கும் முகாமை அகற்ற கோர மாட்டார் ஆனால் இராணுவம் இல்லாத இனி கோட்டைக்கு வரக்கூடாது என்று மட்டும் கத்துவாராம் சி வி. விடுபடாத நிலங்களுக்கு எதுவுமே சொல்ல மாட்டார் ஆனாலும் இனிமேல் இராணுவம் குந்திடுமோ என்ற பயம் நிறையவே இருக்குதாம்.

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா சிங்கள மகாவித்தியாலயத்தில் இருக்கும் முகாமை அகற்ற கோர மாட்டார் ஆனால் இராணுவம் இல்லாத இனி கோட்டைக்கு வரக்கூடாது என்று மட்டும் கத்துவாராம் சி வி. விடுபடாத நிலங்களுக்கு எதுவுமே சொல்ல மாட்டார் ஆனாலும் இனிமேல் இராணுவம் குந்திடுமோ என்ற பயம் நிறையவே இருக்குதாம்.

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கப்பா 

குறை நினையாதேங்கோ ஜீவன் சிவா கேட்கிறன் எண்டு  இந்தாளை விட்டால் வேறு யாராவது தமிழ் அரசியலவாதிகள் உங்களின் கோரிக்கைகளை பொது வெளியில் வைத்து இருக்கினமா ?

4 minutes ago, பெருமாள் said:

குறை நினையாதேங்கோ ஜீவன் சிவா கேட்கிறன் எண்டு  இந்தாளை விட்டால் வேறு யாராவது தமிழ் அரசியலவாதிகள் உங்களின் கோரிக்கைகளை பொது வெளியில் வைத்து இருக்கினமா ?

குறை நினைக்காதைங்கோ பெருமாள் / இந்தாள் யதார்த்தம் புரியாது உளறுது. நாம் தோற்றது உண்மை, நமது அனைத்து முயற்ச்சிகளும் கட்டையில் போனதும் உண்மை. ஆனாலும் இனியாவது இருக்கும் உயிரை காப்பாற்ற துடிக்கும் + வாழ்வாதாரத்தை தேடும் மக்களுக்காக குரல் கொடுத்திருக்கலாம் என்பதே என் அபிலாசை.

இன்றும் முகாம்களில் வாடும் மக்களைப் பற்றி சிந்திக்காது, அவர்களுக்கான வாழ்வாதாரங்களுக்காக அரசு ஒதுக்கிய பணத்தில் எதுவும் செய்யாமல் வீம்புக்கு  அரச பணத்தில் எதையுமே செய்யாது வெறும் வாய் சவாடலில் ஈடுபடும் இவரை நான் மதிக்கமாட்டேன்.

மற்றவர்களால் மக்களுக்கு கொஞ்சமாவது நின்மதி கிடைக்குது என்பது எனது பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

உங்களை போலத்தான் நானும் நினைக்கிறன் வேறு வேறு கோணம்கள் அவ்வளவுதான் எங்களுக்காக  மன்னிக்கவும் அங்குள்ளவர்களுக்காக கொஞ்சமாவது நியாயத்துக்கு சத்தம் போடட்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.