Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் திருடர்களையும்– ஆவாக்களையும் ஊக்குவிக்கும் காவற்துறை– தவிக்கும் மக்கள்…

Featured Replies

வடக்கில் திருடர்களையும்– ஆவாக்களையும் ஊக்குவிக்கும் காவற்துறை– தவிக்கும் மக்கள்…

முறிகண்டி – அக்கராயன் வீதியில் திருடர்களை மடக்கிப் பிடித்த போதும் நடவடிக்கை எடுக்காத காவற்துறை….
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Murukandy3.jpg?resize=800%2C600

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் கொள்ளையர்களை காவற்துறை  நிலையத்தில் ஒப்படைத்தபோதும் காவற்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இம்மாதமும் இரு பெண்களிடம் நகைகள் அறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவற்துறையில் முறைப்பாடு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அக்கராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வீதியால் பயணித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்தருடைய மனைவியின் தாலி கொடியை அறுக்க முயன்றுள்ளனர். அதன் போது அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்த்தரும் இணைந்து திருடர்களை துரத்தியபோது ஒருவர் பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதன் பின் அக்கராயன் காவற்துறை  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் மற்றய திருடரையும் மடக்கி பிடிக்கப் பட்டதை தொடர்ந்து அவரும் காவற்துறை  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மு றைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த அக்கராயன் காவற்துறையினர், கிளிநொச்சி காவற்துறை நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யபோவதாக பொலிஸார் அச்சுறுத்தி முறைப்பாட்டை ஏற்காது மக்களை விரட்டியுள்ளனர். அது குறித்து பொறுப்பு வாய்த்த அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர்.

Murukandy1.jpg?resize=800%2C600Murukandy2.jpg?resize=800%2C600  Murukandy4.jpg?resize=800%2C600Murukandy5.jpg?resize=800%2C600Murukandy6.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/87719/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யபோவதாக பொலிஸார் அச்சுறுத்தி முறைப்பாட்டை ஏற்காது மக்களை விரட்டியுள்ளனர்.

இதுதான் சொறிலங்கா ஜனநாயகம் இதை பற்றி பாராளுமன்றத்தில் கதைத்தாலும் சொரித்த்னாமாய்த்தான் பதில் வரும் .

போலீசில் கொண்டு போய் குடுப்பதுக்கு பதிலா இரண்டு கள்வரின் கையை முறித்து விட்டு இருந்தால் அடுத்தமுறை அந்தபக்கம் வர போலிசும் யோசிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

முறிகண்டி – அக்கராயன் வீதியில் திருடர்களை மடக்கிப் பிடித்த போதும் நடவடிக்கை எடுக்காத காவற்துறை….
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..  ...

குறித்த குடும்பஸ்த்தரும் இணைந்து திருடர்களை துரத்தியபோது ஒருவர் பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதன் பின் அக்கராயன் காவற்துறை  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் மற்றய திருடரையும் மடக்கி பிடிக்கப் பட்டதை தொடர்ந்து அவரும் காவற்துறை  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மு றைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த அக்கராயன் காவற்துறையினர், கிளிநொச்சி காவற்துறை நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யபோவதாக பொலிஸார் அச்சுறுத்தி முறைப்பாட்டை ஏற்காது மக்களை விரட்டியுள்ளனர்.

பல கேள்விகள் எழுகின்றன:

  1. திருடரை மடக்கி போலீசில் ஒப்படைப்பது சரியான செயல். ஆனால் குற்றவாளிக்கு மக்களே நீதிபதியாகவும் நீதிமன்றமாகவும் இருந்து தண்டனை நையப்ப்புடைப்பது என்றும் தீர்மானித்தது அதை நிறைவேற்றி விட்டு பின்னர் குற்றவாளியை  போலீசில் ஒப்படைத்தால், ஏற்கனவே தண்டனை அனுபவித்த குற்றவாளியை போலிஸ் கைது செய்வது போலிசுக்கு நீதிமன்றத்தில் எதிரி தரப்பு வழக்கறிஞர் மூலமாக பிரச்சினையை தரலாம் அல்லவா?
  2. நீதிபதி செய்ய வேண்டிய தீர்ப்பு வழங்கும் வேலையை தாமே செய்து சட்டத்தில் இல்லாத நையப்ப்புடைப்பது என்ற தீர்ப்பை நிறைவேற்றிய மக்கள் சட்டவிரோதமாக ஒருவரை தாக்கிய குற்றவாளிகள் அல்லவா? அவர்களை போலிஸ் கைது செய்யலாம் அல்லவா?
  3. எல்லா மக்களிடமும் அங்கே தொலைபேசிகள் உள்ளன. ஏன் எவரும் பாராளுமன்ற உறுப்பினர்  சிரிதரனையோ மாகாணசபை அமைச்சர் ஆனந்தியோ அழைத்து உதவி கேட்கவில்லை? வாக்கு போட்டு தெரிவு செய்த இந்த மக்கள் பிரதிநிகள் இந்த இடத்தில் தானே தேவைப்படுகிறார்கள்?
  4. ஒரு நியாயமான நேர்மையான செய்தியாளர் போலிஸ் தரப்பிடமும் அவர்களின் செயற்பாடு பற்றி கேட்டு அல்லவா முழுமையான செய்தியை பிரசுரிக்க வேண்டும்? இந்த குளோபல் தமிழ் செய்தியாளர்  போலிஸ் ஏன் இந்த முறைப்பாட்டை ஏற்கவில்லை என்றும் கேட்கவில்லை, ஏன் முறைப்பாடு செய்தவர்களை கைது செய்வோம் என்றார்கள் என்றும் விசாரிக்கவில்லை. குற்றம் செய்தால் தானே கைது செய்யலாம்? எவரையும் நையப்ப்புடைப்பது குற்றம் அல்லவா? கொலை குற்றம் செய்தவர்களை கூட நீதிமன்றம் நையப்புடைக்கும் படி தீர்ப்பிட முடியாதே?

  • கருத்துக்கள உறவுகள்

144003_F9-_F82_A-426_C-_A649-_E2_CBE12_C

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

இப்படியான முட்டையில் முடி  பிடுங்கும் கேள்விகளுக்கு வடமராட்சி பக்கம் நீங்கள் ஓடு பிரித்து இரங்கி களவெடுத்து பாருங்க விடை சூப்பரா இருக்கும் .

இந்த அக்கராயன்குள போலீஸ் நிலையம் பல செய்திகளில் வந்துவிட்டது.

முக்கியகாரணம் இந்தப் பகுதிகளில் தான் வளமாக உள்ள காட்டுப்பகுதி சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் மற்றும் முப்படைப் பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

தமிழினத்தில் உள்ள சில காடையர்களை வளர்ந்துவிடும் சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் மற்றும் முப்படைப் பயங்கரவாதிகள் அவர்கள் துணையுடன் பெருமளவு சட்டவிரோத மணல் கொள்ளை,  சட்டவிரோத மரக்கடத்தல் (காடழிப்பு), கசிப்பு வியாபாரம், போதைப்பொருள் பதுக்கல் தளங்கள் போன்றவற்றை இப்பகுதியில் நீண்டகாலமாக செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் இருக்கும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகள் இந்தக் காடையர்களை முடிந்தளவு பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த சிலமாதங்களின் முன்னர் இந்த அக்கராயன்குள போலீஸ் நிலையத்திற்கு விதிவிலக்காக உள்ள ஒரு சிங்கள போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதன் பின்னர் சட்டவிரோத செயற்பாடுகள் கட்டுக்குள் வந்தது. அவர் கடத்தலில் ஈடுபட்ட யாழ் சிங்கள-போலீஸ் பயங்கரவாதிகளின் உதவிப் போலீஸ் அத்தியட்சகராக உள்ளவரின் டிப்பர் வாகனங்களை கைப்பற்றி கிளிநொச்சி நீதிமன்றில் கையளித்திருந்தார். அதனால் அவர் வெறும் 3 மாத சேவையின் பின்னர் இந்த மாதம் நெடுந்தீவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் அவரின் இடமாற்ற உத்தரவுக்கு எதிராக மனுக்களைக் கொடுத்ததும் அது வெற்றியளிக்கவில்லை.

இந்த சட்டவிரோத செயற்பாடுகளை ஒருங்கிணைப்பவர் விஜயகலாவின் ஐ.தே. கட்சியை சேர்ந்த ரங்கன் என்பவர்.

இது போலவே பூநகரி, மல்லாவி, ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு, விஸ்வமடு, புதுக்குடியிருப்பு, வரணி,   போன்ற பகுதிகளிலும் சிங்கள-போலீஸ் பயங்கரவாதிகளின் சட்டவிரோத செயல்கள் மும்மரமாக நடந்து வருகிறது நடைபெற்று வருகிறது.

முன்னர் இப்பகுதிகளில் சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் முப்படைப் பயங்கரவாதிகள் துணையுடன் குறிப்பிடட சட்டவிரோத செயல்களில் கொடிகட்டி பறந்தவர்கள் மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி கோட்டபாய ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும். இவர்களின் எடுபிடியாக அங்கஜன் ராமநாதன் இருந்து வந்ததும் பலர் அறிந்த செய்தி தான். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இப்படியான முட்டையில் முடி  பிடுங்கும் கேள்விகளுக்கு வடமராட்சி பக்கம் நீங்கள் ஓடு பிரித்து இரங்கி களவெடுத்து பாருங்க விடை சூப்பரா இருக்கும் .

பிறகு எதற்கு போலிசுக்கு போவான்? மக்கள் தாங்களே போலிஸ், நீதிபதி, சிறைச்சாலை, கழுமரம், தெருச்சண்டியர், என்று இருக்கும் இடத்தில் போலிஸ் சும்மா இருந்து சம்பளம் எடுபப்து நியாயம் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.