Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதியரசர் விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி யினர் விசாரணை

Featured Replies

நீதியரசர் விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி யினர் விசாரணை

 

 
Image

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரச உத்தியோகத்தர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மீண்டும் விடுதலை புலிகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

உள்விவகார அமைச்சர் வஜிர அபேவரத்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் முன்னிலையில் விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

விஜயகலா இந்த கருத்தை வெளியிடும் போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருந்தனர்.விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்து தென்னிலங்கையிலுள்ள கடும்போக்குவாத அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்திருந்தது.

அத்துடன் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டதுடன், அவரின் அமைச்சுப் பதவியும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

இதனடிப்படையில் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து தாமாக விஜயகலா மகேஸ்வரன் விலகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்ய வேண்டும் என கடும்போக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

https://www.ibctamil.com/politics/80/103418?ref=imp-news

  • தொடங்கியவர்

விஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் விசாரணை

 

C.V.-Wigneswaran-300x177-720x450.jpg

 

விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இன்று காலை, குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்த நிலையிலேயே தற்போது முதலமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் விஜயகலா விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த விடுதலை புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அவரது இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜயகலாவின் கருத்து அரசியலமைப்பு மீறும் வகையில் அமைந்திருப்பின் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/?p=704944-விஜயகலா-விவகாரம்:-வடக்கு-முதலமைச்சரிடம்-விசாரணை

 

 

விஜயகலாவின் உரை விவகாரம் -பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை!!

DiSS97hVQAAbzRi-750x430.jpg
 
 

விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதலமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலும், ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலையத்திலும் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற அரச நிகழ்வில் விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக விஜயகலா வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து இராஜங்க அமைச்சர் பதவியையும் விஜயகலா இழந்தார்.

07-1-300x231.png

 

http://newuthayan.com/story/14/விஜயகலாவின்-உரை-விவகாரம்-பொலிஸ்-குற்றத்தடுப்பு-பிரிவு-விசாரணை.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விஜயகலாவிற்கு எதிரான நடவடிக்கை சுதந்திரத்தை மீறும் செயல்: சி.வி.

 

 

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் யாழ். நிகழ்வில் ஆற்றிய உரை தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படின் அது பேச்சு சுதந்திரத்தை பாதிப்பதாக அமையும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விஜயகலாவிக் உரை தொடர்பில் முதலமைச்சரிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”விஜயகலாவின் உரை இடம்பெற்ற நிகழ்வில் நானும் பங்கேற்றிருந்த நிலையில், திட்டமிட்ட குற்றத் தடுப்புப்பிரிவினர் எனது வாசஸ்தலத்திற்கு வருகைத்தந்து விஜயகலாவின் உரை குறித்து எனது கருத்தை வினவியிருந்தனர்.

புலிகள் திரும்பவும் வர வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியது பாதுகாப்புச் சூழலையே அன்றி வன்முறைகளை மீண்டும் தொடங்கும் நோக்குடன் அல்ல.

அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாக அமையும்” என்றும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/?p=705145-விஜயகலாவிற்கு-எதிரான-நடவடிக்கை-சுதந்திரத்தை-மீறும்-செயல்:-சி.வி

  • கருத்துக்கள உறவுகள்

கிட்லர் ஆட்சி போல் இடம்பெற வேண்டும் என்று சொன்னவர்களுக்கு சட்டத்தில் இடம் உண்டா? இல்லை அவர்கள் சிங்களவர்கள் என்பதால் வருடி கொடுக்கிறார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் செட்டப் சுவிஸ் குமாரை கொழும்புக்கு கடத்தின கதையை தமிழ் சனம் அவ்வளவு கெதியா மறந்து விடுவினம் என்று தப்புகணக்கு போட்டுவிட்டா .

  • தொடங்கியவர்

விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை

 

cm-colombo-press-1-300x200.jpgவிடுதலைப் புலிகள் குறித்து அண்மையில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, வட மாகாண முதலமைச்சரிடம் சிறிலங்கா காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2ஆம் நாள் நடந்த நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, சிறிலங்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மேற்படி நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், அவரது இல்லத்தில் வைத்து, சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் நேற்றுக்காலை விசாரணை நடத்தினர்.

ஒன்றரை மணி நேரம் கேள்விகளை எழுப்பி அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

இதன்போது, “அப்படிக் கூறியிருந்தாலும், விஜயகலா மகேஸ்வரன் வன்முறையை ஆதரிக்கவில்லை. மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமைகளையே அவர் மேற்கோள்காட்டியிருந்தார்.

அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாதென்று கூறினேன்

விஜயகலா மகேஸ்வரன் தனது கட்சிக்கு விசுவாசமானவர். அவருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது அவரது பேச்சு சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்றும் சிறிலங்கா காவல்துறையினரிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளைன, நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அரச அதிகாரிகளிடமும், காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றிய மேற்படி நிகழ்வில் அமைச்சர்கள் திலக் மாரப்பன மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களும் சிறிலங்கா காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/07/18/news/31951

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.