Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்

Featured Replies

மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்

mannar-grave-1-300x192.jpgமன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்னர் நகர நுழைவாயிலில், சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில், கடந்த மே மாதம் தொடக்கம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது, இதுவரை 40 வரையான எலும்புக்கூடுகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தப் புதைகுழியில் 50 இற்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில், குறைந்தபட்சம் மூன்று சிறுவர்களுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி கலாநிதி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவர்களின் மண்டையோடுகள் பால் பற்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எலும்புகளும் இருப்பதாக, தொல்பொருள் அகழ்வாராச்சியாளர் ராஜ் சோமதேவாவும் கூறியிருந்தார்.

அதேவேளை, இந்த புதைகுழியில் சடலங்கள் முறைப்படியாக அடக்கம் செய்யப்படவில்லை என்பதையும் விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பெரும்பாலான சடலங்கள், ஒன்றின் மீது ஒன்று போடப்பட்டு- புதைக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி கலாநிதி சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த புதைகுழியில் உள்ள கடைசி எலும்பு எச்சம் வரை அகழ்வு செய்வதற்கு நிதி போதாது என்றும் இதனால் இந்த விசாரணைகள் நிறுத்தப்படக் கூடிய அச்சம் இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/07/21/news/31980

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளில் சிறுவர் போராளின்னு யுனிசெப்புக்கு கடிதம் எழுதின கூட்டம்.. எல்லாம். என்ன பண்ணுது..???! புலி அழிப்பு வியாபாரம் முடிஞ்ச திருப்தியில் கால் மேல் கால் போட்டிட்டு அடுத்த தேர்தல் எப்ப வருமுன்னு காத்திருக்கனம் போல. மக்களை ஏய்க்கிறதுக்கு. 

இந்த பெரும் மன்னார் புதைகுழி இப்ப எத்தினை நாளா கிண்டுப்படுகுது.. கிண்ட கிண்ட எலும்புக்கூடா வரகுது.. இதைப் பற்றி.. ஏதாவது ஒரு சர்வதேச நாடு.. அல்லது மனித உரிமைகள் அமைப்பு அக்கறை செய்திருக்கா.. இல்லை.

ஆனால்.. பயங்கரவாத அழிப்புன்னு அப்பாவி மக்களை கொன்று.. அந்த மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்க மட்டும்.. எல்லாரும் முற்பட்டிருக்கிறார்கள் என்பது.. தமிழர் நிலத்தில்.. அமெரிக்க.. சீன.. ஹிந்திய.. ரஷ்சிய.. சவுதி ஆதிக்க விரிவாக்கம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

திருமலை.. அமெரிக்க கடற்படை நிரந்தர பயிற்சித்தளமாக மாற்றப்பட்டிருப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.

இவர்கள் பேசும் மனித உரிமைகள்.. போர்க்குற்றங்கள் எல்லாம் சொந்த ஆதாயத்துக்கே அன்றி... உண்மையில் தமிழர்களுக்கு செய்த அநீதிக்கு.. நீதி வழங்குவது என்ற எந்த அடிப்படை நல்லெண்ணமும் கிடையாது. 

கேடுகெட்ட உலகம். ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

கதைத்து பிரயோசனம் இல்லை ....எல்லாம் சுயநல அரசியல்....மனிதநேயம் என்பது எல்லாம் சுத்தபம்மாத்து...ஐ.நா சபையே மூடுவிழா காணும் நாள் வெகு தொலைவில் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.