Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு வங்கிகளில் நூறு பில்லியன் ரூபாய் - அபிவிருத்தி?

பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டின் மூலம் தரும், பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறத்தக்க பொருளாதார செயற்பாடுகள் எவை?

  1. 1. புலம்பெயர் மக்களின் நூறு பில்லியன் ரூபாவையும் உள்ளூர் முதலீடாக்க யாழ் களம் என்ன செய்யலாம்?

    • முகப்புத்தகம், கீச்சகம் போன்றவற்றில் ஒரு அமைப்பாக திட்டமிட்டு இந்த முதலீடு பற்றி' அறிவூட்டும் பெரும் பிரச்சாரம் செய்யலாம்.
      0
    • இலங்கையில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றுடன் இணைந்து புலம்பெயர் மக்கள் வடக்குக்கான அபிவிருத்தி வங்கி ஒன்றை ஆரம்பித்து முதலீடுகளில் ஈடுபடலாம்.
      0
    • புலம்பெயர் தனியார் நிறுவனங்களை இந்த நூறு பில்லியன் ரூபாயை முதலீட்டாக்கி இலாபம் பெற ஊக்குவித்து அதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்.
      0
    • மாகாணசபை அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு இந்த முதலீடு பற்றி' அறிவூட்டும் பெரும் பிரச்சாரம் செய்யலாம்.
      0
    • என்னிடம் இவற்றிலும் பார்க்க பயனுள்ள திட்டம் ஒன்று உள்ளது. அதை கீழே பகிர்ந்து உள்ளேன். படியுங்கள்.
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் அதிகமான பணம் சேமிப்பில் உள்ளதாக ஸ்ரீ லங்கா பிரதமர் தெரிவித்து உள்ளார். அதே நேரம் இங்கே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ வருமானம் இல்லாமல் நுண்கடன் போன்ற வழிகளை நாடி பின்னர் தற்கொலை செய்யும் நிலைக்கும் போகிறார்கள். இந்த வங்கியில் உள்ள பணத்தை எப்படி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம்? பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டில் இடும் சாத்தியம் இருந்தாலே சேமிப்பில் வைத்தவர்கள் பணத்தை எடுத்து தருவார்கள். ஆகவே இவ்வாறாக, பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டின் மூலம் தரும், பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறத்தக்க பொருளாதார செயற்பாடுகள் எவை என்று   அடையாளம் காண யாழ் களம் உதவுமா?

வட மாகாணத்தில் இத்தனை பில்லியன் கோடி ரூபா பணமா? புலம்பெயர் தமிழர்களின் தியாகமா?

 

வட மாகாணத்தில் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் 100 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறைவுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அந்த நிலைமையை மாற்றியமைக்க முடிந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள பணத்தில் அந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு முதலீடு செய்ய வேண்டும். பிரதான முதலீட்டில் தாம் முதலீடு செய்த பணத்தை போன்று 3 மடங்கு வருமானம் வரி செலுத்தாமல் பெற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் பெருந்தொகை பணத்தை தாயகத்திலுள்ள தமது உறவுகளுக்கு நாள்தோறும் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/development/01/188779?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

FC41593_F-1_B09-4914-845_C-1643072_C8_EE

வடக்கு வங்கிகளில் 100 மில்லியன் ரூபா – குறிவைக்கும் சிறிலங்கா பிரதமர்

 

ranil-300x199.jpgவடக்கில் உள்ள வங்கிகளில் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” போர் முடிவுக்கு வந்த போதிலும், யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலும், அரசியல் உறுதிப்பாடு இல்லாத நிலையிலுமே இருந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது.

வடக்கில் உள்ள அனைத்து வங்கிகளிலும். 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது. இதனை இந்தப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு முதலீடு செய்ய முடியும்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, வடக்கிலுள்ள மக்கள் தமது சேமிப்புகளை முதலீடு செய்ய வேண்டும். சேமிப்புகளுக்கான வரியை விட, முதலீடுகளுக்கான வரி மிகவும் குறைவு.

போரினால் இந்தப் பகுதி பேரழிவைச் சந்தித்தது.  மக்கள் தமது முதலீடுகளை இழந்தனர்.

முதலீடு தான் பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குகிறது. அதற்கான முயற்சியை நாம் எடுக்கிறோம்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தோர், பெருமளவு நிதியை அனுப்பியுள்ளனர்.  அதில் பெரும்பாலானவற்றை வங்கிகளில் மக்கள் சேமித்துள்ளனர்.

இந்த நிதி பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/07/23/news/32010

யாழ்ப்­பா­ணத்­தில் தாரா­ள­மாக பணம் புழங்­கு­கின்­ற­தாம் -இப்­ப­டிச் சொல்­கி­றார் ரணில்!!

 

yyy-720x430.jpg

 
 

இலங்­கை­யில் யாழ்ப்­பா­ணத்து வங்­கி­க­ளில்­தான் பணம் அதி­க­ள­வில் காணப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பாண மக்­க­ளின் பணம், அவர்­க­ளுக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற பணம் எல்­லாம் வங்­கி­க­ளில் வைப்­பி­லி­ருக்­கின்­றது.

இந்­தப் பணத்தை வைத்தே, நீங்­கள் தொழில்­மு­யற்­சி­களை ஆரம்­பிக்­க­லாம். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மைதா­னத்­தில், கொழும்பு அர­சின் கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக வாணிப அமைச்சு, கைத்­தொ­ழில் அபி­வி­ருத்தி அதி­கார சபை­யும் இணைந்து ‘தொழில்­மு­னை­வோர் எழுச்சி’ நிகழ்வை நேற்­றுக் காலை நடத்­தி­யது. இந்த நிகழ்­வில் முதன்மை அதி­தி­யா­கப் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

 

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இங்கு வந்து முத­லீடு செய்­கின்­ற­னர். அதே­போன்று இங்­குள்­ள­வர்­க­ளும் முத­லீ­டு­க­ளைச் செய்­ய­வேண்­டும். நாங்­கள் அத­னைத்­தான் எதிர்­பார்க்­கின்­றோம். யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வங்­கி­க­ளில்­தான் பணம் அதி­க­ள­வில் காணப்­ப­டு­கின்­றது.

இங்­குள்­ள­வர்­க­ளின் பணம், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் பணம் எல்­லா­வற்­றை­யும் வங்­கி­க­ளில் வைப்­பி­லிட்­டுள்­ளார்­கள். அந்­தப் பணத்தை பயன்­ப­டுத்தி நீங்­களே தொழில் முயற்­சி­களை ஆரம்­பிக்­க­லாம். தொழில் முயற்­சிக்கு நீங்­கள் முத­லி­டு­வ­தற்கு மேல­தி­க­மாக 300 சத­வீத வரிச்­ச­லு­கையை நாங்­கள் வழங்­கு­வோம் – என்­றார்.

யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந்­தி­ரன், திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், இ.அங்­க­ஜன் மற்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ருக்கு தலா 2 மில்­லி­யன் ரூபா, கைத்­தொ­ழில் வர்த்­தக வாணிப அமைச்­சி­னால் ஒதுக்­கப்­பட்­டது.

ஒதுக்­கப்­பட்ட நிதிக்­கு­ரிய பய­னா­ளி­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­ட­னர். பய­னா­ளி­கள் தங்­கள் வாழ்­வா­தா­ரத்­துக்கு கோரிய உத­விப் பொருள்­கள் இந்த நிகழ்­வில் வைத்து வழங்­கப்­பட்­டது. 304 பய­னா­ளி­க­ளுக்கு அவை கிடைக்­கப்­பெற்­றன.

அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீன், பிரதி அமைச்­சர் இ.அங்­க­ஜன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரால் தையல் பயிற்­சிக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட 43 பேருக்கு தையல் இயந்­தி­ரம் இந்த நிகழ்­வில் வைத்து வழங்­கப்­பட்­டது.

தேசிய தொழில்­மு­னை­வோர் அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­னால் சமை­யல் எரி­வா­யு­வில் செயற்­ப­டும் அடுப்பு உள்­ளிட்ட வாழ்­வா­தார உத­வி­க­ளும் இந்த நிகழ்­வில் வைத்து வழங்­கப்­பட்­டது. இது முன்­னர் திட்­ட­மிட்ட வாழ்­வா­தார உதவி வழங்­கல் என்று மாவட்­டச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

http://newuthayan.com/story/09/யாழ்ப்­பா­ணத்­தில்-தாரா­ள­மாக-பணம்-புழங்­கு­கின்­ற­தாம்-இப்­ப­டிச்-சொல்­கி­றார்-ரணில்.html

Edited by நவீனன்

புலம்­பெ­யர்ந்த எமது மக்கள்  வடக்கில் முத­லீடு  செய்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை

 

 

யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும்   வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள்   வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை. யுத்­தத்­திற்குப் பின்னர்  புலம்­பெ­யர்ந்து சென்ற எமது மக்கள் இங்கு வந்து  நம்­பிக்­கை­யுடன் முத­லீ­டு­களை செய்ய  ஏற்­ற­ சூழல்  உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.   தெற்­கி­லி­ருந்து வந்து முத­லீ­டுகள்   நடை­பெ­ற­வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் குறிக்­கோ­ளாக உள்­ளது என்று  வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

ranil1.jpg

போரின் பின்னர்    விசே­ட­மான கவ­னிப்­புக்கு உள்­ளாக்­கப்­ப­ட வேண்டிய  வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தெற்கின் ஆக்­கி­ர­மிப்­புக்கே உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன.  போரினால்  பாதிக்­கப்­பட்ட எமது பிர­தேசம்   கூடிய வரு­மா­னங்­களை  பெற­வேண்­டி­யி­ருக்கும். இந்த நேரத்தில் வளங்­களை   மத்­திய அர­சாங்கம்  எடுக்­கப்­பார்ப்­பதால் தான் நாங்கள்   சமஷ்­டியை கோரு­கின்றோம்.   அதி­கா­ரப்­ப­கிர்­வு­பற்றி கூறிக்­கொண்டு  மாகா­ணங்­களை  சுய­மாக  இயங்­க­வி­டாது மத்தி  தனது  கட்­டுப்­பாட்­டினுள்  வைத்­தி­ருக்க பார்ப்­பது நியா­ய­மா­ன­தல்ல என்றும்  முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டினார். 

யாழ்ப்­பா­ணத்தில்  நேற்று முன்­தினம்   மாலை  இடம்­பெற்ற  புதிய தொழில் முனை­வோ­ருக்­கான கௌர­விப்பும்  விரு­து­வ­ழங்கும்     வைப­வத்தில்  கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முத­ல­மைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

யாழ்ப்­பாணம் வர்த்­தக  தொழில்­துறை மன்றம் மற்றும் தேசிய வர்த்­தக  அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை  ஆகி­யவற்றின் ஆத­ரவில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றது.  நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான ரிஷாத் பதி­யுதீன், மங்­கள சம­ர­வீர ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இங்கு உரை­யாற்­றிய முத­ல­மைச்சர் மேலும் கூறி­ய­தா­வது;

வட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக தொடர்ச்­சி­யாக யுத்தம் நடை­பெற்ற காலத்தில் கூட இப் பகு­தியின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் மிகுந்த நெருக்­க­டி­களின் கீழும் ஒரு ஒழுங்­கான முறையில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. அக் காலத்தில் அனைத்­துத்­தர வர்த்­தக முயற்­சி­களும் பல சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யிலும் சிறப்­பாக நடை­பெற்­றதை இத்­த­ரு­ணத்தில் பெரு­மை­யுடன் அறி­யத்­த­ரு­வதில் மகிழ்­வ­டை­கின்றேன். அத்­துடன் அக் காலத்தில் பெரிய, நடுத்­தர, சிறிய வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட வர்த்­த­கர்­க­ளி­னதும் மேலும் அனைத்­துத்­தர பொது மக்­க­ளி­னதும் கைகளில் பணப்­பு­ழக்கம் போது­மா­ன­தாக இருந்­தது. 

ஆனால் யுத்­த­நிலை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் அமை­தி­யான சூழ்­நி­லையில் கடந்த 9 வரு­டங்­களில் வட­ப­கு­தியின் வர்த்­தக நட­வ­டிக்கை என்ன வகையில் வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றது என்­பது பற்றி ஆராய்­வோ­மானால் விடை வெறும் பூச்­சி­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. தொடர்ச்­சி­யாக வட­ப­கு­தியின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் பல பின்­ன­டை­வு­களை சந்­தித்த வண்­ணமே உள்­ளன. 

எமது உள்ளூர் வர்த்­த­கர்­களின் வர்த்­தக முயற்­சிகள் பல்­வேறு இர­க­சியக் கார­ணிகள் மூலம் முடக்­கப்­ப­டு­கின்­றன. இதை நான் வர்த்­த­கர்­க­ளுடன் பேசித் தெரிந்து கொண்டே வெளியி­டு­கின்றேன். 

முத­லா­வது இங்­கி­ருக்கும் வர்த்­த­கர்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் சிறப்­பாக நடை­பெ­ற­மு­டி­யாத வகையில் வட­மா­கா­ணத்­திற்கு வெளியே உள்ள வர்த்­த­கர்­களின் பாரி­ய­ள­வி­லான உள்­நு­ழை­வுகள் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இரா­ணுவம் கூட உண­வகத் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்­றது. 

யுத்­தத்­திற்குப் பின்னர் எமது புலம் பெயர்ந்த மக்கள் இங்கு வந்து நம்­பிக்­கை­யுடன் முத­லீ­டு­களைச் செய்ய ஏற்ற சூழல் இங்கு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. தெற்கில் இருந்து வந்து முத­லீ­டுகள் நடை­பெற வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் குறிக்­கோ­ளாக இருக்­கின்­றது. வட­கி­ழக்கு மாகா­ணங்­களை பொரு­ளா­தார ரீதியில் தம்மை மிஞ்சி மேம்­பட விடக்­கூ­டாது என்ற எண்ணம் தெற்கில் உள்­ளதோ நான் அறியேன். முத­ல­மைச்சர் நிதியம் இன்று வரை முடக்­கப்­பட்­டி­ருப்­பதும் இவ்வாறு சிந்­திக்கத் தூண்­டு­கின்­றது.       

அடுத்து வட­மா­காண வர்த்­தக நட­வ­டிக்­கைகள் தொடர்­பான விட­யங்­களை கையாள்­வ­தற்கும் பிற விட­யங்­களை கவ­னிப்­ப­தற்­கு­மாக வட­மா­காண அமைச்சு அமைக்­கப்­பட்­டுள்ள போதும் எம் அமைச்சின் அதி­கா­ரங்­களை மீறி மத்­திய அரசின் அனு­ம­தி­யுடன் வட­ப­கு­தியில் பல வர்த்­தக முயற்­சிகள் பாரிய அளவில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவை வட­மா­கா­ணத்தில் பல­கா­ல­மாக வர்த்­தக முயற்­சி­களில் ஈடு­பட்டு வந்த பெரிய, நடுத்­தர, சிறிய அள­வி­லான அனைத்து வர்த்­த­கர்­க­ளையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யி­ருப்­பது கவ­லை­ய­ளிக்­கின்­றது. போரின் பின்னர் விசே­ட­மான கவ­னிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட வேண்­டிய வட­கி­ழக்கு மாகா­ணங்கள் தெற்கின் ஆக்­கி­ர­மிப்­புக்கே உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. 

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இங்கு ஆரம்­பிக்­கப்­பட்ட பல நுண்­கடன் நிதி நிறு­வ­னங்­களின் பசப்பு வார்த்­தை­களில் ஏமாந்து அவர்­களின் இயல்­புக்கு மேற்­பட்ட வகையில் பாரிய கடன் தொகை­களை கட­னாகப் பெற்று அவற்றை மீளச் செலுத்த முடி­யா­மலும் அவற்றின் அதி­க­ரித்த வட்­டித்­தொ­கை­களைக் கட்ட முடி­யாத நிலை­யிலும் தமது சொத்­துக்கள் அனைத்­தையும் இழந்து கடு­மை­யான மன விரக்­திக்­குட்­பட்ட பல வர்த்­த­கர்­களின் செய்­திகள் பற்றி நாம் அறிந்­தி­ருக்­கின்றோம். 

ஏனைய பகு­தி­களில் இருந்து வரு­கை­தந்து இப் பகு­தி­களில் வர்த்­த­கங்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் பற்றி எமக்கு ஆட்­சே­பனை இல்­லா­த­போதும் அவர்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் இங்­குள்ள ஒட்­டு­மொத்த வர்த்­த­கர்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தாத வகையில் அமை­யு­மாயின் அவ்­வா­றான வர்த்­த­கங்கள் வர­வேற்­கக்­கூ­டி­யன. தற்­போ­தைய நிலையில் இப்­ப­கு­தி­களில் உள்ள வர்த்­தக மூல வளங்கள் மற்றும் மனித வளங்கள் அனைத்தும் பிற தேவை­க­ளுக்­காக அதுவும் வட­ப­கு­திக்கு வெளியே­யான பகு­தி­களின் முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது இப் பகு­தியின் வளர்ச்­சியை பின்­நோக்கித் தள்­ளு­வ­தான ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே நாம் பார்க்­கின்றோம். 

அண்­மையில் கொக்­கிளாய், கரு­வாட்­டுக்­கேணி போன்ற இடங்­களில் இல்­மனைட் அகழ்­வுகள் நடாத்­து­வது பற்றி எமக்குக் கூறப்­பட்­டது. புல்­மோடை இணைந்த வட­கி­ழக்கு மாகா­ணத்தின் கீழ் உள்­ள­டங்­கி­யி­ருந்தால் அது வேறு விடயம். இப்­போது வடக்கு மாகா­ணத்தில் இருந்து வளங்­களை வெளியே எடுத்துச் செல்ல எத்­த­னிக்­கின்­றீர்கள் என்று நான் கூறவும் எமது பிர­தே­சத்­திற்கு இதற்­கான ஒரு ஆலையைப் பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும் இங்­குள்­ள­வர்­களை அதில் வேலை செய்ய இட­ம­ளிக்கப் போவ­தா­கவும் கூறப்­பட்­டது. நான் இன்­னொரு வேண்­டு­தலை முன் வைத்தேன். ஒரு மாகா­ணத்தின் வளங்­களின் வரு­மா­னத்தின் பெரும் பகுதி திரும்­பவும் அதே மாகா­ணத்­திற்குக் கொண்­டு­வர வேண்டும் என்றேன். அந்த வரு­மா­னங்கள் மத்­திக்குக் கிடைக்கும் என்றும் மத்தி எல்­லோ­ருக்கும் பொது­வாக அவற்றைப் பாவிக்கும் என்று கூறப்­பட்­டது. போரினால் பாதிக்­கப்­பட்ட எமது பிர­தேசம் கூடிய வரு­மா­னங்­களைப் பெற வேண்­டி­யி­ருக்கும் இந்த நேரத்தில் வளங்­களை மத்­திய அர­சாங்கம் தான் எடுக்கப் பார்ப்­பதால் தான் நாங்கள் சமஷ்டி கேட்­கின்றோம் என்றேன். ஆகவே அதி­காரப் பகிர்வு பற்றிக் கூறிக்­கொண்டு மாகா­ணங்­களை சுய­மாக இயங்க விடாது மத்தி தனது கட்­டுப்­பாட்­டினுள் வைத்­தி­ருக்கப் பார்ப்­பது நியா­ய­மான ஒரு விடயம் அல்ல. 

எனவே தான் வட­ப­கு­தியின் உள்ளூர் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் சிறப்­பாக நடை­பெற இட­ம­ளிக்க வேண்டும் என்று அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்றேன். எமது பகு­தி­களில் அமைந்­துள்ள நட்­சத்­திர ஹோட்டல்கள், பல்­பொருள் அங்­கா­டிகள், பாரிய உணவுக் களஞ்­சி­யங்கள் ஆகி­ய­வற்றின் செயற்­பா­டுகள் இப்­ப­கு­தியின் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இவ்­வாறு எமது நோக்­கங்­க­ளையுந் தேவை­க­ளையும் அறிந்து செயற்­பட்டால் எமது வர்த்­த­கர்­களும் நன்­மை­ய­டை­வார்கள். அதே நேரம் பிற பகு­தி­களில் இருந்து இங்கு வரு­கை­தந்து பாரிய வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்­களும் நன்மை அடை­வார்கள்.

எமது பிர­தே­சங்­களில் காணப்படும் மூல வளங்கள் முழுமையாக வடபகுதிக்கு வெளி யில் எடுத்துச் செல்லப்படுவது தொடர்பில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டிய நிலை இன்று அவதானிக்கப்பட்டுள்ளது. தெங்குப் பொருட்கள், கடல் வளங்கள் மற்றும் இன்னோரன்ன அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வகைதொகையின்றி இப் பகுதிகளில் இருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. விளைவு இப் பகுதி யில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடுகள் ஏற்படுவதுடன் அவற்றை நாம் பெற 

அதிகூடிய பணச் செலவுகளும் ஏற்படுகின் றன. வளங்களின் வருமானம் தெற்கை வளம்படுத்துகின்றது. இதை முன்வைத்தே மாகாணங்களும் சுயாட்சி உரிமை பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். 

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே வர்த்தக முயற்சிகள் முன்னெடுக் கப்பட வேண்டும். அத்துடன் இப் பகுதி யில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற வர்த்தக அபிவிருத்திகள் தொடர்பில் வட மாகாண சபையின் ஒத்திசைவுகளையும் பெற்றுக் கொண்டு முன்னேறிச் செல்வதே சிறப்பானது.

http://www.virakesari.lk/article/37086

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தான் கல்வியில் முன்னுக்கு நிற்கின்றான் என்று தான் நாற்பது வருடங்களுக்கு முதல் தரப்படுத்தலை கொண்டு வந்தனீங்கள்....இப்ப காசு அதிகம் வைச்சிருக்கிறான் என்று சொல்லுறீயள்....எதோ நீங்களும் அவனை அழிக்கிற என்று ஒற்றைகாலில் நிற்கிறீயள் அவங்களும் சுழிச்சு ஒடிக்கொண்டு  தான் இருக்கின்றாங்கள்tw_tounge:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.