Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

இனி, மின்மினி -புதிய க்ரைம் தொடர்

 

 

 
 
anibul13.gifராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg

நியூயார்க்

p149b.jpgநியூயார்க் விமான நிலையத்தில் விமானம் இறங்கிக்கொண்டு இருந்தபோது காலை 7 மணி. சூரியன் பனிப் போர்வைக்குள் சிக்கி, பட்டர் தாளில் சுற்றப்பட்ட ஆப்பிள் போலத் தெரிய... கோலப் பொடியைத் தூவும் தினுசில் பனி மழை.

விஜேஷ் கெடுபிடியான கஸ்டம்ஸை முடித்துக்கொண்டு லவுஞ்சுக்குள் நுழைந்தபோது, அந்த அழகான பெண் பொன்னிற முடியும், கோபால்ட் நீல நிறக் கண்களுமாக விஜேஷை எதிர்கொண்டாள். கையில் அரை அடி உயரத்தில் ஒரு மினி பொக்கே.

''வெல்கம் விஜேஷ்!''

''யூ... யூ... ஃப்ளோரா?''

''யெஸ்!''

விஜேஷ் ஒரு புன்னகையை உதட்டில் நிறுத்தி ஆங்கிலத்தில் ஆச்சர்யப்பட்டான். ''என் நண்பன் ஃப்ரெட்ரிக்குக்கு இப்படி ஓர் அழகான தங்கை இருப்பாள் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.''

p149a.jpg

ஃப்ளோரா சிரித்தாள். வாய்க்குள் இருந்து ஒரு முத்துச்சரம் வெளிப்பட்டு, எனக்கு என்ன விலை கொடுக்கலாம் என்று கேட்டது.

''பயணம் எப்படி இருந்தது?''

''போர்! எந்த ஏர் ஹோஸ்டஸ்சும் பார்க்கும்படி இல்லை. உணவும் சரி இல்லை. பெயர் தெரியாத ஏதோ ஒரு திரவத்தில் ஊறிய வெள்ளரிக்காய்த் துண்டுகளும், வெண்ணெய் தடவாத காய்ந்த ரொட்டிகளையும் கொடுத்தால், அது எப்படி வயிற்றுக்குள் போகும்?''

ஃப்ளோரா மறுபடியும் முத்துச்சரத்தைக் காட்டினாள். 'ஓல்ட் வெஸ்ட்ப்யூரி'க்குப் போகும் வழியில் ஒரு நல்ல இண்டியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறது.''

''வேண்டாம்... வேண்டாம்! இப்போது பசி இல்லை. என் ஆர்வம் எல்லாம் இப்போது எதில் தெரியுமா? நான் வாங்கப்போகும் அந்த வீட்டைப்பற்றித்தான். இன்றைக்கே நான் வீட்டைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும் ஃப்ளோரா.''

''கவலைப்படாதீர்கள் மிஸ்டர் விஜேஷ். என் வீட்டுக்குப் போகும் வழியில் தான் அந்த வீடு இருக்கிறது. கொஞ்சம் அமைதியான சூழ்நிலையில் அமைந்த பழங்கால வீடுதான் என்றாலும், உறுதியான வீடு. விலையைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏனென்றால், நான் ஒரு லாயர் என்கிற முறையில் அந்த வீட்டை விற்பதற்கான முழு உரிமையும் என்னிடம்தான் உள்ளது.''

''அந்தத் தைரியத்தில்தான் பாரீஸில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்!''

இருவரும் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார்கள். ஃப்ளோரா தன்னுடைய பென்ஸ் காரை பார்க்கிங் வரிசையில் இருந்து உருவிக்கொண்டாள். விஜேஷ் தன் கையில் இருந்த சூட்கேஸை டிக்கியில் வைத்துவிட்டு, ஃப்ளோராவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். காரின் ஏ.சி. காற்றில் பெர்ஃப்யூம் மணத்தது.

 

காரை விரட்டினாள் ஃப்ளோரா. ரோட்டின் நான்கு டிராக்குகளில் அதிவேக டிராக்கைத் தேர்ந்தெடுத்தாள். 140 மைல் வேகத்தில் பென்ஸ் வீல்கள் சுழன்றன.

ஃப்ளோரா கேட்டாள்... ''நியூயார்க்குக்கு முதல்தடவை வருகிறீர்கள். உங்கள் பார்வையில் நியூயார்க் எப்படி?''

''மகா அழுக்கு! இப்படி ஓர் அழுக்கான நகரத்தை இந்தியாவில்கூடப் பார்க்க முடியாது. விமானத்தில் இருந்து கீழே இறங்கியவுடனே எனக்குப் பெரிய ஏமாற்றம். நம்முடைய ஷூவில் உள்ள தூசி பட்டு நியூயார்க் விமான நிலையத்தின் தரை அழுக்காகிவிடுமோ என்று விமானத்தில் இருந்தபோது நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், விமான நிலையத்தில் இறங்கியபோது, அங்கு இருந்த அழுக்கு பட்டு என் ஷூ விணாகிவிடக் கூடாதேன்னு கவலைப்பட்டேன். விமான நிலையம் மட்டும்தான் அழுக்கு என்று நினைத்தேன். அதைவிட, நகரம் ரொம்பவும் மோசம். பாருங்கள், ரோட்டோரங்களில் எவ்வளவு குப்பைகள்?''

''அதற்குக் காரணம், இங்குள்ள மக்கள்தொகை. அது தவிர, நீக்ரோக்களின்...'' என்று ஃப்ளோரா பேசிக்கொண்டு இருக்கும்போதே விஜேஷின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

''எக்ஸ்கியூஸ்மீ ஃப்ளோரா'' என்று சொல்லி, செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். ஒரு நம்பர்.

குரல் கொடுத்தான்.

''யெஸ்...''

''பேசறது விஜேஷா?''- ஒரு பெண் குரல் கேட்டது. நல்ல தமிழ்.

''ஆமா...''

''நீங்க பாரீஸில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கறீங்க இல்லையா?''

''நீங்க யாரு?''

''அது கடைசியில்! நான் இப்போ உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும். சொல்லலாமா... வேண்டாமா?''

''சொல்லு...''

''நியூயார்க்ல இப்போ உங்களுக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னோட்டமாக ஒரு வீட்டைப் பார்த்து விலை பேச வந்திருக்கீங்க. சரியா?''

''ரொம்ப சரி!''

''உங்ககூட பாரீஸில் வேலை செய்யற ஃப்ரெட்ரிக்கோட சிஸ்டர் ஃப்ளோரா ஒரு லாயர். அவளோட கஸ்டடியில் இருக்கிற ஒரு பழைய வீட்டை வாங்கலாம்னு உங்களுக்குள்ளே ஓர் எண்ணம். சரியா?''

''சரி!''

''இந்த நிமிஷத்தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுட்டு, பாரிசுக்குப் போக அடுத்த ஃப்ளைட்டைப் பிடிங்க.''

''ஏன், அந்த வீட்டுக்கு என்ன?''

''சொன்னா நம்பணும்...''

''சொல்லு...''

''கடந்த ஆறு மாச காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி, அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. இப்ப நீங்க மூணாவதா வந்திருக்கீங்க. நீங்க இந்தியா. அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்ங்கிற காரணத்துனாலதான் போன் பண்ணிப் பேசிட்டு இருக்கேன்.''

''சரி! மொதல்ல நீ யார்னு சொல்லு!''

''என் பேர் காமாட்சி.''

''ஊரு?''

''காஞ்சிபுரம்.''

கோவை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காலை 11 மணி. மக்கள் ஏகப்பட்ட பிரச்னைகளோடு வரிசைகளில் காத்துக்கொண்டு இருக்க... கலெக்டர் பங்கஜ் குமார் ஜீப்பில் இருந்து இறங்கி, வேக வேகமாக உள்ளே போனார். பி.ஏ. எதிர்ப்பட்டார். அவர் விஷ் செய்ததை அலட்சியமாக ஏற்றுக்கொண்டார்.

''ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே வாங்க'' என்றார்.

''யெஸ் ஸார்...''

p148a.jpgபங்கஜ் குமார் தன் அறைக்குள் நுழைந்து நாற்காலிக்குத் தன் முதுகைக் கொடுத்துக்கொண்டே பி.ஏ-வை ஏறிட்டார். பேச்சில் அனல் பறந்தது. ''சண்முகம்! இது என்ன போலீஸ் ஸ்டேஷனா... இல்லை, கலெக்டர் ஆபீஸா? புருசன் பொஞ்சாதி சண்டை, என் பொண்டாட்டி எவன்கூடவோ ஓடிப் போயிட்டா... தேடிக் கண்டுபிடிச்சுக் குடுங்கன்னு ஒரு கூட்டம், அரிசியில் கல் இருக்கு; தண்ணியில் புழு இருக்குன்னு சொல்லிக்கிட்டு ரோடு மறியல். இந்த மாசத்துல மட்டும் 27 பேர் ஏதேதோ பிரச்னைகளுக்காக மண்ணெண்ணெய் டின்களோடு வந்து தீக்குளிக்கப் போறதா என் ஜீப் முன்னாடி உட்கார்ந்து பாடாய்ப்படுத்திட்டாங்க. இந்தப் பிரச்னைகளை ஏ.சி. உதவியோடு நீங்க பார்த்துக்கக் கூடாதா?''

''சார்... அதுல என்ன பிரச்னைன்னா?''

''நீங்க வழக்கமா சொல்ற எந்த எக்ஸ்பிளனேஷனும் எனக்கு வேண்டியது இல்லை. நான் மாவட்ட நிர்வாகப் பணிகளைக் கவனிப்பேனா? இல்லே... காணாமப் போன பொண்டாட்டிகளைத் தேடி அவனவன் புருஷன்களோடு சேர்த்துவெச்சிட்டு இருப்பேனா. நீங்களே சொல்லுங்க?''

''ஸாரி சார்... இனிமே இது மாதிரியான விஷயங்கள் உங்க மேஜை வரைக்கும் வராம நான் பார்த்துக்கிறேன் சார்!''

''இதையே 100 தடவை சொல்லிட்டீங்க...'' பங்கஜ் குமார் எரிச்சலோடு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருடைய செல்போன் அழைத்தது. எடுத்தார். 'விமிழிவிமிழிமி சிகிலிலிமிழிநி' என்று டிஸ்ப்ளே சொன்னது.

பி.ஏ-வைத் திரும்பிப் பார்த்தார்.

''நான் வர்றேன் சார்...'' பி.ஏ. அறையைக் கடந்து போனதும், பங்கஜ் குமார் மலர்ந்த முகமாய் செல்போனைக் காதுக்குப் பொருத்தி, மெதுவாகக் குரல் கொடுத்தார். ''சொல்லு மினி...''

''எனக்குக் காலையில் இருந்து மனசே சரியில்லைங்க.''

''ஏன், என்னாச்சு?''

''ஏதோ போன் வந்ததுன்னு சொல்லி, டிபன்கூடச் சாப்பிடாம அவசர அவசரமாக் கிளம்பிட்டீங்களே? எனக்கும் அதுக்கு அப்புறம் சாப்பிடத் தோணலை. எல்லாத்தையும் தூக்கி வேலைக்காரிக்குக் கொடுத்துட்டேன்.''

''என்னது! நீயும் சாப்பிடலையா? இதோ பார் மினி! நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு முந்தி உன்னைப் பெண் பார்க்க வரும்போது, ஒரு அஞ்சு நிமிஷம் தனியா சந்திச்சுப் பேசினோம். அப்ப நான் என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?''

''நல்லா ஞாபகம் இருக்கு.''

''என்ன சொன்னேன்?''

''நான் ஒரு கலெக்டரா இருக்கேன்கிற காரணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்காதே. மாசத்துல பாதி நாள் கேம்ப் போயிடுவேன். ஜனாதிபதி, பிரதமர்னு யார் வந்தாலும் வீட்டையும் உன்னையும் சுத்தமா மறந்துடுவேன். கலவரம் நடந்தா, அந்தப் பகுதிகளுக்குப் போகணும்... தீவிரவாதிகளோட மிரட்டல்களை எதிர்கொள்ளணும்... இப்படி வரிசையாக ஏதேதோ சொன்ன மாதிரி ஞாபகம். அதை மறுபடியும் ஒரு தடவை ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்துக்க.''

''சரி... சரி! மத்தியானம் லஞ்ச்சுக்காவது வருவீங்களா... மாட்டீங்களா?''

''இன்னிக்கு மக்களின் குறை தீர்க்கும் நாள். நிறைய மனுக்கள் வரும்... படிச்சுப் பார்த்து உடனடியா முடிவு எடுக்கணும். எவ்வளவு நேரமாகும்னு எனக்கே தெரியாது மினி!''

''நீங்க வரலைன்னா, நான் மத்தியானமும் சாப்பிட மாட்டேன். உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து இன்னிக்கு 51-வது நாள். இந்த ரெண்டு மாச காலத்துல நாம ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்ட நாட்களை விரல்விட்டு எண்ணிடலாம். நீங்க இன்னிக்கு என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ, எனக்குத் தெரியாது. சாப்பிட வரணும்.''

p150a.jpg

''இதோ பார் மினி... நான் வரலைன்னு பட்டினி கிடக்காதே. இன்னிக்குச் சாயந்தரம் புரந்தரதாஸ் ஹாலில் உன்னோட கச்சேரி இருக்கு. நீ சாப்பிடாமப் போனா ரெண்டு கீர்த்தனம் பாடறதுக்குள்ளே 'ஃபெய்ன்ட்' ஆயிடுவே!''

''அது உங்களுக்குப் புரிஞ்சா சரி! நான் இன்னிக்கு சபாவில் கச்சேரி பண்ணும்போது, ஒவ்வொரு கீர்த்தனைக்கும் அப்ளாஸ் வாங்கணும்னா... மத்தியானம் லஞ்ச்சுக்கு வரணும்... என்கூட உட்கார்ந்து சாப்பிடணும்!''

''நான் உன்னோட கழுத்துல தாலி கட்டினதே அந்தக் கீர்த்தனைகளோட இனிமைக்காகத்தான். அந்தக் கீர்த்தனைகளை நான் பட்டினி போட விரும்பலை. சரியாய் ஒரு மணிக்கு வந்துடறேன்.''

''தேங்க்யூடா!''

''என்ன சொன்னே?''

''ஸாரிடா...'' மறுமுனையில் மின்மினி ஒரு சிரிப்போடு செல்போனை அணைத்துவிட, பங்கஜ் குமாரும் தனக்குள் பீறிட்ட சிரிப்பை மென்றபடி செல்போனை அணைத்தார்.

கதவுக்கு வெளியே பியூன் அன்றைக்கு வந்த தபால் கட்டோடு நின்றிருப்பது தெரிந்தது. மேஜையின் மேல் இருந்த அழைப்பு மணியைத் தட்டியதும், பியூன் உள்ளே வந்தான். தபால்களை வைத்துக்கொண்டே தயக்கக் குரலில் கூப்பிட்டான்.

''ஐயா...''

''என்ன சாமித்துரை?''

''கடந்த ரெண்டு மூணு நாளா கையில் ஒரு கோரிக்கை மனுவோடு ஒருத்தர் வந்து உங்களைப் பார்க்கிறதுக்காக கால் கடுக்க நிக்கிறார். கோரிக்கை மனுவைப் பெட்டியில் போட்டுட்டுப் போங்கன்னு சொன்னாலும் அவர் கேட்கிறது இல்லை.''

''கோரிக்கை என்னன்னு கேட்டியா?''

''கையில் மனு எழுதிவெச்சிருக்கார் ஐயா.''

''அந்த ஆளை உள்ளே அனுப்பு.''

பியூன் தலையாட்டிவிட்டு வெளியேறிப் போனதும் அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் அந்தப் பெரியவர் உள்ளே வந்தார். முடி கொட்டிப் போன மண்டை. மோவாயில் கொத்தாக நரை தாடி.

''ஐயா! வணக்கம்...''

பங்கஜ் குமார் நிமிர்ந்தார்.

''உங்களுக்கு என்ன வேணும்?''

''ஐயா! என்னோட கோரிக்கையை ஒரு மனுவா எழுதிக் கொண்டுவந்து இருக்கேன். அதை நீங்க படிச்சு...''

''வேண்டாம்... உங்க கோரிக்கை என்னன்னு வாய்லயே சொல்லுங்க...''

''ஐயா... அது வந்து... என்னோட மருமக இப்ப என்னையும் என் பையனையும் விட்டுட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. சட்டப்படி விவாகரத்தும் ஆகலை. இந்த விஷயத்துல நீங்கதான் எங்களுக்கு உதவி பண்ணணும்!''

பங்கஜ் குமாருக்குள் கோபம் கொப்பளித்துக் கிளம்பியது. ஆத்திரத்தோடு நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழ முயன்றவர், பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பார்த்ததும் தளர்ந்தார்.

''ஐயா! இதுதான் என் மருமகளோட போட்டோ.''

போட்டோவில் மின்மினி!

 

 

 
white_spacer.jpg
-பறக்கும்...

https://www.vikatan.com

Posted
  • இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

     

     

     
     
    anibul16.gifராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
    white_spacer.jpg
    title_horline.jpg
    bullet%20Purple1.gifஇனி, மின்மினி
    white_spacer.jpg

    p94b.jpgகோவை

    போட்டோவில் கேமராவை நேர்ப்பார்வை பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு இருந்த மின்மினியைப் பார்த்ததும், பங்கஜ் குமாரின் உடம்பில் இருந்த ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் ஓர் அதிர்வுக்கு உட்பட்டு, ரத்தத் தில் வெப்பம் பரவியது. அது மூளைக்குள் போய் குபுகுபுத்தது.

    'இது மின்மினிதானா?' - பார்வைக்குக் கூர்மை கொடுத்துக் கண்களைச் சுருக்கிய பங்கஜ்குமாரை பெரியவர் ஒரு கேலிப் புன்னகையோடு ஏறிட்டார். குரலைத் தாழ்த்தி ஏற்ற இறக்கத்தோடு கேட்டார்... ''என்னங்கய்யா... இந்தப் போட்டோவைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டீங்க..? இந்தப் போட்டோவில் இருக்கிற பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?''

    பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பறித்து, அதையே சில விநாடிகள் வரை வெறித்தார் பங்கஜ்குமார்.

    அவருடைய மனைவி மின்மினிதான்! சந்தேகமே இல்லை. வலது கன்னத்தின் கீழ்ப் பகுதியில் ஒட்டியிருந்த அந்தக் கடுகு சைஸ் மச்சமும், சற்றே விரிந்த காதுகளும் அவள் மின்மினிதான் என்று சூடம் ஏற்றி அடிக்காத குறையாகச் சத்தியம் செய்தன. பெரியவரைத் தீப்பார்வை பார்த்தார்.

    ''இ... இ... இந்த போட்டோ உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?'' - பங்கஜ்குமார் கோபத்தோடு கேட்ட கேள்விக்குப் பெரியவர் பவ்யமாகி, தன் இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காகப் பெருக்கல் குறி போட்டுக்கொண்டார்.

    p94a.jpg

    ''ஐயா! இது என் மருமகளோட போட்டோ. இந்தப் போட்டோ என்கிட்டே இல்லாம வேற யார்கிட்டே இருக்கும்? இந்த போட்டோவைத் தவிர, வேற ஒரு போட்டோவும் இருக்கு. பார்க்கறீங்களா?''-பெரியவர் கேட்டுக்கொண்டே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அந்த பிரவுன் நிறக் கவரை எடுத்துப் பிரித்தார். போஸ்ட் கார்டு சைஸில் இருந்த போட்டோ ஒன்றை அதிலிருந்து உருவி நீட்டினார், ''ம்... பாருங்க...''

    போட்டோவை வாங்கிப் பார்த்த பங்கஜ்குமாருக்கு நெற்றி சட்டென்று வியர்த்து, வாய் உலர்ந்து போனது. அந்த வண்ணப் போட்டோவில் ஒரு சர்ச் பிரதானமாகத் தெரிய, அதன் பின்னணியில் கும்பல் ஒன்று தெரிந்தது. கும்பலின் மையத்தில் பாதிரியார் ஒருவர் வெள்ளை அங்கியில் நின்றிருக்க, அவருக்கு முன்னால் கிறிஸ்துவப் பாரம்பரியத் திருமண உடைகளோடு மின்மினியும் அந்த இளைஞரும் பார்வைக்குக் கிடைத்தார்கள். முகங்களில் பாதரசம் தடவிய மாதிரி பரவசம்.

    பெரியவர் சொன்னார், ''ஐயா! அஞ்சு வருஷத்துக்கு முந்தி ஆந்திர மாநிலம் பெல்லாரியில் இருக்கிற ஒரு சர்ச்சில் என்னோட மகன் அல்போன்சுக்கும் மின்மினிக்கும் கல்யாணம் நடந்தபோது எடுத்த போட்டோ இது.''

    பெரியவர் சொல்ல, போட்டோவைப் பிடித்து இருந்த பங்கஜ்குமாரின் கை நடுங்கியது. மூளை பிராமிஸ் செய்தது. 'இவள் மின்மினிதான். சந்தேகமே இல்லை!' அடித்துத் துவைத்த துணியாகத் துவண்டுபோன பங்கஜ்குமார் பெரியவரை வியர்த்த முகமாக ஏறிட்டார். ''உங்க மகன் பேர் என்ன சொன்னீங்க?''

    ''அல்போன்ஸ்.''

     

    ''அவர் இப்ப எங்கே?''

    ''வீட்ல இருக்கான். அவனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. மின்மினி அவனை விட்டுப் போனதிலிருந்தே பித்துப் பிடிச்சவன் மாதிரி ஆயிட்டான். குடிப் பழக்கத்தினால் ஆரோக்கியம் கெட்டுப்போய்... ஜாண்டிஸ் அட்டாக் ஆகி...''

    எரிச்சலான பங்கஜ்குமார் கையமர்த்தினார். ''உங்க பேர் என்ன?''

    ''மைக்கேல் எர்னஸ்ட்...''

    ''என்ன பண்றீங்க..?''

    ''டவுன்ஹால்ல பீஃப் பிரியாணி ஸ்டால் ஒண்ணு நடத்திட்டு வர்றேன்!''

    ''மின்மினிக்கும் அல்போன்சுக்கும் கல்யாணம் நடந்ததாய்ச் சொன்னீங்க. கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்க ஏன் பிரியணும்?''

    ''கல்யாணம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே அவங்க ரெண்டு பேருக் கும் நடுவுல ஏதோ பிரச்னை வந்தது. மின்மினி சண்டை போட்டுக்கிட்டுப் போயிட்டா.''

    ''என்ன பிரச்னை?''

    ''அது என்னான்னு எனக்குத் தெரியலீங்கய்யா! என்னோட பையன்கிட்டே கேட்டேன். அவன் சொல்லலை. மின்மினியைத் தனியா சந்திச்சுக் கேட்டேன். அவளும் சொல்லலை. ரெண்டு பேரையும் சேர்த்துவைக்க நான் முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்கும்போதே, மின்மினி பெல்லாரியில் இருந்த தன்னோட வீட்டைக் காலி பண்ணிட்டு, சென்னைக்குப் போயிட்டா. அவ வீட்டைக் காலி பண்ணின விவரம் எனக்கும் என் மகனுக்கும் நாலஞ்சு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. அல்போன்ஸ் இடிஞ்சுபோயிட்டான். நாங்களும் பெல்லாரியில் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு, மின்மினியைத் தேடி சென்னைக்குப் போனோம். கடந்த அஞ்சு வருஷ காலமா அவளைத் தேடி அலைஞ்சோம். மின்மினியை எங்களால கண்டுபிடிக்க முடியலை. போன வாரம் 'கொடீசியா' வளாகத்துல ஒரு ஃபங்ஷன் நடந்தப்ப நான் அங்கே இருந்தேன். அந்தச் சமயத்துல நீங்களும் மின்மினியும் அந்த ஃபங்ஷன்ல கலந்துக்கிறதுக்காக ஒரே கார்ல வந்தப்பதான் மின்மினிக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடந்திருக்கிற விவரம் எனக்குத் தெரிஞ்சுது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. இந்த விஷயம் என் மகனுக்குக்கூடத் தெரியாது. சட்டப்படி மின்மினி என்னோட மருமக. அல்போன்ஸோட மனைவி. நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது எந்த வகையில் நியாயம்னு தெரியலை. இந்தப் பிரச்னையை நான் ஒரு மனுவா எழுதிக் கொண்டாந்திருக்கேன். நீங்கதான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்.''

    p95a.jpgபங்கஜ்குமார் சில விநாடிகள் கண் மூடி மௌனமாக இருந்துவிட்டு, பெரியவர் மைக்கேல் எர் னஸ்ட்டை ஏறிட்டார். ''உங்களுக்கு ஒரு தீர்வு வேணும். அவ்வளவுதானே?''

    ''ஆமாங்கய்யா! நான் நினைச்சிருந்தா பத்திரிகைக்கும் டி.வி-க்கும் போய் விஷயத்தைச் சொல்லி, இதைப் பெரிசுபடுத்தியிருக்க முடியும். அப்படி நான் பண்ண விரும்பலை. உங்ககிட்டே இருந்து எனக்கு ஒரு நியாயமான முடிவு கிடைக்கும்கிற நம்பிக்கை யில்தான் உங்களை ரெண்டு நாளாய்ப் பார்க்க முயற்சி எடுத்து, இன்னிக்குப் பார்த்துட்டேன்.''

    ''இந்த விஷயத்தை வெளியே யார்கிட்டேயும் சொல்லலையே?''

    ''இல்லீங்கய்யா!''

    ''சரி... நாளை காலையில் உங்க மகனோடு என் பங்களாவுக்கு வந்துடுங்க. மேற்கொண்டு பேச வேண்டியதை அங்கே வெச்சுப் பேசிக்குவோம்.''

    ''எத்தனை மணிக்கு வரணுங்கய்யா?''

    ''ஏழு மணிக்கெல்லாம் வந்துடுங்க.''

    ''சரிங்கய்யா!''-மைக்கேல் எர்னஸ்ட் கும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு, அறையில் இருந்து வெளி யேற, வெளிறிப்போன முகத்தோடு அவருடைய முதுகையே வெறித்தார் கலெக்டர் பங்கஜ்குமார்.

    நியூயார்க்

    பேர் காமாட்சி, ஊர் காஞ்சிபுரம் என்று சொல்லி செல்போனில் பேசிய அந்தப் பெண்ணுடன் விஜேஷ் மேற்கொண்டு பேச முயல, 'பை' சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.

    விஜேஷின் முகம் முழுக்கக் குழப்பமும் வியப்பும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு ஸ்லோமோஷனில் பரவியது. அதைக் கவனித்துவிட்டு, காரை ஓட்டிக் கொண்டு இருந்த ஃப்ளோரா கேட்டாள்... ''செல் போனில் பேசியது யார் மிஸ்டர் விஜேஷ்?''

    'இவளிடம் சொல்லலாமா, வேண்டாமா' என்று விநாடிகள் யோசித்து, ஆறாவது விநாடியில் வேண்டாம் என்று முடிவு எடுத்து, ''அது... அது... ஒரு ராங் நம்பர்'' என்றான் விஜேஷ்.

    ''ராங் நம்பரா?''

    ''ஆமாம்...''

    p97a.jpg''ஒரு லாயரிடம் பொய் சொல்லக் கூடாது என்பது பொதுவான விதி. உங்களுக்கு வந்தது ராங் நம்பர் இல்லை. சரியான நம்பர்தான். ஆனால், பேசியது மட்டும் ராங் பர்சன். நான் சொல்வது சரியா?''

    விஜேஷ் அவளை வியப்பாகப் பார்க்க, அவள் சிரித்தாள். ''உங்களுக்கு வந்தது ராங் நம்பராக இருந்திருந்தால், அந்தப் பேச்சு ஒரு பத்து விநாடிகளுக்குள் முடிந்துபோயிருக்கும். ஆனால், நீங்கள் ஒரு நிமிடம் பேசினீர்கள். அந்த ஒரு நிமிடப் பேச்சு முடிவதற்குள், உங்கள் முகத்தில் ஓராயிரம் முகபாவங்கள். அதிர்ச்சி அலைகள். போனில் ஏதாவது கெட்ட செய்தியா?

    ''கிட்டத்தட்ட...''

    ''பேசியது யார்... ஆணா, பெண்ணா?''

    ''பெண்.''

    ''என்ன சொன்னாள்?''

    விஜேஷ் தயங்க, ஃப்ளோரா சிரித்துக் கண் சிமிட் டினாள். ''என்னைப்பற்றி அந்தப் பெண் ஏதாவது மோசமான முறையில் விமர்சனம் செய்தாளா?''

    ''இல்லை.''

    ''பின்னே?''

    ''என்னை எச்சரிக்கை செய்தாள்.''

    ''எச்சரிக்கை செய்தாளா?''

    ''ம்... கடந்த ஆறு மாத காலத்தில் நீங்கள் சொல் லும் அந்த வீட்டை வாங்க அக்ரிமென்ட் போட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோய்விட்டார் களாம். 'இப்போது நீங்கள் மூன்றாவது நபராக அந்த வீட்டை வாங்க வந்திருக்கிறீர்கள். இந்த நிமிஷத் தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பாரீசுக்குப் போக அடுத்த ஃப்ளைட் டைப் பிடியுங்கள்' என்று சொன்னாள்.''

    ஃப்ளோராவின் முகம் லேசாக மாறியது. ''நீங்கள் என்ன சொன்னீர்கள் விஜேஷ்?''

    ''நான் மேற்கொண்டு அவளிடம் பேசுவதற்கு முன்பாக இணைப்பைத் துண்டித்துவிட்டாள். பப்ளிக் பூத்தில் இருந்து பேசியிருக்கிறாள். அவள் ஒரு இந்தி யப் பெண். அதிலும் தமிழ்நாட்டுப் பெண். பெயர் காமாட்சி. ஊர் காஞ்சிபுரம்.

    ஃப்ளோரா சில விநாடிகள் வரை மௌனம் காத்து விட்டு, விஜேஷைத் திரும்பிப் பார்த்தாள். ''இப்போது உங்கள் முடிவு என்ன விஜேஷ்? அந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா, இல்லை அவள் சொன்னது போல அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, பாரீஸ்போகப்போகிறீர்களா?''

    ''அந்த காமாட்சி சொன்னது உண்மையா, பொய்யா? நீங்கள் சொல்லும் அந்த வீட்டை இரண்டு பேர் வாங்க முயற்சி செய்து, அடுத்தடுத்து இறந்துபோனது உண்மையா?''

    ''உண்மைதான்!''

    ''எப்படி இறந்தார்கள்?''

    ''ஹார்ட் அட்டாக்! வீட்டை வாங்க வந்த அந்த இரண்டு பேருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் பெண். மற்றவர் ஆண். பெண்ணின் பெயர் பிரிட்டனி ஜான்சன். ஆணின் பெயர் ஜான் கரோல். முதலில் வீட்டை வாங்க முயற்சி செய்து அக்ரிமென்ட் போட்டவர் பிரிட்டனி ஜான்சன். அவருக்கு ஏற்கெனவே இருதய ஆபரேஷன் நடந்திருக்கிறது. டாக்டர் சொல்லியிருந்த நடைப்பயிற்சி தூரத்தைக் காட்டிலும் அதிக தூரம் நடந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு மரணம். அதற்குப் பிறகு இரண்டாவதாக அக்ரிமென்ட் போட்டவர் ஜான் கரோல். அவர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். குடிகாரர். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் அளவுக்கு மீறிக் குடிப்பவர். ஒரு சனிக் கிழமை இரவு மதுவின் தாக்கம் அதிகமாகி, மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். இரண்டுமே இயற்கையான முறையில் நேர்ந்த மரணங்கள். வீட்டை வாங்க நினைத்ததற்கும் அவர்கள் இறந்து போனதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இது ஒரு சாதாரண பிரச்னை. இதை யாரோ ஊதிவிட்டுப் பெரிதாக்க நினைக்கிறார்கள்.''

    ''இதனால் யாருக்கு என்ன லாபம்?''

    ''அதுதான் எனக்கும் புரியவில்லை. உங்களுக்கு போன் செய்து பயமுறுத்திய காமாட்சி யார் என்று தெரிந்தால்தான் இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். ஆனால், மறுபடியும் அந்தக் காமாட்சி உங்களுக்கு போன் செய்ய மாட்டாள். ஏனென்றால், அந்த வீட்டை வாங்க விடாதபடி பயமுறுத்துவது ஒன்றுதான் அவளுடைய நோக்கம். இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான். காமாட்சியின் எச்சரிக்கைக்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன?''

    விஜேஷ் சிரித்தான். ''அவளுடைய எச்சரிக்கையை நான் குப்பைக் கூடைக்கு அனுப்பியாயிற்று. உங்களுடைய சகோதரன் ஃப்ரெட்ரிக் என் உயிர் நண்பன். எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன். நியூயார்க்கில் நல்ல வேலை கிடைத்து போகப்போகிறேன் என்று தெரிந்ததும், அங்கே ஒரு வீட்டை வாங் கும் யோசனையை அவன்தான் சொன் னான். அதற்கேற்றாற்போல் ஒரு பழங் கால வீடு உடனடியாக விற்பனைக்கு இருக்கிறது என்று நீங்கள் போனில் சொன்னதும், நான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு லாயர். அந்த வீட்டை விற்கக்கூடிய உரிமையான பவர் ஆஃப் அட்டர்னி உங்களிடம் இருப்பதால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.''

    ''நீங்கள் இப்படிப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது எந்தப் பிரச்னையும் இல்லாத வீடு. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, வீட்டை வாங்க முயற்சித்த இரண்டு பேர் இயற்கையான முறையில் இறந்து போயிருக் கிறார்கள். அதை ஒரு பெண் பொழுது போகாமல் கிளறிப் பார்த்து உங்களுக்கு கிலியை ஏற்படுத்த நினைத்து போன் செய்திருக்கிறாள்.''

    ''நான் அவளை மறந்துவிட்டேன் ஃப்ளோரா! எனக்கு அந்த வீட்டைக் காட்டுங்கள். முடிவாக ஒரு விலை பேசி அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம். எனக்கு பேங்கில் லோன் சாங்ஷன் ஆன துமே ரெஜிஸ்ட்ரேஷன்!''

    ''அப்படியென்றால் அந்தக் காமாட்சி யின் எச்சரிக்கையைப் பொருட்படுத்த வில்லையா?''

    ''ஒரு சதவிகிதம்கூட! உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில்தான் அந்த வீடு இருப்பதாகச் சொன்னீர்கள் ஃப்ளோரா. போகும்போதே ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விடலாமா?''

    ''வீட்டுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டு, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு போகலாமே?''

    ''இல்லை ஃப்ளோரா! எனக்கு விமானப் பய ணக் களைப்பு கொஞ்சம்கூட இல்லை. எதற்காக நியூயார்க் வந்தேனோ, அந்த வேலையை முதலில் பார்த்துவிடலாம்.''

    ''இன்னும் பத்தே நிமிடங்களில் அந்த வீடு இருக் கும் ஓல்ட் ப்ளாக் க்ரூவ்ஸ் ஏரியா வந்துவிடும்.''

    ''பிறகென்ன? பார்த்துவிட்டே போய்விடலாம்!''

    கார் நெடுஞ்சாலையில் நான்காவது டிராக்கில் ஓர் இலவம்பஞ்சுத் துணுக்காகப் பறந்தது. நியூ யார்க்கின் பிரமாண்டமான கட்டடங்கள் இப்போது காணாமல் போயிருக்க, தொலைவில் மலைகள் நீல நிற பென்சிலால் கிழிக்கப்பட்ட கோணல்மாணல் கோடுகளாகத் தெரிந்தன.

    விஜேஷ், ஃப்ளோராவிடம் ஏதோ பேச முயல, அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட் டது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான். புது நம்பர். செல்போனைக் காதுக்குக் கொடுத்து, ''யெஸ்'' என்றான்.

    ''நான் காஞ்சிபுரம் காமாட்சி. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க விஜேஷ்?''

    ''ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள்ளே பூந் துட்டுப் பேசறவங்களை நான் நம்பறது இல்லை. ஃப்ளோரா இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வீட்டைக் காட்டப்போறாங்க. நான் பார்க்கப் போறேன்.''

    காமாட்சி சிரித்தாள்.

    ''என்ன சிரிக்கிறே?''

    ''வலிது... வலிது... விதி வலிது! இப்ப சிரிச்சது நானில்லை. உங்க முதுகுக்குப் பின்னாடி இருக்கிற விதி!''

https://www.vikatan.com

- பறக்கும்...

Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 

 
 
anibul13.gifராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
BLUFLOAT1.gifஇனி, மின்மினி
white_spacer.jpg

p84a.jpgநியூயார்க்

செல்போனில் தன் குரலின் டெசிபலை உயர்த்தினான் விஜேஷ்... ''இதோ பார்... ஒரு டெலிபோன் பூத்துக்குள்ளே புகுந்துக்கிட்டு நீ சொல்ற கதையைஎல்லாம் நம்ப நான் தயாரா இல்லை. விதி சிரிச்சா என்ன... அழுதா என்ன? நான் இப்போ அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். இன்னும் சில நிமிஷங்கள்ல அந்த வீட்டைப் பார்க்கப்போறேன். வீடு பிடிச்சிருந்தா, உடனே அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுடுவேன்!''

விஜேஷ் சொல்லச் சொல்ல, அந்தப் பெண் மறுமுனையில் கெஞ்சினாள்... ''ப்ளீஸ் விஜேஷ்! நான் சொல்றதைக் கேளுங்க. உங்களுக்கு நியூயார்க்கில் ஒரு வீடு வேணும், அவ்வளவுதானே? நான் ஏற்பாடு பண்றேன். ஹட்சன் நதிக்கரையில் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டை விக்கிறதாச் சொல்லிட்டுஇருந்தார். நான் கேட்டுப் பார்க்கிறேன்.''

''என்னது! ஹட்சன் நதிக்கரையில் வீடு விலைக்கு வருதா?''

''ஆமா...''

''அந்த ஏரியாவில் வீடு வாங்கணும்னா, கையில குறைந்தபட்சம் பத்து லட்சம் டாலராவது இருக்கணுமே?''

''கண்டிப்பா...''

 

''அம்மா தாயே, ஆளை விடு! என் கையில் இருக்கிறது ரெண்டு லட்சம் டாலர்தான்! பத்துக்கு நான் எங்கே போவேன்?''

''நியூயார்க்கில் ரெண்டு லட்சம் டாலருக்கெல்லாம் வீடு கிடைக்கிறது ரொம்பவும் கஷ்டம். மூணு பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டை நீங்க வாங்கணும்னா, உங்க கையில் குறைஞ்சபட்சம் அஞ்சு லட்சம் டாலராவது வேணும், விஜேஷ்!''

''எனக்கு அதெல்லாம் தெரியாது. லாயர் ஃப்ளோரா ரெண்டு லட்சம் டாலருக்குள்ளே இப்பப் பார்க்கப்போற வீட்டை முடிச்சுத் தர்றதா சொல்லி இருக்காங்க. அது பழைய காலத்து வீடு. இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமா ரெனவேஷன் பண்ணிக்கலாம்.''

மறுமுனையில் அந்தப் பெண் பதற்றமானாள்... ''விஜேஷ்! அந்த வீட்டை வாங்காதீங்க. அது வீடு இல்லை.''

''பின்னே?''

''விபரீதம்!''

விஜேஷ் சிரித்தான். ''கடந்த ஆறு மாத காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோயிட்டாங்க; உங்களுக்கும் அந்த நிலைமை வரலாம்னு சொல்லப்போறே... அதுதானே விபரீதம்?''

''ம்...''

''இதோ பார்... நீ சொல்ற அந்த விபரீதத்தைப்பத்தி நான் ஃப்ளோராகிட்டே பேசிட்டேன்.''

''அதுக்கு என்ன சொன்னா?''

''அக்ரிமென்ட் போட்ட அந்த ரெண்டு பேருமே எழுபது வயசுக்கு மேற்பட்டவங்க. தவிர, அவங்க ஹார்ட் பேஷன்ட்ஸ். ஒரு பெண்; ஒரு ஆண். பெண் பிரிட்டனி ஜான்சன். அதிக நடைப் பயிற்சி காரணமா மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். ஆண் ஜான் கரோல். ஒவ்வொரு சனிக்கிழமை ராத்திரியும் ஓவராக் குடிப்பார். பைபாஸ் சர்ஜரி பண்ணின அந்த ஹார்ட் தாங்குமா? மண்டையைப் போட்டுட்டார். ஸோ, அந்த ரெண்டு பேரோட மரணங்களுக்கும் வீடு காரணம் இல்லை. தங்களுடைய ஹெல்த்தைப் பாதுகாக்கத் தவறியதுதான் காரணம். அக்ரிமென்ட் போடாம இருந்திருந்தாக்கூட, அந்த ரெண்டு பேரும் செத்துப்போயிருப்பாங்க...''

''விஜேஷ்! உங்களுக்கு ஒரு முக்கியமான உண்மை புரியலை!''

''என்ன உண்மை?''

''அந்த ரெண்டு பேரும் வயசானவங்க, ஹார்ட் பேஷன்ட்ஸ்னு சொன்னதெல்லாம் உண்மை. ஆனா, அந்த ரெண்டு பேரோட மரணம் இயற்கையானது அல்ல.''

''அப்புறம்?''

''மர்டர்ஸ்...''

p85b.jpg

''இப்படி ஏதாவது ஒண்ணைச் சொல்லி பயமுறுத்தி, என்னை அந்த வீட்டை வாங்கவிடாம பண்றதுதானே உன்னோட நோக்கம்.''

''இல்லை! உங்க உயிரைக் காப்பாத்தறதுதான் என் நோக்கம்.''

''அப்படின்னா, என் முன்னாடி வந்து நில்லு. அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டு. அவை நம்புற மாதிரி இருந்தா, போலீசுக்குப் போவோம்.''

''போலீசுக்குப் போக முடியாது விஜேஷ்.''

''ஏன்?''

''அதுல ஒரு பிரச்னை இருக்கு.''

''என்ன பிரச்னை?''

''அதை வெளியில் சொல்ல முடியாது.''

''என்ன நீ, நான் எதைக் கேட்டாலும் நெகட்டிவ்வாவே பதில் சொல்லிட்டு இருக்கே? அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உன்னிடம் இருந்தா, போலீசுக்குப் போக வேண்டியது தானே?''

''இது நம்ம ஊர் போலீஸ் இல்லை. நியூயார்க் போலீஸ். சட்டம் இங்கே நாணல் மாதிரி வளைந்து கொடுக்காது. இரும்புத் தூண் மாதிரி நிக்கும்.''

''உனக்கு பயமா இருந்தா சொல்லு... நானும் உன்கூட வர்றேன்.''

''போலீசுக்கெல்லாம் போக முடியாது விஜேஷ். அப்படி போலீசுக்கு விஷயத்தைக் கொண்டு போனா அதனுடைய பின்விளைவுகள் ஒரு சுனாமி மாதிரி இருக்கும்.''

விஜேஷ் சிரித்தான். ''ஒரு பொய்யைப் பேசிட்டா, அந்தப் பொய்யைக் காப்பாத்த இன்னும் பத்து பொய்கள் சொல்ல வேண்டியிருக்குமாம். அதைத்தான் நீ இப்போ பண்ணிட்டு இருக்கே!''

''விஜேஷ்! நான் சொன்னதுல எதுவும் பொய் கிடையாது. தயவுபண்ணி அந்த வீட்டை வாங்கற எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க.''

''ஒரு கால்புள்ளியைக்கூட வெக்கற மாதிரி இல்லை. ஃப்ளோரா காரை நிறுத்தியாச்சு. வீடு இருக்கிற ஏரியா வுக்கு வந்துட்டோம்.''

''ஒருவேளை உங்களுக்கு அந்த வீடு பிடிக்க லைன்னா...''

''அதுக்கு சான்ஸே இல்லை. ஏன்னா, என்னுடைய நண்பன் ஃப்ரெட்ரிக்கும் அவனுடைய சிஸ்டர் ஃப்ளோராவும் ஒரு வீட்டை வாங்கிக்கச் சொல்லி சிபாரிசு பண்றாங்கன்னா, அதுல தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. ஸோ, இனிமே எனக்கு போன் பண்ணாதே! அந்த ஹட்சன் நதிக் கரையில் இருக்கிற வீட்டை வேற எந்த சோணகிரிக்காவது வாங்கிக் குடுத்து கமிஷன் பார்த்துடு!'' - பேசிவிட்டு செல்போனை அணைத்தான் விஜேஷ்.

p85a.jpgபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஃப்ளோரா, பெர்ஃப்யூம் வாசனையோடு பார்த்தாள். பேசிய தமிழ் புரியாததால் பார்வையில் குழப்பம்.

''செல்போனில் யார்?''

''சிறிது நேரத்துக்கு முன்பு பேசிய அதே பெண்.''

''அந்தப் பெண்ணிடம் கோபமாகப் பேசினீர்களே... ஏதாவது பிரச்னையா?''

''ஒரு பிரச்னையும் இல்லை. ஹட்சன் நதிக் கரையில் ஒரு வீடு விற்பனைக்கு வருகிறதாம். வாங்கிக்கொள்ளும்படி சொன்னாள். நான் வேண்டாம் என்று சொன்னதால், அவளுக்குக் கோபம். நாம் இப்போது பார்க்கப்போகிற வீட்டைப்பற்றி பொய் மழை பொழிந்து, அதை வாங்கவே கூடாது என்று சொல்லி, என்னை ஒருவழி செய்துவிட்டாள்.''

''பொறாமை பிடித்தவள்! ரியல் எஸ்டேட் பிசினஸில் இது போன்ற பொறாமைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.''

இருவரும் காரைவிட்டு இறங்கினார்கள். நகரை விட்டுத் தள்ளி இருந்த அந்த இடத்தில் நிசப்தம் ஏதோ செதுக்கப்பட்ட பொருள் மாதிரி தெரிந்தது. மனித நடமாட்டம் அறவே இல்லை. அடர்த்தியான சிப்ரஸ் மரங்களுக்கு நடுவில், அந்தச் செங்காவி வண்ணம் பூசப்பட்ட வீடு கண்ணாமூச்சி காட்டியது.

ஃப்ளோரா கையில் சாவியோடு முன்னால் நடந்தாள்.

விஜேஷ் கேட்டான்... ''கார் உள்ளே போகாதா?''

ஃப்ளோரா ஒரு சின்னப் புன்னகையோடு, வீட்டுக்கு முன்பாகத் தெரிந்த அந்தப் பெரிய இரும்பு காம்பவுண்ட் கேட்டைக் காட்டினாள். கேட் ஒரு பக்கமாகச் சாய்ந்து மண்ணில் புதைந்து போயிருந்தது.

''சென்ற வாரம் பெய்த பெரு மழையில் காம்பவுண்ட் கேட்டின் பில்லர் சாய்ந்து, கேட் மண்ணில் போய் மாட்டிக்கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் கேட்டைச் சரிசெய்யும் பணி துவங்கும். இப்போது நாம் இந்தப் பக்கவாட்டு கேட் வழியாக உள்ளே போய்விடலாம்.''

ஃப்ளோரா சொல்லிக்கொண்டே அந்தச் சிறிய கேட்டில் இருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்து கேட்டைத் தள்ளினாள். அது 'ழேய்ய்....' என்று ஒரு குடிகாரனைப் போல் கத்திக்கொண்டு பின்னால் போயிற்று. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். பனி பெய்து நனைந்து இருந்த புல் தரையில் ஃப்ளோரா முன்னால் நடந்து போக, விஜேஷ் அவளைப் பின்தொடர்ந்தான்.

பத்தடி நடந்தவன் சட்டென்று நின்றான். அவனுடைய முதுகில் யாரோ கைவைத்த மாதிரியான உணர்வு.

'நிஜமா... பிரமையா?' என்று யோசிப்பதற்குள், முதுகுக்குப் பின்னால் அந்த மூச்சிரைப்புச் சத்தம்!

கோவை

ந்த மத்தியான வேளையிலும், ஃப்ரிஜ்ஜில் வைத்த பொருள் போல் கோவை குளிர்ந்து போய் இருக்க, மின்மினி மொட்டை மாடியில் மெள்ள உலவியபடி செல்போனில் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள்.

''இல்ல மாலு... எனக்குக் கச்சேரி பண்றதுல இஷ்டமே இல்லை. என்னோட மிஸ்டர்தான் கம்பெல் பண்ணினார். ஏதோ இசை விழாவாம்... அதுக்குக் கிடைக்கிற ஃபண்ட்ஸ் எல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் போகுதாம். சரி, ஒரு நல்ல காரியத்துக்கு நாம கத்துக்கிட்ட பாட்டும் உதவட்டுமேன்னுதான் ஒப்புக்கிட்டேன். நீயும் உன் ஹஸ்பெண்டும் சரியா ஆறு மணிக்கெல்லாம் புரந்தரதாஸர் ஹாலுக்கு வந்துடுங்க. சீஃப் கெஸ்ட் வேறு யாருமில்லை, வானவராயர்தான்!'' - செல்போனில் பேசிக்கொண்டே திரும்பிய மின்மினி, வேலைக்காரி தயக்கமாக நிற்பதைப் பார்த்துவிட்டு, 'என்ன' என்பது போல் புருவங்களை உயர்த்தினாள்.

p87a.jpg''அம்மா! கேட்ல இருக்கிற செக்யூரிட்டி பேசினாங்க. உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக பெரியவர் மல்லய்யா வந்து இருக்காராம். உள்ளே அனுப்பவான்னு கேட்டாங்க.''

மின்மினி சற்றே பதற்றமானாள். ''இதுக்கு என்கிட்டே கேட்கணுமா? அவர் எப்ப என்னைத் தேடி வந்தாலும், உடனடியாக உள்ளே அனுப்பிவைக்கணும்னு செக்யூரிட்டிகிட்டே ஏற்கெனவே சொல்லியிருந்தேனே!''

''இதோ அனுப்பச் சொல்றேம்மா!'' வேலைக்காரி படிகளில் இறங்கி ஓட, மின்மினி செல்போனுக்கு உதட்டைக் கொடுத்து, ''ஸாரி மாலு... எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த குருநாதர் கீழே வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காராம். சாயந்திரம் நாம பார்ப்போம்!''

''யாரு... அந்த பெல்லாரி மல்லய்யாவா?''

''பரவாயில்லையே! அவரோட பேரை அட்சரசுத்தமாக ஞாபகம் வெச்சிருக்கியே!''

எதிர்முனையில் அந்த மாலு சிரித்தாள்... ''தெலுங்கு சினிமா பட டைட்டில் மாதிரி இருக்கிற அவரோட பேரை அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா என்ன?''

''ஏய்! பெரியவங்களைக் கிண்டல் பண்ணாதே! பெல்லாரியில் நான் அப்பா-அம்மாவை இழந்துட்டு அநாதையா நின்னப்ப, அவர்தான் எனக்கு ஆதரவாக இருந்து மஹிளா சமிதி விடுதியில் இடம் வாங்கிக் கொடுத்து...''

''ஸாரி மின்மினி! இந்த பெல்லாரி ஃப்ளாஷ்பேக் ரீல் ரொம்பவும் பழசாயிடுச்சு. புதுசா வேற ஒரு பிரின்ட் போட்டுக்கோயேன்.''

''சாயந்திரம் வா சொல்றேன்... உன்னை...'' - மின்மினி பற்களைக் கடித்து, செல்போனை அணைத்தாள். படிகளில் வேகவேகமாக இறங்கி ஹாலுக்கு வந்தபோது, மல்லய்யா வாசற்படிகள் ஏறி உள்ளே வந்துகொண்டு இருந்தார்.

மல்லய்யாவுக்கு 60 வயது இருக்கலாம். சராசரி உயரத்தில், சற்றே கனத்த உடம்பு. ரோமம் இல்லாத முன் மண்டையை மூன்று விபூதிக் கோடுகளும், ஒரு குங்குமப் பொட்டும் குத்தகைக்கு எடுத்திருக்க... பின்னந்தலையில் இருந்த நீளமான முடிகள் ஒரு குடுமியாக மாறியிருந்தன. ஆந்திரா பாணியில் கட்டப்பட்ட வேட்டியும், மார்பைச் சுற்றியிருந்த வெள்ளை வஸ்திரமும் அவரை மதிப்போடு பார்க்கவைத்தது.

மின்மினி ஒட்டமும் நடையுமாகப் போய் அவருடைய பாதங்களில் விழுந்தாள். அவர் மின்மினியின் தலையில் தன் வலது கையைவைத்தார். ''நீ என்னிக்கும் நல்லாயிருக்கணும்... எழுந்திரும்மா!''

மின்மினி எழுந்தாள். கும்பிட்ட கையோடு சொன்னாள், ''ஐயா! மன்னிக்கணும்...''

''எதுக்கு?''

''கேட்ல இருந்த சென்ட்ரி கான்ஸ்டபிள் உங்களை உடனே உள்ளே அனுப்பாம வாசல்ல நிக்க வெச்சதுக்காக.''

மல்லய்யா தன் கறை இல்லாத பற்களைக் காட்டிச் சிரித்தார். ''அட, என்னம்மா நீ... இதுக்கெல்லாம் போய் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு? நீ யாரு... ஒரு கலெக்டரோட மனைவி. யார் வேணும்னாலும் சர்வசாதாரணமா வந்து போறதுக்கு இது என்ன சத்திரமா? நான் இந்த வீட்டுக்கு வேண்டியவன்னு தெரிஞ்சிருந்தும் பாம் டிடெக்டர் வெச்சு சோதனை போட்டுத்தான் அனுப்பினாங்க. யார் யாருக்கு என்னென்ன கடமைகள் இருக்கோ, அதை அவங்க பண்ணியாகணும்!'' - மல்லய்யா சொல்லிக்கொண்டே போய், ஹாலில் போட்டிருந்த சோபாவில் சாய்ந்தார். மின்மினியும் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

''ஐயா! திடீர்னு கோயம்புத்தூருக்கு வந்து இருக்கீங்க. ஏதாவது விசேஷமா?''

''விசேஷம்தாம்மா! இங்கே வடவள்ளிக்குப் பக்கத்துல க்யூரியோ கார்டன் அவென்யூன்னு ஒரு காலனி இருக்கு. அந்தக் காலனியில் அம்சமான விநாயகர் கோயில் ஒண்ணு இருக்கு. ஆபத்சகாய சுந்தர விநாயகர்னு பேர். சக்தி வாய்ந்த விநாயகர். அந்தக் கோயிலோட கும்பாபிஷேகம் நாளைக்கு. அதுல கலந்துக்கச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. உடனே புறப்பட்டு வந்துட்டேன்.''

''ரொம்பச் சந்தோஷம். ஐயா, இன்னிக்குச் சாயந்திரம் நீங்க ஃப்ரீயா?''

''ஏம்மா கேட்கிறே?''

''ஐயா! இன்னிக்குச் சாயந்திரம் ஆர்.எஸ்.புரம் புரந்தரதாஸர் ஹால்ல என்னோட கச்சேரி. நீங்க அவசியம் முன் வரிசையில் உட்கார்ந்து கேக்கணும்.''

''பஞ்சாமிர்தம் சாப்பிடக் கூலியா?'' - சொல்லிச் சிரித்தவர் கேட்டார்... ''உன்னோட கணவர் எப்படி இருக்கார்மா? கல்யாணத்துல பார்த்தது. அதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு ரெண்டு தடவை வந்தும் அவரைப் பார்க்கவே முடியலை.''

''இன்னிக்கு அவரை நீங்க பார்த்துடலாங்கய்யா! மத்தியானம் லஞ்சுக்குக் கண்டிப்பா வர்றதாகச் சொல்லியிருக்கார். நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம். அவரும் உங்களைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருப்பார். 'எனக்கு ஒரு வானம்பாடியைப் பரிசாகக் கொடுத்த வள்ளல் அவர்'னு புகழ்ந்துட்டே இருப்பார். நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா, அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார். இப்பவே போன் பண்ணிச் சொல்லிடறேன்.''

மின்மினி செல்போனை எடுத்தாள். தன் கணவரின் பெர்சனல் செல்போனுக்கு எண்களை அழுத்தினாள். மறுமுனையில் ரிங்டோன் போய், குரல் கேட்டது.

''யெஸ்!'' பங்கஜ்குமாரின் குரல்.

''என்ன யெஸ்! நான் உங்க மின்மினி.''

''ஸாரி... ராங் நம்பர்!'' - பங்கஜ்குமாரின் குரலைத் தொடர்ந்து, செல்போன் இணைப்பு அறுந்தது.

-பறக்கும்...

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பை ஷ்டார் துரோகம் அந்தரத்தில் நிக்குது...அதை முதலில் முடியுங்கோ

 

Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 

 
 
anibul13.gifராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
BLUFLOAT1.gifஇனி, மின்மினி
white_spacer.jpg

கோவை

p84a.jpgமின்மினி முதல் விநாடியில் அதிர்ந்து, இரண்டாவது விநாடியில் வியர்த்து, மூன்றாவது விநாடியில் இருதயத்தின் மையத்தில் நொறுங்கிப் போனாள். ரத்தம் சூடாகி, மூளை தகித்தது.

'என்ன சொன்னார்?', 'ராங் நம்பரா?', 'பேசியது அவர்தானா... இல்லை, வேறு யாராவதா?'

பெல்லாரி மல்லய்யா மின்மினியின் முகமாற் றத்தைக் கவனித்துவிட்டுக் கேட்டார்... ''என்னம்மா, ஏன் ஒரு மாதிரியாயிட்டே?''

''அ... அ... அது... ஒண்ணுமில்லீங்கய்யா. நம்பர் தப்பாப் போட்டுட்டேன் போலிருக்கு.''

''நீ ரொம்பவும் டென்ஷனாத் தெரியறே! பார்த்து டயல் பண்ணும்மா!''

மின்மினியின் உதடுகள் ஈரம் இல்லாமல் பேப்பர்தாளாக உலர்ந்துபோய் இருக்க, லேசான கை நடுக் கத்தோடு அதே எண்களை மறுபடியும் செல்போனில் ஒற்றி எடுத்தாள். மறுமுனையில் ரிங்டோன் போயிற்று. தொடர்ந்து பங்கஜ்குமாரின் குரல்... ''சொல்லு மின்மினி!''

''ஒரு நிமிஷம்'' என்றவள், மல்லய்யாவைப் பார்த்து, ''உள்ளேயிருந்து பேசினா சரியா டவர் எடுக்கலை. சிட் அவுட் பக்கமாகப் போய் பேசிட்டு வந்துடறேன்யா!''

''சரிம்மா!''

மின்மினி ஹாலைக் கடந்து, தோட்டத்துப் பக்கம் இருந்த சிட்-அவுட்டை நோக்கிப் போனாள். உதட்டுக்கு செல்போனைக் கொடுத்தாள். குரலைச் சற்றே உயர்த்தி, ''என்னங்க...''

 

''சொல்லு...''

''ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு நான் போன் பண்ணிப் பேசினபோது எதுக்காக 'ராங் நம்பர்'னு சொன்னீங்க?''

''மின்மினி! நான் இப்போ ஒரு முக்கியமான மீட் டிங்கில் இருக்கேன். ஒரு விவகாரமான பிரச்னை யைப் பத்திப் பேசிட்டு இருக்கும்போதுதான் உன்னோட போன் வந்தது. பட், டிஸ்ப்ளேயில் உன் பேர் வரலை. நீ பேசினதும் சரியாக் கேட்கலை. அதான், 'ராங் நம்பர்'னு சொல்லிட்டேன்.''

''இதுதான் உண்மைன்னா நான் நம்பறேன்.''

''சரி! சாயந்திரம் வந்து எல்லாத்தையும் பேசிக் கலாம். நான் இப்போ மீட்டிங்கை விட்டு வெளியே வந்து பேசிட்டு இருக்கேன். நான் மறுபடியும் உள்ளே போகணும்!''

''என்னது... சாயந்திரம் வர்றீங்களா?''

''ஆமா.''

''மத்தியானம் லஞ்ச்சுக்கு வர்றதா சொல்லி இருந்தீங்களே?''

''ஸாரி மின்மினி! இன்னிக்கு லஞ்ச்சுக்கு வர முடியும்னு எனக்குத் தோணலை. மீட்டிங் முடிய ரொம்ப நேரமாகும்னு நினைக்கிறேன்.''

''ரொம்ப நேரம்னா எவ்வளவு?''

''எப்படியும் மூணு மணியாயிடும்.''

''கலெக்டர் சார்! இன்னிக்கு நீங்களும் சரி இல்லை... உங்க பேச்சும் சரியில்லை. என்னாச்சு உங்களுக்கு?''

''பிரச்னை அப்படி!''

''அப்படி என்ன பெரிய பிரச்னை?''

''சொன்னா உனக்குப் புரியாது!''

''சரி! இன்னிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்திருக்கார். உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார். யாருன்னு கெஸ் பண்ணுங்க பார்க்க லாம்.''

''அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. நீயே சொல்லிடு.''

''இன்னிக்கு நீங்க சுத்தமா அவுட் ஆஃப் ஆர்டர்! 'நீயா பேசுவது... என் அன்பே, நீயா பேசுவது'ன்னு ஹை பிட்ச்ல கத்திப் பாடணும் போலிருக்கு.''

பங்கஜ்குமாரின் குரல் உயர்ந்தது... ''இதோ பார் மின்மினி! உன்னோடு அரட்டையடிச்சுட்டு இருக்க இது நேரம் கிடையாது. நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாரு?''

கணவரின் குரலில் கடுமை கலந்து ஒலித்ததை அறிந்ததும், மின்மினி சீரியஸானாள். சொன் னாள்... ''என்னோட குருநாதர் பெல்லாரி மல்லய்யா.''

மறுமுனையில் சிறு மௌன இடைவெளிக்குப் பின்பு... ''எப்ப வந்தார்?''

''அவர் வந்ததுக்கான சந்தோஷம் உங்க குரல்ல மிஸ்ஸிங்! எப்ப வந்தார்னு நீங்க கேக்கி றது ஏன் வந்தார்னு கேக்கிற மாதிரி இருக்கு.''

''நான் எது பேசினாலும் உனக்குத் தப்பாப் படுது! நானே அவரைப் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.''

''ந...ம்...ப... முடியவில்லை... இல்லை..!''

''நிஜமாத்தான்!''

''அப்படின்னா லஞ்ச்சுக்கு வாங்க.''

''அது முடியாது. அவர் பக்கத்துல இருக் காரா?''

''நான் சிட்-அவுட்ல இருக்கேன். அவர் ஹால்ல ஏதோ புக் படிச்சிட்டு இருக் கார்.''

''நான் பேசணும். செல்போனை அவர்கிட்ட குடு.''

p85a.jpg

''இப்பத்தான் நீங்க கொஞ்சம் இளகி, திருநெல்வேலி அல்வா பதத்துக்கு வந்திருக் கீங்க...''- சொன்ன மின்மினி, வேகவேகமாக ஹாலை நோக்கிப் போனாள். சோபாவுக்குச் சாய்ந்து புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு இருந்த மல்லய்யா நிமிர்ந்தார்.

''என்னம்மா?''

''மாப்பிள்ளை உங்ககிட்டே பேசணு மாம்.''

''ரொம்ப சந்தோஷம்!'' - சொன்ன மல்லய்யா, செல்போனை வாங்கி, வலது காதுக்கு ஏற்றினார்.

''வணக்கம் மாப்பிள்ளை!''

''நான் உங்களுக்குப் பதில் வணக்கம் சொல்லக்கூடிய மன நிலையில் இல்லை!''

''மா...ப்...பி...ள்...ளை..?!''

''நான் என்ன தப்பு பண்ணினேன்னு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கீங்க?''

பெல்லாரி மல்லய்யாவின் கையில் இருந்த செல்போன் உயிருள்ள ஜந்து போல் நடுங்கியது!

நியூயார்க்

ன் முதுகில் யாரோ கை வைத்த உணர்வில், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் விஜேஷ். கன்றுக் குட்டி சைஸில், அட்டைக்கரி நிறத்தில், அந்தக் கறுப்பு நிற நாய் மூச்சிரைத்தபடி இரண்டு கால்களையும் தூக்கியபடி நின்றிருந்தது.

விஜேஷ் சர்வாங்கமும் அதிர்ந்துபோனவனாக ஒரு சின்ன அலறலோடு பின்வாங்க, முன்னால் போய்க்கொண்டு இருந்த ஃப்ளோரா திரும்பிப் பார்த்தாள். அவள் இதழ்க் கோடியில் சட்டென்று ஒரு புன்னகை பிறந்தது.

''ஹாய் ப்ளாக்கி! கம் ஹியர். அவர் நம்ம கெஸ்ட். இப்படி எல்லாம் பின்னாடி ஓடி வந்து தொட்டுப் பயமுறுத்தக் கூடாது.''

ப்ளாக்கி ஒரு துள்ளலோடு அவளை நோக்கித் தாவியது. ஃப்ளோராவின் இரண்டு தோள்களின் மீதும் கால்களைப் பதித்து வைத்துக்கொண்டு, அவளுடைய கன்னங்களை நாக்கால் ஒற்றியது. ''யூ... நாட்டி பாய்!'' என்று அதன் முதுகில் ஒரு அடி போட்டுவிட்டு, விஜேஷை ஏறிட்டாள் ஃப்ளோரா.

''மிஸ்டர் விஜேஷ்! இது இந்த வீட்டு ஓனரின் நாய். பெயர் ப்ளாக்கி. இந்த வீட்டை அவர்கள் காலி செய்துகொண்டு போகும்போது இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இது இங்கேயே சுற்றிக்கொண்டு, கிடைத்ததைத் தின்றுவிட்டு, ராத்திரி வேளைகளில் இங்கே வந்து படுத்துக்கொள்ளும். நல்ல அறிவுள்ள நாய். அதற்குப் பிடிக்காதவர்கள் யாராவது இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் உறுமும்... குரைக் கும். ஆனால், உங்களைப் பார்த்து உறுமவில்லை; குரைக்கவில்லை. ஸோ, ப்ளாக்கிக்கு உங்களைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்!''

p87a.jpg

ப்ளாக்கி இப்போது ஃப்ளோராவை விட்டு விட்டு, விஜேஷைச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்தது. அவன் மேல் தாவியது.

''ப்ளாக்கி! டோன்ட் டிஸ்டர்ப். கோ அண்ட் லை தேர்!'' - ஃப்ளோரா அதட்ட... அது காதுகளை மடித்து, வாலைச் சுருட்டிக்கொண்டு வாசற்படிக்கு அருகே இருந்த குரோட்டன்ஸ் தொட்டிக்குப் பக்கத்தில் போய்ச் சுருண்டு படுத்தது.

வீடு ஒரு வேண்டாத நிசப்தத்தில் உறைந்து கிடந்தது. அடித்த காற்றில் குளிர் ஊசி முனை களாக மாறி, உடலின் சதையைத் துளைத்து எலும்பைப் பதம் பார்த்தது. ஃப்ளோரா தன் கையில் இருந்த சாவியை உபயோகப்படுத்தி, மேக்னடிக் லாக்கரைத் திறந்தாள். கதவு வெண்ணெய்க் கட்டியில் இறங்கிய கத்தி போல் மெள்ளப் பின் வாங்க... உள்ளே வீடு சாம்பல் நிற இருட்டில் இருந்தது.

ஃப்ளோரா உள்ளே போய் சுவரில் இருந்த சுவிட்ச்களைத் தேய்க்க... சுவர்களில் ஒளிந்து இருந்த ஷேடோ பல்புகள் மின்சாரம் சாப்பிட்டு உயிர்பெற்றன.

வீடு அவ்வளவு சுத்தமாக இல்லை. தூசி மண்டிய ஃபர்னிச்சர்கள் அடைசலாகத் தெரிய, இரண்டு வெள்ளை எலிகள் விஜேஷ், ஃப்ளோ ராவின் அதிரடி வருகையால் பயந்து போய் தலைதெறிக்க ஓடாமல், 'யார்றா நீங்க?' என்பது போல் சிவப்பான சின்னக் கண்களால் பார்த் தன.

ஃப்ளோரா சொன்னாள்... ''மிஸ்டர் விஜேஷ்! இப்போதைக்கு வீடு பார்க்க இப்படித்தான் இருக்கும். நீங்கள் ஓ.கே. சொல்லி அக்ரிமென்ட் போட்டுவிட்டால், இரண்டே நாட்களில் வீட்டைச் சுத்தப்படுத்தி பெயின்ட்டிங் வேலை பார்த்துவிடலாம். முதலில் உங்களுக்கு இந்த வீடு பிடிக்கவேண்டும்.''

''வீடு ரொம்பவும் பழையதாக இருக்கும் போலிருக்கிறதே! அங்கே பாருங்கள்... பெயின்ட் நார் நாராக உரிந்து தொங்குவதை!''

''வீடு பழையதுதான்... ஆனால், உறுதியானது. நியூயார்க்கின் சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் டிபார்ட் மென்ட் இந்தக் கட்டடத்தின் உறுதியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, இன்னும் 75 ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று தரச் சான்றிதழ் கொடுத்து உள்ளது. இந்த வீட்டின் பேரன்ட்டல் டாக்குமென்ட்ஸை உங்களிடம் நான் காட்டும்போது, அந்தத் தரச் சான்றிதழையும் நீங்கள் பார்க்கலாம்...''- ஃப்ளோரா பேசிக் கொண்டே அந்த அறையைக் கடந்து உள்ளே போக, விஜேஷ் பின்தொடர்ந்தான்.

தூசி நெடியோடு மூன்று அறைகள் பார்வைக் குக் கிடைத்தன. ''அது கிச்சன். இது மாஸ்டர் பெட் ரூம். இது ரீடிங் ரூம்.''

ரீடிங் ரூமை எட்டிப் பார்த்தான் விஜேஷ்.உடைந்துபோன கண்ணாடி ஷெல்ஃபில் தாறுமாறாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். ஷெல்ஃபுக்கு மேலே இருந்த சுவரில் வரிசையாக மூன்று போட்டோக்கள் நூலாம்படைகளுக்குப் பின்னால் தெரிந்தன. விஜேஷ் அந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு ஃப்ளோராவைப் பார்க்க, அவள் சொன்னாள்...

''முதல் போட்டோவில் இருப்பது இந்த வீட்டின் உரிமையாளர். பெயர் ஆல்பர்ட்ஸன். கே.எஸ்.சி. எனப்படும் கென்னடி விண்வெளி மையத்தில் புரொகிராம் இன்ஜினீயராகப் பணிபுரிந்து ரிட்டை யரானவர். பிறகு, ஒரு ஸ்பேஸ்க்ராஃப்ட் கல்லூரியில் விரிவுரையாளராக இரண்டு வருட காலம் பணி புரிந்தார். பிறகு, பார்வையில் குறை ஏற்பட்டதால், அந்த வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு, வீட்டில் ஓய்வாக இருக்க ஆரம்பித்தார். இரண்டா வது போட்டோவில் இருப்பது அவருடைய மனைவி. பெயர் எமிலி. ஹவுஸ் ஒய்ஃப். இருதய நோயாளி. இந்த 55 வயதுக்குள் இரண்டு தடவை பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். மூன்றாவது போட்டோவில் இருப்பது அவர்களுடைய மகள். பெயர் சில்வியா.''

விஜேஷ் அந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு, ஃப்ளோராவை ஒரு புன்னகையோடு பார்த்தான். ''நான் ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டீர்களே, ஃப்ளோரா?''

''நீங்கள் தப்பான கேள்வியைக் கேட்டாலும்கூட நான் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டேன். கேளுங்கள்.''

''போட்டோக்களில் ஆல்பர்ட்ஸனும் அவருடைய மனைவி எமிலியும் அழகான தோற்றத்தோடுகாணப் படுகிறார்கள். ஆனால், அவர்களுடைய மகள் அழகாக இல்லை. சற்றே தூக்கலான பல் வரிசையும், மேடிட்ட நெற்றியும், சிறிய கண்களும் அவளை ஒரு சராசரி அழகுக்கும் கீழே கொண்டுபோய் விட்டதே?''

''உண்மைதான்! ஆனால் சில்வியா, தான் அழ காக இல்லையே என்று ஒருநாள்கூட வருத்தப்பட்டது கிடையாது. என்னதான் படித்தாலும், பெரிய பெரிய கம்பெனிகளில் தனக்கு வேலை கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட சில்வியா, ஆண்கள் படிக்க விரும்பும் படிப்பான ஆட்டோமொபைல் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து 'AAA' என்ற அமைப்பில் வேலைக்கும் சேர்ந்துவிட்டாள்.''

''அது என்ன கிகிகி?''

''அமெரிக்கன் ஆட்டோமொபைல் அசோஸி யேஷன். அமெரிக்காவில் கார் வைத்திருப்பவர் களுக்குப் பயணத்தின்போது தேவைப்படும் அவசர உதவிகளைச் செய்வதற்காகவே சில கம்பெனிகள் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட கம்பெனிகளில் ஒன்றுதான் கிகிகி. வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட் டால், டயர் பஞ்சர் ஆகிவிட்டால், கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், ஜஸ்ட் ஒரு போன்கால் போதும்... உடனே ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார்கள். சில்வியா ஒரு நல்ல கார் மெக்கானிக். பழுதுபட்ட காரை ஒரு சில நிமிடங்களில் சரி செய்துவிடு வாள்.''

விஜேஷ், சில்வியாவின் போட்டோவை மறுபடி யும் பார்த்துவிட்டு ஃப்ளோராவிடம் திரும்பிய வன்,

''இப்போது சில்வியா எனக்குப் பேரழகியாகத் தெரிகிறாள். அவளை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் மனசுக்குள்ளிருந்து லேசாக எட்டிப் பார்க்கிறது.''

''அந்த ஆசையின் தலை மேல் ஒரு தட்டுத் தட்டி அடக்கிவையுங்கள். அவளை நீங்கள் பார்க்க முடி யாது.''

''ஏன்?''

''பார்க்கும்படியான நிலைமையில் அவள் இல்லை.''

''எனக்குப் புரியவில்லை.''

''விட மாட்டீர்களே! அவள் இப்போது இருப்பது நியூஜெர்ஸியில் இருக்கும் மனநல மருத்துவ மனையில்.''

''ம... மனநல மருத்துவமனையா..?''

''யெஸ்...''
''என்னாயிற்று?''

''டாக்டர்களுக்கே இன்னமும் பிடிபடவில்லை. அவளைக் குணப்படுத்த பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் சொன்னதால்தான் ஆல்பர்ட்ஸனும் எமிலியும் இந்த வீட்டை விற்கவேண்டிய நிலைமைக்கு வந்துள்ளனர். இந்த வீட்டை நீங்கள் வாங்கிக் கொண்டால், அது அவர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.''

விஜேஷ் திகைத்துக்கொண்டு இருக்கும்போதே... அவனுடைய செல்போன் அழைத்தது. எடுத்து காதுக்கு ஒற்றினான்... ''யெஸ்!''

''ப்ளீஸ்! மறுபடியும் சொல்றேன், அந்த வீட்டை வாங்காதீங்க!''-

மறுமுனையில் காமாட்சியின் குரல்!

-பறக்கும்...

https://www.vikatan.com

Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 

 
 
anibul13.gifராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
BLUFLOAT1.gifஇனி, மின்மினி
white_spacer.jpg

நியூயார்க்

p84b.jpgசெல்போனில் காமாட்சியின் குரல் கேட்டதும், விஜேஷின் காது மடல் களில் வெப்பம் பரவியது.

''இதோ பார்... இது உன்னோட மூணாவது போன். இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். எனக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு, வேற வேலை ஏதாவது இருந்தா போய்ப் பார். இல்லேன்னா, ஏதாவது ஒரு இண்டியன் ரெஸ்டாரென்ட்டுக்குப் போ. பிரெஞ்ச் தாடி வெச்சுக்கிட்டு, பொழுது போகாம யாராவது ஒரு 'இண்டியன் ரீuஹ்' டின் பீர் குடிச்சிட்டு இருப்பான். அவனுக்குக் கம்பெனி கொடு!''

''ஓ.கே. மிஸ்டர் விஜேஷ்! அப்படியே செய்யறேன். இப்போ எனக்கு அதைவிட முக்கியமான வேலை உங்க உயிரைக் காப்பாத்தறதுதான். அந்த வீட்டை வாங்கற எண்ணத்துக்கு உடனடியா ஒரு முற்றுப் புள்ளி வெச்சுட்டு, பாரீஸ் ஃப்ளைட்டைப் பிடிங்க.''

விஜேஷ் சிரித்தான் பலமாக!

''நீ அடுத்த தடவை எனக்கு போன் பண்ணும்போது, நான் அக்ரிமென்ட் போட்டிருப்பேன். அதுக்கப்புறம் நான் ஃப்ளைட் பிடிச்சு பாரீசுக்குப் போறேன்... போதுமா?''

 

''ப்ளீஸ் விஜேஷ்! என்னோட பேர் காமாட்சி, ஊர் காஞ்சிபுரம்னு சொன்னேன். இந்த விஷயத்தில் அந்த காஞ்சிபுரத்துக் காமாட்சியே உங்களை எச்சரிக்கை செய்யறதா நீங்க ஏன் நினைக்கக் கூடாது?''

''ஸாரி! எனக்குக் கடவுள் நம் பிக்கை இல்லை.''

''கடவுளுக்கு உங்க மேல ஒரு சாஃப்ட்கார்னர் இருக்கிற காரணத் தால்தான், என் மூலமா உங்ககிட்டே பேசிட்டு இருக்கார்னு நினைக்கிறேன்.''

''இந்தக் கதாகாலட்சேபத்தை எல்லாம் உங்க ஊர் காஞ்சிபுரத்துக் கோயில்ல வெச்சுக்க. நான் இப்ப வீட்டைப் பார்த்துட்டு இருக்கேன். வீடு பழையதுதான். இருந்தாலும் எனக்குப் பிடிச்சிருக்கு. கொஞ்சம் பணம் செலவழிச்சு, வீட்டை ரெனவேட் பண்ணினா புது வீடு மாதிரி ஜொலிக்கும்.''

''ஸோ... வீட்டை வாங்க முடிவு பண்ணிட்டீங்க?!''

''டூ ஹண்ட்ரட் பெர்சன்ட்! நாளைக்கு அக்ரிமென்ட். அடுத்த வாரம் ரெஜிஸ்ட்ரேஷன். முடிஞ்சா சாட்சிக் கையெழுத்துப் போட வா!'' - விஜேஷ் சிரித்துப் பேசிவிட்டு செல்போனை அணைக்க, அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த ஃப்ளோரா கேட்டாள்...

''போனில் யார்... மிஸ்.பப்ளிக் பூத்தா?''

''அவளேதான்!''

''ஒருவிதத்தில் அவளை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது.''

''எந்த விதத்தில்?''

p85a.jpg

''அவள் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றாலும், தன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று துடிக்கிறாள் பாருங்கள்... அந்தத் துடிப்பை நினைக்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்றைக்காவது அவளை நீங்கள் பார்க்க நேர்ந்தால், என் சார்பாக அந்தப் பெண் ணுக்கு ஒரு 'பொக்கே' வாங்கிக் கொடுங்கள்!''
விஜேஷ் சிரித்தான். ''அப்படி ஓர் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்காது என்று நினைக்கிறேன். மிஸ். பப்ளிக் பூத் இனிமேல் எனக்கு போன் செய்ய மாட்டாள். இந்த முறை நான் கொஞ்சம் கடுமை யாகப் பேசிவிட்டேன்!''

''நோ விஜேஷ்! அவள் ஓய மாட்டாள். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் உங்களுக்கு எப்படியும் போன் வரும், பாருங்கள்.''

''அப்படி போன் வந்தால், 'திஸ் இஸ் நியூயார்க் போலீஸ்... நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பப்ளிக் பூத் எது என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். ஒரு பாப்கார்ன் பொட்டலம் சாப்பிட்டுக்கொண்டு, அதே பூத்தில் காத்துக்கொண்டு இருங்கள். போலீஸ் மரியாதையோடு வந்து அழைத்துப்போகிறோம். உங்களைப் போன்ற பொதுநலச் சேவகிகள் எங்களுடைய துறைக்குத் தேவை. உணவும் இருப்பிடமும் இலவசம்' என்பேன்!''

விஜேஷ் சொன்னதைக் கேட்டு ஃப்ளோரா தன் பிங்க் நிற ஈறுகள் தெரிய, பெரிதாகச் சிரித்து, சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த நாற்காலிக்குச் சாய்ந்தாள்.

''பாவம், அந்தப் பெண்! நல்லது செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு ஒரு தப்பான...'' - ஃப்ளோரா பேச்சை முடிக்கவில்லை; வெளியே ப்ளாக்கியின் குரைப்புச் சத்தம் கேட்டது.

''யார்?'' எழுந்து போய் ஜன்னல் வழியாகப் பார்த்த ஃப்ளோரா, லேசாக மலர்ந்தாள்.

''மிஸ்டர் விஜேஷ்! இந்த வீட்டின் உரிமையாளர் ஆல்பர்ட்ஸன்னும் அவருடைய மனைவி எமிலியும் வந்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பாரீஸில் இருந்து வரப் போவது பற்றியும், இந்த வீட்டை வாங்கப்போவது பற்றியும் அவர்களிடம் முன்பே தெரிவித்து இருந்தேன். இப்போது நாம் வீட்டைப் பார்த்துக்கொண்டு இருப்பது பற்றியும் செல்போனில் மெசேஜ் கொடுத்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டுத்தான், உங்களிடம் நேரிடையாகப் பேச வந்துகொண்டு இருக்கிறார்கள்.''

p84a.jpgவிஜேஷ் ஜன்னல் வழியே பார்வையை விரட்டி அவர்களைப் பிடித்தான். ஆல்பர்ட்ஸன்னும் எமிலியும் காரைவிட்டு இறங்கி மெதுவாக வந்துகொண்டு இருந்தார்கள். ஆல்பர்ட்ஸன் தன் மெலிந்த ஆறடி உயர உடம்பை சாக்லேட் நிற ஃபுல் சூட்டுக்குள் சுலபமாகத் திணித்து இருந்தார். ஹியரிங் எய்டைப் பார்ட்னராகச் சேர்த்துக்கொண்ட ரிம்லெஸ் ஸ்பெக்ட்ஸ் முகத்தின் பிரதான இடத்தைப் பிடித் திருக்க, எதற்கோ அவர் வாயைத் திறந்தபோது தெரிந்த வரிசை பிறழாத பற்கள் 'நாங்கள் பல் செட்டின் உபயம்' என்றன. எமிலி நரைத்த பாப் தலையோடும், லிப்ஸ்டிக் பூச்சு உதடுகளோடும், ஒரு கையில் வாக்கிங் ஸ்டிக்கையும், இன்னொரு கையில் கணவனின் இடுப்பையும் பிடித்துக்கொண்டு ஜாக் கிரதையாக நடை போட்டாள்.

ப்ளாக்கி செல்லமாகக் குரைத்து, அவர்கள் மீது தாவியது. உடையைப் பிடித்து இழுத்தது. எமிலி தன் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கால் ப்ளாக்கி யின் தலையில் ஒரு தட்டு தட்டி, ''கீப் கொய்ட் ப்ளாக்கி'' என்று அதட்ட... அதை ராணுவக் கட்ட ளையாக ஏற்றுக்கொண்ட ப்ளாக்கி, சட்டென்று அமைதியாகி வாலைக் குழைத்தது.

ஃப்ளோரா வீட்டினின்றும் வெளியே வந்து, எமிலியை நோக்கிப் போனாள். ''மிஸஸ் எமிலி! நீங்கள் இங்கே வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. போன் செய்து தகவல் கொடுத்து இருக்க லாமே?''

''மிஸ்டர் விஜேஷ் உள்ளே இருக்கிறாரா?''

''இருக்கிறார்.''

''வீடு அவருக்குப் பிடித்து இருக்கிறதா? என்ன சொன்னார்?''

''இன்னமும் அவர் வீட்டைப் பார்த்து முடிக்கவில்லை. இருந்தாலும், இந்த வீட்டை வாங்கிக்கொள்ளும் தீர்மானத்தோடுதான் பாரீஸிலிருந்து வந்திருக்கிறார்.''

ஆல்பர்ட்ஸன் குறுக்கிட்டுக் கேட்டார், ''இந்த வீட்டைப்பற்றிய வதந்திகளை அவர் நம்பவில்லையே?''

''ஒரு சதவிகிதம்கூட நம்பவில்லை. யாரோ ஓர் இந்தியப் பெண்... காமாட்சியாம்; இதுவரை மூன்று தடவை போன் செய்து வீட்டை வாங்க வேண்டாம் என்று சொல்லிப் பார்த்துவிட்டாள். விஜேஷ் அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. அவர் இந்த வீட்டை வாங்குவது ஏறக்குறைய முடிவாகிவிட்டது.''

ஆல்பர்ட்ஸன் நெஞ்சில் சிலுவைக் குறி போட் டுக்கொண்டார். ''கடவுளுக்கு நன்றி! இந்த வீட்டை விற்றுப் பணம் கைக்கு வந்தால்தான் சில்வியாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து அவளைப் பழைய நிலைக் குக் கொண்டு வர முடியும். இந்த வீட்டின் விலை குறித்து அவரிடம் ஏதாவது பேசினாயா, ஃப்ளோரா?''

''இல்லை. இனிமேல்தான் பேச வேண்டும்.''

''ஓ.கே! அவருக்கு வீடு பிடித்து இருந்தால் இன்றைக்கே விலை பேசி முடித்துவிடலாம்.''

மூன்று பேரும் பேசிக்கொண்டே, படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்ததும்...

ஸ்தம்பித்தார்கள்.

விஜேஷ் மல்லாந்த நிலையில் கீழே விழுந் திருந்தான்.

திறந்த வாய்; நிலைத்த விழிகள்.

கடைவாயில் ஒரு ரத்தக் கோடு!

கோவை

பெல்லாரி மல்லய்யா திகைப்பில் இருந்து மீண்டு, சகஜ நிலைக்குத் திரும்பினாலும், தீனமான குரலில் கேட்டார்... ''மாப்பிள்ளை! நீங்க என்ன சொல்றீங்க?''

பங்கஜ்குமார் செல்போனின் மறுமுனையில் சிரித்தார். ''என்ன... பயந்துட்டீங்களா? நான் என்ன தப்பு பண்ணினேன்னு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் குடுத்து இருக்கீங்கன்னு நான் சொன்னது எதுக்காகத் தெரியுமா? நான் ஐ.ஏ.எஸ். படிச்சுட்டு, ஒரு பொறுப்புள்ள கலெக்டரா வேலை பார்த்துட்டு இருந்தேன். பிரச்னைகளோடு வரும் மக்களை தினசரி பார்த்துப் பேசி, அவங்களோட நியாயமான பிரச்னைகளைத் தீர்த்துவெச்சு, அதன் காரணமாக அவங்க படற சந்தோஷத்தைப் பார்த்து, நானும் சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந் தேன். மின்மினி என்கிற ஒரு சொர்க்கத்தை என் னிக்கு நீங்க எனக்குத் தாரை வார்த்துக்கொடுத் தீங்களோ, அன்னிக்கே என்கிட்ட ஒரு மாற்றம். ஒரு சின்ன ஓசோன் ஓட்டையா தெரிஞ்ச மாற்றம் இன்னிக்குப் பூதாகாரமாத் தெரியுது. எந்த வேலையைப் பண்ணினாலும், எனக்குள்ளே மின்மினியோட ஞாபகம் இருந்துகிட்டே இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஓர் இன்பமான ஆயுள் தண்டனை. தண்டனைன்னு நான் சொன்னது இதைத்தான்!''

p87a.jpg

''விஷயம் இதுதானா... நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்!''-பெல்லாரி மல்லய்யா பெருமூச்சுவிட்டார்.

''உங்களைக் கல்யாணத்தன்னிக்குப் பார்த்தது. அதுக்கப்புறம் பார்க்க முடியலை. இன்னிக்கு லஞ்சுக்கு வர முடியாதா மாப்பிள்ளை?''

''வர்றது கஷ்டம்! ஒண்ணு செய்யுங்க. நீங்க வீட்ல சாப்பிட்டுட்டு நேரா ஆபீசுக்கு வந்து டுங்க. பார்க்கலாம்... பேசலாம்.''

''வேண்டாம் மாப்பிள்ளை. உங்களுக்கு இருக்கிற வேலைப் பளுவில் நானும் வந்து தொந்தரவு தர விரும்பலை. எப்படியும் அடுத்த மாசம் மறுபடியும் கோவைக்கு வரணும். அப்ப பார்த்துட்டாப் போச்சு!''

''இல்லை... இன்னிக்கே நீங்க வரணும்னு நான் விரும்பறேன். மனசுல இருக்கிற பளுவோடு ஒப்பிடும் போது, வேலைப் பளு ரொம்ப சாதாரணம்தான்!''

''மனசுல பளுவா... யாருக்கு?''
''உங்களுக்குத்தான். பெல்லாரியில் இருந்து கோயம் புத்தூர் வந்துட்டு, என்னைப் பார்க்காம போறது உங்களுக்கு மனப் பளுதானே?''

''ஆ... ஆமா..!''

''அப்ப... வாங்க பேசுவோம். நீங்க என்கிட்ட பேச றதுக்கு எந்த விஷயமும் இல்லேன்னாலும், உங்ககிட்ட பேசறதுக்கு என்கிட்ட நிறைய விஷயம் இருக்கு.''

''எ... எ... எத்தனை மணிக்கு வரட்டும் மாப்பிள்ளை?''

''சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஒரு நாலு மணி சுமாருக்கு வாங்களேன். டீ சாப்பிட்டுக் கிட்டே பேசுவோம்.''

''வ... வர்றேன்'' என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்ட பெல்லாரி மல்லய்யா, செல்போனை அணைத்தார். வியர்த்துவிட்ட நெற்றியோடு, பக்கத்தில் இருந்த மின்மினியை ஏறிட்டார்.

''என்னம்மா... மாப்பிள்ளை பேச்சு இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு?''

''வித்தியாசம்னா..?''

''மனசுக்குள்ளே ஏதோ ஒண்ணை வெச்சுக்கிட்டு பூடகமா பேசறார். பேச்சு அவ்வளவு இயல்பா இல்லை.''

மின்மினி சிரித்தாள். ''ஐயா! அவர் பார்க்கிறது பில் கலெக்டர் வேலை இல்லை; மாவட்ட கலெக்டர் வேலை. ஒரு மூச்சைவிட்டு இன்னொரு மூச்சை இழுக்கிறதுக்குள்ளே முன்னூறு பிரச்னை முன்னாடி வந்து நிக்கும். மனசைப் போட்டுக் குழப்பிக்காம சாப்பிட வாங்க.''

மல்லய்யா எழுந்தார். மின்மினி சொன்ன சமாதான வார்த்தைகள் அவருடைய மனதில் ஒட்டாமல், பாத ரசத் துளிகளாய் உருண்டன. அடி வயிற்றில் புது பிளேடின் கூர்மையைப் போல் ஒரு பயம் எட்டிப் பார்த்தது. 'மின்மினியின் இன்னொரு பக்கம் கலெக்டருக்குத் தெரிந்து இருக்குமோ?'

''ஐயா! என்ன யோசனை?''

''ஒண்ணுமில்லேம்மா!''

''வாங்க சாப்பிடலாம்''- சொல்லிவிட்டு, மின்மினி பக்கத்து அறையில் இருந்த டைனிங் டேபிளை நோக்கி நடக்க, மல்லய்யா பின்தொடர்ந்தார். பத்து நிமிடங்களுக்கு முன்னால் வயிற்றுக்குள் இருந்த அகோரப் பசி, இப்போது ஆவியாகிக் காணாமல் போயிருந்தது.

பங்கஜ்குமார் செல்போனை வீசி எறியாத குறையாக மேஜையின் மேல் போட்டுவிட்டு கண்களை மூடிக்கொண்டார். ரிவால்விங் சேரில் ஓர் அரை வட்டம் போட்டார். மூளையின் எல்லா நரம்பு அணுக்களிலும் மைக்கேல் எர்னஸ்ட் இம்சையாக உட்கார்ந்திருந்தார்.

'அவரிடம் உண்மை இருந்த காரணத்தினால்தான் தைரியத் தோடு மனு எழுதிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார்! பெல்லாரி மல்லய்யாவுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை! வரட்டும்... போட்டோவைக் காட்டி இதுக்கு என்ன பதில் என்று கேட்டுவிடலாம்!'

பி.ஏ. சண்முகம் எட்டிப் பார்த்தார். ''ஸார்...''

''என்ன?''

''லஞ்சுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?''

''வேண்டாம். நீங்க போய் சாப்பிட்டு வாங்க.''

சண்முகத்தின் தலை மறைந்தது.

அதே விநாடி பங்கஜ்குமாரின் பர்சனல் ஃபேக்ஸ் மெஷின் 'பீப்' சத்தத்தை வெளியிட்டபடி துடித்தது. பேப்பரை உமிழ்ந்துவிட்டு, அமைதியாயிற்று. 'ஏதாவது அவசர அரசாங்கச் செய்தியோ?'

எடுத்துப் பார்த்தவரின் முகம் ரத்தமின்றி மெள்ள வெளுத்தது. கோணல் மாணலான தமிழ் எழுத்துக்களோடு அந்தக் கடிதம் பார்வையை உன்னிப்பாக்கியது. படித்தார்.

'கலெக்டர் ஐயாவுக்கு,

வணக்கம். நான் மைக்கேல் எர்னஸ்ட். இன்னிக்குக் காலையில் கோரிக்கை மனுவோடு உங்களை வந்து பார்த்தப்ப, எனக்கு நல்ல மரியாதை குடுத்துப் பேசினீங்க. அதுக்காக என்னோட நன்றி. ஐயா! நீங்க சொன்னபடி நாளை காலை ஏழு மணிக்கெல்லாம் நானும் என் மகன் அல்போன்சும் உங்க வீட்ல இருப்போம். நீங்க நல்ல பதில் தரணும். தருவீங்க என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. ஆனால், அதுக்கு மாறாக நீங்க உங்க பதவி அதிகாரத்தை உபயோகப்படுத்தி எங்களை ஒடுக்க நினைச்சாலோ, ஏமாத்த நினைச்சாலோ அதனோட விளைவுகள் விஷ முட்களாய் மாறி, வாழ்நாள் முழுக்க உங்களைக் கீறிக்கிட்டே இருக்கும். எங்களைச் சந்தோஷப்படுத்துங்கள். நீங்களும் சந்தோஷமாக இருக்கலாம். எல்லாம் உங்கள் கையில்.

இப்படிக்கு,

மைக்கேல் எர்னஸ்ட்.'

-பறக்கும்...

https://www.vikatan.com

Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 

 
 
BLUFLOAT1.gifராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
anibul13.gifஇனி, மின்மினி
white_spacer.jpg

கோவை

p85b.jpgட்டியாக மாறி இருந்த அந்த ஏ.சி. அறையிலும் வியர்த்து வழிந்தபடி, ஃபேக்ஸில் வந்த செய்தியைப் படித்துவிட்டுத் தன் நெற்றிப்பொட்டை இடது கையின் விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டார் பங்கஜ்குமார். வயிற்றில் மத்தியான நேரத்துக்கான பசி, அடிவயிற்றில் ஓர் இனம் புரியாத திகில், இதயத்தின் மையத்தில் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்ட கனம், இந்த மூன்றும் சரிவிகிதத்தில் கலந்து உடம்பு முழுவதும் இம்சையை உற்பத்தி செய்துவைத்திருந்தது.

'மின்மினி விஷயத்தில் ஏதோ ஒரு தப்பு நடந்து இருக்கப்போய்த்தான் மைக்கேல் எர்னஸ்ட்டுக்கு இவ்வளவு தைரியம்? இல்லாவிட்டால் இப்படி ஒரு ஃபேக்ஸ் வந்து இருக்காது!'

'இனியும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை. பெல்லாரி மல்லய்யாவும் மின்மினியும் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். நேரிடையாகவே போய்ப் பேசிவிட்டால் என்ன? அவர்கள் இருவரும் சொல்லப் போகிற பதிலை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதையும் உடனே முடிவு செய்துவிடலாமே!'

பங்கஜ்குமார் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராகத் தன் செல்போனில் பி.ஏ-வை அழைத்தார்.

''சண்முகம்...''

''சார்...''
''இப்ப எங்கே இருக்கீங்க?''

''கேன்டீன்ல லஞ்ச் எடுத்துட்டு இருக்கேன், சார்.''

 

''சண்முகம்... ஐ யம் நாட் ஃபீலிங் வெல்! கொஞ்சம் ஃபீவரிஷ்ஷா இருக்கு.''

''நானும் கவனிச்சேன் சார்... நீங்க இன்னிக்கு நார்மலா இல்லை. ஸீம்ஸ் டு பி ரெஸ்ட்லெஸ்!''

''அதான் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன். இஃப் எனி அர்ஜென்ஸி... கிவ் மீ அ எ கால். அதர்வைஸ் டோன்ட் டிஸ்டர்ப் மி!''

''ச...ச... சார்''- பதற்றமாகக் குறுக்கிட்டார் பி.ஏ.

''என்ன?''

''ரெண்டு நிமிஷத்துக்கு முந்தி போலீஸ் கமிஷனர் எனக்கு போன் பண்ணியிருந்தார், சார். சென்னை க்ரைம் பிராஞ்சில் இருந்து க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர் விவேக்கும் அவருடைய அசிஸ்டென்ட் விஷ்ணுவும் உங்களைப் பார்த்துப் பேச வந்துட்டு இருக்காங்களாம் சார்!''

''என்கிட்ட பேசவா?''

''யெஸ், சார்!''

''என்ன விஷயமா?''

''கமிஷனர்கிட்டே கேட்டேன் சார். அதுக்கு அவர் சரியான பதில் சொல்லலை. மேட்டர் இஸ் ஹைலி கான்ஃபிடென்ஷியல்னு தீர்மானமாச் சொல்லிட்டார்.''

''மிஸ்டர் விவேக் எத்தனை மணிக்கு வர்றார்?''

''கோயம்புத்தூர் ஏர்போர்ட்ல இருந்து வந்துட்டு இருக்கார். ஹி இஸ் ஆன் தி வே சார்! எப்படியும் அரை மணி நேரத் துக்குள்ளே வந்துடுவார்.''

''இட்ஸ் ஓ.கே.! அவரைப் பார்த்துட்டே நான் வீட்டுக்குப் போறேன். நீங்களும் வந்துடுங்க.''

p84a.jpg

பங்கஜ்குமார் செல்போனை அணைத்துவிட்டு ரிவால்விங் நாற்காலியில் மெள்ளச் சுழன்றார். சுவரில் மாட்டியிருந்த போர்டு அவருடைய பார்வையில்பட்டது. கோவை மாவட்ட கலெக்டராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட முதல் நாள் அவர் தன் கையால் மாட்டிய போர்டு. அதில் எழுதப்பட்டு இருக்கும் வாசகங்கள், வருகிற பார்வையாளர்களின் கண்களில் பட்டு மனதிலும் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தன் தலைக்குப் பின்புறம் மாட்டியிருந்தார். அந்த வாசகம் இப்போது பார்வையில்பட்டு நழுவியது.

SUCCESSFUL PEOPLE DO NOT RELAX IN CHAIRS.THEY RELAX IN THEIR WORKS.

போர்டில் இருந்த வார்த்தைகள் உயிருடன் அசைந்து பங்கஜ்குமாரை ஒரு கேலிப் பார்வை பார்த்தன. 'காலையில் இருந்து எந்த ஒரு வேலையையும் பார்க்காமல் உன் சொந்தப் பிரச்னையைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பது எந்த வகையில் நியாயம்?'

மனசுக்குள் எழுந்த குற்ற உணர்வைச் சமாதானப்படுத்தும்விதமாக பங்கஜ்குமார் ஒரு ஃபைலை எடுத்துவைத்துக்கொண்டார். மின்மினி பற்றிய எண்ணங்களை மானசீகமாக ஒரு டஸ்டரை வைத்துத் துடைத்துவிட்டு, ஃபைலின் பக்கங்களைப் புரட்டினார். படித்துப் பார்த்துத் தேவையான இடங்களில் கையெழுத்து போட்டு, பாதி ஃபைலைக் கடந்திருந்தபோது, பி.ஏ. சண்முகம் உள்ளே வந்தார்.

''சார்...''

நிமிர்ந்தார் பங்கஜ்குமார். ''யெஸ்...''

''மிஸ்டர் விவேக் வந்துவிட்டார். உள்ளே அனுப்பட்டுமா?''

''ப்ளீஸ்!''

பங்கஜ்குமார், ஃபைலை மூடிவைத்துவிட்டு, மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து, பசியால் பம்மிக்கொண்டு இருந்த வயிற்றை நிரப்பி, காலி பாட்டிலை மேஜையின் மீது வைத்தபோது விவேக்கும் விஷ்ணுவும் உள்ளே நுழைந்தார்கள்.

''குட் ஆஃப்டர்நூன் சார்.''

p85a.jpgசிரித்து பரஸ்பரம் கைகளைக் குலுக்கிக்கொண்டார்கள்.

''ப்ளீஸ் ஸீட்டட்!''

விவேக் உட்கார்ந்துகொண்டே சொன்னான், ''சார்... இந்த மத்தியான நேரத்துல உங்களுக்குத் தொந்தரவு தர்றோம்.''

பங்கஜ்குமார் தன் உதடுகளில் ஒரு கட்டாயப் புன்னகையை நிறுத்திக்கொண்டு பேசினார்... ''மிஸ்டர் விவேக்! எனக்கு உங்களைப்பற்றியும் மிஸ்டர் விஷ்ணுவைப்பற்றியும் நல்லாவே தெரியும். சரியான காரணம் இல்லாம நீங்க யாரையும் பார்க்க வர மாட்டீங்க. சொல் லுங்க, என்ன விஷயம்?''

விவேக் குரலைத் தாழ்த்தினான்.''சார்... திஸ் இஸ் ஹைலி கான்ஃபிடென்ஷியல். உளவுத் துறையில இருந்து வந்த செய்தி. அதைப்பற்றி உங்ககிட்டே யும், அதுக்கப்புறம் போலீஸ் கமிஷனர்கிட் டேயும் டிஸ்கஸ் பண்ண ணும்.''

''ஓ.கே. லெட் அஸ் ஸ்டார்ட்!''

''விஷ்ணு, அந்த ஃபைலை எடு!''

ஒரு மணி நேர டிஸ்கஷனுக்குப் பிறகு ஃபைலை மூடிவைத்தான் விவேக். ''சார்... கோவையைப்பற்றியும் கடந்த ஆறு மாத காலத்தில் இந்த நகரத்தில் நடந்த கொலைக் குற்றங்களைப்பற்றியும் தெளி வாக எடுத்துச் சொன்னீங்க. இன்னிக்கு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வர்ற நகரங்களில் கோவையும் ஒண்ணுன்னு சிட்டி டெவலப்மென்ட்ஸ் கார்ப்பரேஷன் புள்ளிவிவரத்தோடு எடுத்துக்காட்டி யிருக்கு. அந்த அடிப்படையில் பார்க்கும் போது உளவுத் துறை கொடுத்த அதிர்ச்சி யான செய்தியை நாம அலட்சியம் பண்ண முடியாது. அதான் புறப்பட்டு வந்தோம்! உங்ககிட்டே டிஸ்கஸ் பண் ணிட்டோம். இனி, கமிஷனரைப் பார்க் கணும்.''

விவேக் சொல்லிக்கொண்டே எழ முயல, பங்கஜ்குமார் குறுக்கிட்டார்... ''எக்ஸ்கியூஸ் மி!''

''சொல்லுங்க சார்?''

''கோவையில் எத்தனை நாள் ஸ்டே?''

''ஒரு வாரம்...''

''எந்த ஹோட்டல்?''

''அன்னபூர்ணா.''

பங்கஜ்குமார் சில விநாடிகள் மௌனமாக இருந்துவிட்டு, பின் விவேக்கை ஏறிட்டார். ''மிஸ்டர் விவேக்! அரசாங்க வேலையாக வந்திருக்கிற உங்ககிட்டே நான் தனிப்பட்ட முறையில் ஓர் உதவி கேட்கலாமா?''

விவேக் லேசாக பதற்றப்பட்டான். ''என்ன சார் இது... உதவி செய்யத்தானே போலீஸ் டிபார்ட்மென்ட்டே இருக்கு? சொல்லுங்க சார்... உங்களுக்கு நான் எந்த வகையில் உதவி செய்ய முடியும்னு நினைக்கிறீங்க?''

''மிஸ்டர் விவேக்! நான் இப்போ ஒரு பிரச்னையில் மாட்டிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். நான் உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கேன். எத்தனையோ சிக்கலான கேஸ்களை சிறப்பாகக் கையாண்டு சுபம் போட்டிருக்கீங்க. அந்த நம்பிக்கையில் என் பிரச்னையை உங்ககிட்டே ஒப்படைக்கலாம்னு இருக்கேன்.''

''சார்... டோன்ட் ஹெசிடேட்! பிரச்னை என்னன்னு சொல்லுங்க?''

பங்கஜ்குமார் தனக்கு வந்த ஃபேக்ஸ் தாளை விவேக்கிடம் நீட்ட, அவன் குழப்பத்தோடு வாங்கிப் படித்தான். படித்து முடித்ததும் கேட்டான்... ''யார் இந்த மைக்கேல் எர்னஸ்ட்... அல்போன்ஸ்?''

ஐந்து நிமிட நேரத்தைச் செலவழித்து எல்லாவற்றையும் சொல்லி முடித்த பங்கஜ்குமார், பெல்லாரி சர்ச்சில் எடுக்கப்பட்ட அந்தத் திருமண போட்டோவையும் காட்டினார்.

விவேக் அந்த போட்டோவை இமைக்காமல் பார்த்தான். ''சார்... போட்டோவில் இருக்கிறது, நிச்சயம் உங்க மனைவி மிஸஸ் மின்மினிதானா?''

''யெஸ்...''

''இது ஏன் ஒரு சில்மிஷ போட்டோவாக இருக்கக் கூடாது?''

''அப்படியிருக்க வாய்ப்பு இல்லை.''

''எதை வெச்சு அப்படிச் சொல்றீங்க சார்?''

''மிஸ்டர் விவேக்... நான் ஒரு மாவட்டத்தின் கலெக்டர். என் பதவிக்கு உண்டான அதிகார பலம் எந்தளவுக்கு இருக்கும்னு ஒரு பாமரனுக்குக்கூடத் தெரியும். பொய்யான தகவல்களோடு ஒருத்தன் என்கிட்டே வந்தா அதனோட விளைவுகள் எப்படி இருக்கும்னு அவனுக்குத் தெரியாதா? மைக்கேல் எர்னஸ்ட் இவ்வளவு துணிச்சலாகச் செயல்படறதுக்குக் காரணம், அந்த ஆள்கிட்டே உண்மையும் நியாயமும் இருக்கலாம்கிறது என்னோட யூகம்!''

''ஓ.கே. சார்! இந்தப் பிரச்னையில் நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?''

''மின்மினிக்கே தெரியாமல் இந்தப் பிரச்னையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரணும்னு நான் விரும்பறேன். உங்களால் முடியுமா மிஸ்டர் விவேக்?''

விவேக்கின் தலை ஸ்லோமோஷனில் சுழன்றது!

நியூயார்க்

விஜேஷ் கீழே விழுந்துகிடந்த கோலத்தைப் பார்த்ததும், வெகுவாக அதிர்ந்துபோன ஃப்ளோரா ஒரு வீறிடலோடு அவனை நோக்கி ஓடிப் போய் மண்டியிட்டு உட்கார்ந்து, பதற்றத்துடன் கன்னங்களைத் தட்டினாள்.

''வி...ஜேஷ்... விஜேஷ்...''

விஜேஷின் முகம் நிலைத்த கண்களோடு சலனம் இல்லாமல் ஆடியது. பல்வரிசை கிட்டித்துப்போய் தெரிந் தது. ஃப்ளோரா விஜேஷின் உடம்பை உலுக்கினாள். ''விஜேஷ்... என்னா யிற்று உங்களுக்கு?''

ஆல்பர்ட்ஸன்னும் எமிலியும் கலவரம் படிந்த முகங்களோடு விஜேஷைப் பார்த்துவிட்டு, ஃப்ளோராவை ஏறிட்டார்கள்.

''ஃப்ளோரா! நம் டாக்டர் ஹென்றி லூயிசுக்கு போன் செய்து உடனடியாக அவரை வரச் சொல்.''

p87a.jpg''டாக்டருக்கு போன் செய்து அவரை வரவழைப்பதைவிட, விஜேஷை நாமே ஹாஸ்பிடலுக்குக் கொண்டுபோய்விடுவது உத்தமம்.''

''இல்லை ஃப்ளோரா... டாக்டருக்கு போன் செய். அவர் வந்து சேர்வதற்குள் நாம் ஏதாவது முதல் உதவி செய்துகொண்டு இருக்கலாம்!''

எமிலி குறுக்கிட்டாள், ''நோ... யு ஆர் ராங் ஆல்பர்ட்! ஃப்ளோரா சொல்வது போல் விஜேஷை ஹாஸ் பிடலுக்குக் கொண்டுபோவதுதான் சரி!''

''எமிலி, புரியாமல் பேசாதே! விஜேஷ் இப்போது உயிருடன் இருக் கிறாரா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதற்கான அறிகுறி தான் விஜேஷிடம் தெரிகிறது. இந்த நிலையில் காரில் பயணம் என்பது, அவர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் பாதகமாக அமையலாம். டாக்டருக்கு விவரத்தைச் சொல்லி, அவரை இங்கே வரவழைப்பதே சரியான செயலாக இருக்க முடியும். ஃப்ளோரா, நீ டாக்டருக்கு போன் செய்!''

ஆல்பர்ட்ஸன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்டது.

மூன்று பேரும் திடுக்கிட்டுப் போய் சுற்றும்முற்றும் பார்த்தார்கள். சிரிப்பைத் தொடர்ந்து விஜேஷின் குரல்...

''என்ன மிஸ். ஃப்ளோரா? நீங்களும் மிஸ்டர் ஆல்பர்ட்ஸன்னும் இப்படியே வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தால், நான் உயிர் பிழைப்பது எப்படி? இரண்டு பேரும் சேர்ந்து பேசி, சீக்கிரமாக ஏதாவது ஒரு முடிவுக்கு வாருங்கள்.''

குரல் கேட்டுத் திடுக்கிட்ட மூன்று பேரின் பார்வையும் கீழே கிடந்த விஜேஷை நோக்கிப் போக, அவன் எழுந்து உட்கார்ந்து கைகளால் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு சிரித்தான்.

''ரொம்பவும் பயந்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே? இந்த வீட்டை வாங்க வந்த இரண்டு பேர் அக்ரிமென்ட் போட்டதும் ஹார்ட்அட்டாக் வந்து இறந்துபோனார்கள். நான் இந்த வீட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். இங்கே இந்த டிரெஸ்ஸிங் டேபிளுக்குப் பக்கத் தில் ஒரு பழைய லிப்ஸ்டிக் பீஸ் கிடைத் தது. அதைவைத்து என் கடை வாய் அருகே ரத்தக்கறையைப்போல் கோடு போட்டுக்கொண்டு மல்லாக்கப் படுத்து விட்டேன். எப்படி என் நடிப்பு?''

ஃப்ளோரா கண்களில் நீர் கோத்து இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு விஜேஷை பொய்யாக ஒரு கோபப் பார்வை பார்த்தாள். ''மிஸ்டர் விஜேஷ்... திஸ் இஸ் டூ மச்! இது விளையாட்டு என்றாலும் என் மனதை நிரம்பவே காயப்படுத்திவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு எப்படியும் இரண்டு நாட்கள் பிடிக்கும்.''

''ஸாரி ஃப்ளோரா! ஜஸ்ட் ஃபார் ஃபன். அந்தக் காமாட்சியின் எச்சரிக்கைக்கு நான் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக் கிறேன் என்பது இந்தச் சம்பவத்தின் மூலமாகவே உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...'' - விஜேஷ் சொல்ல, ஆல்பர்ட் ஸன் இடைமறித்தார், ''நான் புரிந்துகொண்டேன் மிஸ்டர் விஜேஷ். இந்த வீட்டை வாங்க வந்த இரண்டு பேர் இறந்துபோனது தற்செயலான ஒன்று என்பதையும், அதை ஒருபொருட்டாகவே எண்ண வேண்டியது இல்லை என்பதையும் கேலியும் கிண்டலுமாக அழகாக வெளிப்படுத்திக்காட்டிவிட்டீர்கள். என்னைப் பொறுத்தவரை, இந்த வீடு ராசியான வீடு. எங்களுடைய கால நேரம் சரியில்லாததால், இதை விற்க வேண்டிய சூழ்நிலை.''

எமிலியும் பக்கத்தில் வந்து, தன் மெலிந்த வலது கை விரல்களால் விஜேஷின் கன்னத்தைத் தடவினாள். ''எனக்கு ஒரு மகன் இருந்தால் அவன் உன் வயதில் இப்படித்தான் இருப்பான். ஆனால், எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. ஆனால், கர்த்தர் கருணையுள்ளவர். அதனால்தான் எங்களுக்கு உதவி செய்வதற்காக இங்கே உன்னை அனுப்பியுள்ளார். நாங்கள் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. எங்களுக்குக் கெடுதல் செய்ய யாரோ நினைக்கிறார்கள். இந்த வீட்டை விற்பதற்குத் தடையாக இருக்கிறார்கள். அவர்கள் எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை...''

விஜேஷ், எமிலியின் கைகளைப் பற்றிக்கொண்டான். ''கவலைப்படாதீர்கள். யார் என்ன சொன்னாலும் சரி, இந்த வீட்டை வாங்கிக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டேன். எப்போது அக்ரிமென்ட் போடலாம். நீங்களே சொல்லுங்கள்?''

''அதை ஃப்ளோராதான் முடிவு செய்ய வேண்டும்!'' - எமிலி ஒரு புன்னகையோடு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே - வெளியே - ப்ளாக்கி குரைக்கும் சத்தம் கேட்டது. கோபம் கலந்த குரைப்பு.

'யாரோ வருகிறார்கள் போலிருக்கிறதே?'

ஃப்ளோரா வேக வேகமாக ஜன்னல் அருகே போய் வெளியே எட்டிப் பார்த்தாள்.

சிறிய காம்பவுண்ட் கதவைத் தள்ளிக்கொண்டு, கருநீல நிற யூனிஃபார்மில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தார்கள். கேட்டுக்கு வெளியே நியூயார்க் போலீஸின் பேட்ரோலிங் கார், சுழலும் சிவப்பு விளக்கோடு தெரிந்தது!

-பறக்கும்...

https://www.vikatan.com

  • 2 weeks later...
Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 

 
 
anibul16.gifராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
anibul13.gifஇனி, மின்மினி
white_spacer.jpg

நியூயார்க்

p84a.jpgபீட்ரூட் நிற முகங்களோடு நியூயார்க் போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் கருநீல நிற யூனிஃபார்மில் வீட்டுக்குள் வருவதைப் பார்த்ததும், ஆல்பர்ட்ஸனும் எமிலியும் சற்றே பதற்றப்பட்டவர்களாக ஃப்ளோராவை ஏறிட்டார்கள்.
''இருங்கள், நான் விசாரித்து வருகிறேன். தேவைப்பட்டால் மட்டும் நீங்கள் வெளியே வாருங்கள்!'' என்ற ஃப்ளோரா, கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

ப்ளாக்கி தொண்டை நாண்கள் தெறித்துப்போகிற அபாயகரமான டெசிபல் அளவில் குரைத்துக்கொண்டு இருக்க, அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அதைப் பொருட்படுத்தாமல் புல்வெளியைக் கடந்து, இயல்பான நடையில் வந்துகொண்டு இருந்தார்கள். ஃப்ளோரா உதட்டில் உற்பத்தி செய்துகொண்ட ஒரு இன்ஸ்டன்ட் புன்னகையோடு அவர்கள் எதிரே போய் நின்றாள்.

''வீ ஆர் நியூயார்க் க்ரைம் பிராஞ்ச் பீப்பிள். ஐம் ஸ்மித். ஹி இஸ் தாம்ஸன்.''

''ஐம் ஃப்ளோரா... லாயர்!''

ஸ்மித் தன் பார்வையை வீட்டுக்குள் செலுத்தியபடியே கேட்டார்... ''இது மிஸ்டர் ஆல்பர்ட்ஸனுக்குச் சொந்தமான வீடுதானே?''

''ஆமாம்.''

''அவரைப் பார்க்க வேண்டும்.''

''என்ன விஷயம்?''

ஸ்மித்தும் தாம்ஸனும் ஒருவரையருவர் பார்த்துக்கொள்ள, ஃப்ளோரா தொடர்ந்தாள்... ''என்னிடம் விஷயத்தைச் சொல்வதில் உங்களுக்கு எந்தத் தயக்கமும் வேண்டியது இல்லை. நான் அவர்களுடைய குடும்ப லாயர்.''

''மன்னிக்க வேண்டும். சில விஷயங்களைச் சம்பந்தப்பட்ட நபரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ஆல்பர்ட்ஸன் உள்ளே இருக்கிறாரா?''

''இருக்கிறார். வாருங்கள்!''

 

ஃப்ளோரா வீட்டின் கதவை நோக்கி நடக்க, அவர்கள் தொடர்ந்தார்கள். 'நமக்கும் இப்படி ஓர் அழகான குடும்ப வக்கீல் வாய்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று ஸ்மித் மெதுவான குரலில் தாம்ஸனிடம் சொல்ல, 'அடுத்த ஞாயிற்றுக்கிழமை சர்ச் சுக்குப் போகும்போது இதுதான் என் பிரார்த்தனையே' என்று சொல்லிக் கண்ணடித்துச் சிரித்தார் தாம்ஸன்.

ஃப்ளோராவோடு உள்ளே நுழைந்த போலீஸ் அதிகாரிகளைப் பார்த்ததும், ஆல்பர்ட்ஸன் தான் உட்கார்ந்திருந்த சோபாவில் இருந்து மெள்ள எழுந்து நின்றார். ஃப்ளோரா அறிமுகம் செய்துவைக்க... பரஸ்பரம் கை குலுக்கிக்கொண்டார்கள்.

''மிஸ்டர் ஆல்பர்ட்ஸன்... உங்களிடம் பேச வேண்டும். நேரம் ஒதுக்க முடியுமா?''

''என்ன விஷயம்?''

ஸ்மித், எமிலியைப் பார்த்தார். ''இவர் உங்கள் மனைவியா?''

''ஆமாம்.''

''அந்த இளைஞர்?'' கொஞ்சம் தள்ளி ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த விஜேஷைக் காட்டினார்.

''அவர் மிஸ்டர் விஜேஷ்... இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்.''

''நாங்கள் உங்களோடு பேசும்போது அவர் இங்கே இருப்பதில் உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே?''

ஆல்பர்ட்ஸன் சின்னதாகச் சிரித்து, தன் பல்செட்டைக் கொஞ்சமாகக் காட்டியபடி சொன்னார்... ''எந்த ஆட்சேபனையும் கிடையாது. நீங்கள் தாராளமாகப் பேசலாம்.''

''தென் நோ பிராப்ளம்'' என்ற ஸ்மித், தனக்குப் பக்கத்தில் இருந்த தாம்ஸனைப் பார்க்க, அவர் தன் யூனிஃபார்மின் அட்டையில் இருந்து ஒரு பழுப்பு நிறக் கவரை உருவிக்கொண்டே கேட்டார்...

''மிஸ்டர் ஆல்பர்ட்ஸன்! மேரிலாண்ட் ஸ்டேட்டில் உள்ள பால்டிமோர் நகரத்தில் ஒரு 'நேஷனல் அக்வேரியம்' இருப்பது உங்களுக்குத் தெரியுமா?''

''அதைத் தெரியாதவர்களும் இருக்க முடியுமா என்ன? அப்படித் தெரியாது என்று சொன்னால், அவன் ஓர் அமெரிக்கனாக இருக்க மாட்டான்.''

''நீங்கள் அங்கே போயிருக்கிறீர்களா?''

''இல்லை.''

''உங்கள் மனைவி..?''

''நானும் எங்கள் மகள் சில்வியாவும் போயிருக் கிறோம்'' என்றாள் எமிலி.

''ஓ.கே.! இப்போது விஷயத்துக்கு வருகிறேன். நேற்று இரவு எங்களுக்கு அந்த நேஷனல் அக்வேரியம் நிர்வாகத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருந்த ஒரு புகாரின் அடிப்படையில்தான் இப்போது உங்களை விசாரிக்க வந்திருக்கிறோம்.''

p85a.jpg

ஆல்பர்ட்ஸன் முகம் மாறினார்.

''புகாரா... என்ன புகார்?''

''முதலில் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு நீங்கள் உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். அந்தப் பதிலை வைத்துக்கொண்டுதான் மேற்கொண்டு உங்களோடு பேச முடியும்.''

''என்ன கேட்கப் போகிறீர்கள்?''

''உங்கள் மகள் சில்வியா இந்த வீட்டில் உள்ள ஓர் அறையை மியூஸியமாக மாற்றிவைத்திருப்பதும், அந்த அறை பூமிக்கு அடியில் இருப்பதும் உண்மையா?''

ஆல்பர்ட்ஸன், எமிலி இருவரின் கண்களிலும் இப்போது பயம் பரவித் தெரிந்தது. உலர்ந்துபோன உதடுகளில் மெல்லிய நடுக்கம்.

''அது... அது வந்து...''

''மிஸ்டர் ஆல்பர்ட்ஸன்... நீங்கள் உண்மையைத்தான் பேச வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பொய் சொல்லிவிட்டு, பின்பு அந்தப் பொய்க்கு உயிரூட்ட உங்களால் முடியாது. இந்த வீட்டில் பூமிக்கு அடியில் உள்ள ஓர் அறை மியூஸியமாக மாற்றப்பட்டு இருக்கிறதா, இல்லையா?''

எமிலி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு ஸ்மித்தை ஏறிட்டாள்... ''யெஸ்! நீங்கள் சொல்வது உண்மைதான். அப்படி ஓர் அறை இந்த வீட்டின் பூமிக்கு அடியில் இருக்கிறது. ஆனால், அது நீங்கள் நினைப்பதுபோல் ஒரு மியூஸியம் அல்ல. என் மகள் சில்வியாவுக்குப் பத்து வயதில் இருந்தே அபூர்வமான பொருள்களைச் சேகரித்துவைப்பது ஒரு ஹாபியாக இருந்தது.''

p84b.jpgதாம்ஸன் குறுக்கிட்டார்... ''அபூர்வமான பொருள்கள் என்றால் எது மாதிரியான பொருள்கள் என்பதைச் சொல்ல முடியுமா?''

''அதில் எல்லாமே அடங்கும். பழங்காலத்துச் செப்பு நாணயங்கள், தபால்தலைகள், கடற்கரை ஓரத்தில் கிடைக்கும் நத்தை ஓடுகள், கிளிஞ்சல்கள், ஸ்டஃப் செய்யப்பட்ட சின்னச் சின்ன பறவைகள், விலங்குகள், ஹெர்பேரியம் செய்யப்பட்ட தாவர வகைகள்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இது ஒரு வகையான ஹாபி. இது தவறு என்று சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதா, என்ன?''

''சொல்லப்படவில்லை.''

''பின் எதற்காக இந்த விசாரணை?''

''பால்டிமோரில் உள்ள நேஷனல் அக்வேரியத்தில் வைக்கப்பட்டு இருந்த 'டைமண்ட் ஃபிஷ்' எனப்படும் வைர மீன்களில் இரண்டு காணாமல் போய்விட்டன. ஒரு வைர மீனின் விலை இரண்டு லட்சம் டாலர். அக்வேரியத்தில் பணிபுரியும் யாரோ ஒரு ஊழியர்தான் இந்தத் திருட்டுக்குக் காரணமாக இருக்க முடியும் என்று நினைத்து, அக்வேரிய நிர்வாகம் போலீஸ் உதவியோடு ஒரு விசாரணையை மேற்கொண்டது. அந்த விசாரணையில் மூர்சென் என்கிற ஊழியர் பிடிபட்டார். அவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து லாக்கப்புக்குக் கொண்டுபோய் விசாரணை செய்தபோது, போலீஸார் அடித்த அடி, படக்கூடாத இடத்தில் பட்டு இறந்துபோனார். அவரிடம் இருந்த செல்போனைக் கிளறிப் பார்த்ததில், உங்களுடைய மகள் சில்வியாவின் செல்போன் நம்பர் இருந்தது. உடனே, குறிப்பிட்ட அந்த மொபைல் கம்பெனியின் உதவியை நாடினோம். மூர்சென் சில்வியாவோடு பேசின விவரங்களை சி.டி-யாகக் கொடுத்தார்கள். போட்டுப் பார்த்தோம். அதில் மூர்சென் சில்வியாவோடு 'டைமண்ட் ஃபிஷ்'பற்றிப் பேசியிருப்பது தெரிந்தது.''

தாம்ஸன் சொல்லச் சொல்ல... ஆல்பர்ட்ஸனும் எமிலியும் கலவரமானார்கள்.

''இது எங்களுக்குப் புதுச் செய்தியாக உள்ளது. எங்கள் மகள் சில்வியா சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்ய மாட்டாள். அவள் 'ட்ரிபிள் கி' எனப்படும் கம்பெனியில் ஒரு பொறுப்பான அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறாள்.''

''தெரியும். ஆனால், ஒருவர் பொறுப்பான பதவியில் இருக்கிறார் என்கிற காரணத்துக்காக அவர் தவறே செய்ய மாட்டார் என்பதை எந்த அளவுகோலை வைத்துக்கொண்டு நம்புவது? எல்லா மனிதர்களுக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. க்ரைம் சிந்தனை இல்லாத மனிதனே கிடையாது என்பது நியூயார்க் போலீஸின் தீர்க்கமான கருத்து.''

''எங்கள் மகள் சில்வியாவுக்கு இப்போது உடல் நலம் சரியில்லை...'' - எமிலி சொல்ல, தாம்ஸன் தன் சதைப்பற்று இல்லாத உதடுகளை ஒரு கோடு போல் விரித்துப் புன்னகைத்தார்.

''பொய் சொல்கிறீர்கள் மிஸஸ் எமிலி! உங்கள் மகள் சில்வியாவுக்கு உடல்நலம் நன்றாக இருக்கிறது. மனநலம்தான் சரியில்லை. அவள் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு இருக்கும் ஹாஸ்பிடலுக்குச் சென்று, அவளையும் டாக்டரையும் பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறோம்.''

எமிலி கோபத்தில் வெடித்தாள்.. ''ஓ.கே.! இப்போது நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?''

''இந்த வீட்டின் பூமிக்கு அடியில் மியூஸியமாக மாற்றப்பட்டுள்ள அந்த அறையை நாங்கள் பார்க்க வேண்டும்!''

கோவை

லெக்டர் பங்கஜ்குமார் சொன்னதைக் கேட்டு ஸ்லோமோஷனில் சுழன்ற தன் தலையைச் சின்னதாக ஒரு 'பிரேக்' போட்டு நிறுத்தினான் விவேக்.

''சார்! இந்தப் பிரச்னையின் முக்கிய அச்சாணியே உங்கள் மனைவி மிஸஸ் மின்மினிதான். அவங்களுக்குத் தெரியாம பிரச்னையை எப்படி முடிவுக்குக் கொண்டு வர முடியும்னு நினைக்கிறீங்க?''

பங்கஜ்குமார் வியர்த்துப் போயிருந்த தன் முகத்தை கர்ச்சீப்பால் ஒற்றிக்கொண்டே விவேக்கை ஏறிட்டார்.

''விவேக்! அது எப்படின்னு எனக்குச் சொல்லத் தெரியலை. பட், அதைச் செயல்படுத்த உங்களால்தான் முடியும்னு நான் நினைக்கிறேன்.''
''ஓ.கே. சார்! உங்ககிட்ட நான் சில கேள்விகள் கேட்கலாமா?''

''ப்ளீஸ்...''

p88a.jpg''உங்க மனைவி மின்மினிக்கு அப்பா, அம்மா இல்லைன்னு சொன்னீங்க. பெல்லாரியில் இருந்தப்ப அவங்களுக்கு ஆதரவாக இருந்தது யாரு?''

''பெல்லாரி மல்லய்யான்னு ஒருத்தர். அவர் அந்த ஊர்ல 'மஹிளா சமிதி'ன்னு பெண்கள் விடுதி நடத் திட்டு வர்றார். அப்பா - அம்மாவை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கான விடுதி அது. அங்கேதான் மின்மினி தங்கிப் படிச்சா. வேலைக்கும் போனா. மல்லய்யா கிட்டே பாட்டும் கத்துக்கிட்டா.''
''மின்மினியை எந்தச் சூழ்நிலையில், எப்படி விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?''

''நான் ஐ.ஏ.எஸ். முடிச்சதும், பெல்லாரியில் ஒரு டிரெய்னிங் கேம்ப் போட்டாங்க. ரெண்டு வார கேம்ப். அதுல ஒரு ஓய்வு நாள் கிடைச்சபோது, ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். வழியில் ஒரு மண்டபத்தில் மஹிளா சமிதி சார்பில் ஒரு மியூஸிக் கான்சர்ட் நடந்துட்டு இருந்தது. எனக்கு மியூஸிக்கில அதிக ஈடுபாடு இருந்தால, ஆர்வமா போய்க் கேட் டேன். அந்த இசை நிகழ்ச்சியில் மின்மினியும் பாடினா. அந்தக் குரல் இனிமை என்னை அப்படியே கட்டிப் போட்டது. ரெண்டு மணி நேர இசை நிகழ்ச்சி முடிஞ்சதும், நான் மின்மினியை நேரில் போய்ப் பாராட்டினேன். தான் பாட்டு கத்துக்கக் காரணமே இவர்தான்னு சொல்லி, பெரியவர் மல்லய்யாவை எனக்கு அறிமுகப்படுத்திவெச்சா. அதுக்கப்புறம் அந்த கேம்ப் முடியறதுக்குள்ளே நான் ரெண்டு தடவை மின்மினியைச் சந்திச்சுப் பேசினேன். மின்மினிக்கு அப்பா-அம்மா இல்லை என்கிற விஷயம் என்னைப் பாதிச்சது. காரணம், நானும் சின்ன வயதிலேயே அப்பா-அம்மாவை இழந்து ஒரு கிறிஸ்துவ மிஷனில் படிச்சு இந்த நிலைக்கு உயர்ந்த வன். எனக்குப் பிடிச்ச எல்லா அம்சங்களும் மின்மினி கிட்ட இருந்ததால, அவளையே கல்யாணம் பண் ணிக்கிட்டா என்னன்னு என் மனசுக்குப்பட்டது. மல்லய்யாகிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். அந்த விருப்பம் சீக்கிரமே கல்யாணத்தில் போய் முடிஞ்சுது.''

''நீங்க மின்மினியைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னதும், அவங்க ரியாக்ஷன் எப்படி இருந்தது?''

''ரொம்ப சந்தோஷப்பட்டா. தன்னோட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்க முடியாம என் கால்ல விழுந்து கதறி அழுதா. பெரியவர் மல்லய்யாவும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டார்!''

''உங்களைக் கல்யாணம் பண்ணிக்க மின்மினி ஒரு சின்ன தயக்கத்தைக்கூட வெளிப்படுத்தலையா?''

''இல்லை.''

''மின்மினிக்கு ஒரு 'கில்ட்டி கான்ஷியஸ்' இருந்திருந்தா, அவங்க உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சிருக்க மாட்டாங்கன்னு இப்ப நினைக்கிறீங்க இல்லையா சார்?''

''யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் விவேக்! எனக்கும் மின்மினிக்கும் கல்யாணம் நடந்து ரெண்டு மாசம் ஆகுது. இந்தக் குறுகிய காலத்திலேயே என்னோட உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்ட ஒரு நல்ல பெண் மின்மினி. அவளோட கடந்த கால வாழ்க்கையில் எந்தவிதமான ஒரு கறுப்பு அத்தியாயமும் இருக்கக் கூடாதுங்கிறது என்னோட விருப்பம். அப்படி இருந்துட்டா, அதை என்னால தாங்கிக்க முடியாது.''

''சார்! உங்க நிலை எனக்குப் புரியுது. பட், பிரச்னைன்னு வரும்போது அதை ஃபேஸ் பண்ணாம, தவிர்க்கிறதுக்காக வேறு வழிகளை நாம கையாள ஆரம்பிச்சா, அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு இருக்கு.''

''சரி... என்ன பண்ணலாம்னு சொல்லுங்க?''

''இதைப்பற்றி இனிமே நீங்க யார் கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணவேண்டாம். பெல்லாரி மல்லய்யா இன்னிக்குச் சாயந்தரம் உங்களைப் பார்க்க வந்தாலும் அன்பாப் பேசி அனுப்பிடுங்க. நாளைக் காலைல மைக்கேல் எர்னஸ்ட்டையும், அல்போன்ஸையும் உங்க வீட்டுக்கு எத்தனை மணிக்கு வரச் சொல்லியிருக்கீங்க?''

''ஏழு மணிக்கு.''

''வரட்டும்! அவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளே உட்கார வெச்சுப் பேசுங்க. மின்மினி அந்த மைக்கேல் எர்னஸ்ட்டையும் அல்போன்ஸையும் பார்க்கட்டும். மின்மினி அல்போன்ஸைப் பார்த்ததும் அவங்களோட ரியாக்ஷன் என்னன்னு தெரிஞ்சுடும். உண்மை எது, பொய் எது என்கிற விஷயத்தை அந்த நாலு சுவர்களுக்குள்ளேயே வெச்சு முடிவு பண்ணிடுவோம்.''

''நாளைக்கு நீங்களும்...''

''உங்க வீட்டுக்கு வர்றோம். நாளைக் காலை ஆறரை மணிக்கு எல்லாம் உங்களோடு உட்கார்ந்து பேசிட்டு இருப்போம்.''

''ஒருவேளை, அவங்க சொல்றது உண்மையா இருந்துட்டா..?''

''பொய்யா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்களேன் சார்... பி பாஸிட்டிவ்!''

-பறக்கும்...

https://www.vikatan.com

  • 2 weeks later...
Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 

 
 
aaa1.jpgராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
aaa.jpgஇனி, மின்மினி
white_spacer.jpg

bullet2.gifகோவை

p94a.jpgகோவையின் கிழக்குத் திசை கோவைப் பழமாக மாறியிருக்க, ஒரு ராட்சஸ பாலிதீன் கவருக்குள் மாட்டிக்கொண்ட தினுசில் நகரம் பனிமூட்டத்தில் இருந்தது. கார்ப்பரேஷனின் சோடியம் வேப்பர் விளக்குகள் இன்னமும் மின் சாரம் சாப்பிட்டுக்கொண்டு இருந்த அந்த அதி காலை வேளையில், விவேக்கும் விஷ்ணுவும் ஹோட்டல் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். லிஃப்ட்டில் கீழே இறங்கும்போது விஷ்ணு ''பாஸ்'' என்றான்.

''சொல்லு...''

''கலெக்டர் பங்கஜ்குமாருக்கு நேத்து ராத்திரி வைகுண்ட ஏகாதசியா இருந்து இருக்கும்.''

''பாவம்... அவரால ஒரு பத்து நிமிஷம்கூட நிம்மதியாகத் தூங்கியிருக்க முடியாது. பிரச்னை எப்படி எல்லாம் வருது பார்த்தியா?''

p95a.jpg

''மின்மினியைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?''

''மின்மினிகிட்ட ஏதோ தப்பு இருக்கப் போய்த்தான் மைக்கேல் எர்னஸ்ட்டும் அல்போன்சும் தைரியமாக் களம் இறங்கியிருக்காங்க. ஒரு கலெக்டரை எதிர்க்கிற துணிச்சல் அவங்களுக்கு இருக்குன்னா, நியாயமும் உண்மையும் அவங்க பக்கம் இருக்குன்னு அர்த்தம்.''

''என்ன பாஸ்! போற போக்கைப் பார்த்தா நீங்களே மின்மினியோட கையைப் பிடிச்சு அல்போன்சுக்குத் தாரைவார்த்துட்டு, பி.பி.ஸ்ரீனிவாஸ் வாய்ஸ்ல 'எங்கிருந்தாலும் வாழ்க!'ன்னு மங்களம் பாடிடுவீங்க போலிருக்கே?''

''அப்படிப் பாடவேண்டிய சூழ்நிலை வந்தா லும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை.''

''பாஸ்! எனக்கென்னவோ கலெக்டரோட ஒய்ஃப் மின்மினியைத் தப்பாவே நினைக்கத் தோணலை.''

''பழைய தமிழ்ப் படத்துல ஒரு பாட்டு வருமே... 'ஆறும் அது ஆழமில்லே... அது சேரும் கடலும் ஆழமில்லே... ஆழம் அது ஐயா... அது பொம்பள மனசுதாய்யா...'ன்னு. இதிகாச காலத்துல இருந்து இந்த 21-வது நூற்றாண்டு வரைக்கும் புரிஞ்சுக்க முடியாத ஒரே விஷயம், பெண்ணோட மனசுதான்டா!''

''பாஸ்! இப்படியரு அழகான, ஸாரி... அழுக்கான ஸ்டேட்மென்ட் உங்க மனசுக்குள்ள இருக்கிற விஷயம் ரூபலா மேடத்துக்குத் தெரியுமா?''-கேட்ட விஷ்ணுவை விவேக் ஒரு தீப்பார்வை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே செல்போன் சிணுங்கியது. எடுத்துப் பேசினான். மறுமுனையில் கலெக்டர் பங்கஜ்குமாரின் குரல்.

 

''மிஸ்டர் விவேக்!''

''சார்... உங்க பங்களாவுக்குத்தான் வந்துட்டு இருக்கோம்.''

''இப்போ மணி ஆறேகால்...''

''ஹோட்டலைவிட்டு வெளியே வந்துட்டோம் சார். ஆறரை மணிக்குள்ளே அங்கே இருப்போம்.''

''விவேக்! நான் எடுத்த இந்த முடிவு சரிதானா? மைக்கேல் எர்னஸ்ட்டையும், அல்போன்ஸையும் வீட்டுக்கு வரச் சொன்னது தப்போ... ஒருவேளை இது விஷப் பரீட்சையோன்னு என் மனசுக்குள்ளே ஒரு தேர்ட் அம்பயர் குரல் கொடுத்துட்டே இருக்கார்.''

''நோ சார்! நீங்க எடுத்திருக்கிறது சரியான முடிவு... அதிரடியான முடிவும்கூட! அந்த அல்போன்ஸைப் பார்த்ததும் உங்க மனைவி காட்ற ரியாக்ஷன்தான் நமக்கு முக்கியம். அந்த ரியாக்ஷன் ஒருவேளை உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டாக்கூட இருக்கலாம். நான் நேற்றைக்கே சொன்ன மாதிரி பிரச்னையைப் பார்த்து ஓடி ஒளியாம அதை ஒரு தடவை நேரிடையா ஃபேஸ் பண்ணிடறது பெட்டர். நானும் விஷ்ணுவும் கால்டாக்ஸியில் ஏறிட்டோம். ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் ரோட்ல இருக்கோம். பத்தே நிமிஷம்... உங்க வீட்ல இருப்போம்.''

விவேக்கிடம் பேசிவிட்டு செல்போனை மௌனமாக்கிக் கொண்டே திரும்பிய பங்கஜ் குமார், கையில் கப் அண்ட் சாஸ ரோடு நின்றிருந்த மின்மினியைப் பார்த்ததும் லேசான ஓர் அதிர் வுக்கு உட்பட்டு, உடனே இயல் புக்கு வந்து உதட்டுக்குப் புன்னகை யைக் கொடுத்தார்.

''என்ன மின்மினி... குளிச்சாச்சு போலிருக்கே?''

''ம்...''

''கையில் இருக்கிற காபி உனக்கா... எனக்கா?''

''எனக்குத்தான்! நீங்கதான் காபி சாப்பிட்டாச்சே?''

''ஓ...''

''என்ன ஓ! இப்ப போன்ல யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க?''

''அது... வந்து... சென்னையில் இருந்து வந்திருக்கிற க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர் மிஸ்டர் விவேக் கிட்ட.''

''ஏதாவது பிரச்னையா?''

''பிரச்னையா... அப்படி ஏதும் இல்லையே!''

p94b.jpg''பின்னே... ஏன் உங்க குரல்ல ஒரு தடுமாற்றம்? இன்னிக்கு நீங்க வழக்கத்துக்கு மாறா சீக்கிரமாவே எந்திரிச்சுட்டீங்க. என்னிக்குமே மொட்டை மாடிக்கு வராத நீங்க, இன்னிக்கு வந்து செல் போன்ல பேசிட்டு இருக்கீங்க. நீங்க பேசின பேச்சு என்னோட காதிலேயும் விழுந்தது. அதுல ஒரு வார்த்தை விஷப் பரீட்சை. அது என்ன விஷப் பரீட்சை?''

பங்கஜ்குமார் மின்மினியைப் பார்த்துக்கொண்டு மௌனம் காக்க...

''என்ன பேச்சையே காணோம்?''

''இதோ பார் மின்மினி! இது ஒரு புலனாய்வுத் துறை சம்பந்தப்பட்ட பிரச்னை. உளவுத் துறை கொடுத்த ஒரு முக்கியமான தகவலின்அடிப் படையில், சில தகவல்களைச் சேகரிக் கிறதுக்காக சென்னையில் இருந்து மிஸ்டர் விவேக் வந்திருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கேயே வரப்போறார். நானும் அவரும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணும்போது பேசப் பட்ட வார்த்தைதான் விஷப் பரீட்சை.''

''இப்ப நீங்க சொன்னதுதான் உண்மைன்னா, நான் சந்தோஷப்பட்டுக்கிறேன்...''

''அப்படீன்னா... நான் சொன்னதை நீ நம்பலையா?''

''நம்பற மாதிரி இல்லை. ஏன்னா... நேத்து மத்தியானத்துல இருந்தே நீங்க நார்மலா இல்லை. மனசுக்குள்ளே எதையோ வெச்சுக்கிட்டுப் பேசற மாதிரி இருக்கு. நேத்திக்கு புரந்தரதாஸர் ஹாலில் என்னோட பாட்டுக் கச்சேரி நடந்தது. நீங்களும் முன் வரிசையில் உட்கார்ந்து கச்சேரியைக் கேட்டீங்க. ஆனால், அதுல ஒரு ஈர்ப்பு இல்லை. என்னோட பார்வைக்கு நீங்க ஒரு ரோபோ மாதிரி தெரிஞ்சீங்க. என் பாட்டைக் கேட்கும்போது வழக்கமா உங்க முகத்துல பவுடர் பூசின மாதிரி ஒரு பரவசம் பரவும். நேற்றைக்கு அது உங்க கிட்டே மிஸ்ஸிங்.''

பங்கஜ்குமார் பெருமூச்சு ஒன்றைவிட்டார்.

''நீ சொல்றது சரிதான் மின்மினி! நேற்றைக்கு மத்தியானத்தில் இருந்தே நான் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸாகத்தான் இருக் கேன். அதுக்குக் காரணம், என்னோட வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள்தான். அந்தப் பிரச்னைகளும் இன்னிக்குச் சரியா யிடும்னு நினைக்கிறேன். அதைப்பற்றிப் பேசறதுக்காகத்தான் மிஸ்டர் விவேக் வந் துட்டு இருக்கார்.''- சொன்ன பங்கஜ்குமார் பேச்சை இயல்பாக மாற்றுவதற்காகக் கேட்டார்...

''பெரியவர் மல்லய்யா ஊருக்குக் கிளம் பிப் போயிட்டாரா?''

''இன்னிக்குக் காலையில் வடவள்ளி கோயில்ல நடக்கிற ஒரு கும்பாபிஷேகத்துல கலந்துட்டு, மத்தியானம் இன்டர்சிட்டியில் பெங்களூர் போய், அங்கிருந்து பெல்லாரி போறார். அவர்கிட்டேகூட நீங்க நேத்து சரியாப் பேசலையாமே?''

''உண்மைதான்! நேத்து சாயந்திரம் அவர் என்னை வந்து ஆபீஸில் பார்த்தப்ப விசிட் டர்ஸ் யார் யாரோ வந்துட்டு இருந்தாங்க. ஒரு ரெண்டு நிமிஷம்கூட ஒழுங்காப் பேச முடியலை.''

''நமக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கலாம். அதையெல்லாம் தள்ளிவெச்சுட்டு ரெண்டு வார்த்தை நல்லபடியாகப் பேசியிருக்கலாம். நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க அவர்தான் முக்கிய காரணகர்த்தாவா இருந்தார் என்கிற உண்மையை நாம மறந்துடக் கூடாது.''

பங்கஜ்குமார் மேற்கொண்டு ஏதோ பேச முயல... செல்போன் அழைத்தது. எடுத்துப் பேச, மறுமுனையில் செக்யூரிட்டியின் குரல்.

''சார்! சென்னை க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர் மிஸ்டர் விவேக்கும் அவரோட உதவியாளரும் வந்திருக்காங்க. உள்ளே ரிசப்ஷன்ல வெயிட் பண்றாங்க.''

''வர்றேன்...'' - செல்போனை அணைத்தவர், மின்மினியை ஏறிட்டார்.

''அவங்க வந்துட்டாங்க...''

''இன்னிக்காவது உங்க பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு பழைய பங்கஜ்குமாரா மாறி நார்மலுக்கு வந்துடுவீங்களா?''

''அது 7 மணிக்கு மேல தெரியும்.''

''அது என்ன 7 மணி கணக்கு?''

''எந்த ஒரு பிரச்னைக்கும் டெட்லைன்னு ஒண்ணு இருக்கும். இந்தப் பிரச்னைக்கும் அப்படியரு டெட்லைன் இருக்கு. அது இன்னும் அரை மணி நேரத்தில் வரும். இப்போ மணி ஆறரை.''

பங்கஜ்குமார் சொல்லிவிட்டுப் படிகளில் இறங்கிப் போக... மின்மினி அவரையே கலவர மாகப் பார்த்தாள். மனசுக்குள் இருந்து ஒரு பயக் கிளி கத்தியது.

'மின்மினி! உன்னோட அவர் சரியில்லை. ஜாக்கிரதை... ஜாக்கிரதை... ஜாக்கிரதை!'

bullet2.gifநியூயார்க்

போலீஸ் அதிகாரிகளான ஸ்மித் தையும் தாம்ஸனையும் எமிலி பார்த்த பார்வையில் அனல் பறந்து, கோபத்தில் குரல் வெடித்தது.

''என் மகள் சில்வியா எந்தத் தவறும் செய்யாத பெண். அவளுடைய அறையை எதற்காகச் சோதனை போட வேண்டும்? இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!''

p97a.jpgதாம்ஸன் சின்னதாகப் புன்னகைத் தார். ''நீங்கள் இப்படிச் சொல்லி எங் கள் பணிக்குத் தடை போட முடியாது. அப்படித் தடை போட்டால், உங்கள் எல்லோரையும் கைது பண்ண வேண்டி இருக்கும்.''

ஃப்ளோரா குறுக்கிட்டாள்... ''அந்த அதிகப்படியான வேலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் சில்வியாவின் அறையைப் பார்க்கலாம், மிஸ்டர் தாம்ஸன்!''

''ஒரு நல்ல லாயருக்கு இதுதான் அழகு! சில்வியாவின் அறை எது? நீங்கள் சொல்லும் அந்த மினி மியூஸியம் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறீர் களா?''

''வாருங்கள்!'' - சொன்ன ஃப்ளோரா வேகவேகமாக வீட்டின் பின்பக்கத்தை நோக்கிப் போனாள். அவளுக்கு இணை யாக நடந்து சென்ற விஜேஷ் கேட் டான்...

''மிஸ் ஃப்ளோரா! இது என்ன புது விவகாரம்? இந்த வீட்டுக்குள் ஒரு மினி மியூஸியம் இருக்கும் விஷயத்தை நீங்கள் ஏன் என்னிடம் சொல்ல வில்லை?''

''மிஸ்டர் விஜேஷ்! இது ஒரு அற்ப விஷயம். பழங்காலப் பொருட்களையும், அரிய வகைத் தாவரங்களையும், பூச்சி வகைகளையும் ஒரு ஹாபியாக நினைத்து சில்வியா சேகரித்து வந்தது எனக்குத் தெரியும். இந்த ஃபேமிலிக்கு வேண்டாதவர்கள் யாரோ இதைப் பூதாகாரமாக்கி போலீஸ் வரைக்கும் கொண்டுபோய் இருக்கிறார்கள். நீங்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் மியூஸியம் என்று சொல்லும் அறையை நீங்களும் பார்க்கத் தானே போகிறீர்கள்! அப்போது நீங்களே உண்மையைப் புரிந்துகொள்வீர்கள்.''
''இந்த வீட்டில் இவ்வளவு அறைகள் இருக்கும்போது, பூமிக்கு அடியில் எதற்காக ஒரு அறை?''

''இந்த வீட்டைக் கட்டியது ஆல்பர்ட்ஸன் இல்லை. எட்வர்ட் ஃப்ராங்க்ளின் என்ற சரித்திரப் பேராசிரியர் கட்டிய வீடு இது. அவர் ஆர்க்கியாலஜி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளையும் செய்து வந்தார். அது சம்பந்தமான சில ரகசிய தஸ்தாவேஜ்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்காகப் பூமிக்கு அடியில் ஓர் அறையைக் கட்டினார். அவர் இறந்த பிறகு, இந்த வீடு விற்பனைக்கு வந்தது. ஆல்பர்ட்ஸனுக்கு நான்தான் லீகல் அட்வைஸராக இருந்து, இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தேன். நீண்ட நாட்கள் வரை அந்த அறையை யாருமே பயன்படுத்தவில்லை. பிறகுதான் சில்வியா அதை எடுத்துக்கொண்டு தன் ஹாபியான ரேர் ஸ்பெசிமென் கலெக்ஷனை ஆரம்பித்தாள். அதை யாரோ ஸ்மெல் செய்து, அதற்கு மியூஸியம் முலாம் பூசி, போலீஸ் வரைக்கும் கொண்டுபோய் இருக்கிறார்கள். அந்தத் திரை மறைவு வேலைக்காரர்கள்தான் யார் என்று எனக்குத் தெரியவில்லை.''

''ஃப்ளோரா! நீங்கள் கவலைப்படாதீர்கள். அது எல்லாமே அந்த 'காமாட்சி' என்கிற பெண்ணின் வேலையாகத்தான் இருக்கும். யார் என்ன சொன்னாலும் சரி... எந்தப் பிரச் னையை எந்த ரூபத்தில் கொண்டுவந்தாலும் சரி... நான் இந்த வீட்டை வாங்கப்போகும் முடிவில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை. நீங்கள் முதலில் அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் சில்வியாவின் அறையைக் காட்டுங்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போகட்டும்.''

''இதோ!'' என்ற ஃப்ளோரா, வீட்டின் பின் பக்கம் மாடிப் படிகளுக்குக் கீழே இருந்த அந்தக் குட்டையான மரக் கதவுக்கு முன்பாகப் போய் நின்று, அதில் இருந்த மேக்னடிக் பூட்டுக்கு விடுதலை கொடுத்துத் தள்ளினாள். அது சிரமமாகப் பின்னோக்கிப் போக... உள்ளே சதுரமாக ஓர் இருட்டு தெரிந்தது. ஃப்ளோரா கையை நுழைத்து ஸ்விட்சைத் தட்ட... மங்கலான வெளிச்சம் உற்பத்தியாகி, 'ஷி' போட்டுக்கொண்டு போன மரத்தாலான படிகள் தெரிந்தன.

ஸ்மித் உள்ளே குனிந்து பார்த்துவிட்டு ஃப்ளோராவிடம், ''முதலில் நீங்கள் இறங்குங்கள். நாங்கள் உங்களைப் பின் தொடர்கிறோம்.''

ஃப்ளோரா இறங்கினாள். அவளைத் தொடர்ந்து தாம்ஸன், ஸ்மித் இறங்க... பிறகு விஜேஷ், ஆல்பர்ட்ஸன், எமிலி என்று வரிசையாக உள்ளே போனார்கள்.

பத்துக்குப் பதினைந்து என்ற அளவிலான அந்த அறை நூலாம்படைகளாலும் ஒட்டடையாலும் நிரம்பி, ஏதோ ஓர் அறைகுறை லேப் மாதிரி தெரிந்தது. சுவர் அலமாரிகளில் சின்னச் சின்னதாக நிறைய பாட்டில்கள். அதில் நிறம் நிறமாய் அசையாத திரவங்கள். அந்தத் திரவங்கள் ஒவ்வொன்றிலும் எதுவோ உறைந்துபோய் மிதந்தன.

தாம்ஸன் அங்கே இருந்த ஒரு ஸ்டிக்கை எடுத்து ஒட்டடைகளை விலக்க... உள்ளங்கை சைஸில் பெரிது பெரிதாக இருந்த சிலந்திகள் தன் குடும்ப உறுப்பினர்களோடு தலைதெறிக்க ஓட்டம் பிடித்து, மர ஷெல்ஃப்களுக்குப் பின்னால் போய் ஒண்டிக்கொண்டன.

ஸ்மித் ஒரு பாட்டிலை எடுத்துப் பார்த்தார். பாட்டிலின் மேல் ஒட்டப்பட்டு இருந்த லேபிளில் டைப் செய்யப்பட்ட எழுத்துக்களைப் படித்தார்.

ஷிசிஸிணிகீ சிளிஙிஸிகி

அவருக்குப் பின்னால் நின்றிருந்த ஃப்ளோரா சொன்னாள், ''சார்! ஒரு மண் புழு மாதிரி தெரிகிற இது ஒரு பாம்பின் வகை. இரண்டு அங்குல நீளமே இருக்கும் இந்த வகை 'ஸ்க்ரூ கோப்ராக்'கள் அமே சான் காடுகளில் அரிதாகக் காணப்படும். இந்தச் சிறிய பாம்பு விஷமற்றதாக இருந் தாலும் ஆபத்தானது. இதன் முக்கிய உணவே ரத்தம் என்பதால், ஒரு மனித னையோ விலங்கையோ பார்த்துவிட்டால், எகிறிப் போய் உடம்பில் ஒட்டிக்கொண்டு ஒரு ஸ்க்ரூவைப்போல் உள்ளே துளைத்துக் கொண்டு போய், ரத்த நாளங்களில் நீச்சல் அடித்துவிட்டு, உடம்பின் எந்தப் பக்கம் வழி கிடைக்கிறதோ அந்த வழியாக வெளியேறும். அது வெளியேறும் வழி சில நேரம் இருதயமாகவும் இருக்கலாம்.''

ஸ்மித்தின் அகலமான நெற்றி உடனடி யாக வியர்த்தது. அதே வேகத்தில், தொண்டையில் இருந்த ஈரமும் காய்ந்து போயிற்று.

ஃப்ளோரா புன்னகைத்தாள்.

''என்ன சார்... பயந்துவிட்டீர்களா? இப்படி இந்த அறையில் இருக்கிற எல்லா ஸ்பெசிமென்களும் ஏதாவது ஒரு வகையில் விசித்திரமாகவும் அபூர்வமாகவும் இருக் கும். மற்றபடி, நீங்கள் நினைக்கிற அளவுக் குச் சட்ட விரோதமானது இல்லை. மேலும்...''

ஃப்ளோரா பேசிக்கொண்டு இருந்தபோதே, அந்தச் சத்தம் கேட்டது. மரப் படிகளில் யாரோ இறங்கி வரும் சத்தம்.

-பறக்கும்...

https://www.vikatan.com

22 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கை இன்னும் பறக்கவில்லை?

ம்ம் பறக்கிறது..?

  • 2 weeks later...
Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 

 
 
aaa.jpgராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg
title_horline.jpg
aaa1.jpgஇனி, மின்மினி
white_spacer.jpg

bullet4.gifநியூயார்க்

p84a.jpgமாடிப் படிகளில் யாரோ இறங்கி வரும் சத்தத்தைக் கேட்டதும்,ஸ்மித்தும் தாம்ஸனும் சரேலென்று தலையை உயர்த்தி ஃப்ளோராவைப்பார்த்தார்கள்.

''இந்த வீட்டில் வேறு யாராவது இருக்கிறார்களா?''
''இல்லையே!''

''பின் வருவது யார்?''

''எனக்கும் அதுதான் குழப்பமாக இருக்கிறது. இருங்கள்... நான் பார்த்துவிட்டு வருகிறேன்!''

''வேண்டாம்... நீங்கள் போக வேண்டாம். வருகிற நபர் இங்கேயே வரட்டும்.''

ஆல்பர்ட்ஸன் குறுக்கிட்டார், ''எனக்குத் தெரிந்த நபர் யாராவது வீட்டுக்கு வெளியே நின்றிருக்கும் என் காரைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து இருக்கலாம். நான் போய்ப் பார்க்கட்டுமா? தவிர, எனக்கு உள்ள இன்னொரு சந்தேகம் என்னவென்றால்...''

தாம்ஸன், ஆல்பர்ட்ஸனைக் கையமர்த்திவிட்டு ஏதோ சொல்ல முயன்ற விநாடி, சட்டென்று - மரப் படிகளில் கேட்டுக்கொண்டு இருந்த அந்தக் காலடி ஓசை நின்றுபோயிற்று.

10 விநாடி எல்லோரும் மௌனம் காத்தார்கள். காலடி ஓசை மறுபடியும் கேட்காமல்போகவே, தாம்ஸன் அந்த அறையைவிட்டு வெளியே வந்து, மரத்தால் ஆன படிகளை நோக்கி வேகமாகப் போய் பார்வையை உயர்த்தினார்.

வெறுமை. தாம்ஸன் குரல் கொடுத்தார்...

''படிகளில் யாரும் இல்லை. வந்த நபர் திரும்பிப் போயிருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உள்ளேயே இருங்கள். நான் வெளியே போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்...''

''பத்திரம்! வந்த நபர் ஆபத்தான பேர்வழியாகக்கூட இருக்கலாம், சார்!'' என்றார் ஸ்மித்.

p85a.jpg

''அப்படி அவர் ஆபத்தான பேர்வழியாக இருந்தால், அதைச் சமாளிப்பது எப்படி என்று என் பிஸ்டலுக்குத் தெரியும்!'' - சொன்ன தாம்ஸன், படிகளில் வேகமாகத் தாவி ஏறி, வெளியே வந்தார். வீட்டின் பின்பக்கம் பார்வைக்குக் கிடைத்தது. யாரும் இல்லை.

ஓட்டம் கலந்த நடையோடு வீட்டின் முன்பக்கம் பாய்ந்து வந்து நின்றவர், தன் நீல நிற விழிகளைச் சுழற்றினார். கேட்டுக்குப் பக்கத்தில் படுத்திருந்த நாய் ப்ளாக்கி மட்டும் பார்வைக்குச் சிக்கியது. கேட் வரைக்கும் நிதானமாக நடந்து போய் தேடலில் ஐந்து நிமிடங்களைச் செலவிட்டவர், யாரும் பார்வைக்குத் தட்டுப்படாமல் போகவே, மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து பூமிக்கு அடியில் இருந்த அறைக்குப் போனார். வேண்டாத நிசப்தத்தோடு எல்லோரும் காத்திருந்தார்கள்.

ஆல்பர்ட்ஸன் கேட்டார்... ''யாரையாவது பார்த்தீர்களா?''

''இல்லை.''

''அப்படி யாராவது வந்திருந்தால்தானே நீங்கள் பார்த்து இருக்க முடியும்?''

''மரப் படிகளில் யாரோ இறங்கி வருவதுபோன்ற காலடி ஓசையை நீங்களும்தானே கேட்டீர்கள்?''

''அது மனிதக் காலடி ஓசை இல்லையென்று இப்போதுதானே தெரிகிறது!''

''என்னது... அது மனிதக் காலடி ஓசை இல்லையா?''

''இல்லை.''

''பின்னே?''

''இந்த அறையில் நான்கைந்து பெரிய சைஸ் பெருச்சாளிகள் உள்ளன. நாம் திடீரென்று உள்ளே வந்ததால், அவை மிரண்டு இடம் பெயர்ந்தபோது எழுந்த சத்தம்தான் அது!''

''உங்களுக்குத் தெரிந்த நபர் யாராவது வந்து இருக்கலாம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள், மிஸ்டர் ஆல்பர்ட்ஸன்?''

 

''சொன்னேன். அதற்குப் பிறகுதான் எனக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்தது. இதைச் சொல்வதற்காக நான் வாயைத் திறந்தபோது, நீங்கள் என்னைக் கையமர்த்திச்சொல்லவிடாமல் செய்துவிட்டீர்கள். அப்படியே நான் சொல்லியிருந்தாலும், அதை நீங்கள் நம்பியிருக்கப் போவது இல்லை.''

''உங்கள் சந்தேகத்தில் உண்மை இல்லை. நாம் கேட்டது பெருச்சாளிகளின் நடமாட்டம் இல்லை. அது நிச்சயமாக மனிதக் காலடி ஓசைதான். ஸ்மித், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

''சார்... நீங்கள் சொல்வது சரிதான். பெருச் சாளிகள் ஓடும். இப்படியா... ஒரு மனிதன் நடக்கிற மாதிரி ஒவ்வொரு படியாக இறங்கும்?''

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த விஜேஷ், தாம்ஸனை ஏறிட்டு, ''மிஸ்டர் ஆல்பர்ட் ஸன் சொன்ன கருத்துதான் உண்மையானதாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்'' என்றான்.

''எதைவைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?''

''முக்கியமான காரணம், வெளியிலிருந்து யாராவது ஒரு நபர் வீட்டுக்குள் வந்து இருந்தால், வெளியே காவலுக்கு இருக்கும் நாய் ப்ளாக்கி கண்டிப்பாகக் குரைத்து இருக்கும். ஒருவேளை, நாய்க்குப் பழக்கமான நபர் வந்து இருந்தால், நாய் குரைக்காமல் இருந்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் வாதப்படியே வைத்துக்கொண்டாலும், வந்த நபர் மரப்படிகளில் இறங்கிவிட்டுப் பின்பு திரும்பிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தவிர, இந்தக் குறுகிய கால அவகாசத்துக்குள் யாரும் இந்த இடத்தைவிட்டு வெளியேறி இருக்க முடியாது.''

தாம்ஸன் தன் தோள்களைக் குறுக்கி, இரண்டு கைகளையும் விரித்தார். ''ஓ.கே! அது 'மனிதனா, பெருச்சாளியா?' என்கிற விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, நாங்கள் எந்த வேலைக்காக வந்தோமோ, அதை மட்டும் இப்போது பார்க்கிறோம். நேஷனல் அக்வேரியத்தில் காணாமல் போன விலை உயர்ந்த அபூர்வ மீன்களான 'டைமண்ட் ஃபிஷ்' இந்த மியூஸியத்தில் இருக்கின்றனவா, இல்லையா என்று பார்த்துவிட்டு, இருந்தால் சட்டப்படி நடவடிக்கைஎடுப்போம். இல்லாவிட்டால், ஒரு 'ஸாரி' சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம்.''

ஃப்ளோரா அவர்களுக்குப் பக்கத்தில் வந்தாள். ''இந்த அறையில் நூற்றுக்கணக்கான சின்னச் சின்ன பாட்டில்கள் உள்ளன. நீங்கள் அந்த பாட்டில்களில் உள்ள ஸ்பெசிமென்களை நிதானமாகப் பார்க்கலாம். எனக்கு இங்கே உள்ள ஒவ்வொரு ஸ்பெசிமென்பற்றியும் தெரியும். இந்த அறைக்குள் எதைப் புதிதாகக்கொண்டு வந்தாலும் சரி, சில்வியா எனக்கு போன் செய்து சொல்லிவிடுவாள்.''

''நீங்கள் சொல்வதைப் பார்த்தால், சில்வியா உங்க ளுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்திருப்பாள்போல் இருக்கிறதே?''

''ஆமாம்! என்னோடு எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வாள்!''

''சில்வியாவுக்கு எப்படி மனநலம் பாதிக்கப்பட்டது என்று சொல்ல முடியுமா?''

''நீங்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு டாக்டர்களாலேயே பதில் சொல்ல முடியாதபோது, என்னால் மட்டும் எப்படி முடியும்?''

p84b.jpg''சரி, ஸ்பெசிமென்களைப் பார்க்கலாமா?''

''வாருங்கள்!'' - சொல்லிவிட்டு ஃப்ளோரா முன்னே நடக்க, விஜேஷ் அவளோடுஇணைந்துகொண்டான். தாம்ஸனும் ஸ்மித்தும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

ஆல்பர்ட்ஸனும் எமிலியும் அங்கிருந்த ஒரு பழைய சோபாவில் சாய்ந்துகொண்டார்கள்.

இரண்டு நிமிட நேரம் கழித்து எமிலிசுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்தித் தன் கணவர் ஆல்பர்ட்ஸனிடம் கேட்டாள், ''நம் வீட்டில்தான் பெருச்சாளி இல்லையே? இருப்பதாக ஏன் போலீஸ் அதிகாரிகளிடம் பொய் சொன்னீர்கள்?''

அவரும் குரலைத் தாழ்த்தி, ''எனக்கு வேறு வழி தெரியவில்லை. நிலைமையைச் சமாளிக்கப் பொய் சொல்லிவிட்டேன்'' என்றார்.

''அப்படியானால் மரப் படிகளில் கேட்ட அந்தக் காலடிச் சத்தம்?''

''யாரோ வந்துவிட்டுப் போயிருக்கிறார் கள்!''

எமிலியின் முகத்தில் திகில். ''யார்?''

மனைவியைப் பயத்தோடு பார்த்தார் ஆல்பர்ட்ஸன்.

''என் மனதிலும் அதே கேள்விதான்!''

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அந்த அறையில் இருந்த எல்லா ஸ்பெசிமென் களையும் பார்த்துவிட்டு நான்கு பேரும் திரும்பினார்கள்.

ஆல்பர்ட்ஸனை நெருங்கி, ''ஸாரி மிஸ்டர் ஆல்பர்ட்ஸன்! நேஷனல் அக்வேரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் இந்த வீட்டைச் சோதனை போட வந்தோம். நாங்கள் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை. எனவே புறப்படுகிறோம். உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக வருந்துகிறோம்'' என்றார்கள் தாம்ஸனும் ஸ்மித்தும்.

''எங்கள் மகள் சில்வியா மேல் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லையே?''

''இல்லை!''

''இனியும் சோதனை செய்ய வருவீர்களா?''

''அதற்கு அவசியம் இருக்காது. ஏனென்றால், நாங்கள் பார்த்த அளவுக்கு இது ஒரு முழுமையான மியூஸியம் கிடையாது. நீங்கள் ஆரம்பத்தில் சொன்னதுபோல் ரேர் ஸ்பெசிமென்களைச் சேகரிக்கும் ஹாபி உங்கள் மகளிடம் இருந்திருக்கிறது. நேஷனல் அக்வேரியத்தில் காணாமல்போன எந்த ஓர் அரிய உயிரினமும் இங்கே இல்லை. நாங்கள் வருகிறோம்!''

எல்லோரிடமும் கை குலுக்கிவிட்டுப் புறப்பட்டார்கள் தாம்ஸனும் ஸ்மித்தும். அவர்களின் தலை மறைந்ததும், ஃப்ளோரா உஷ்ணமான பெருமூச்சுஒன்றை வெளியேற்றினாள்.

''இப்படி ஒரு பிரச்னை வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.''

விஜேஷ் சிரித்தான். ''இது ஒரு பிரச்னையே இல்லை. போலீஸார் தங்களுடைய கடமையைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்... அவ்வளவுதான்!''

''நீங்கள் வீட்டை வாங்க வந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் ஏதும் தப்பாக நினைத்துக்கொள்ளவில்லையே?'' - எமிலி உடைந்த குரலில் கேட்க, விஜேஷ் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.

''நோ... நோ! இதில் தப்பாக நினைக்க ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லப் போனால் உங்கள் மகள் சில்வியாவின் 'ரேர் ஸ்பெசிமென் காலரி'யைப் பார்த்த பின்புதான் இந்த வீட்டை வாங்கியே தீருவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். உங்களுடைய விலையைச் சொல்லுங்கள். பேசி முடித்துவிடுவோம்!''

ஆல்பர்ட்ஸன் எழுந்து விஜேஷைத் தழுவிக்கொண்டார். ''மிஸ்டர் விஜேஷ்! உங்களுடைய பேச்சு எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. இந்த வீட்டுக்கு என்ன விலை என்பது எங்களுடைய லாயர் ஃப்ளோராவுக்குத் தெரியும். நீங்களும் அவளும் கலந்து பேசி விலையை முடிவு செய்யுங்கள். விலை முடிவானதும், மற்ற விஷயங் களைப் பேசிக்கொள்வோம்.''

p87a.jpgஃப்ளோரா இடைமறித்தாள், ''மிஸ்டர் ஆல்பர்ட்ஸன்! விஜேசுக்கு வீடுபிடித்துவிட்டது. விலையைப்பற்றி உடனே பேச வேண்டாம். இன்று முழுவதும் அவர் ஹோட்டலில் தங்கி ஓய்வுஎடுக்கட் டும். நாளை காலையில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி, விலையை முடிவு செய்வோம்.''

''விஜேஷ் எங்கே தங்கப்போகிறார்?''

''ஜமைக்காவில் உள்ள 'ஹாவேர்ட் ஜான்சன் இன்' ஹோட்டலில். நானே அவரைக் காரில் கொண்டுபோய் டிராப் செய்துவிட்டு வந்துவிடுகிறேன்!''

சரியாக அரை மணி நேரப் பயணத்தில் ஹோட்டல் 'ஹாவேர்ட் ஜான்சன் இன்' வந்தது. தனது சிறிய சூட்கேஸை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான் விஜேஷ்.

''தேங்க்யூ மிஸ் ஃப்ளோரா! நாம் இனி நாளை காலையில்தான் சந்திக்கப்போகிறோம், இல்லையா?''

''ஆமாம். பிட்வின் டென் அண்ட் லெவன்... நீங்கள் தயாராக இருங்கள். நானே வந்து உங்களை பிக்-அப் செய்துகொள்கிறேன்.''

''தேங்க்யூ!''

''வெல்கம்...'' - அழகாய்ச் சிரித்து, கையை அசைத்துவிட்டு ஃப்ளோரா காரை நகர்த்திக்கொண்டு போய்விட, விஜேஷ் கார் மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, ஹோட்டலின் வரவேற்பறைக்குள் நுழைந்தான். லஸ்தர் விளக்குகளுக்குக் கீழே ஒளி வெள்ளமாகக் காட்சியளித்தது அந்த வரவேற்பறை.

உறுத்தாத லிப்ஸ்டிக் பூசிய உதடுகளில் ஒரு புன்னகையை நிரந்தரமாக உட்காரவைத்திருந்த அந்த ரிசப்ஷனிஸ்ட்டை நோக்கிப் போனான் விஜேஷ். அவள் தன் 35 எம்.எம். புன்னகையை 70 எம்.எம்-முக்கு விரித்து, ''யெஸ்'' என்றாள்.

''ஐ'ம் விஜேஷ்... பாரீஸில் இருந்து வருகிறேன்!'' என்று பேச ஆரம்பித்தவனை இடைமறித்தாள் அவள்... ''நீங்கள்... மிஸ்டர் விஜேஷ்?''

''ஆமாம்!''

''உங்களைப் பார்க்க ஒரு மணி நேரமாக ஒருவர் காத்துக்கொண்டு இருக்கிறார்.''

''என்னையா?''

''ஆமாம்! அதோ, அந்த சோபாவில்...''

விஜேஷ் திரும்பிப் பார்த்தான். கையில் நாளிதழைப் பிரித்துவைத்துக்கொண்டு, குளிர்க் கண்ணாடி தரித்த அந்த இளைஞன் தெரிந்தான். விஜேஷ் அவனை நோக்கிப் போக, அவன் பேப் பரை மடித்துவைத்துவிட்டு எழுந்தான். சிரித்தபடி கை நீட்டினான்.

''ஹலோ, விஜேஷ்...''

விஜேஷ் குழப்பமாக அவனைப் பார்த்து, ''நீங்கள்..?'' என்றான்.

''நான் காமாட்சி... காஞ்சிபுரம் காமாட்சி!''

bullet4.gifகோவை

ங்கஜ்குமார் மாடியில் இருந்து கீழே இறங்கி வர, விவேக்கும் விஷ்ணுவும் பாலிவினைல் நாற்காலிகளில் சாய்ந்திருந்தார்கள். வரவழைத்துக்கொண்ட கட்டாயப் புன்னகையோடு நெருங்கினார். ''குட்மார்னிங் போத் ஆஃப் யூ!''

பதிலுக்கு குட்மார்னிங் சொன்ன விவேக், விஷ்ணு இருவருடனும் கை குலுக்கிக்கொண் டார்.

விவேக் சொன்னான், ''ஸாரி சார், இன்னும் கொஞ்சம் எர்லியரா வந்து இருக்கணும். எப்படியோ லேட்டாயிடுச்சு!''

''நோ பிராப்ளம் மிஸ்டர் விவேக்! இப்போ டைம் சிக்ஸ் தர்ட்டிதானே? பை த பை... உங்களுக்குக் காபி கொண்டுவரச் சொல்லட்டுமா?''

''வேண்டாம் சார்'' என்ற விவேக் குரலைத் தாழ்த்தி, சுற்றும்முற்றும் பார்த்தபடி சொன்னான், ''சார், நீங்க கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா தெரியறீங்க. நெற்றியில் வேர்வை. கொஞ்சம் இயல்பாக இருக்க லாமே?''

''முடியலையே! ஐ குட் நாட் கன்ட்ரோல் மைசெல்ஃப். ஏழு மணியாக இன்னும் இருபத்தஞ்சு நிமிஷம்தான் இருக்கு!''

''அவங்க வரட்டும் சார்! பிரச்னையை ஃபேஸ் பண்ணலாம். உங்க மனைவி அந்த ரெண்டு பேரை யும் தெரியாதுன்னு சொல்லிட்டாப் போதும்... அதுக்கு அப்புறம் பந்து நம்ம கால்களுக்கு வந்துடும். உதைச்சு விளையாடிட வேண்டியதுதான்!''

விவேக் பங்கஜ்குமாருக்குத் தைரியம் சொல்லிக்கொண்டு இருக்க, நேரம் கரைந்து, ஹாலில் இருந்த சுவர்க் கடிகாரம் 6:55 என்று எலெக்ட்ரானிக் எண்களில் சிவப்பாக ஒளிர்ந்தது.

பங்கஜ்குமார் நாற்காலியின் நுனிக்கு வருவதும், பிறகு பின்னுக்குச் சாய்வதுமாக இருந்தார். முகம் எண்ணெய் பூசிய தினுசில் வியர்த்துப் போயிருந்தது.

6.57 என்று எலெக்ட்ரானிக் கடிகாரம் ஒளிர்ந்த அதே விநாடி -

பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த வெள்ளை நிற அம்பாஸடர் நுழைந்து, போர்டி கோவுக்குள் வந்து நின்றது.

காரின் கதவைத் திறந்துகொண்டு இறங்கிய அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் நம்பெருமாள், பங்கஜ்குமாரை நோக்கி வந்து ஒரு சல்யூட்டோடு நின்றார்.

''ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ், சார்! ஒரு சின்ன க்ளாரிஃபிகேஷன்!''

''வாட் அபௌட்?''

''உங்களுக்கு மைக்கேல் எர்னஸ்ட் என்கிற நபரைத் தெரியுமா, சார்?''

பங்கஜ்குமாரின் உடம்புக்குள் ஏகப்பட்ட இடங் களில் பாம் ப்ளாஸ்ட்கள் நடந்துகொண்டு இருந் தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு கேட்டார், ''எதுக்காக இந்த என்கொயரி?''

''அது வந்து சார்... நேற்றைக்கு ராத்திரி அந்த மைக்கேல் எர்னஸ்ட் என்கிற நபர் அவரோட வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டு இருக் கார். ஸ்பாட்டுக்குப் போன இன்ஸ்பெக்டர், மைக் கேல் எர்னஸ்ட்டின் டயரியை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது, ஒரு பக்கத்தில் உங்களுடைய பர்சனல் செல்போன் நம்பரும், அரசு உயர்அதிகாரி களுக்கு மட்டுமே தெரிந்த ஹாட்லைன் டெலிபோன் நம்பரும், பர்சனல் ஃபேக்ஸ் நம்பரும் சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்தது சார். அதான்...''

அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் நம்பெருமாள் பேசிக்கொண்டே போக... விஷ்ணு, விவேக்கின் காதுக்குத் தன் உதட்டைக் கொடுத்தான்.

''பாஸ்...''

''என்னடா?''

''உங்களுக்கும் எனக்கும் சனிப் பெயர்ச்சி வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு!''

-பறக்கும்

https://www.vikatan.com

Posted

இனி, மின்மினி - ராஜேஷ்குமார்

 

 


16-12-09
 
இனி, மின்மினி white_spacer.jpg
title_horline.jpg
 
ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம்
white_spacer.jpg

கோவை

 

சிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் நம்பெருமாள் p84a.jpgசொன்னதைக் கேட்டு பங்கஜ்-குமார் உள்ளுக்குள் இடிந்துபோய், என்ன பேசுவது என்று திகைக்க... விவேக் அந்தத் தர்மசங்கடமான விநாடிகளைத் தத்து எடுத்துக்கொண்டு புன்னகைத்தான்.

"கொலை செய்யப்பட்ட நபரின் டைரியில் ஒரு மாவட்ட கலெக்டரின் செல்போன் நம்பரும் ஃபேக்ஸ் நம்பரும் இருந்தா, உடனே இவ்வளவு காலையில் வந்து விசாரணை பண்ணணுமா என்ன?"

நம்பெருமாள் தன் காக்கி யூனிஃபார்முக்குள் பவ்யமானார். "ஸாரி சார்! இது விசாரணை இல்லை. கொலை நடந்த இடத்தில் வேற எந்தத் தடயமும் கிடைக்கலை. ஒரு டைரி மட்டும் கிடைச்சுது. அந்த டைரியில்கூட எதுவும் இல்லை. எல்லாப் பக்கங்களும் காலியா இருந்தது. ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் செல்போன் நம்பரும், டெலிபோன் நம்பரும், ஃபேக்ஸ் நம்பரும் எழுதப்பட்டு இருந்தது. விசாரணை பண்ணினபோது கலெக்டரோட எண்கள்னு தெரிஞ்சுது. அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிஞ்ச இந்த எண்கள், ஒரு சாதாரண நபருக்கு எப்படித் தெரிய வந்ததுன்னு குழப்பம். அதைத் தெளிவுபடுத்திக்கத்தான் உடனே புறப்பட்டு வந்தேன். மற்றபடி இது இலாகாபூர்வமான என்கொயரி கிடையாது சார்!"

"கொலை செய்யப்பட்ட நபரோட பேர் என்னன்னு சொன்னீங்க?"

"மைக்கேல் எர்னஸ்ட்."

"என்ன தொழில்?"

p84b.jpg"டவுன்ஹால் பகுதியில் பீஃப் பிரியாணி ஹோட்டல் நடத்திட்டு வந்திருக்கார். 65 வயசு இருக்கலாம்."

நம்பெருமாள் சொல்ல... விவேக் பங்கஜ்குமாரை ஏறிட்டான். "சார், இவர் சொல்கிற அடையாளங்களில் உங்களுக்கு யாரையாவது தெரியுமா?"

பங்கஜ்குமாரின் தொண்டைக் குழி ஒரு சின்ன அவஸ்தையில் துடித்து, அந்தத் துடிப்பு 'தெ... தெ... தெரியாது' என்ற வார்த்தையாக வெளிப்பட்டது. உடனே நம்பெருமாள், "தென்... நோ பிராப்ளம் சார்! உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லிட்ட பிறகு, இந்தப் பிரச்னையை இனி எப்படி ஹேண்டில் பண்ணிக்கணுமோ அப்படிப் பண்ணிக்கிறேன்! ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்" என்று சொல்லி, சல்யூட் ஒன்றைக் கொடுத்துவிட்டு நகர முயன்றார்.

விவேக் குரலை நுழைத்தான்... "ஒரு நிமிஷம் மிஸ்டர் நம்பெருமாள்..."

அவர் நின்றார். "யெஸ் சார்!"

"மைக்கேல் எர்னஸ்ட் எத்தனை மணிக்குக் கொலை செய்யப்பட்டார்?"

"ராத்திரி பன்னிரண்டு மணியில் இருந்து ஒரு மணிக்குள்ளே சம்பவம் நடந்து இருக்கலாம்னு ஸ்பாட் விசிட் செய்த டாக்டர் ஒருத்தர் ரிப்போர்ட் கொடுத்து இருக்கார் சார்!"

"பாடியை பி.எம்முக்குக் கொண்டுபோயிட்-டீங்களா?"

"இல்ல சார்... பாடி ஸ்பாட்லதான் இருக்கு. ஃபாரன்ஸிக் ஆட்கள் காலையில ஆறு மணிக்குத்-தான் வந்தாங்க. ஸீன் ஆஃப் க்ரைம் பார்த்து ஃபிங்கர் பிரிண்ட்ஸைக் கலெக்ட் பண்ணிட்டு இருக்காங்க. பாடி ஜி.ஹெச் போக இன்னும் எப்படி-யும் ஒரு மணி நேரம் ஆயிடும்."

"சரி... வாங்க, போகலாம்!"

"எங்கே சார்?"

"கொலைச் சம்பவம் நடந்த இடத்துக்கு!"

p84.jpgநம்பெருமாள் நெற்றியில் சின்னதாக ஒரு திகைப்-பைக் காட்டினார். "ச... சார்! நீங்க எதுக்காக அங்கே..."

"ஏன், வரக் கூடாதா? ஒரு குற்றச் சம்பவம் தமிழ் நாட்டின் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதை விசாரித்து உண்மைகளைக் கண்டறியும் உரிமையும் கடமையும் எனக்கு இருக்கு. வாங்க, போகலாம்."

"சார், இது சாதாரண நபரோட கொலை."

"நோ! மைக்கேல் எர்னஸ்ட் ஒரு சாதாரண நபராக இருந்திருந்தா, அந்த ஆளோட டைரியில் கலெக்டரோட பர்சனல் கம்யூனிகேஷன் நம்பர்ஸ் இடம் பெற-வேண்டிய அவசியம் என்ன? அந்த நபர் ஒரு டெரரிஸ்ட்டாகக்கூட இருக்கலாமே?"

"ஆனா, அந்த ஆளைப் பார்த்தா அப்படித் தெரியலையே சார்!"

"மிஸ்டர் நம்பெருமாள்! டெரரிஸ்ட்ஸ் இப்படித்-தான் இருப்பாங்கன்னு ஏதாவது சாமுத்ரிகா லட்சணப் பட்டியல் உங்ககிட்ட இருக்கா? நாங்க கோயம்புத்தூர் வந்ததுக்குக் காரணமே, உளவுத் துறை கொடுத்த ஒரு செய்தியின் அடிப்படையில்தான்! டெரரிஸ்ட் ஊடு-ருவல் இந்த மாவட்டத்துக்குள்ளே நடந்திருக்கு. அதை ஸ்மெல் பண்ணித்தான் நாங்க வந்திருக்கோம். மைக்கேல் எர்னஸ்ட்டோட டைரி-யில் கலெக்டரின் பெர்சனல் டெலிபோன், செல்-போன் நம்பர்கள் இருப்பதைப் பார்க்கும்போது, மனசுக்குள்ளே ஒரு சந்தேகம் சம்மணம் போட்டு உட்கார்ந்தாச்சு. வாங்க ஸ்பாட்டுக்குப் போகலாம்."

நம்பெருமாள் தயக்கத்தோடு வெளியில் நின்றிருந்த ஜீப்பை நோக்கிப் போனார். அவருடைய தலை மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்த விவேக், பின் பங்கஜ்குமாரை ஏறிட்டான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினான்.

"சார்... மைக்கேல் எர்னஸ்ட் வர்றதுக்குப் பதிலாக அந்த ஆளோட மரணச் செய்தி வந்திருக்கு. இதை நாம எதிர்பார்க்கலை. மைக்கேலோட கொலைக்குப் பின்னாடி ஏதோ ஒரு பெரிய விவகாரம் இருக்கு. அதைக் கிளறிப் பார்க்கத்தான் டெரரிஸ்ட் என்கிற வார்த்தையை உபயோகிச்சேன். நாங்க ஸ்பாட்டுக்குப் போறோம்."

பங்கஜ்குமார் வியர்த்துப்போன முகத்தோடு ஒரு பயப் பார்வையைச் சுற்றிலும் செலுத்திக்-கொண்டே பேசினார்... "விவேக்! இந்தப் பிரச்னையை இப்படியே விட்டுட்டா என்ன?"

"பிரச்னையை விடறதா... எப்படி சார்? மைக்கேல் எர்னஸ்ட் செத்துட்டாலும் அல்போன்ஸ் இருக்-கானே! அவன் நாளைக்கு இந்தப் பிரச்னையோடு உங்க முன்னாடி வந்து நின்னா, என்ன பண்ணுவீங்க? எல்லாத்துக்கும் மேலாக உங்க மனைவி மின்மினி மேல் இருக்கிற கரை போக வேண்டாமா?"

"விவேக், எனக்குப் பயமாயிருக்கு. விவகாரம் இப்போ வேற திசையில் பயணம் பண்ணிட்டு இருக்கு. என்னை யாரோ குறி பார்த்து அடிக்குறாங்கன்னு தோணுது!"

"சார்! இப்ப பிரச்னை சிக்கலாயிருச்சுங்கிறது உண்மை--தான். அதுக்காக நாம பயப்பட வேண்டியது இல்லை. மைக்கேலோட மரணத்துக்குக் காரணம் யார்னு தெரிஞ்சா, இதை உடனடியா ஒரு முடிவுக் குக் கொண்டுவந்துடலாம். சரி, உங்க மனைவி வர்றாங்க. நாங்க கிளம்பறோம் சார்!"

இருண்ட முகத்தோடு பங்கஜ்குமார் தலையாட்டி-வைக்க, விவேக்கும் விஷ்ணுவும் வெளியே ஜீப்பில் காத்திருந்த நம்பெருமாளை நோக்கிப் போனார்கள். விஷ்ணு எரிச்சலாக முணுமுணுத்தான்...

"என்ன பாஸ்... சொந்தச் செலவுல யாராவது சூனியம் வெச்சுக்குவாங்களா?"

"அப்படி யார்றா வெச்சுக்கிட்டது?"

"நீங்கதான் பாஸ்! நாம கோயம்புத்தூருக்கு என்ன வேலையா வந்தோம்? இப்ப என்ன வேலை பார்த்துட்டு இருக்கோம்? மைக்கேல் எர்னஸ்ட்டும் அல்போன்சும் வந்திருந்தா, மின்மினி 24 காரட்டா... 14 காரட்டா என்ற உண்மை தெரிஞ்சிருக்கும். பிரச்னையும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஆனா, இப்போ நம்ம நிலைமையைப் பார்த்தீங்களா? பீஃப் பிரியாணி கடையை நடத்திட்டு இருந்த மைக்கேல் எர்னஸ்ட்டுக்கு மலர்வளையம் வைக்கப் போயிட்டு இருக்கோம். இது தேவையா?"

"டேய்... ஒரு அரை மணி நேரத்துக்குக் கொஞ்சம் உன் திருவாயை மூடிட்டு வர்றியா?"

p84c.jpgடவுன் ஹாலை ஒட்டிய சந்தில் நுழைந்து, அதற்கு மேல் போக முடியாமல் அப்படியே நின்றது போலீஸ் ஜீப். நம்பெருமாள் கீழே இறங்கி முன்னால் நடக்க, விவேக்கும் விஷ்ணுவும் பின் தொடர்ந்தார்கள். சந்து அவ்வளவு சுத்தமாக இல்லை.

'இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்' என்று சுவரில் எழுதப்பட்டு இருந்த கட்டளையை அந்தப் பகுதி மக்கள் மீறியதன் விளைவு, குபீர் குபீரென்று காற்றில் மூத்திர நாற்றம் அடித்து, அடி வயிற்றில் ஒரு சூறாவளியை உண்டாக்கிவிட்டு ஓய்ந்தது. சுவாச மண்டலமே ஸ்தம்பித்துப் போயிற்று.

மூன்று பேரும் சின்னச் சின்ன சாக்கடைகளைத் தாண்டி நடந்-தார்கள். நம்பெருமாள் சொன்-னார், "சார்... மைக்கேல் கொலை செய்யப்பட்டது இந்த சந்தில் இருக்கிற நிறையப் பேருக்குத் தெரியாது. அதான், அவ்வளவாகக் கும்பல் இல்லை. இந்த வீடு தான் சார்!" சிதிலப்பட்டுப் போயிருந்த வாசற்படிகள் ஏறி, வெறுமனே சாத்தியிருந்த கதவைத் தள்ளிக்-கொண்டு நம்பெருமாள் உள்ளே போனார்.

பெரிய பெரிய சுவர்களோடு பழைமையான பெரிய வீடு. முன் பக்கத் தாழ்வாரத்தில் பரபரப்பாக இயங்-கிக்-கொண்டு இருந்த ஃபாரன்ஸிக் அதிகாரிகளுக்கு நடுவே, தரையில் குப்புற விழுந்து கிடந்தார் மைக்கேல் எர்னஸ்ட். பின்னந்தலை ஏதோ ஒரு கனமான ஆயுதத்தால் பலத்த அடி வாங்கி, சிவப்பாகச் சிதைந்து போயிருந்தது. கழுத்து எலும்புகள் நொறுங்கித் தெரிந்தன.

விவேக் நம்பெருமாளை ஏறிட்டான்.

"மரணம் எப்படி?"

"சார்... இது ஒரு மூர்க்கமான கொலை. கொலை-யாளி கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதத்தைப் பார்த்தப்ப ஆடிப் போயிட்டேன்."

"அப்படி என்ன ஆயுதம் அது?"

"வாங்க சார்... பார்க்கலாம்!" நம்பெருமாள் அந்த அறையின் மூலைக்குக் கூட்டிப் போய், சுவரோடு சுவராக சாத்திவைக்கப்பட்டு இருந்த அந்த இரும்-பாலான உலக்கையைக் காட்டினார். அதன் உருண்டையான முன் பகுதி ரத்தத்தில் குளித்து, கருஞ்சிவப்பு நிறத்தில் உறைந்து போயிருந்தது. ஈக்கள் மாநாடு போட்டிருந்தன.

நம்பெருமாள் குரலைத் தாழ்த்தி, "சார், இந்த இரும்பு உலக்கையோட எடை 20 கிலோ. இந்த உலக்கையை எதுக்குப் பயன்படுத்துவாங்க தெரி யுமா? மாட்டை அடிச்சுக் கொல்றதுக்கு! நான் பார்த்திருக்கேன். மாட்டை ஒரு தடுப்பு வேலிக்குள்ளே கட்டிப் போட்டுட்டு, அதனோட நெத்தி-யைப் பார்த்து இந்த உலக்கையால ஒரே போடு! மாடு சாணம் தள்ளி, வாயில் ரத்தம் நுரை கக்கி..." கண்களில் பரவிய பயத்தோடு 'போதும்' என்று கையமர்த்திய விவேக், சில விநாடிகள் மௌனமாக இருந்துவிட்டுக் கேட்டான்...

"மைக்கேல் எர்னஸ்ட்டோட குடும்பத்தில் வேற யார் யாரெல்லாம் இருக்காங்க?"

"அக்கம்பக்கத்துல விசாரிச்சேன்! மைக்கேலுக்கு வொய்ஃப் கிடையாது. ஒரே ஒரு மகன் மட்டும்தான். பேரு அல்போன்ஸ்."

"அல்போன்ஸ் எங்கே?"

"நான் இங்கே வரும்போது அவன் வீட்ல இல்லை சார்! அவன் எங்கே போனான்னு யாருக்கும் தெரியலை."

"அப்பாவுக்கும் மகனுக்கும் ஏதாவது பிரச்னையா?"

"அதையும் விசாரிச்சேன் சார். அப்படி அவங்க சண்டை போட்டு நாங்க பார்த்தது இல்-லைன்னு பக்கத்து வீட்ல சொன்னாங்க. இனிமேதான் டீப்பா என்கொயரி பண்ணணும்!" - நம்பெருமாள் சொல்லிக்கொண்டு இருக்கும்-போதே...

"சார், நான் ஒரு தகவல் சொல்லலாமா?" - பக்கவாட்டில் ஒரு பெண் குரல் கேட்டு, விவேக் திரும்பிப் பார்த்தான்.

சுடிதாரில் அந்த இளம் பெண் தெரிந்தாள். "சார்! என் பேர் ரமலத். ஒரு கால்சென்டர்ல வொர்க் பண்-றேன். எதிர் வீட்லதான் குடியிருக்-கேன். டியூட்டி முடிஞ்சு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி-தான் வந்தேன். வீட்ல விஷயத்தைச் சொன்-னாங்க. உடனே இங்கே வந்தேன். மைக்கேல் அங்கிள் ரொம்பவும் நல்லவர். அவருக்கு இப்படியரு மரணம் வந்திருக்கக் கூடாது."

விவேக் அவளை நெருங்கி, "நீ என்னமோ சொல்ல வந்தியே... அதைச் சொல்லும்மா..."

"சார்... நேத்து சாயந்தரம் நாலரை மணி இருக்கும், பர்தா போட்டுக்-கிட்டு ஓர் அழகான பெண் மைக்கேல் அங்கிள் வீட்டுக்குள் போனா. அவ பர்தாவை எதேச்சை-யாக விலக்கிய-போது, நெற்றியில் பொட்டும், கழுத்-துல தாலிக்கொடி-யும் தெரிஞ்சுது."

விவேக்கும் விஷ்ணுவும் 440 வோல்ட்ஸ் மின்சாரம் பாய்ந்த உணர்வில் சரேலென்று நிமிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்-கொண்டார்கள்.

நியூயார்க்

விஜேஷ் அந்த இளைஞனை நம்பாத ஒரு பார்வை பார்த்து, அவனோடு கை குலுக்குவதைத் தவிர்த்துவிட்டுக் கேட்டான்... "என்ன பேர் சொன் னீங்க?"

அவன் சிரித்தான். "காமாட்சி! முழுப் பேர் காமாட்சி-நாதன். தாத்தா பேரைத்தான் வைக்க ணும்னு அம்மா அடம் பிடிச்சதால இந்தப் பேர். ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல என்னைக் காமாட்சின்னு கூப்பிடுவாங்க. சொந்த ஊர் காஞ்சிபுரத்துக்குப் பக்கத்தில் இருக்கிற பிள்ளையார்பாளையம்."

"என்கூட செல்போன்ல பேசினது..."

"நான்தான்."

"அந்தப் பெண் குரல்..?"

"நானே... நானே..." என்று சொன்ன காமாட்சி நாதன், தொண்டையைக் கனைத்து அட்ஜஸ்ட் செய்துகொண்டு, விஜேஷூக்கு மட்டும் கேட்கும் தொனியில் அச்சுஅசலாக ஒரு பெண்ணைப்போலவே பேசினான்... "வேண்டாம் மிஸ்டர் விஜேஷ்! அந்த வீட்டை வாங்காதீங்க. இதுக்கு முன்னாடி அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணின ரெண்டு பேர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோயிட்டாங்க. ப்ளீஸ்! அடுத்த ஃப்ளைட்டைப் பிடிச்சு பாரீசுக்குப் புறப்பட்டுப் போயிடுங்க!"

விஜேஷை வியப்பு புரட்டிப் போட்டது.

"மை குட்னஸ்! இதே குரல்தான்..."

காமாட்சி சிரித்தான். " 'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்'னு தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே... அதுக்குச் சரியான உதாரணம் நான்தான்! சின்ன வயசில் இருந்தே மிமிக்ரி பண்ணுவேன். அதிலும் பெண் குரல் எனக்கு இயல்பாக வந்தது. கல்லூரி நாடகங்களில் பெண் வேஷம் போட்டு நடிச்சிருக்கேன்..."

விஜேஷ் குறுக்கிட்டான்.... "சரி, இங்கே என்ன பண்றீங்க?"

"'நியூயார்க் டேஸ்' பத்திரிகை கேள்விப்பட்டு இருக்கீங்களா?"

"ம்... புதுசா வந்த ஒரு மேகஸின்."

"அதில் நான் சீஃப் ரிப்போர்ட்டர்."

"ஓ! சீஃப் ரிப்போர்ட்டர் வேலையோடு பார்ட் டைமா பிளாக்மெயிலர் வேலையும் பண்றீங்க போலிருக்கு."

"இதோ பாருங்க விஜேஷ், நான் உங்களை பிளாக் மெயில் பண்ணலை. ஜஸ்ட் வார்ன் பண்ணினேன். அவ்வளவுதான்!"

"அது வார்னிங் மாதிரி தெரியலை. அப்படி வார்னிங் பண்றவங்க பி.சி.ஓ-வில் ஒளிஞ்சுட்டு பெண் குரல்ல பேச மாட்டாங்க!"

"விஜேஷ்! நான் உங்ககிட்ட நிறையப் பேச வேண்டி--யிருக்கு. அதுக்கு இந்த ஹோட்டலின் வரவேற்பறை சரியான இடம் இல்லை. உங்க அறைக்குப் போயிடுவோமா?"

தயக்கமாக விஜேஷ் காமாட்சியையே பார்க்க, அவன் சிரித்தான். "ஸோ, நீங்க என்னை நம்பலை?"

"எனக்குக் குழப்பமா இருக்கு. நான் அந்த வீட்டை வாங்கப் போகிற விஷயம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்-சுது? என்னோட பெர்சனல் செல்போன் நம்பரை காண்-டாக்ட் பண்ணியிருக்கீங்க. அந்த நம்பர் எப்படிக் கிடைச்சுது?"

"சொல்றேன்... எல்லாத்தையும் சொல்றேன். உங்க அறைக்குப் போய் ஒரு பிளாக் காபி சாப்பிட்டுகிட்டே பேசலாமா?" விஜேஷ் இன்னமும் தயக்கமாகப் பார்க்க, காமாட்சி தன் தோள்பட்டைகளை 'ஜெர்க்' செய்து, கைகளை விரித்தான்.

"ஓ.கே. விஜேஷ்! உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலை. நோ பிராப்ளம்! இந்தாங்க என்னோட விசிட்-டிங் கார்டு. உங்களுக்கு என் மேல எப்ப நம்பிக்கை வந்து பேசணும்னு தோணுதோ, அப்ப போன் பண்-ணுங்க. நான் வர்றேன். பட் ஒன் திங்க்... அந்த வீட்டை மட்டும் வாங்க அக்ரிமென்ட் போட்டுடா-தீங்க, ப்ளீஸ்..! இதுக்கு முன்னாடி அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணின ரெண்டு பேரும் ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோகலை. ரொம்பவும் சாதுர்ய-மான முறையில் கொலை செய்யப்பட்டு இருங்காங்க. அதுக்கான ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு. அந்த ஆதாரங்களை எல்லாம்..." என்று சொல்லிக்கொண்டே போன காமாட்சி, சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டான். கண்களில் கலவரம்.

விஜேஷ் குழப்பமாக, "ஏன் பேச்சை நிறுத்திட் டீங்க?" என்றான்.

"உ... உ... உங்களுக்குப் பின்னாடி பாருங்க..."

-பறக்கும்

 

https://www.vikatan.com

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/23/2018 at 9:04 PM, சுவைப்பிரியன் said:

இதை யாராவது இணையுங்கோ புண்ணியமாகப் போகும்.

இது இலவசமாகக் கிடைக்காதாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, கிருபன் said:

இது இலவசமாகக் கிடைக்காதாம்?

உங்கள் முயற்ச்சிக்கு நன்றி.?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.