Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை, மாங்காயூற்றில் மாதிரிக்கிராமங்கள் கையளிப்பு

Featured Replies

திருகோணமலை, மாங்காயூற்றில் மாதிரிக்கிராமங்கள் கையளிப்பு

 

 

திருகோணமலை, மாங்காயூற்றில் மாதிரிக்கிராமங்கள் கையளிப்பு-Semata Sevana-House Handover Ceremony-Sajith-R Sampanthan

 

  • தெட்சனாபுரத்தில் 25, கைலாயபுரத்தில் 22 வீடுகள்
  • நல்லாட்சி அரசு மக்கள் நலனில், மற்றொரு பிரிவு சிம்மாசனத்திற்கு முண்டியடிப்பு - சஜித் பிரேமதாச

அனைவருக்கும் நிழல் (செமட்ட செவண) எனும் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட 99 ஆவது மற்றும் 100 ஆவது மாதிரிக் கிராமங்களான தெட்சனாபுரம் மற்றும் கைலாயபுரம் ஆகிய மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இன்று (29) இடம்பெற்ற நிகழ்வில், வீடமைப்பு மற்றும் நிரமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இம்மாதிரிக் கிராமங்கள் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டதோடு, எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனும் இதில் கலந்து கொண்டார்.

இதில் தெட்சனாபுரத்தில் 25 வீடுகளும் கைலாயபுரத்தில் 22 வீடுகளும் அடங்குகின்றன. இங்கு நீர், மின்சாரவசதி மற்றும் பாதைவசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச,

 

 
 

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாதத்திற்கு முன் 2,500 மாதிரிக்கிராமங்களை நிர்மாணிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டு அனைத்து மக்களதும் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதன் அடிப்படையில் தான் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் மக்களது தேவைகள் அறிந்து செயற்படுவதாகவும் இன்னொரு பிரிவினர் அரச சிம்மாசனத்தை மீள பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் முண்டியடிப்பதாகவும், மக்கள் அதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். தௌபீக், கே. துரைரட்ணசிங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ..ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

http://www.thinakaran.lk/2018/07/29/உள்நாடு/25732/திருகோணமலை-மாங்காயூற்றில்-மாதிரிக்கிராமங்கள்-கையளிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கயிறாவது இழுத்து விடுறாறே ஐயா:grin: 

நன்றி சஜித் பிரேமதாசா அவர்களுக்கு :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாதத்திற்கு முன் 2,500 மாதிரிக்கிராமங்களை நிர்மாணிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, 2025 ஆம் ஆண்டு அனைத்து மக்களதும் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதன் அடிப்படையில் தான் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கிற மாதிரி 

சொந்த வீடுகளில் இருந்த தமிழ் மக்களையும் மீண்டும் அவரவர் வீடுகளில் சந்தோசமாக வாழ வழி செய்யுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.