Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரியாணிக்கடை ஊழியர்களிடம் பாக்ஸிங்... தி.மு.க. நிர்வாகி யுவராஜ் பின்னணி

Featured Replies

பிரியாணிக்கடை ஊழியர்களிடம் பாக்ஸிங்... தி.மு.க. நிர்வாகி யுவராஜ் பின்னணி

 
 

பிரியாணி கடை ஊழியர்களைத் தாக்கிய  யுவராஜ்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரியாணிக்கடையில் ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க நிர்வாகி யுவராஜ் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல பிரியாணிக்கடையில், கடந்த 29-ம் தேதி இரவு 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்து ஊழியர்கள், மேலாளர், உரிமையாளர் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது, தாக்குதல் நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் போலீஸாரிடம் கொடுத்தனர். அந்த வீடியோ வெளியானதும், சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகிகள் யுவராஜ், திவாகர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தது கட்சித் தலைமை. தொடர்ந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு இன்று சென்றார். தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

 

பிரியாணி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஊழியர்களையும் மேலாளரையும் 'பாக்ஸர்' போல முகத்திலேயே குத்தியவர் யுவராஜ். அவரின் பின்னணி குறித்து தி.மு.க-வினரிடம் விசாரித்தோம். 

 ``யுவராஜ், சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போதே பல சர்ச்சை சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. ஜிம் வைத்து நடத்தினார். அப்போதுதான் அவருக்கு சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்து அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபலமானவர் ஒருவருக்கு வலதுகரமாக யுவராஜ் செயல்பட்டார். அப்போது அந்த பிரபலமானவருக்கு போலீஸார் நெருக்கடி கொடுத்ததும் அவரிடமிருந்து விலகினார். அதன்பிறகு காங்கிரஸை விட்டு பிரிந்துசென்ற ஒருவரின் கட்சியில் சேர்ந்தார். சட்டமன்ற தேர்தலின்போதுதான் தி.மு.க.வில் இணைந்தார். யுவராஜ், கைகளிலும் கழுத்திலும் செயின், கைசெயின், மோதிரங்களை அணிந்திருப்பார். இதனால்தான் அவரை நடமாடும் நகைக்கடை என்று தி.மு.க-வினர் அழைப்பார்கள்" என்றனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/132790-attack-over-briyani-shop-dmk-party-member-yuvraj-background-information.html

  • தொடங்கியவர்

தாக்கப்பட்ட பிரியாணி கடைக்கு நேரில் சென்றார் ஸ்டாலின்: ஊழியர்களுக்கு ஆறுதல்

 

 

download

ஸ்டாலின் பிரியாணி கடை ஊழியர்களுடன்

 பிரியாணி கடையில் பாக்ஸிங் பாணியில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தாக்கிய கட்சி ஊழியர்கள் யுவராஜ் மற்றும் திவாகர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவத்தை ஏற்கெனவே கண்டித்திருந்த ஸ்டாலின், இன்று தாக்குதலுக்குள்ளான பிரியாணி கடைக்கு நேரில் சென்றார்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை மூடிவிட்டு கணக்கு பார்த்துக் கொண்டிருந்த மேனேஜர் பிரகாஷிடம் ஒரு கும்பல் வம்பிழுத்தது.

 
 

அவர்கள் அனைவரும் பிரியாணி கேட்டனர். அனைத்தும் முடிந்து கடையை மூடிவிட்டோம் என்று மேனேஜர் பிரகாஷ் கூறியுள்ளார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், 'நாங்கள் யார் தெரியுமா? எங்களுக்கே இல்லை என்கிறாயா? தலைவர் உடல்நிலை இப்படி இருக்கும்போது கடை திறக்கிறாயா?' என்று கேட்டுத் தாக்கினர்.

அதில் பிரதானமாக இருந்த நபர் யுவராஜ் என்பவர் பாக்ஸிங் ஸ்டைலில் சரமாரியாக மேனேஜரைத் தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாக்கும் நபர் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ் என்று தெரியவந்தது.

சிறிது காலம் இந்து அமைப்பு ஒன்றில் இருந்து கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்ட அவர் 2016-ல் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 27-ம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

இந்த சம்பவத்தில் யுவராஜ், திவாகர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். தாக்குதல் விவகாரம் நெட்டிசன்களால் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இது மின்னல் வேகத்தில் இணையதளத்திலும், வாட்ஸ் அப்பிலும், முகநூலிலும் பரவியது.

ஏற்கெனவே இந்தப் பிரச்சினையில் திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் ஹோட்டல் உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்ததோடு இதை திமுக ஏற்றுக்கொள்ளாது நாங்கள் உங்கள் பக்கம்தான் நிற்போம் என்று கூறியிருந்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் இந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவிலிருந்து யுவராஜ், திவாகர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தாக்கப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் தமிழ்ச்செல்வனை அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் அழைத்த ஸ்டாலின் ஊழியர்களிடம் நலம் விசாரித்தார்.

பின்னர்  தாக்குதலுக்குள்ளான ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு உள்ளே சாப்பிடும் மேஜையில் அமர்ந்து ஊழியர்களை அழைத்து நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார்.

தாக்கப்பட்ட வீடியோ காட்சியில் உள்ள இடங்களையும் பார்த்தார். பின்னர் ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை நிச்சயம் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து புறப்பட்டுச் சென்றார். ஸ்டாலினே நேரில் வந்ததால் ஹோட்டல் உரிமையாளர், ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

பதைபதைத்துப் போய் விசாரித்தார்; என்ன உதவி வேண்டும் என்றார்: ஸ்டாலின் நேரில் வந்ததால் நெகிழ்ந்த பிரியாணி கடைக்காரர் பேட்டி

 

 
37ff380f-8d2f-4160-9ccc-b59a47bb62ce%201

பிரியாணி ஹோட்டலில் ஊழியர்களை நலம் விசாரிக்கும் ஸ்டாலின்

 சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் என்னை அழைத்து பதைபதைத்துப்போய் கேட்டார், என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றார், அவர் அன்பால் நெகிழ்ந்து போனோம் என்று பிரியாணி கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

பிரியாணி கடையில் ஊழியர்களை திமுகவினர் தாக்கிய வீடியோ வைரலாகி கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற வன்முறைகளை எந்நாளும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்று அவர் தெரிவித்து அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றார்.

 
 

இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டு ஓட்டல் ஊழியர்களைத் தாக்கிய யுவராஜ், திவாகர் இருவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

ஸ்டாலின் தனது ஹோட்டலுக்கு நேரில் வந்து ஆறுதல் கூறிச் சென்றதில் பெரிதும் நெகிழ்ந்து போன பிரியாணிக்கடைக்காரர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “நேற்றே எங்களை அறிவாலயத்துக்கு ஸ்டாலின் அழைத்தார், அண்ணா அறிவாலயம் சென்றோம், தாக்கப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றோம். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன அவர் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டார். பின்னர் எந்தப் பகுதியில் கடை உள்ளது என்று கேட்டார்.

விருகம்பாக்கத்தில் கடை அமைந்துள்ள இடம் பற்றிக் கூறினோம். நாளை நான் நேரில் வருகிறேன் என்றார்.  நாங்கள் பதறிப்போய், உங்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எங்களைத்தான் அழைத்து பார்த்துவிட்டீர்கள், உங்கள் பணிகளுக்கு இடையூறாக எதற்கு வரவேண்டும் என்று தெரிவித்தோம். இல்லை எனக்கு மனது கேட்கவில்லை வந்தே தீருவேன் என்று நேரில் வந்தார்.

ஊழியர்களிடம் நலம் விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டார், தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும், உங்களுக்கு வேறு என்ன மாதிரி உதவி வேண்டும் என்று தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நாங்கள் நெகிழ்ந்து போனோம். நீங்கள் வந்ததே எங்களுக்குப் போதும் வேறு உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டோம்'' என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

 

https://tamil.thehindu.com/tamilnadu/article24580088.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

Power of social media!!

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின்  முகத்தில் உங்களால் எல்லாமே போச்சு கடும் கோபத்தில் அந்த பிரியாணி கடைக்கு போனது போல இருக்கு  முகமே காட்டிகொடுக்குது ஆட்சியை பிடிச்சால் முதல் பலி அந்த புரியானிகடையாத்தான் இருக்கும் போல் தென்படுது .

1 hour ago, Nathamuni said:

Power of social media!!

கருணாநிதிக்கு பட்டம் கொடுப்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மாணவ தலைவன் சத்தமில்லாமால் கொல்லப்படும்போது இந்த சமூக வலைத்தளம்கள் இல்லையே என்று யோசிக்க தோணுது .

 

  • தொடங்கியவர்

பிரியாணி கடையில் பாக்சிங்; 6 பேர் கைது: தலைமறைவாக உள்ள யுவராஜ், திவாகருக்கு வலை

 

 
download%203

கைதான 6 பேர்

பிரியாணி கடையில் ஓசி பிரியாணி கேட்டு பாக்சிங் போட்டு ஊழியர்களை தாக்கி தலைமறைவாக இருக்கும் 11 பேரில் 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருகம்பாக்கம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி கடையில் கடந்த 27-ம் தேதி பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ், திவாகர் உட்பட 11 பேர் கடை ஊழியர்களை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்திய அளவில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.

 

இதையடுத்து யுவராஜ், திவாகர் இருவரையும் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தனர். இன்று மு.க.ஸ்டாலின் விருகம்பாக்கம் பிரியாணி கடைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதையடுத்து இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான ஓட்டல் ஊழியர்களான பிரகாஷ் மற்றும் கருணாநிதி ஆகியோரிடம் நலம் விசாரித்தார்.

ஏற்கனவே, காயமடைந்த பிரகாஷ்(32), மற்றும் கருணாநிதி(35) ஆகியோர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில், ஓட்டலில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சாலிகிராமத்தை சேர்ந்த கார்த்திக்(22), மணிகண்டன்(23) கிஷோர் (எ) குட்டி கிஷோர்(19), ராம்ஷோர் (எ) பெரிய கிஷோர்(23), சுரேஷ், (எ) சிலுவை சுரேஷ்(19), சதிஷ்குமார் (எ) சதிஷ்(23), ஆகிய 6 பேரை இன்று கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான யுவராஜ் மற்றும் திவாகர் ஆகிய 2 பேரை விருகம்பாக்கம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24584761.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.