Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மாநகரில் ஐ.பி.சி தமிழின் அறப்பணி!

Featured Replies

யாழ்ப்பாண மாநகரில் ஐ.பி.சி தமிழின் அறப்பணி!

 

 

தாயக மண்ணையும் மக்களையும் மனதிற்கொண்டு ஐ.பி.சி தமிழால் மாதந்தோறும் முன்னெடுக்கப்படும் சமூக சேவைச் செயற்றிட்டமான உயிர்ச்சுவடு அறப்பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

உயிர்ச்சுவடின் இம்மாதத்திற்கான அறப்பணியாக யாழ் மாநகரத்தைச் சுத்தமாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவரான கந்தையா பாஸ்கரன் குடும்பத்தினர் உட்பட தாயக கலையகப் பணியாளர்கள், யாழ் மாநகரசபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பணியாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பணியாளர்கள், யாழ்ப்பாணம் ரொட்றிக் தாய்க் கழகத்தின் ஐந்து ரொட்ரக் கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் யாழ்.இந்துக் கல்லூரியின் சாரணர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

காலை எட்டு மணியளவில் ஐ.பி.சி தமிழின் தாயகக் கலையக முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த நிகழ்வினை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாநகரசபை முதல்வர் ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.

பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தாயகக் கலையக முன்றலிலிருந்து ஆரம்பமான நகரத்தைச் சுத்தமாக்கும் செயற்பாடு வைத்தியசாலை வீதியூடாக யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து நகரச் சுற்றுவட்டாரத்திலுள்ள முக்கிய வீதிகளூடாக சென்று இறுதியாக விக்டோரியா வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து தாயக கலையகத்தை வந்தடைந்தது.

இந்தச் சுத்தமாக்கும் செயற்பாட்டின்போது நகர வீதிகள் மற்றும் வீதி ஓரங்களில் காணப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக், கடதாசி உள்ளிட்ட கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதன்போது யாழ் போதனா வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி ஒன்றும் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனம் ஒன்றும் உடனடிச் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டன.

இன்றைய எமது உயிர்ச்சுவடு அறப்பணியில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்.மாநகரசபை, யாழ்.ரொட்றிக் கழகம், யாழ்.இந்துக்கல்லூரி சாரணர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது ஊடக வலையமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தாய் மண்ணையும் மக்களையும் மனதிற்கொண்டு மாதந்தோறும் எம்மால் முன்னெடுக்கப்படும் சிறுதுளி முயற்சியான உயிர்ச்சுவடு அறப்பணியில் ஏனைய பொது அமைப்புக்களையும் சமூக நலன்விரும்பிகளையும் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/104305?ref=home-imp-flag

பாராட்ட வேண்டுய சிறந்த பணி. இது வீண் வேலை இதற்கு செலவிடப்படும் பணத்திற்கு நாலு கோவிலுக்கு பொங்கி வடை மாலை சாத்தி  இருக்கலாம் என்று யாழ்ப்பாணத்தில் உள்ளோர் நினைப்பார்கள். இருந்தாலும் துணிந்து பணி செய்யும் இளைஞர்களுக்கு நன்றிகள். 

  • தொடங்கியவர்

வணக்கம் தாய்நாடு....

ஐபிசி தமிழ் உயிர்ச் சுவடு இரண்டாவது செயல்திட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த முயற்சி. விளம்பரம் தேடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்வதானால் அது இன்னும் நல்ல விடயம். அத்துடன் சிரமதானம் செய்வோருக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு குப்பை கூழங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் முறையைும் அதன் அபாயங்களும் பற்றிய விளக்கம் வழங்கப்படுதல் வேண்டும். குறிப்பாக அரசினர் அல்லது தனியார் வைத்தியசாலை கழிவுகள்,  குப்பையுடன் காணப்படும் மருந்து ஏற்றும் ஊசிகள் என்பன  வெறும் கையால் தொடக்கூடிய கழிவுப்பொருட்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்ட வேண்டுய சிறந்த பணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.