Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்துப்பிழைகள் இல்லாமல் எப்போது எழுதுவோம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறையப் பேர்கள், தமிழில் கருத்து எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றே. ஆனால், அசட்டை காரணமாக மூத்த கள உறுப்பினர்கள் கூட, எழுத்துப் பிழைகளை விடுகின்றார்கள். இவர்களின் தமிழ் அறிவு குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

ண,ன,ந வில் பிழை விடுவது. அல்லது, "ா" போடுவதில் தவறு விடுவது என்று நிறையவே எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. ஆரம்பகாலத்தில் எழுதுவது தட்டச்சுத் தவறாகக் கணித்தாலும் கூட, குறைந்தபட்சம் 500 கருத்துக்களைத் தாண்டிய பின்னரும் விடப்படுகின்ற எழுத்துப் பிழைகளை எவ்வாறு கருதுவது?

அது வேண்டுமென்று செய்கின்ற செயலாகத் தானே கருத முடியும்? உப்புச்சப்பில்லாத அரட்டைகளுக்கு செலவளிக்கும் நேரத்தில், எழுதிய பின்னர், எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் பார்த்தால் குறைந்தா போய்விடும்?

யாழ்களத்தில் கருத்துக்கள் எழுதுவதல்ல பிரச்சனை. இக் கருத்துக்களை தமிழ் படிக்க விரும்புகின்ற இளையசமூதாயத்திற்கு கொண்டு செல்கின்றபோது, அவர்களுக்கு தவறான தமிழ் சொற்கள் தானே வழிகாட்டியாக இருக்கப் போகின்றது.

இணையம் என்பது பயன்பாடுள்ளது. நாங்கள் யாழ்களத்தில் அரட்டை அடிப்போம், கேட்க நீர் யார் என்று என்று கேட்கின்றவர்கள், நிச்சயம் எதிர்காலச் சந்ததி குறித்து அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்ப முடியாது.

பயன்பாடாக உள்ள இணையத்தை, தமிழ்கொலைக்கு எனிவரும் காலங்களில் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுப்போம். தூய தமிழ்சொற்கள் குறித்தான குறைபாடுகள் இருந்தாலும், எம்மால் முடிந்தவரை தமிழ் உலகை வளப்படுத்துவோம்.

தமிழ் வளர்க்கின்றோம் என்று மார்தட்டிக் கொண்டு தாங்களாவே செய்கின்ற தவறுகள், தமிழ் குறித்த அனைவரினதும், கேவலமான செயற்பாட்டையே நிலை நிறுத்துகின்றன.

Edited by ஒற்றன்

எழுத்துப்பிழைகள், அதுவும் இணையத்தில், அதுவும் கருத்துக்களத்தில் வருவது தவிர்க்க முடியாது. நாம இந்த அளவுக்கு தமிழில் முக்கி, முக்கி எழுதுவதே பெரிய விசயம் :o

  • கருத்துக்கள உறவுகள்

விரல்மொழியில் அடிவாங்கியிருந்தால் தமிழ் மொழியில் பிழை வராமல் இருக்கும்..

இணையத்தில் எழுதும்போது, பிழைகளைத் திருத்துவது எப்படியென்று எல்லோருக்கும் உடனடியாகத் தெரியாது. படிப்படியாக முன்னேற்றம் வரும்.

தவறுகள் தவிர்க்க முடியாதவை, வேணுமென்றே விடப் படுவதில்லை, நேரமின்மை போன்ற காரணங்களினாளும் தவறுகள் வருகின்றன அவை தவிர்க்க படவேண்டியவை,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துப்பிழைகள், அதுவும் இணையத்தில், அதுவும் கருத்துக்களத்தில் வருவது தவிர்க்க முடியாது. நாம இந்த அளவுக்கு தமிழில் முக்கி, முக்கி எழுதுவதே பெரிய விசயம் :o

மாப்பிளை அவர்களே. ஒரு ஆங்கிலச் சொல்லில் எழுத்துப் பிழை விட்டால் கேலியாகச் சிரிக்கின்றோம். அது பள்ளி வாழ்க்கையிலாகட்டும், இணையத்திலாகட்டும். ஆனால் இங்கே, தமிழில் எழுதப்படுகின்ற போது, விடப்படுகின்ற எழுத்துப் பிழைகள், எவ்வித கூச்சமும் இல்லாமல் நியாயப்படுத்துவது எவ்வகை நியாயம்?

தமிழில் எழுதுவதை முக்கி, முக்கி எழுதுவது என்றும், அவ்வாறு எழுதுவது பெரிய வேலை என்றும் அவமானப்படுத்தாதீர்கள். ஒரு பக்க கருத்தை எழுதி விட்டு, மேற்பார்வை செய்து விட்டு அனுப்புவது பெரிய வேலையா?

தவறுகள் தவிர்க்க முடியாதவை, வேணுமென்றே விடப் படுவதில்லை, நேரமின்மை போன்ற காரணங்களினாளும் தவறுகள் வருகின்றன அவை தவிர்க்க படவேண்டியவை,

நீங்கள் 2000க்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதியிருக்கின்றீர்கள். கடந்த இரண்டு மாத காலப்பகுதியில். உங்களுக்கு கூட நேரமில்லை உண்டா? தவறுகளைத் தவிர்ப்போம். அது எல்லோருக்கும் பொதுவானது. நான் தவறுவிட்டால் கூட, அதைச் சுட்டிக் காட்டுங்கள்.

மாப்பிளை இவ்வளவு செயற்திட்டம் செய்கின்றார். தமிழ் சொல்களில் தூய்மையாக எழுதுவது பற்றி ஏன் எந்த செயற்திட்டத்தையும் முன் வைக்கவில்லை?

ஒற்றனிற்கு ஒரு தகவல், நீங்கள் "எனிவரும;"; என்று பாவிக்கும்

பதத்திற்கான சரியான வடிவம் "இனிவரும்" என்பதாகும் :o

அனைவரிற்கும் சிலசயம் எழுத்தில் தவறுகள் வரலாம் என்பதற்காக

மட்டுமே மேற்படி விசயத்தைக் குறிப்பிட்டேன். எனினும், நீங்கள்

சொல்வது போல் நாம் அனைவரும் சிரத்தை எடுத்து முயன்றால்

தவறின்றி எழுதலாம் என்ற கருத்தை வரவேற்பதோடு அதனோடு

முற்றாக உடன்படுகின்றேன் (எனக்கு தமிழில் உள்ள பெரிய

பிரச்சினை "ழ" மற்றும் 'ள" பிரயோகம்).

Edited by Innumoruvan

ஈழத்தில் இருந்து கொண்டு தமிழில் எழுத்துப் பிழைவிட்டு எழுதினால், அதற்காக கூச்சப்படுவதில் அர்த்தம் உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் நமக்கு இந்த உணர்வுகளெல்லாம் இல்லை, மன்னிக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருந்து கொண்டு தமிழில் எழுத்துப் பிழைவிட்டு எழுதினால், அதற்காக கூச்சப்படுவதில் அர்த்தம் உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் நமக்கு இந்த உணர்வுகளெல்லாம் இல்லை, மன்னிக்கவும்!

***********************************************************

நீங்கள் எவ்வளவு ஆக்கங்களையோ, ஆய்வுகளையோ அல்லது கருத்துக்களையோ பதிவு செய்கிறீங்கள் என்பதல்ல முக்கியம் அது எப்படி அமைகிறது என்பதை கவனத்தில் கொண்டால் இயன்றளவு தவறுகளை நாங்களே திருத்திக் கொள்ளலாம் என்பது தான் எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் இருந்து கொண்டு தமிழில் எழுத்துப் பிழைவிட்டு எழுதினால், அதற்காக கூச்சப்படுவதில் அர்த்தம் உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் நமக்கு இந்த உணர்வுகளெல்லாம் இல்லை, மன்னிக்கவும்!

ஏற்கனவே நீர் ஆங்கில பித்தன் என்பதைக் களத்தில், ஆங்கிலப்பாடல்கள் குறித்து எழுதியபோது அறிந்த ஒன்று தான். ஆனால் களவிதிகளாக இங்கே இணைக்கப்பபட்ட ஒன்று, தமிழ் மொழியிலேயே எழுத வேண்டும் என்பது.

புலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளே, தமிழ்படித்துத் தூய தமிழில் பேசுகின்றபோது, நீர் தமிழ் குறித்து அருவருப்புப்படுவது கேவலமாக இருக்கின்றது.

புலத்தில் இருப்பவனுக்கு மொழி வேண்டாம் என்றால், தாயகம் குறித்த சிந்தனை எதற்கு? முதலில் நீர் தான் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

யாழ்களச் செயற்திட்டம் என்று நீர் கொள்கின்ற விடயங்களைப் மனதார முன்பு பாராட்டினேன். இப்போது தான் தெரிகின்றது அவை யாவும் அப்பட்டமான சுயநல நோக்கத்தினால் எழுந்தவையால் தான் என்று. உண்மையான தாயகப்பற்றால் அல்ல என்பதும்.

ஒற்றனிற்கு ஒரு தகவல், நீங்கள் "எனிவரும;"; என்று பாவிக்கும்

பதத்திற்கான சரியான வடிவம் "இனிவரும்" என்பதாகும்

உமது கண்டுபிடிப்பிற்கு மிக்க நன்றிகள். நான் முதலில் எழுத்துப் பிழைகளைப் பற்றியதே கருதியதால், அது குறித்து அவதானிக்காமல் விட்டுவிட்டேன். "எனி" என்பது வழக்கத்தில் பாவிக்கப்படும் என்ற சொல் என்பதால்.

தவறுகள் வரும் என்பதற்காக அனுமதித்துக் கொண்டிருக்கலாம் என்பது எம்மையே நாம் ஏமாற்றும் ஒன்று. தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டியது தான் மிக முக்கியம்.

ழ, ள, ப்பிரச்சனைக்கு வேறு வழியே இல்லை. கட்டாயம் அது வருகின்ற சொல்களைப் படித்தால் மட்டுமே, அத்தவறினைத் திருத்த முடியும். ஏனென்றால் அச்சொற்களில் ஒரே மாதிரிச் சொற்கள் நிறையவே உண்டு.

நாம் சொன்ன விடயங்களை அரையுங் குறையுமாக விளங்கி நண்பர் இப்போது பிதற்றத் தொடங்கியுள்ளார். மற்றவனின் நிலமை தெரியாமல் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபதுவது மிகவும் தவறு. இங்கு நான் மேலதிகமாக நண்பருக்கு விளக்கங்கள் கூறிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. இத்துடன் இந்தத் தலைப்பில் கருத்து எழுதுவதை நிறுத்திக் கொள்கின்றேன். மன்னிக்கவும், நன்றி!

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் என்ன செய்கின்றீர் என்றோ, அரசாங்கமொழியாகத் தமிழ் இல்லாத நிலையில், அங்கே ஆங்கிலம் பேச வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லையே. யாழ்களம், அல்லது இதர இணையத்தளங்களில் எழுதுகின்றபோது, எழுத்துப்பிழைகள் விடாமல் தமிழில் எழுதினால் குறைந்தா போய்விடும் என்று கேட்டதற்கு, நீர் சொன்ன பதில் நியாயமானதா?

உம் நிலமை என்னவென்று அறிய வேண்டிய தேவை எனக்கில்லை. அந்த அளவு முக்கியமானதும் அல்ல. இங்கே, நான் தலைப்பிட்டது, அனைவருக்கும் பொதுவான செய்தியைச் சொல்வதற்காகவே தவிர, உம்மை மட்டும் முக்கியப்படுத்தியல்ல என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக் கொள்கின்றேன்.

அகதியாகப் புலம்பெயர்ந்தபோதும், அடையாளங்களைத் தொலைக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் உங்களை என்ன செய்வது?

மொழி எதுவாயினும் அதைப் பிழையின்றி எழுதுவதே அம் மொழியின் வளர்ச்சிக்கு உதவும். ஆயிரமாயிரம் இணையங்கள் தமிழில் தோன்றுவதனாலோ அல்லது வலைப்பூக்கள் தோன்றினாலும் அவற்றில் எழுத்துப்பிழைகள் காணப்படுமாயின் அதனால் அம்மொழி அழிந்துபோய்விடுமே தவிர எவ்வகையிலும் வளரப் போவதில்லை. தமிழில் இருந்து கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் பிரிவடைந்து எம்முன்னே சாட்சியாய் நிற்கும் போது விடும் தவறுகளை நியாயப்படுத்த முனையாது அவற்றினை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதே மேலானது.

இன்று நூல்களை வாசிக்கும் பழக்கம் அருகி இணையத்தளங்களையே தம் வாசிப்பு மூலமாகக் கொள்ளும் சூழல் மாறிவரும் சூழ்நிலையில் இணையத்தளங்களில் வரும் எழுத்துப்பிழைகளானது ஒரு சொல்லிற்கான உண்மையான எழுத்துவடிவத்தை அறியமுடியாது மழுங்கடித்துவிடும் என்பது நிதர்சனமானது. எதிர்காலத்தில் தமிழும் இணையத்தில் வாழவேண்டுமெனில் தமிழை எழுத்துப்பிழைவிடாது எழுதுவதானது மிகவும் தேவையானது ஆகும். நாம் இருக்கும் சூழலில் தமிழில் எழுதுவது பெரியவிடயம் என்று விடும் தவறுகளை அசட்டைத்தனத்தினால் மேலும் மேலும் அதிகரிப்பதைவிட தொடர்ந்து எழுதும் போது சீர்மை காண்பதானது சிறப்பானது.

Edited by அருவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி அருவி.

ஒரு நிமிடம் எழுதிய கருத்தை மீள்சோதனை செய்து பார்ப்பதில் எவருக்கும் கஸ்டமிருப்பதாகத் தெரியவில்லை. இங்கே என் கூடச் சண்டை பிடிக்கின்றவர்களைப் பார்த்தாலே தெரிகின்றது. பல மணி நேரம் யாழ்களத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்று. ஒரு நிமிடம் சரி பார்த்தால் குறைந்தா போய் விடும்.

இன்றைக்கு தமிழ் புத்தகக் கல்வியில் இருந்து வெளியேறி தேசம் விட்டு, தேசமாக இணையத்தினூடாகவே பரவுகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தூய தமிழ்சொற்களோடு நாங்கள் உரையாடினால் தான், எம் பின்னால் வருகின்ற எம் சந்ததியினர் நல்ல தமிழ்சொற்களைச் சுவாசிக்க முடியும்.

இணையம் என்ற ஊடகத்தை எவ்வாறு தமிழீழ தேசியப் போராட்டத்திற்கு பக்கபலமாகச் செயற்படுத்துகின்றோமோ, அவ்வாறே, தமிழ்மொழியில் தரமான சொற்கூட்டங்களைப் பாவிப்பது தான் எமக்கு அவசியமானது.

யாழ்களம் என்ற ஊடகம் அரட்டையடிப்பதற்காக மட்டும் பாவிக்க கூடாது. முன்பு இருந்தவர்கள் எழுதிய ஆக்கங்கள் தொகுக்கப்படுகின்றன என்பதும், அரட்டைகள் அகற்றப்படுகின்றன என்பதையும் காணமுடிந்தது. உண்மையில் அது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஒற்றைவரி அரட்டைகள் எமக்கு அவசியமற்றதே.

நான் கூட கடந்த சில கருத்துக்களில் தவறு விட்டிருக்கின்றேன். அதற்கு மன்னிப்புக் கோருகின்றேன். எனிவரும் காலங்களில் அத்தவறுகளை விடமாட்டேன். விட்டிருப்பின் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழி எதுவாயினும் அதைப் பிழையின்றி எழுதுவதே அம் மொழியின் வளர்ச்சிக்கு உதவும். ஆயிரமாயிரம் இணையங்கள் தமிழில் தோன்றுவதனாலோ அல்லது வலைப்பூக்கள் தோன்றினாலும் அவற்றில் எழுத்துப்பிழைகள் காணப்படுமாயின் அதனால் அம்மொழி அழிந்துபோய்விடுமே தவிர எவ்வகையிலும் வளரப் போவதில்லை. தமிழில் இருந்து கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் பிரிவடைந்து எம்முன்னே சாட்சியாய் நிற்கும் போது விடும் தவறுகளை நியாயப்படுத்த முனையாது அவற்றினை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதே மேலானது.

இன்று நூல்களை வாசிக்கும் பழக்கம் அருகி இணையத்தளங்களையே தம் வாசிப்பு மூலமாகக் கொள்ளும் சூழல் மாறிவரும் சூழ்நிலையில் இணையத்தளங்களில் வரும் எழுத்துப்பிழைகளானது ஒரு சொல்லிற்கான உண்மையான எழுத்துவடிவத்தை அறியமுடியாது மழுங்கடித்துவிடும் என்பது நிதர்சனமானது. எதிர்காலத்தில் தமிழும் இணையத்தில் வாழவேண்டுமெனில் தமிழை எழுத்துப்பிழைவிடாது எழுதுவதானது மிகவும் தேவையானது ஆகும். நாம் இருக்கும் சூழலில் தமிழில் எழுதுவது பெரியவிடயம் என்று விடும் தவறுகளை அசட்டைத்தனத்தினால் மேலும் மேலும் அதிகரிப்பதைவிட தொடர்ந்து எழுதும் போது சீர்மை காண்பதானது சிறப்பானது.

சூ...?????ழலில் தமிழில் எழுதுவது பெரியவிடயம் என்று விடும் தவறுகளை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூ...?????ழலில் தமிழில் எழுதுவது பெரியவிடயம் என்று விடும் தவறுகளை

இப்படியான அசட்டையீனங்கள் தான் தமிழின் சிதைக்கு காரணம் எனக் கருதுகின்றேன்.

மொழியுணர்வு என்பது தானாக வரவேண்டியது. எவரும் ஊட்டி வருவதல்ல.

சூழல் எவ்வாறு உங்களைக் கணனியில் எழுத்துப்பிழை இல்லாது எழுதுவதைத் தடுக்கின்றது என அறிய முடியுமா? குடிகாரன் குடிப்பதற்குக் காரணம் சொல்வது போன்றதே, இதுவும் ஒரு காரணமாகும்.

இப்படியான அசட்டையீனங்கள் தான் தமிழின் சிதைக்கு காரணம் எனக் கருதுகின்றேன்.

சிதை இல்லை சிதைவுக்கு என்பது தான் சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எக்காரணமும் கூறித் தப்பித்துக் கொள்ள முடியாத தவறு தான். தவறைச் சுட்டிக்காட்டிய யமுனாவிற்கு நன்றிகள். தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் நேசிக்கும் அவனோ/ அவளோ தன்னை நேசிக்க வேண்டும் என்பதற்காக நம்மிடம் உள்ள வேண்டாத பழக்கங்களை ஒதுக்கி, தவிர்த்து எத்தனை முனைப்போடு அவர்கள் நம்மைத் திரும்பிப்பார்க்க வேண்டும் என ஆர்வம் காட்டுக்கின்றோம்.

"மொழி" நம்மையே அடையாளப்படுத்துவது. நம் சுயத்தை நாமே அவமானப்படுத்துவது நல்லதாகுமா?! தமிழை நேசிக்கின்றோம் என்று சொல்லாதீர்கள். சுவாசிக்கின்றோம் எனச் சொல்லுங்கள். சுவாசத்தில் தடைவர விடலாமா?!

அவசர அவசரமாக எதற்குத் தட்டச்ச வேண்டும்?! தமிழ் எழுத்தில் ஒரு எழுத்துப் பிசகினாலும் அது பல மாற்றுக்கருத்துக்களைக் கொண்டு வருமே?

ஆங்கிலச் சொற்கள் அதிகம் பாவிப்பதை/பயன்படுத்துவதையும் இயன்றளவு குறைத்துக்கொள்ளுங்கள்.

'மாப்பிள்ளை அவர்களே". நீங்கள் முனைப்போடு ஈடுபட்டால் முடியாது என்ற ஒன்று உண்டா?!

ஒற்றன் அவர்களே, ஆங்கிலத்தில் ஆர்வமிருப்பவர்கள் எல்லாம் தமிழை அவமதிப்பவர்கள் என்று தீர்மானித்துவிடக் கூடாது. ஆங்கில அறிவும் நமக்கு வேண்டும். அப்போதுதான் நம் தேசியத்தின் நிலமையினை மற்றோருக்குப் புரிய வைக்க முடியும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
ஆங்கில அறிவும் நமக்கு வேண்டும். அப்போதுதான் நம் தேசியத்தின் நிலமையினை மற்றோருக்குப் புரிய வைக்க முடியும்.
:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.