Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்


Recommended Posts

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்

ரஷ்யாவுடன் கூட்டுச்சதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறி டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கோவன் செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.

வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையில், 51 வயதான கோவன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.

டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'டொனால்ட் டிரம்ப் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தையும் கூற' கோவன் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் லேனி டேவிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ஆதாயம் பெறுவதற்காக கோவன் கட்டுக்கதைகளை உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கபடுவதற்காக தான் ரஷ்யாவுடன் எந்த கூட்டுச்சதியும் செய்யவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஃபாக்ஸ் அண்ட் பிரண்ட்ஸ் (Fox & Friends) தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அளித்த பேட்டியில், தன் பெயரில் பணம் செலுத்தப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டதாகவும், அதற்கும் தேர்தல் பிரசாரத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் டீ கோவன் , கடந்த 2016இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மனைவி மெலானியாவுடன் டிரம்ப் (இடது), ஸ்ட்ரோமி டேனியல்ஸ் (வலது)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிரம்ப் (இடது), ஸ்ட்ரோமி டேனியல்ஸ் (வலது)

டிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க ஸ்ட்ரோமி டேனியல்ஸ் எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானபின் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிபர் தேர்தல் நடந்த 2016இல் டிரம்ப் உடனான உறவு குறித்து பேச டேனியல்ஸ் சில தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டதால் அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்ற செய்தி கடந்த ஜனவரி மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் உடன் டேனியல்ஸ்க்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று அந்த நடிகையின் செய்தித்தொடர்பாளர் ஜனவரி 30 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/global-45279369

Link to comment
Share on other sites

தேர்தல் நேரத்தில் பேசாமல் இருக்க இரண்டு பெண்களுக்கு பணம் தந்தது தவறல்ல - டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுல என்னங்க தப்பு இருக்கு...?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தங்களுக்கு உறவு இருந்ததாக கூறிய இரண்டு பெண்கள் தேர்தல் நேரத்தில் பேசாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது என டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் கூறியுள்ளார். இந்நிலையில் அப்படி பணம் தந்தது சட்டபூர்வமானதே என்கிறார் டிரம்ப்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அந்தப் பெண்களுக்குப் பணம் தருவதில் பங்கெடுத்ததன் மூலம் தாம் சட்ட விரோதமாக நடந்துகொண்டதாக டிரம்பின் முன்னாள் வழங்குரைஞர் மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதில் அளித்த டிரம்ப், அந்த இரண்டு பெண்களுக்கு பணம் தரப்பட்டது தேர்தல் பிரசார விதிகளை மீறவில்லை என்கிறார். அது தமது தனிப்பட்ட நிதியில் இருந்து தரப்பட்டதே அல்லாமல் பிரசார நிதியில் இருந்து வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார் டிரம்ப்.

ஆனால், அந்த இருவரில் ஒருவருக்குப் பணம் தந்தது பற்றிய பேச்சின்போது பணம் தந்ததே தமக்குத் தெரியாது என்று கடந்த காலத்தில் பேசியுள்ளார் டிரம்ப்.

குறைவான தண்டனை பெறுவதற்காக கதைகள் புனைவதாகவும் அவர் மைக்கேல் கோவனை குற்றம்சாட்டினார்.

ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்க்காணலில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், அந்தப் பெண்களுக்குப் பணம் கொடுத்தது பற்றி பின்னரே தமக்குத் தெரியும் என்றும், அந்தப் பணம் பிரசார நிதியில் இருந்து அல்லாமல் தமது சொந்த நிதியில் இருந்தே தரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், டிரம்பின் இந்த கூற்று, டிரம்ப்பின் உத்தரவுப்படியே அந்தப் பெண்களுக்குப் பணம் தரப்பட்டதாக கோவன் கூறிய கூற்றோடு முரண்படுகிறது.

யார் அந்தப் பெண்கள்?

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், முன்னாள் பிளேபாய் மாடல் கரேன் மெக்டௌகல் ஆகிய இருவருக்கும் இந்தப் பணம் போனதாக நம்பப்படுகிறது. பணத்தை இரண்டு பெண்களுக்கு தந்ததாக பத்தாண்டு காலத்துக்கும் மேலாக டிரம்பின் தனிப்பட்ட வழக்குரைஞராக இருந்த கோவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

மைக்கேல் கோவன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைக்கேல் கோவன்: "அவரு கொடுக்கச் சொன்னாரு, கொடுத்தேன்... "

இந்தப் பணப்பட்டுவாடா விவகாரம் அப்போது தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் பணம் டிரம்பின் தனிப்பட்ட கௌரவத்தை பாதுகாப்பதற்காகத் தரப்பட்டதா, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் என்ற முறையில் அவரது பெயரைப் பாதுகாக்கத் தரப்பட்டதா என்பதே சட்டபூர்வமாக விடைதேட வேண்டிய கேள்வியாக உள்ளது.

வாக்குகளைக் கவரும் நோக்கத்துடன் செலவிடப்படும் எல்லா பணம் குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவேண்டும் என்பது அமெரிக்கத் தேர்தல் விதி.

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்தோடு, வேட்பாளர் என்ற முறையில் அவரது பெயரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு பணம் தரப்பட்டது என்று மைக்கேல் கோவன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

என்ன செய்ய முடியும்?

டிரம்ப் தற்போது குடியரசுத் தலைவராக இருப்பதால், அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் அதனை சாதாரண நீதிமன்றத்தில் செய்ய இயலாது.

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசில் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதுதான் சாத்தியமான சட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது. இதைச் செய்வதற்கு புலன்விசாரணை செய்வோர், தேர்தல் காரணங்களுக்காக டிரம்ப் அந்தப் பணத்தை கோவனிடம் தந்தார் என்பதை நிரூபிக்கவேண்டும்.

https://www.bbc.com/tamil/global-45283985

Link to comment
Share on other sites

எனக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் சந்தை சரிவடையும் - டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுல என்னங்க தப்பு இருக்கு...?

2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது.

இந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூசுக்கு தந்த பேட்டியில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தங்களுக்கு உறவு இருந்ததாக கூறிய இரண்டு பெண்கள் தேர்தல் நேரத்தில் பேசாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது என டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் கூறினார். அப்படி பணம் தந்தது சட்டபூர்வமானதே என்று கூறினார் டிரம்ப்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அந்தப் பெண்களுக்குப் பணம் தருவதில் பங்கெடுத்ததன் மூலம் தாம் சட்ட விரோதமாக நடந்துகொண்டதாக டிரம்பின் முன்னாள் வழங்குரைஞர் மைக்கேல் கோவன் ஒப்புதல் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த டிரம்ப், அந்த இரண்டு பெண்களுக்கு பணம் தரப்பட்டது தேர்தல் பிரசார விதிகளை மீறவில்லை என்கிறார். அது தமது தனிப்பட்ட நிதியில் இருந்து தரப்பட்டதே அல்லாமல் பிரசார நிதியில் இருந்து வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார் டிரம்ப்.

ஆனால், அந்த இருவரில் ஒருவருக்குப் பணம் தந்தது பற்றிய பேச்சின்போது பணம் தந்ததே தமக்குத் தெரியாது என்று கடந்த காலத்தில் பேசியுள்ளார் டிரம்ப்.

குறைவான தண்டனை பெறுவதற்காக கதைகள் புனைவதாகவும் அவர் மைக்கேல் கோவனை குற்றம்சாட்டினார்.

ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்க்காணலில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், அந்தப் பெண்களுக்குப் பணம் கொடுத்தது பற்றி பின்னரே தமக்குத் தெரியும் என்றும், அந்தப் பணம் பிரசார நிதியில் இருந்து அல்லாமல் தமது சொந்த நிதியில் இருந்தே தரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், டிரம்பின் இந்த கூற்று, டிரம்ப்பின் உத்தரவுப்படியே அந்தப் பெண்களுக்குப் பணம் தரப்பட்டதாக கோவன் கூறிய கூற்றோடு முரண்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-45283985

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.