Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் செல்வந்த தமிழ்இளைஞர்கள் கடத்தல்!

Featured Replies

கொழும்பில் செல்வந்த தமிழ்இளைஞர்கள் கடத்தல்!

 

nevy sampathகொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் குடும்பங்களிடம் கப்பம் கோரும் ஒரு வலையமைப்பு எவ்வாறு சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் இயங்கியது என்ற அதிர்ச்சி தரவுகள் இப்போது வெளிவருகின்றன.

2008 – 2009 ஆண்டுகளில் கொழும்பு தமிழ் குடும்பங்களிடம் கப்பம் கோருவதை இந்த கடத்தல் குழுவின் சூத்திரதாரியான லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிதான் அண்மையில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரும் தற்செயலாகத்தான் கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா புலனாயுவுத்தரப்பில் கூறப்படுகிறது. சிறிலங்கா குற்றவியல் பிரிவு அதிகாரியான சி.ஐ.டி நிஷாந்த சில்வா என்பவர் கொழும்புகோட்டை பகுதியில் உள்ள லோட்டஸ் வீதியால் பயணித்தபோது சாதாரண ஒரு தொழிலாளியைப் போல றபர் காலணிகளை அணிந்து தாடி வைத்திருந்த ஒருவரை வீதியால் சென்றதை கண்டாராம்.

அந்தநபரை கண்டதும் சி.ஐ.டி நிஷாந்த சில்வா, ஏதோ பொறி தட்டியதால் அவரை இடைமறிந்த விசாரித்தார். அப்போது லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தனது உண்மையான அடையாளத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதற்குப்பின்னராக விசாரணைகளில் ஹெட்டியாராச்சி தொம்பேயில் உள்ள தோட்டம் ஒன்றில் பொல்வத்த கலகே அசோகா என்கிற பெயரில காவலாளியா வேலை செய்தமை அம்;பலமானது. இவரிடம் களனி விலாசத்தைக் கொண்ட இன்னொரு போலி அடையாள அட்டையையும் இருந்தது.

மகிந்த ஆட்சியின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலராக கடமையாற்றியவேளைதான் ஹெட்டியாராச்சி உயர்மட்டத்தின் ஆசீர்வாதத்துடன் கடத்தல் குழு ஒன்றின் தலைவராகவும் இருந்தார்.

இவரதுகுழுதான் கம்பம் கோரும் வகையில் கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று கொழும்பிலுள்ள ‘பிட்டு பம்புவ’ கடற்படைச் சிறையில் தடுத்து வைத்தது. அதன் பின்னர் பேரங்கள் படியாததால் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவர்களை கொண்டுசென்று அங்குள்ள இடத்தில் வைத்துக் கொலை செய்ததாகதெரியவருகிறது..

இந்தக்குழு கடத்திய தமிழர்களின் எண்ணிக்கை 11 என கூறப்பட்டாலும் உண்மையான தொகை அதனைவிட அதிகமென கூறப்படுகிறது.

சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ரவீந்திர விஜேகுணரட்ன லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை டோராபடகு ஒன்றில் நாட்டை விட்டுத் தப்பிச்செல்ல உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணையில் இருந்து பாதுகாப்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் உயர்மட்டம் முயற்சி செய்தமை அம்பலப்பட்டுள்ளது.

ஹெட்டியாராச்சி தொடர்பான வழக்கு அடுத்தவாரம் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.nevy sampath

https://thinakkathir.com/?p=69578

  • கருத்துக்கள உறவுகள்

நேவி சம்பத்தை கைதுசெய்ய மக்கள் உதவியை நாடும் புலனாய்வுத்துறை

 
 
 

மஹிந்த ஆட்சியில் கொழும்பில் நடந்த பல கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான ‘நேவி சம்பத்’ என்பவரைக் கைது செய்ய இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்ய கோட்டை நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளதால், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

Navy-Sampath-227x300.jpgமேற்படி சந்தேக நபரான ‘நேவி சம்பத்’ (இயற்பெயர் : பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து 5 மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிப் பின்னர் கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபராவர்.

இயற்பெயர் : பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி
புனை பெயர் : ‘நேவி’ சம்பத்
கடற்படை பதவி : லெப்டினன்ட் கொமாண்டர்

பிறந்த திகதி : 09-02-1977
பிறந்த/வதிவிடம் : வெல்லம்பிட்டி / வெள்ளவத்தை !

‘நேவி’ சம்பத் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்தலாம்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு : 0112320141-45 அல்லது 0112422176 அல்லது 0112393621

https://puthinam.news/cid-search-navy-sampath/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.