Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் நீர்ப்பரப்பும் ஆய்வும் ஆபத்தும்

Featured Replies

சீனாவின் நீர்ப்பரப்பும் ஆய்வும் ஆபத்தும்

Untitled-1-fc5fc6b7df6356eaa51d66ee084a5c483c06c92e.jpg

 

-சுபத்ரா 

சீனக் கடற்­ப­டையின் Qian Weichang என்ற கப்பல் நான்கு நாட்கள் பய­ண­மாக கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்­தி­ருந்­தது. அண்­மையில் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வெளி­நாட்டுப் போர்க் கப்­பல்கள் அடிக்­கடி வரு­வது வழக்கம் என்­பதால், சீனப் போர்க்­கப்பல் கொழும்புத் துறை­முகம் வந்­தது என்று சில ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

ஆனால் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து விட்டுச் சென்­றது, போர்க்­கப்பல் அல்ல. சீன கடற்­ப­டையின் கப்பல் என்ற வகையில் அதில், தற்­பா­து­காப்­புக்­கான சில ஆயுத தள­பா­டங்கள் இருந்­தாலும், அது போர்க்­கப்பல் அல்ல.

அது ஒரு ஆய்வுக் கப்பல். இன்னும் விரி­வாகச் சொல்­வ­தானால், நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்பல், (Hydrographic survey ship).

வெளி­நாட்டுப் போர்க்­கப்­பல்­களைப் போலவே, இத்­த­கைய நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பல்­களும், இலங்­கைக்கு வரு­வது அண்­மைக்­கா­லத்தில் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. ஆனால் அது பல­ருக்கும் தெரி­யாமல் இருக்­கலாம்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்­தியக் கடற்­ப­டையின் ஐ.என்.எஸ். தர்ஷக் கொழும்பு மற்றும் காலி துறை­மு­கங்­களை மையப்­ப­டுத்தி, இலங்கை கடற்­ப­டை­யுடன் இணைந்து இரண்டு மாதங்கள் நீர்ப்­ப­ரப்பு ஆய்வை மேற்­கொண்­டது.

அதன் மூலம் திரட்­டப்­பட்ட தர­வுகள், இலங்கைக் கடற்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டன. அது ஒரு பாது­காப்பு ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்கை.

அது­போல, 2018 ஒக்­டோ­பரில் கொழும்பு வந்த இந்­தியக் கடற்­ப­டையின் ஐ.என்.எஸ். சுல்ரேஜ் என்ற நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்பல், டிசம்பர் மாதம் வரை இரண்டு மாதங்கள் இலங்கை கடற்­ப­டை­யுடன் இணைந்து மேற்கு கடலில் நீர்ப்­ப­ரப்பு ஆய்­வு­களை மேற்­கொண்­டது.

இதன்­போது திரட்­டப்­பட்ட தர­வு­களும், இலங்கைக் கடற்­ப­டை­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

அது­போன்று, நோர்­வேயின் Nansen research vessel கடந்த ஜூன் மாதம் கொழும்பு வந்து, கிட்­டத்­தட்ட நான்கு வாரங்கள், நீர்ப்­ப­ரப்பு ஆய்வில் ஈடு­பட்­டது.

அது­போலத் தான், சீனாவின் Qian Weichang நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பலும் அண்­மையில் கொழும்பு வந்து சென்­றி­ருந்­தது.

இந்­தியக் கடற்­ப­டையின் நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பல்­களின் பய­ணத்­துக்கும், நோர்­வேயின் ஆய்வுக் கப்­பலின் பய­ணத்­துக்கும், சீன கடற்­ப­டையின் ஆய்வுக் கப்­பலின் பய­ணத்­துக்கும் வெவ்­வேறு நோக்­கங்கள் இருந்­தன.

நீர்ப்­ப­ரப்பு ஆய்வு என்­பது நவீன உலகில் மிக­முக்­கி­ய­மா­னது. போருக்கும் சரி, போக்­கு­வ­ரத்­துக்கும் சரி, பொரு­ளா­தா­ரத்­துக்கும் சரி, நீர்ப்­ப­ரப்பு ஆய்வு மிக­மிக முக்­கி­ய­மா­னது.

நோர்­வேயின் நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்பல் கொழும்பு வந்­த­மைக்கு முக்­கிய காரணம், இலங்­கையை அண்­டிய கடல்­ப­ரப்பின் தன்மை, கடல் வாழ் உயி­ரி­னங்கள், அவற்றின் அடர்த்தி, அவற்றில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்கள், கடலில் கால­நி­லையின் தன்மை உள்­ளிட்ட தர­வு­களைச் சேக­ரித்தல் தான்.

இதில் முற்று முழு­தாக இரா­ணுவ நோக்­கங்கள் இல்லை என்று அடித்துக் கூற முடி­யா­வி­டினும், பெரும்­பாலும் கடல்வாழ் உயி­ரி­னங்கள் பற்­றிய தர­வு­களை சேக­ரித்தல் தான் இதன் அடிப்­படை நோக்கம். கொஞ்சம் இல­கு­வாக சொல்­வ­தானால், இலங்­கையில் மீன்­வ­ளத்தை கண்­ட­றிதல், அவை பற்றிய தர­வு­களை சேக­ரித்தல் என்றும் கூறலாம்.

பொரு­ளா­தார ரீதி­யாக இது முக்­கி­ய­மா­னது. இலங்­கையின் மீன் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்குத் தேவை­யான தக­வல்­களைத் திரட்­டு­வ­தற்கு இந்த ஆய்வு கைகொ­டுக்கும். அதை­விட, கடல் வளங்­களின் சம­நி­லையைப் பேணு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கும் இந்த தர­வுகள் முக்­கியம்.

ஆனால், இலங்கை கடற்­ப­டைக்­காக, இந்­தியக் கடற்­ப­டையின் ஆய்வுக் கப்­பல்கள், இரண்டு கட்­டங்­க­ளாகத் திரட்­டிய நீர்ப்­ப­ரப்பு ஆய்வு, பாது­காப்பு நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது.

இலங்­கையைச் சுற்­றி­யுள்ள பொரு­ளா­தாரக் கடல் எல்­லைக்குள் நீர்ப்­ப­ரப்பின் தன்மை, நீரோட்­டங்கள், கடலின் ஆழம், நீரின் செறிவு, நீர்ப்­ப­ரப்பில் ஏற்­படக் கூடிய மாற்­றங்கள் உள்­ளிட்ட பாது­காப்பு நோக்­கி­லான தர­வுகள் இதன் போது திரட்­டப்­பட்­டன.

இலங்கை கடற்­படை இந்த நீர்ப்­ப­ரப்பு ஆய்வின் அடிப்­ப­டையில் இன்­னமும் முழு­மை­யாகச் செயற்­ப­ட­வில்­லை­யா­யினும், காலப்­போக்கில் அதன் செயற்­பா­டு­க­ளுக்கு இந்தத் தர­வுகள் மிக முக்­கியம்.

அதற்­கான தர­வு­களை இப்­போதே சேக­ரிக்க ஆரம்­பித்­துள்­ளது. இலங்கை கடற்­ப­டைக்கு இந்த தர­வு­களைச் சேக­ரித்துக் கொடுத்­துள்­ளதன் மூலம், இந்­தி­யா­வுக்கும் நன்மை தான். எப்­ப­டி­யென்றால் இந்த நீர்ப்­ப­ரப்பு ஆய்வு தர­வுகள் இந்­தி­யாவின் விரல் நுனிக்கும் வந்து விட்­டது.

நோர்வே, இந்­தியக் கப்­பல்கள் இலங்கைக் கடற்­படை அல்­லது விஞ்­ஞா­னி­க­ளுடன் கூட்­டாக நீர்ப்­ப­ரப்பு ஆய்வை மேற்­கொள்­ளவே இங்கு வந்­தன. ஆனால் அண்­மையில் வந்த சீனக் கடற்­படைக் கப்பல் அவ்­வா­றான நோக்கில் வர­வில்லை.

அது இலங்­கைக்கு மேற்­கொண்­டது ஒரு நல்­லெண்ணப் பய­ணத்தை மட்டும் தான். இந்­தியப் பெருங்­க­டலில் நீர்ப்­ப­ரப்பு ஆய்வில், ஈடு­படும் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த போது தான், அந்தக் கப்பல் நான்கு நாட்கள் ஓய்­வெ­டுப்­ப­தற்­காக கொழும்­புக்கு வந்து சென்­றது.

2007ஆம் ஆண்டு அந்­தமான் தீவுக்கு அருகே சீனக் கடற்­ப­டையின் நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்பல் ஒன்று ஆய்­வு­களில் ஈடு­பட்­டி­ருந்த போது, இந்­தியக் கடற்­படை அதனை விரட்­டி­யி­ருந்­தது.

அப்­போது, அது மிகப்­பெ­ரிய அத்­து­மீ­ற­லாக- இந்­தி­யா­வுக்­கான அச்­சு­றுத்­த­லாக கரு­தப்­பட்­டது. அதை­விட அப்­போது இந்­தியப் பெருங்­க­டலில், சீனாவின் நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பல்கள் நட­மா­டு­வதும் அரிது. அதனால் அதனை இந்­தியா பெரி­ய­தொரு விவ­கா­ர­மாக நினைத்­தது.

 ஆனால் அடுத்த பத்து ஆண்­டு­களில் நிலைமை முற்­றா­கவே மாறி­யி­ருக்­கி­றது. இந்­தியப் பெருங்­க­டலில் ஏரா­ள­மான சீனக் கடற்­படைக் கப்­பல்கள் நட­மா­டு­கின்­றன. நீர்ப்­ப­ரப்பு ஆய்வில் ஈடு­ப­டு­கின்­றன. இவற்றை இந்­தியக் கடற்­படை கவ­லை­யோடு மாத்­திரம் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றது.

சீனக் கடற்­படை கடந்த சில ஆண்­டு­க­ளாக தனது நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பல்­களை இந்­தியப் பெருங்­க­டலில் தான் அதி­க­ளவில் நிறுத்தி வரு­கி­றது.

சீனா எதற்­காக, இந்­தியப் பெருங்­க­டலின் நீர்ப்­ப­ரப்பின் மீது கவனம் செலுத்­து­கி­றது என்­பதை அறி­வ­தற்கு முன்னர், பாது­காப்பு ரீதி­யாக நீர்ப்­ப­ரப்பு ஆய்வின் முக்­கி­யத்­து­வத்தை மிகச் சுருக்­க­மாக அறிய வேண்டும்.

கடல் எப்­போதும் அமை­தி­யாக இருக்கும் ஒன்­றல்ல. தரையைப் போலவே கட­லிலும் பல தோற்ற வேறு­பா­டுகள், தன்மை வேறு­பா­டுகள் உள்­ளன. கட­லுக்குள் மலை­களும், எரி­ம­லை­களும் உள்­ளன. மரி­யானா போன்ற ஆழி­களும் உண்டு.

சில­வே­ளை­களில் கடல் அமை­தி­யாக இருக்கும். சில­நே­ரங்­களில் கொந்­த­ளிப்­பாக இருக்கும். கடலின் ஆழமும் இடத்­துக்­கிடம் வேறு­படும். அவ்­வப்­போது ஆழம் அதி­க­ரிக்கும். சில­வே­ளை­களில் குறையும்.

கட­லுக்கு அடி­யி­லான நீரோட்­டமும் கூட, மாறும். ஈர்ப்பு சக்­தியும் வேறு­படும். நீரின் செறி­வு­க­ளிலும் வித்­தி­யா­சங்கள் இருக்கும்.

இவை எல்­லா­வற்­றையும் கணித்தால் தான், சரி­யான கப்பல் பாதையை கண்­ட­றிய முடியும். கப்­பல்­களின்- குறிப்­பாக நீர்­மூழ்கிக் கப்­பல்­களின் பய­ணங்­க­ளுக்­கான வழித்­த­டங்­களை கண்­ட­றிய முடியும்.

கடற்­பு­லிகள் சிறிய பட­கு­களில், பல நூறு, ஆயிரம் கடல் மைல்கள் வரை பய­ணங்­களை மேற்­கொண்­ட­வர்கள். அவ்­வப்­போது அவர்­களின் பட­குகள் காணாமல் போய் விடும். என்ன நடந்­தது என்றே தெரி­யாமல் போனதும் உண்டு. சில­வேளை திடீ­ரெனப் படகு பிளந்து போய் மூழ்­கிய சம்­ப­வங்­களும் நடந்­துள்­ளன. இத்­த­கைய சம்­ப­வங்­களில் புலி­களின் பல முக்­கிய தள­ப­தி­களும், பெறு­ம­தி­யான ஆயு­த­த­ள­பா­டங்­களும் கூட மூழ்கிப் போயி­ருக்­கின்­றன.

இத்­த­கைய பல சம்­ப­வங்­க­ளுக்குக் காரணம், கடலில் சரி­யான வழித்­த­டங்­களை கண்­ட­றி­யாமல் மேற்­கொண்ட பயணம் தான். சரி­யான வழித் தடத்தில், சரி­யான தரு­ணங்­களைத் தெரிவு செய்து பய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்தால் இத்­த­கைய அசம்­பா­வி­தங்கள் பல தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கவும் கூடும்.

பண்­டைக்­கா­லத்தில், சோழ மன்­னர்கள் கடாரம் வரை சென்று ஆட்சி செய்­த­தாக வர­லாறு. மலேஷியா, கம்­போ­டியா, இந்­தோ­னேஷியா வரை சோழ மன்­னர்­களின் ஆதிக்கம் இருந்­தது.

தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் இருந்து மிகக் கன­மான – பாரிய தேக்கு மரங்கள் உள்­ளிட்ட பொருட்­களைக் கூட அவர்கள் இல­கு­வாக தமி­ழ­கத்­துக்கு கொண்டு வந்­தி­ருந்­தார்கள். அதற்குக் காரணம், அவர்கள் கடலின் அடியில் உள்ள நீரோட்­டத்தை சரி­யாக கணக்­கிட்­டது தான். அந்த நீரோட்­டத்தின் உத­வி­யுடன் பெரு­ம­ளவு பொருட்­களை தமது நாட்­டுக்கு கொண்டு வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

  இலங்­கையின் வடக்கில் வல்­வெட்­டித்­துறை, தொண்­டை­மா­னாறு போன்ற இடங்­களில் இருந்து,

 

இந்­தி­யாவின் காக்­கி­நாடா, காரைக்கால், பர்­மாவின் ரங்கூன், போன்ற துறை­மு­கங்­க­ளுக்கு பாய்க்­கப்­பல்கள் இல­கு­வாகப் பயணம் மேற்­கொண்­டன. அவர்­க­ளிடம் வழி­காட்டும் எந்த கரு­வி­களும் இருந்­த­தில்லை.

அந்தக் கால­கட்­டத்தில், சில குறிப்­பிட்ட காலத்தில் கடலில் பயணம் மேற்­கொள்­ளாமல் கப்­பல்­களை பாது­காப்­பாக துறை­மு­கங்­களில் நிறுத்தி வைத்­தி­ருப்­பார்கள்.

உதா­ர­ணத்­துக்கு சித்­திரை 28 ஆம் திக­தியை ஒரு வானிலைக் குழப்பம் நிறைந்த நாளாக முன்­னைய கட­லோ­டிகள் கணித்­தி­ருந்­தார்கள். அதற்கு முதல் 8 நாட்­களும், பிந்­திய 8 நாட்­களும் மிகவும் எச்­ச­ரிக்­கை­யான நாட்­க­ளாக கரு­து­வார்கள்.

இந்தக் காலத்தில் கப்­பல்­களில் பயணம் மேற்­கொள்­ளாமல் தவிர்ப்­பார்கள். இது கடலின் தன்­மையை அறிந்து எடுக்­கப்­பட்ட முன்­னெச்­ச­ரிக்கை. இது­போல பல பயண உத்­தி­களும் தர­வு­களும் ஈழத் தமிழ்க் கப்பல் மாலு­மி­க­ளி­டமும் இருந்­தன.

இப்­போது, நீர்­மூழ்­கிகள் தான் முக்­கி­ய­மான கடல் போர் ஆதா­ர­மாக இருக்­கின்­றன. இவை கட­லுக்கு அடியில் பயணம் செய்யும் போது, கடலின் தன்­மையை முழு­மை­யாக ஆய்வு செய்து அதன் பய­ணத்­துக்­கான வழித்­தடம் உறுதி செய்­யப்­பட வேண்டும்.

சில காலத்­துக்கு முன்னர் உல­கெங்கும் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட ஒரு விடயம், ஆர்­ஜென்­ரீன கடற்­ப­டையின் நீர்­மூழ்கி ஒன்று அந்­தி­லாந்திக் கடலில் விபத்­துக்­குள்­ளாகி காணாமல் போன சம்­ப­வ­மாகும். அந்த நீர்­மூழ்­கிக்கு என்ன நடந்­தது என்றே தெரி­யாது. அது எங்கே போனது என்றும் தெரி­யாது.

அந்த நீர்­மூழ்கி அதன் பயணப் பாதையில் இருந்து விலகி விபத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்­கலாம் என்றே பொது­வாக நம்­பப்­ப­டு­கி­றது.

மலாக்கா நீரிணை தொடக்கம் ஏடன் வளை­குடா வரைக்­கு­மான இந்­தியப் பெருங்­க­டலும் கூட நிறை­யவே புதிர்­க­ளையும், மர்­மங்­க­ளையும் கொண்­டது தான்.

மலே­சியன் எயர் லைன்ஸ் விமானம் இந்­தியப் பெருங்­க­டலில் தான் காணாமல் போனது. அது இன்­னமும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வே­யில்லை என்­பது உங்­க­ளுக்குத் தெரியும்.

இத்­த­கைய புதிர்கள் நிறைந்த இந்­தியப் பெருங்­க­டலின் வழி­யாக தனது நீர்­மூழ்­கி­களை பயணம் செய்ய வைப்­ப­தற்கு, இந்தக் கடல்­ப­ரப்பின் தன்­மைகள், அது எப்­போது மாற்­ற­ம­டையும், எப்­போது ஆபத்­தா­ன­தாக இருக்கும் என்ற தர­வுகள் சீனா­வுக்கு முக்­கியம்.

அதனால் தான் சீனாவின் நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பல்­களின் முழு­மை­யான கண்ணும், இந்­தியப் பெருங்­க­டலின் மீது இருக்­கின்­றன.

இந்­தியப் பெருங்­க­டலில் சீன நீர்­மூழ்­கி­க­ளுடன் பெரும்­பாலும், சீனாவின் நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பல்­களும் பய­ணிக்­கின்­றன. Type 636A , Type 625C போன்ற ரகங்­களைச் சேர்ந்த பல நீர்ப்­ப­ரப்பு ஆய்வுக் கப்­பல்கள், இந்­தியப் பெருங்­க­டலில் அடிக்­கடி காணப்­ப­டு­கின்­றன.

இந்த Type 636A ரகத்தைச் சேர்ந்­தது தான் அண்­மையில், கொழும்பு வந்­தி­ருந்த, Qian Weichang கப்பல். இதில் இரண்டு டசினுக்கும் மேற்பட்ட அதிநவீன ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு மாத்திரமே இந்தியப் பெருங்கடலின் நீர்ப்பரப்பு பற்றிய தரவுகள் தேவைப்படுகின்றன என்றில்லை. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் கூட அவை தேவைப்படுகின்றன.

கடந்த 2016 ஆம்ஆண்டு டிசெம்பரில் அமெரிக்க கடற்படையின் பொசிடோன் ரக இராட்சத கடல் கண்காணிப்பு விமானமும் கூட மத்தள விமான நிலையத்தில் ஒரு வாரம் தரித்து நின்று ஆய்வுகளை நடத்தியிருந்தது.

 அதுபோலவே கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி மத்தள விமான நிலையத்துக்கு லொக்ஹீட் P-3 விமானத்தில் வந்திறங்கிய ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிப் பிரிவைச் சேர்ந்த படையினர், ஓகஸ்ட் 5ஆம் திகதி பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.

இவையனைத்தும், இந்தியப் பெருங்கடலின் மீதும், இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் மீதும் வெளியுலக சக்திகள் கொண்டிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.

நீர்ப்பரப்பு ஆய்வு என்ற பெயரில் இலங்கையை குறிவைக்கும் வெளிநாடுகள், அதற்கு அப்பால் அதனை எதற்காக பயன்படுத்த எத்தனிக்கின்றன என்பது தான் முக்கியமானது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-26#page-2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்கிஸ்தான் ஏன் தண்ணி ஆராய்ச்சி செய்ய சிலோனுக்கு வரேல்லையெண்ட கவலை எனக்கு பெரிய கவலை...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.