Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் நிலஅபகரிப்பு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கஜேந்திரகுமர் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் நிலஅபகரிப்பு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கஜேந்திரகுமர் அழைப்பு: மஹாவலி அபிவிருத்தி என்னும் பெயரில் இடம்பெறும் சிங்கள மயமாக்கலை முறியடிப்போம்.

:   

Gajan-Ponnambalam-1-150x150.jpg

முல்லைத்தீவில் நடைபெறும் நிலஅபகரிப்பு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கஜேந்திரகுமர் அழைப்புவிடுத்துள்ளார். மாகாவலி அபிவிருத்திச் சபையினால் தமிழர் நிலங்கள் கனளீகரம் செய்யப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்க்ப்படுவதன் ஊடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாரிய போராட்டம் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28-08-2018) அன்று முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இப்போராட்டத்தில் அனைத்து பொது மக்கள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

25-08-2018
ஊடக அறிக்கை

தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள் காரணமாக அப்பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேற நிற்பந்திக்கப்பட்டனர்.

 அவ்வாறு வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகள்   மாகாவலி அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் மிக இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது.  மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்கின்றது.

 தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியை பாதுகாப்பதற்காக மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

 பேரணி ஆரம்பிக்குமிடம்: PWD சந்தி

பேரணி முடிவடையுமிடம்: முல்லை மாவட்ட செயலகம்

திகதி: 28-08-2018 செவ்வாய்க்கிழமை

நேரம்: மு.ப 11.00 மணி

 

நன்றி

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

http://www.tnpf.info/2018/08/25/மஹாவலி-அபிவிருத்தி-என்னு/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

முல்லைத்தீவில் நிலஅபகரிப்பு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கஜேந்திரகுமர் அழைப்பு: மஹாவலி அபிவிருத்தி என்னும் பெயரில் இடம்பெறும் சிங்கள மயமாக்கலை முறியடிப்போம்

ஆசைப்பட்டால் மட்டும் காணாது.....அடம் பிடிக்கவும் தெரியோணும் மக்காள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.