Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு….

Featured Replies

அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

Asnin-fire1.jpg?resize=800%2C600
வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

 

வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின், ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு புறம்பாக இருந்தாலும் , அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைபடுகின்றது.” என தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் இன்றைய தினம் சனிக்கிழமை வலம்புரி பத்திரிகை “முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது. முறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார் அஸ்மின் ” என தலைப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தது. குறித்த செய்தியினால் பெருமளவான முஸ்லீம் மக்கள் மத்தியில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிரான நிலை தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜீம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக கூடிய அசஸ்மினின் ஆதரவாளர்கள் சிலர் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பி இன்றைய பத்திரிக்கையை தீயிட்டு கொளுத்தினார்கள்.

Asnin-fire2.jpg?resize=800%2C600

Asnin-fire3.jpg?resize=600%2C800

valampuri.jpg?resize=800%2C587

http://globaltamilnews.net/2018/93713/

  • தொடங்கியவர்

வலம்புரி நாளிதழ் பிரதி தீக்கிரை: ஊடக அமையம் கண்டனம்…

valam.jpg?resize=800%2C600

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடன் ஊடக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்பதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக பதிவு செய்கின்றது.

 

இன்றைய தினமான சனிக்கிழமை யாழ்.நகரில் வைத்து பத்திற்கும் குறைவான நபர்களை கொண்ட சிறு அணியொன்று வலம்புரி பத்திரிகையின் இன்றைய பதிப்பின் மாதிரியினை தீக்கிரையாக்கியுள்ளது. யுத்தம் அதனால் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் மாறி மீண்டும் நட்புறவு பூக்கள் பூத்துவிடுமென்ற நம்பிக்கையினை மத அடையாளங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள் சிதைவடையச் செய்துவிடுமென்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் என யாழ்.ஊடக அமையம் கேட்டுக்கொள்கின்றது.

இதுவொரு சிறுகுழுவின் செயற்பாடென பலரும் வியாக்கியானம் செய்தாலும் இத்தகைய போக்குகள் மீண்டும் ஆராக்கியான சூழல் ஒன்று உருவாகிவருதை நிச்சயமாக பாதிக்கவே செய்யுமெனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமது மலின அரசியலுக்கு ஆர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டு, செயற்பட்டு வருகின்ற ஊடகங்களை கேலிக்குரியதாக்கும் எத்தகைய நடவடிக்கைகளினையும் யாழ்.ஊடக அமையம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை.

தாம் வெளிப்படுத்தும் கருத்துக்களை விழுங்கி தனிநபர் அரசியல் நலன்கருதி வாந்தியெடுக்கும் சாதனங்களாக ஊடககங்களை இத்தகைய தீமூட்டல்களின் பின்னாலுள்ள நபர்கள் கருதுவார்களெனில் அது அவர்களது அறியாமையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஊடகமொன்று வெளியிடும் கருத்திற்கு தமது தரப்பு கருத்தை ஊடகப்பரப்பில் வெளிப்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளிற்கு கடினமானதொன்றல்ல.அது அவர்களிற்கு நாம் சொல்லிதான் தெரியவேண்டியது ஒன்றுமல்ல.

தமக்குள்ள சிறப்புரிமைகளின் கீழ் பதுங்கிக்கொண்டு சேறுபூசல்களை மேற்கொள்வதும் அதனை கேள்விக்குள்ளாக்கும் இடத்து கும்பலாக கடித்துக் குதறுவதும் தமிழ் ஊடகங்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் புதியவிடயமல்ல.அது தொன்று தொட்டு தொடரும் பாரம்பரியமாகவேயிருந்து வருகின்றது.

வெறுமனே இன நல்லிணக்கம், மத நல்லிண்ணக்கம் பற்றி கூடியிருந்து கதைப்பதனை விடுத்து இத்தகைய நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனத்திலெடுக்க மத தலைவர்கள், சமூக பெரியோர் மற்றும் புத்திஜீவிகள் அனைவரையும் யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது.

http://globaltamilnews.net/2018/93720/

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பத்து பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் அடாவடி: விடுதலைப்புலிகளின் செய்தியால் பத்திரிகையை எரித்தது!

September 1, 2018
40526764_1988621717826829_36369449773065

யாழ் நகரில் இன்று வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்கள் என கருதப்படுபவர்களால் வலம்புரி பத்திரிகை பிரதிகள் சில தீவைத்து கொளுத்தப்பட்டது. யாழ் மாநகரசபை முதல்வர் ஆனல்டின் வட்டார இணைப்பாளர் ஒருவரும் நேரடியாக பத்திரிகைகளிற்கு எதிரான இந்த அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டார்.

விடுதலைப்புலிகள் மக்களாட்சி தத்துவத்திற்கு மாறாக நடந்தார்கள் என வடமாகாணசபையின் கடந்த அமர்வில் அயூப் அஸ்மின் தமிழ் மக்களை சீண்டும் விதமான கருத்தை வெளியிட்டிருந்தார்.

 

எனினும், இதை அவையில் யாரும் கண்டிக்கவில்லை. நமக்கு மூக்கு போனாலும் சரி, எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதுமென்ற பாணியில் முதலமைச்சருக்கு எதிராகவே தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அஸ்மினின் இனங்களிற்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் பேச்சை சுட்டிக்காட்டி, அந்த பேச்சு எப்படியெல்லாம் அர்த்தப்படுத்தப்படலாமென்பதையும் சுட்டிக்காட்டி யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி பத்திரிகை தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் அஸ்மினின் ஆதரவாளர்கள் என கருதப்படும் சுமார் பத்து பேர் இன்று வலம்புரி பத்திரிகையின் பிரதிகளை எரித்தனர். அதில் யாழ் மாநகரசபை மேயர் இ.ஆனோல்ட்டின் வட்டார இணைப்பாளர் ஒருவரும் அங்கம் வகித்தார்.

 

http://www.pagetamil.com/15049/

  • தொடங்கியவர்

“வலம்புரி பத்திரிகை செய்தி எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது”

Ayyub-Asmin.jpg?resize=768%2C576

வலம்புரி பத்திரிகை செய்தி தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.

 

“முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது” மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார் அஸ்மின் என தலைப்பு செய்தியாக இன்றைய தினம் சனிக்கிழமை வெளியான வலம்புரி பத்திரிகையில் வெளிவந்துள்ளது..

குறித்த செய்தி தொடர்பில் அஸ்மீன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

வலம்புரி நாளிதழ் “முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது” மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார் அஸ்மின்; என்னும் பிரதான தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தியானது வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஆகிய என்னால் முன்வைக்கப்படாத திரிபுபடுத்தப்பட்ட கருத்தாகும்.

இதன்மூலம் வலம்புரி நாளிதல்முஸ்லிம் மக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேசக் குற்றமாகிய இனச்சுத்திகரிப்பு என்கின்ற ஒரு பாரிய மனித உரிமை மீறலை முஸ்லிம் பிரதிநிதியாகிய எனது பெயரைப் பயன்படுத்தி குற்றமற்றதாகக் காட்டுவதற்கு வலம்புரி நாளிதழ் முயற்சித்திருக்கின்றது.

அத்தோடு முஸ்லிம் மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு கருத்தை எனது பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய்வதற்கும் முயற்சித்திருக்கின்றார்கள்.

மேலும் எனது அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான ஒரு கருத்தை எனது பெயரில் பிரசுரித்து தமிழ் மக்கள் மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கையினை சீர்குலைப்பதற்கு முயற்சித்திருக்கின்றார்கள்.

அத்தோடு தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தும் எனது அரசியல் போக்கில் முஸ்லிம் மக்களை நம்பிக்கையிழக்க முயற்சித்திருப்பதோடு, எனக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதற்கும் வழிசமைத்திருக்கின்றார்கள், இவ்வாறாக வலம்புரி நாளிதழ் தனது முஸ்லிம் விரோதப் போக்கினை மீண்டுமொருதடவை நிரூபித்திருக்கின்றது;

இத்தகைய பல்வேறு அச்சுறுத்தலான, மோசமான சூழ்நிலைக்குக் காரணமாகிய வலம்புரி நாளிதழ்மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் உடனடியாக சட்ட நடவடிக்கையெடுப்பதற்கு நான் கலந்தாலோசிப்புக்களை மேற்கொண்டுவருகின்றேன்.

வடக்கிலிருந்து செயற்படும் ஒரு சில ஊடகங்கள் “ஊடகம்” என்னும் பொதுவான அடையாளத்தையும், ஊடகங்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகளையும் தவறாகப் பயன்படுத்துவதோடு மக்களின் இயல்புவாழ்வை சீர்குலைப்பதற்கும், இந்த நாட்டில் சமாதனம் சகவாழ்வு என்பவற்றுக்கு அச்சுறுத்தலாகவும், தமிழ் மக்களின் தீர்வு முயற்சிகளைச் சீர்குலைப்பதாகவும் செயற்பட்டு வருகின்றன.

அவற்றுள் வலம்புரிக்கு பிரதான பங்குண்டு. தமக்கிருக்கும் ஊடகம் என்னும் அடையாளத்தைப் பயன்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோவதற்கு ஒப்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இப்பத்திரிகையின் மீது சட்டம் தனது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதோடு, இத்தகைய போலியான செய்திகளையிட்டு மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும், இவ்வாறான போலியான செய்திகளினூடாக எமது நேர்மையான வெளிப்படையான நல்லாட்சிப்பண்புகளுடன் கூடிய விழுமிய அரசியல் போக்கில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்றும் குறிப்பிடவிரும்புகின்றேன்.என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/2018/93747/

  • தொடங்கியவர்

வலம்புரிப் பத்திரிகைக்குஎதிராக அஸ்மின்பொலிஸில் முறைப்பாடு!

b148ddbfda6214ab4a569450ef9336ee?s=48&d=

“வடக்கிலிருந்து முஸ்லிம்களைவெளியேற்றியது சரியானதுஎன நேற்றைய பத்திரிகையில்வெளிவந்த செய்தி தவறானது.அவ்வாறான கருத்தை தான்தெரிவிக்கவில்லை” எனத்தெரிவித்து வட மாகாண சபைஉறுப்பினர் அயூப் அஸ்மின்யாழ்.பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை வடமாகாண சபையின்ஆளுங்கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மின் இன்றிரவுமேற்கொண்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

IMG_3303.jpgIMG_3304.jpgIMG_3305.jpgIMG_3308.jpg

http://www.newsuthanthiran.com/2018/09/02/வலம்புரிப்-பத்திரிகைக்க/

  • கருத்துக்கள உறவுகள்

பழைய செவ்வி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.