Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னவன் வந்தானடி ...

Featured Replies

தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நிகழ்த்தும் இன அழிப்பு யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் மக்களின் பட்டத்து இளவரசன் !!!

kkor4.jpg

நன்றி: நிதர்சனம்.கொம்

Edited by Norwegian

இங்கு கூறப்பட்ட செய்தி தெளிவாக விளங்கவில்லை. தமிழ் மக்களிற்கு பட்டத்து இளவரசன் என்று ஒருவர் இருக்கிறாரா? இவர் இவ்வளவு காலமும் எங்கே இருந்தார்? ஒன்றும் விளங்கவில்லை... :lol::unsure::(

  • தொடங்கியவர்

ஆமாம் மாப்ஸ். சங்கதி உங்களுக்கு தெரியாதா?

இங்கே சென்று பாருங்கள் கோலாகலத்தை:

http://www.jaffnaroyalfamily.org/

Edited by Norwegian

ஹிஹி... நான் ஏற்கனவே அந்தக் கேவலத்திற்க போய் பார்த்துவிட்டேன்... பொல்லுகள், தடிகளுடன் ஏதோ பழைய பரம்பரை மரத்தின் கிளைகள் பற்றி பீதாம்பரம் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்....

நாமறிய ஒரே ஒரு மன்னவன் தான் நமக்கு இப்போது இருக்கின்றான், அவன் தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரன், மற்றையவர்களெல்லாம் நாடகத்திற்கு வெளிக்கிடுத்திய ஜுஜுப்பி மன்னர்கள் அல்லது டம்மிகள்!!!! :lol::icon_mrgreen::(:icon_mrgreen:

ஆகா கிழம்பிட்டாங்கய்யா...கிழம்பி

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆள் ஆர்? ஆரும் ஒல்லாந்தருக்குப் பிறந்தவரோ. சாடையாகக் கழண்டு போச்சுப்போல. ஆனா லெட்டர் ஹெட் செய்து எழுதுறார். அது சரி காசு இருந்தா ஒரு முடிகூடச் செய்யலாந்தானே. பாவம் எங்கையாவது போய்மாட்டி அடி வாங்காம இருந்தாச் சரி. ராசாவா இருக்கிறதா இருந்தா பெரிய நிலப்பரப்புகளையும் அதுக்குரிய காணி உறுதிகளையும், அரண்மனை ஒண்டையும் படையையும் வேலைககாறர்களையும் வச்சிருக்கவேணும். வெறும் லெட்டர்ஹெட் மட்டும் போதாது.

இல்லை தெரியாமத்தான் கேக்கிறன் இத்தனை நாளும் எங்கட இளவரசர் ஐயா எங்க இருந்தவர்??? 27ம் திகதி வரைக்கும் தமிழருக்கு பிரசனைகள் இருக்கேல்லையோ?? இல்லை தெரியாமல்தான் கேக்கிறன்??

சங்கிலியன், எல்லாளன் போன்ற மன்னர்கள் சிங்களவர்களுக்கு எதிராக போராடியதாக படித்த ஞாபகம். இவன் யாருடா புதுசா?? கிளம்பீட்டான்யா கிளம்பீட்டான்யா ...

அடீங் கொக்கா மக்கா...

சரி எல்லாத்தையும் விட, தமிழீழ தேசிய போராட்டத்தில இளவரசர்ட பங்குஎன்ன?? எங்கட பெடியளுக்கு கடைசி ஒரு பங்கர் வெட்டினவரோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஏதாவது செய்தால் தான் தமிள் தனி நாடு கிடைக்கும் பொது தமக்கும் பதவி தருவார்கள் என்ற ஒரு நப்பாசை தான்

  • தொடங்கியவர்

எல்லாவற்றிற்கும் மேலாக யாரும் செய்து வைத்த கைப்பொம்மை அரசனோ தெரியவில்லை.

இப்போது தான் வெளியில் கசியத் தொடங்கியிருக்கிறது. ஆனால் மன்னர் அவுஸ்திரேலிய தமிழர்கள் மத்தியிலும் பிரபலம்போல் தெரிகிறது. [/url=http://www.tamilbrisbane.com/content/view/116/1/]http://www.tamilbrisbane.com/content/view/116/1/

மேலதிக விபரங்களை கள நண்பர்கள் தான் விலாவரியாச் சொல்ல வேணும். நானும் போய் முடியிழந்த மன்னர் சங்கத்திலை என்ரை பேரையும் பதியப் போறன்.

இராஜ இராஜ இராஜ மார்த்தாண்ட இராஜ கம்பீர மாமன்னர் புளியோதரைச் சக்கரவர்த்தி .........

பிறகு உந்தக் களப்பக்கமே தலைவைச்சும் படுக்க மாட்டன்.

[/url=http://www.nation.lk/2006/08/13/eyefea1.htm]http://www.nation.lk/2006/08/13/eyefea1.htm

Edited by Norwegian

நானும் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

ஜஃப்னா றோயல் பமிலியை விட யாழ் றோயல் பமிலி எவ்வளவோ மேல். அதைவிட மேலான டைகர் பமிலி எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல.

யாழ் றோயல் பமிலியின் சின்னத்திலும் சேது

நிதர்சனத்தின் நடத்துனரும் சேது..

இது மின்னலின் கண்டுபிடிப்பு

இதனை வைத்து ஏதாவது ஊகியுங்கள். நிதர்சனத்திற்கும் யாழ். றொயல் பமிலிக்கும் இடையே உள்ள தொடர்பு தெரியும்.

யாரப்பா இது புதுக் கதையா இருக்கு. எங்கயோ மேக்கப் கடையில போய். தூக்கிட்டு வந்து போட்டு படம் எடுத்து போலயிருக்கு, யாராச்சும் நாடக மன்றம் ஏதும் வச்சிருந்த அவருக்கு மன்னனா நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா பாக்க பாவமாயிருக்கு

இந்த யாழ் அரச குடும்பம் குறித்து முன்னரும் இந்தக்களத்தில் உரையாடப்பட்டுள்ளது. இங்கே சொடுக்கவும்

ஆனாலும் இந்த இளவரசரை ஏற்றுக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது!

அதாவது தமிழர் தாயகம் என்று ஒன்றில்லை என வாதிடும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் வாயை மூடுவதற்கு இதனை உபயோகிக்கலாம். சிறு துரும்பும் தமிழீழம் கிடைக்க உதவும்!

மற்றப்படி இவர் தமிழீழத்தில் நல்லூரில் சங்கிலியன் தோப்புப் பகுதியில் ஒரு காணியை வாங்கி அதில் ஒரு அரண்மனையை கட்டி வாழ்ந்து வருவதில் ஒரு பொல்லாப்பும் இல்லை. முக்கிய நிகழ்வுகளில் ஒரு அலங்காரப் பொருளாக (மேலைத் தேயத்தில் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போல) ஒரு மரபுக்கு வந்து போகலாம். தமிழீழ மக்கள் வரிப்பணத்தில் இவருக்கு ஒரு சிறு தொகையை ஜிவனாம்சமாக தருவதில் நஷ்டமில்லை. அவரும் அரசியலில் தலையிடாமல் தனக்கு மிகவும் பிடித்த "travelling, reading and taking part in sporting and social activities, such as swimming, tennis, snooker, badminton, horse-riding; and indulging in social and charitable work, besides listening to classical music, and being an amateur photographer" என்பற்றில் தனது பொழுதை போக்கலாம். அத்துடன் தமிழீழத்தின் சுற்றுலா கையேட்டில் இவரைப்பற்றியும் 4 வார்த்தை எழுதி அன்னியச் செலாவணியையும் கூட்டலாம்!

யாழ்ப்பாணத்து பட்டத்து இளவரசர் வாழ்க!

(இவ்வாறு இளவரசருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் அரண்மனையில் எனக்கு பொருளாளர் பதவியாவது கிட்டும் என்ற நப்பாசையில்)

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

கையா:, மீன்டும் மன்னராட்சியா?

காரு போய் யானை வருகுது டும் டும் டும்.

வான் போய் வன்டில் வருகுது டும் டும் டும். :o:rolleyes:

(அய்யகோ! இப்பவுள்ள சனநாயகத்தால ரெம்ப நொந்து போயிட்டோமுங்க). :rolleyes::o

  • தொடங்கியவர்

ஐரோப்பிய அரசர்களின் கலச்சாரத்தை எங்கள் மன்னர்களின் கலாச்சாரத்துடன் ஒப்பீடு செய்வது தவறு. மேலை நாடுகளில் உள்ள சிறந்த ஜனநாயக தார்ப்பரியங்களையே எங்கள் நாடுகளில் நடைமுறைப்படுத்த முடியாத சூழ் நிலை அங்கு இருக்கும்போது எங்கோ கிடந்த துருப்பிடித்த மன்னர்களை விளக்கி எடுத்து வந்து வலுக்கட்டாயமாக இருத்த வேண்டுமென்ற அவசியம் கிடையாது. கடைசியில் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய கதையாகத் தான் முடியும். யுவர் எக்சலன்சி அல்லது யுவர் கைனஸ் என்று அவரை அழைக்காது விடின் அவர் கோவிப்பார். கை காட்டி கதைத்தால் கையை வெட்டிவிடுவார். இது எங்களுக்கு வேணுமா!

அதைவிட்டு எல்லோரும் இன்னாட்டு மன்னர்களாக நாட்டுக்காக உழைப்போம்.

அவர் அரச வாரிசாக இருந்தால் அவருக்கு மதிப்பு கொடுப்பது எமக்குத்தான் நல்லது. தமிழீழ தேசியம் ஒரு நீண்ட டடடடடடடடடடடடடடடடடட வரலாற்றை கொண்டது என்பதற்கு ஒரு சான்றாகவும் இருக்கும்.

அவர் அரச வாரிசாக இருந்தால் அவருக்கு மதிப்பு கொடுப்பது எமக்குத்தான் நல்லது. தமிழீழ தேசியம் ஒரு நீண்ட டடடடடடடடடடடடடடடடடட வரலாற்றை கொண்டது என்பதற்கு ஒரு சான்றாகவும் இருக்கும்.

பழமையை பாதுகாக்க வேண்டும்தான். ஆனால் இவர்கள் தமிழருக்காக என்ன செய்தார்கள்? ஒருவேளை துரோகச் செயலில் ஈடுபட்டிருந்தால் ?

பழமையை பாதுகாக்க வேண்டும்தான். ஆனால் இவர்கள் தமிழருக்காக என்ன செய்தார்கள்? ஒருவேளை துரோகச் செயலில் ஈடுபட்டிருந்தால் ?

நீங்க பொசிட்டிவா திங் பண்ணமாட்டீங்களா?

  • தொடங்கியவர்

சுமார் 20 வருடங்களுக்குமுன்னர் நோர்வே நாட்டுக்கு வருகை தந்திருந்த முக்கிய பிரமுகர்(?) ஒருவருடன் இது போன்ற ஒரு விடயம் குறித்து பொதுவாக கருத்தாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது இந்த ஆளைப் பற்றி எதுவும் தெரிந்திருக்காத காலக் கட்டமாயிருந்தும் இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்று எதிர்வுகூறியிருந்தேன். விசால் இங்கு கூறியதைத் தான் நானும் சொன்னேன் கடைசியில் வாங்கி கட்டிக்கொண்டதுதான் மிச்சம்.

இப்படி ஒவ்வொருவரையும் சந்தேகப்பட்டு ஒதுக்கி ஒதுக்கி இன்று தமிழ் தேசியத்தின் குரல் தனிமைப்பட்டு நிற்கிறது. இதனால் தான் நியாங்கள் பல எம்பக்கமிருந்தும், நியாயம் ஏதுமற்ற சிங்களம் பிரச்சாரத்தில் எங்களை ஏப்பம் விட்டுவிட்டது. இதற்கு அரசியல் வியாக்கியானங்கள் தேடுவதை விடுத்து எம்பக்கமுள்ள தவறுகளை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்வோம். அவர் ஆதரவுக்கரம் நீட்டுகிறார் நம்பிக்கையோடு வரவேற்போம்!

நம்பிக்கையால் ஒற்றுமை >> ஒற்றுமையால் பலம் >> பலத்தால் வாழ்வு.

இளவரசருக்கு ஆதரவுக்கரம் நீட்டு முன் சிறிது யோசிக்கவும்....

இது ஏன் சிறீ லங்கா அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட சதிவலைப் பின்னலின் ஒரு அங்கமாக இருக்கக்கூடாது?

இவ்வளவு காலமும் இருந்த மன்னர் ஏன் தீடீரென்று முளைத்து வந்துவிட்டார்? இவர் எங்கிருந்து வந்தார்?

முதலில், இவருக்கு ஆதரவு கொடுக்கும் முன், இவரது பின்புலம் பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டு, இவரைப் பற்றிய உண்மையான தகவல்கள் வெளிவிடப்பட வேண்டும்....

இளவரசருக்கு ஆதரவுக்கரம் நீட்டு முன் சிறிது யோசிக்கவும்....

இது ஏன் சிறீ லங்கா அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட சதிவலைப் பின்னலின் ஒரு அங்கமாக இருக்கக்கூடாது?

இவ்வளவு காலமும் இருந்த மன்னர் ஏன் தீடீரென்று முளைத்து வந்துவிட்டார்? இவர் எங்கிருந்து வந்தார்?

முதலில், இவருக்கு ஆதரவு கொடுக்கும் முன், இவரது பின்புலம் பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டு, இவரைப் பற்றிய உண்மையான தகவல்கள் வெளிவிடப்பட வேண்டும்....

அது தானே?

நானும் ஒரு நாளைக்கு நான் தான் தமிழீழ இளவரசி என்று கிளம்பலாம் போல இருக்கே...

அது தானே?

நானும் ஒரு நாளைக்கு நான் தான் தமிழீழ இளவரசி என்று கிளம்பலாம் போல இருக்கே...

ஏது, இளவரசரை மடக்குற எண்ணமா ?

இவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. ஏனெனில் தமிழ் மன்னர்கள் இலங்கையை ஆட்சிசெய்த வரலாற்றுச்சான்றுகள் பலவுண்டு. இவன் விசரனை ஆதரிக்கிறதால நன்மை ஒன்றும் இல்லை. சேது ஒரு பைத்தியக்காரன் போல செயற்படுவதை தவிர்ப்பது நல்லது.

தமிழ்ழனின் ஆட்சி கண்டி இராச்சியம்வரை பரந்திருந்த சான்றுகள் உள்ளன. மேலும் இந்தியச் சக்கரவர்த்திகள் சிலர் இலங்கைமீது படையெடுத்து வந்துள்ளமையும் உண்மை.

நான் நினைக்கிறன் இந்த இளவரசர் காக்கைவன்னியன் பரம்பரைபோல....

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிவசப்பட்டு காக்கை வன்னியன் பரம்பரையுடன் சேர்க்க வேண்டாம்.

பண்டார வன்னியன்,காக்கை வன்னியன் இருவரும் ஒரே பரம்பரைதான்.

இப்போ நாம்தான் இதற்கு அதிக விளம்பரம் கொடுக்கிறோமோ தெரியவில்லை!!! :lol::(:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.