Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன: எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

 
இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன: எம்.ஏ.சுமந்திரன்

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன: எம்.ஏ.சுமந்திரன்

 

Colombo (News 1st)

 தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்காகவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதுபற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு தெரிவித்தார்,

இதுவரை காலமும் இலங்கை சரித்திரத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். தேசிய அரசாங்கம் என்று அவர்கள் ஒன்று சேர்வதற்கான காரணம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதாகும். வேறு காரணம் கிடையாது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்களும் எங்களின் ஆதரவைக் கொடுத்தோம். இது எங்களது மக்களின் அபிலாஷை. இந்த தடவை இந்த முயற்சி பலனளிக்காவிட்டால் பாரிய எதிர்விளைவு ஒன்று ஏற்படும் என்பதனையும் நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்திருக்கின்றோம்.

கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தியாகி தீலிபனின் 31 ஆவது உண்ணாவிரத ஆரம்பநாள் நினைவு தின நிகழ்வுகளின் போது எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

https://www.newsfirst.lk/tamil/2018/09/இனப்பிரச்சினைக்கான-தீர-2/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன: எம்.ஏ.சுமந்திரன்

இணைஞ்சு எவ்வளவு காலமாச்சு...........இதுவரைக்கும் ஏதாவது நடந்ததா? 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

இணைஞ்சு எவ்வளவு காலமாச்சு...........இதுவரைக்கும் ஏதாவது நடந்ததா? 

எங்களை மென்டலாகுவது எனும் முடிவோடோடுதான் இருக்கான்கள்  என்பது கண்போர்ம் .

  • தொடங்கியவர்

எங்களுடைய வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்து விட்டது- கூட்டமைப்பு!!

 
 
tna1-1024x6832.png

 

 

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி உள்­ளிட்ட அர­சு­ட­னான உற­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இது­வரை பின்­பற்றி வந்த அணு­கு­மு­றை­களை மாற்­று­வ­தற்­கான நேரம் வந்­து­விட்­ட­தாக அந்­தக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

இந்த அர­சின் ஆட்­சிக் காலம் முடி­வ­டை­ய­வுள்­ள­தா­லேயே, தமது போக்­கில் -– வழி­மு­றை­யில் சற்று மாற்­றம் செய்­ய­வேண்­டிய நிலை எழுந்­துள்­ள­தாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இப்­போது தெரி­வித்­துள்­ளது.

நாங்­கள் தற்­போது அணு­கு­மு­றையைச் சற்று மாற்ற வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனென்­றால் இந்த ஆட்­சி­யின் காலம் முடி­வ­டை­யப் போகின்­றது. நாங்­கள் எங்­கள் அணு­கு­மு­றை­களை சற்று மாற்­று­வோம்’ என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

கர­வெட்டி பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்­றுச் சனிக்­கி­ழமை, தியாக தீபம் திலீ­ப­னின் 31 ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது,

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் 2001ஆம் ஆண்டு நிகழ்த்­திய மாவீ­ரர் தின உரை­யில், உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான தீர்­வை­யும் பரி­சீ­லிக்­கத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார். இத­னா­லேயே, 2002ஆம் ஆண்டு போர் நிறுத்­தம் ஏற்­பட்­டது.

விளைவு விப­ரீ­த­மானது

நாங்­கள் சுய­­­­நிர்­ணய உரி­­­மை­யைக் கொண்­டுள்­ளோம் என்­ப­தைப் பன்­னாட்­டுச் சமூ­கம் ஏற்­றுக் கொண்­டது. ஆனால் தீர்வு கிடைக்­க­ வில்லை. இது­வரை கால­மும் இலங்கைச் சரித்­தி­ரத்­தில் எதி­ரும் புதி­ரு­மாக இருந்த இரண்டு பிர­தான கட்­சி­கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு அர­சாக ஆட்சி செய்­யத் தொடங்­கி­னார்­கள்.

கூட்டு அரசு என்று அவர்­கள் ஒன்று சேர்­வ­தற்­கான கார­ணம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வைக் காண்­ப­தா­கும். வேறு கார­ணம் கிடை­யாது. எதிர்க்­கட்சி வரி­சை­யில் இருந்து நாங்­க­ளும் எங்­க­ளின் ஆத­ர­வைக் கொடுத்­தோம். இது எங்­க­ளது மக்­க­ளின் வேணவா.

இந்­தத் தடவை இந்த முயற்சி பல­ன­ளிக்­கா­விட்­டால் பெரிய எதிர்­வி­ளைவு ஏற்­ப­டும் என்­ப­த­னை­யும் நாங்­கள் தொடர்ச்­சி­யாக சொல்லி வந்­தி­ருக்­கின்­றோம்.
2000ஆம் ஆண்டு சந்­தி­ரிகா அரசு புதிய அர­ச­மைப்பு வரை­வைக் கொண்டு வந்­தது.

சிறப்­பான அந்த வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் வெற்­றி­பெற முடி­யா­மல்­போ­னது. இப்­ப­டிப் பல வழி­க­ளில் கைக்கு எட்­டி­யது வாய்க்கு எட்­டா­மல் அல்­லது வாய்ப்­புக்­கிட்ட வந்து தவ­றிப்­போ­னது போன்ற நிலை ஏற்­பட்­டது.

நகல் வரைவு வர முன்­னர் இது வெற்­றி­பெ­றுமா என்ற எண்­ணம் மக்­க­ளி­டம் வந்­துள்­ளது. இதை எப்­படி நம்­பு­வீர்­கள் என்று கேட்­கின்­றார்­கள். நம்­பிக்­கை­யில்­லா­மல் ஒன்­றும் செய்­ய­மு­டி­யாது. மாண­வர்­கள் பரீட்­சை­யில் வெற்­றி­பெ­று­வோம் என்ற நம்­பிக்­கை­யில் பரீட்சை எழு­தி­னால் தான் வெற்­றி­பெ­ற­மு­டி­யும்.

என்ன செய்­யப் போகின்­றீர்­கள்?

இன்று எமக்கு எதி­ரா­கப் பரப்­புரை செய்­கி­ற­வர்­கள் கூட இது வெற்­றி­ய­ளிக்­காது எனப் பரப்­புரை செய்­கி­றார்­கள். நாங்­கள் எங்­க­ளுக்கு எதி­ரா­கப் பரப்­புரை செய்­ப­வர்­க­ளைக் கேட்­டுக்­கொள்வது என்­ன­வென்­றால் மாற்­று­வழி என்ன? அதனை வெளிப்­ப­டுத்­துங்­கள்.
வெறும் மேடைப் பேச்­சுக்­க­ளின் மூலமோ, பத்­தி­ரி­கை­க­ளில் அறிக்கை விடு­வ­தன் மூலமோ உணர்ச்­சி­வ­ச­மாக மக்­க­ளைத் தூண்­டும் வகை­யில் செய்­வ­தன் மூலமோ எத­னை­யும் செய்­ய­மு­டி­யாது.

அகிம்சை வழி­யில் உயிர் நீத்த தியாக தீபம் திலீ­பன் வழி­யில் செல்­லப்­போ­கி­றீர்­களா? அத­னை­விட வேறு என்ன செய்­யப்­போ­கி­றீர்­கள்? அல்­லது புலி­க­ளால் நடத்­தப்­பட்ட ஆயு­தப் போராட்­டத்­தை­விட பெரிய போராட்­டம் ஒன்றை ஆரம்­பிக்­கத் தயாரா?

உலக சரித்­தி­ரத்­திலே எவ­ரும் தொட முடி­யாத, சிக­ரத்­தைத் தொட்ட காலால்­படை, கடற்­படை, வான்­படை எல்­லா­வற்­றை­யும் வைத்­துப் போரா­டிய புலி­க­ளின் போராட்­டத்­தை­வி­டவா நீங்­கள் போரா­டப் போகி­றீர்­கள். அதை மக்­க­ளி­டம் சொல்­ல­வும்.

அணு­கு­முறை மாற்­றம்

அப்­ப­டி­யா­னால் உங்­க­ளி­டம் உள்ள மாற்­று­வ­ழி­கள் என்ன? எங்­க­ளின் அணு­கு­மு­றை­யில் மாற்­றம் இருக்க வேண்­டுமா சொல்­லுங்­கள். வெற்­றி­பெற வேண்­டும் என்­ப­து­தான் எங்­கள் இலக்கு. நாங்­கள் தற்­போது அணு­கு­மு­றையை மாற்ற வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனென்­றால் இந்த ஆட்சி முடி­யப் போகின்­றது. நாங்­கள் அணு­கு­மு­றையை சற்று மாற்­று­வோம்.

நாட்­டுக்­குள் ஒரு தீர்­வைக் காண்­ப­தற்கு நாட்டு மக்­கள் அனை­வ­ரும் இணங்க வேண்­டும். நாங்­கள் ஒன்­றும் நியா­ய­மற்­ற­தைக் கேட்­க­வில்லை என்­பதை அவர்­கள் உண­ர­வேண்­டும். அவர்­கள் சந்­தே­கப்­ப­டும் வித­த்­தில் மாற்­று­வழி பற்­றிப் பேசு­வோர் செயற்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் சந்­தே­கப்­பட்­டால் எமது இலக்கை அடை­வது கடி­னம்.

அதற்­காக பொய் சொல்ல வேண்­டும் என்ற அவ­சி­யம் இல்லை. நாங்­கள் என்ன விதத்­தில் பேசு­கின்­றோம், எப்­ப­டிப் பேசு­கின்­றோம் என்­ப­தில்­தான் அது தங்­கி­யி­ருக்­கின்­றது.

பன்­னாட்­டுச் சமூ­கம் ஆத­ரவு

பேச்­சுக்­கான இந்த அணு­கு­மு­றை­க­ளைக் கையா­ளும்­போது உடனே அவர் விலை­போய்­விட்­டார் எனச் சொல்­கி­றார்­கள். இது இல­கு­ வா­கச் சொல்­கின்ற வார்த்தை. எல்லா ஆயு­தங்­க­ளும் இருந்­தும் கூட பெறப்­பட முடி­யா­ததை ஒரு ஆயு­த­மும் இல்­லா­மல் அவர்­க­ளு­டன் முட்டி மோதிப் பெற­மு­டி­யுமா? மாற்று அணு­கு­மு­றை­களை வைத்­துள்­ளார்­கள் இத­னைச் சொல்­ல­வேண்­டும்.

இப்­போது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஆத­ரவு எமது பக்­கம் உள்­ளது. ஆயு­தப் போராட்ட காலத்­தில் புலி­களை அந்த நாடு­கள் தடை­செய்­தி­ருந்­தன. அவர்­க­ளின் மன­தில் நாங்­கள் பொறுப்­பற்­ற­வர்­கள் என்ற எண்­ணம் வரக்­கூ­டாது.

சாதா­ர­ண­மாக இலக்கை அடைய சமூ­கத்­தில் பின்­பற்ற வேண்­டிய முறை­கள் இருக்­கின்­றன. அவற்றை நாங்­கள் பின்­பற்­ற­வேண்­டும். இந்த நாட்­டில் பெரும்­பான்மை இனத்­தின் எதிர்ப்­பைச் சம்­பா­தித்து எமது இலக்கை நிறை­வேற்ற முடி­யாது. ஆனால் சம­ர­ச­மா­கப் பேசி அத­னைச் செய்ய முடி­யும்.

அந்­தப் பக்­கு­வம் எங்­கள் மக்­கள் மன­தில் இருக்­க­வேண்­டும். அது எமது மக்­க­ளி­டம் இருக்­கி­றது. அதை இல்­லா­மல் செய்­யும் பரப்­பு­ரையை அனு­ம­திக்க முடி­யாது. அந்­தப் பொறுப்­பற்ற பரப்­பு­ரையை முறி­ய­டிக்­க­வேண்­டி­யது இளை­ஞர்­க­ளின் கைக­ளி­லேயே இருக்­கி­றது –  என்­றார்.

https://newuthayan.com/story/10/எங்களுடைய-வழிமுறைகளை-மாற்றும்-நேரம்-வந்து-விட்டது-கூட்டமைப்பு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.