Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!

Featured Replies

இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!

Chanal-4.png?resize=800%2C558

இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், சனல்4 ஆவணப் படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.

 

இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளமையுடன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மக்ரே இதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஊடகப் பிரதானிகளை சந்தித்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் மரியோ அருள், “இதிலே மிகவும் மோசமான விடயம் யாதெனில் இதற்குப் பின்னரும் கூட இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்ற பல்லவியைப் பாடுவதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் மாற்றிக்கொள்ளமாட்டா. இலங்கை அரசு நீதியை ஒருபோதும் வழங்கமாட்டாது என்ற விடயத்தைத் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர்” – எனத் தெரிவித்துள்ளார்.

இக் கருத்தினை மேற்கோள் காட்டி தனது ருவிட்டர் பதிவிலே கருத்து தெரிவித்த கெலும் மக்ரே, “சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வழங்கிய தன் சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருகின்றது. இலங்கையில் நீதிக்குத் தொடர்ந்தும் துரோகமிழைக்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்கள் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/95853/

  • கருத்துக்கள உறவுகள்

கெலும் மக்ரே தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என சலிக்காமல் தொடர்ந்தும் கேட்டுவருகின்றார். ஆனால் தமிழ்த் தலைமைகள் “நல்லாட்சி” அரசுக்குப் பின்னர் ஒளிந்துள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

கெலும் மக்ரே தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என சலிக்காமல் தொடர்ந்தும் கேட்டுவருகின்றார். ஆனால் தமிழ்த் தலைமைகள் “நல்லாட்சி” அரசுக்குப் பின்னர் ஒளிந்துள்ளன. 

நிலைமை இன்னும் மோசமாக போக இருக்கிறது.  சீன ஆதிக்கத்தை  தடுக்க முடியாத ரனிலினால் அமெரிக்காவுக்கு இனி பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா, மோடியின் உதவியுடன் மகிந்த வை தமது பக்கம் திருப்பி உள்ளது. மீண்டும் மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வரும் என்பதில் அமரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ரனில் இனி பயன் அற்றவர் என முடிவு எடுத்து விட்டார்கள்.

மகிந்தவை   வழிக்கு கொண்டுவர மட்டுமெ போர்க்குற்ற விசாரணை  அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. இப்போது அந்த தேவை முடிந்து விட்டது. 

இனிமேல் போர்க்குற்ற விசாரணையால் பயன் பெறக்கூடிய சக்தி யு.என்.பி. மட்டுமெ. இறாஜபக்ச குடும்பத்தை உள்ளே தள்ளி அது பற்றி எதுவும் எவரும் பேசக்கூடாது என்று சட்ட ரீதியாகவும், வெள்ளை வான் முறையிலும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமெ அமெரிக்க - இந்திய ஆதரவுடன் களம் இறங்க கூடிய மகிந்தவை யு,என்,பி. தடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Jude said:

மகிந்தவை   வழிக்கு கொண்டுவர மட்டுமெ போர்க்குற்ற விசாரணை  அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. இப்போது அந்த தேவை முடிந்து விட்டது. 

இனிமேல் போர்க்குற்ற விசாரணையால் பயன் பெறக்கூடிய சக்தி யு.என்.பி. மட்டுமெ. இறாஜபக்ச குடும்பத்தை உள்ளே தள்ளி அது பற்றி எதுவும் எவரும் பேசக்கூடாது என்று சட்ட ரீதியாகவும், வெள்ளை வான் முறையிலும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமெ அமெரிக்க - இந்திய ஆதரவுடன் களம் இறங்க கூடிய மகிந்தவை யு,என்,பி. தடுக்க முடியும்.

மகிந்த அணியினர்தான் அடுத்ததாக ஆட்சியில் அமர்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மேற்குநாடுகளின் சொல்கேட்டு நடப்பார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. சீனாவின் அபிவிருத்தி உதவிகள் சிறிலங்காவுக்கு தொடர்ந்தும் தேவை என்பதால் போர்க்குற்றத்தில் இருந்து தப்பிக்க தேவையான குறைந்தளவு செயற்பாடுகளை மேற்கு நாடுகளைத் திருப்தி செய்யும் அதே நேரத்தில் சீனாவையும் அனுசரிப்பார்கள்.

மகிந்த அணியினர் சிங்கள இனவாதத்தில் குளிர்காய்பவர்கள் என்பதால் பிற இனங்கள் நெருக்குவாரப்படும் ஆனால் அதன் அளவு மட்டுப்படுத்தப்படலாம். எனினும் சிறுகச் சிறுக வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் இனப்பரம்பலைக் குறைத்து தமிழர்களின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்யும் திட்டம் தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.