Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர்

Featured Replies

மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர்

 

 

இராஜாங்கஅமைச்சர் ஹஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு எதிராகமட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர்உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்தப்போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கெவிலியாமடுவில்ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புபுல்லுமலையில் இராஜாங்க அமைச்சர் ஹஸ்புல்லாவினால் குடிநீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால்புல்லுமலை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மங்களாராமயவிகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர் வெகு விரைவில் கிழக்குமாகாணத்திலுள்ள தமிழ் - சிங்கள மக்களை ஒன்றிணைத்து வீதிப் போராட்டத்தைநடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

கரடியராறுபகுதியிலிருந்து குடிநீரை அரேபிய நாடுகளுக்கு அனுப்பும் திட்டமொன்றை இராஜாங்கஅமைச்சர் ஹிஸ்புல்லா ஆரம்பித்திருக்கின்றார். எமதுநாட்டு சொத்துக்களை மில்லியன்கணக்கிற்கு விற்பனை செய்து வெலிகந்த, பூனாணை பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரியஇஸ்லாம் பாடசாலை ஒன்றை அமைக்கின்றார். இதற்கு நான் எதிர்ப்பை வெளியிடுகிறேன்.

வடக்கு, கிழக்கிற்கு பிரவேசிக்கின்ற பிரதான வீதியில் எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு வீதியில் நடக்கமுடியாத அளவிற்கு வித்தியாசமான திட்டங்களைவகுக்கின்றனர். இருக்கின்ற அத்தனை காணிகளும் இழக்கப்படுகின்றன. அண்மையில் கோவில்ஒன்றை இடித்து அழித்திருப்பதாக கேள்விபட்டேன்.

இனப்பிரச்சினையாக ஏற்படுமாயின்அதற்கு தீர்வுகாண்பது யார்? ஆகவே அமீர் அலி, தமிழ் மற்றும் சிங்களஅரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்ட விரும்புகிறது என்னவென்றால் வாகரை தொடக்கம்கொக்கட்டிச்சோலை, புல்லுமலை பகுதிகளிலுள்ள அப்பாவி மக்களின் பிரச்சினைகளை பேசுவதுயார்? அவர்களுடைய சொத்துக்களை பாதுகாப்பது யார்? 30 வருட போரில் பாதிப்பைஎதிர்கொண்ட மக்கள் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்து கவனம்செலுத்த வேண்டும்.

அரசியல் தலைவர்களுக்கு இயலாவிட்டால் தமிழ், சிங்கள மக்களைஒன்றிணைத்து, சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்த நேரிடும். வீதியில் எங்களைஇறங்கவிடாமல் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணைந்து கிழக்கு மாகாண தமிழ், சிங்களமக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறிப்பாக ஹிஸ்புல்லா முன்னெடுக்கும் குடிநீர்வியாபாரம் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகிறேன்.

அதேபோல இஸ்லாம் பல்கலைக்கழகம் குறித்தும்,அதனால் நாட்டிற்கு ஏற்படும் ஆபத்து, அரோபியர்களை அழைத்துவந்து அங்கேகற்றுக்கொடுப்பதற்கான வழிகள், இதற்கான ஒப்பந்தங்கள் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.தமிழ் மக்களை கீழே தள்ளிவிடுகின்ற இப்படியான செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பைவெளியிடுகிறேன்.

இனவாத, மதவாதம் எனக்கில்லை. ஆனால் அரசியல் மற்றும்நிர்வாகத்திலுள்ள சில பலவீனத்தினால் அப்பாவி மக்கள் நடுத்தெருவிற்கு வருவதுகுறித்தஆபத்தை நான் சுட்டிக்காட்டுகிறேன். வெகுவிரைவில் தமிழ், சிங்கள மக்களை இணைத்துவீதியில் களமிறங்குவோம். மங்களாராமயவிலிருந்து ஆரம்பிப்போம். விரைவில் பதிலைஎதிர்பார்க்கின்றோம்.

இந்தத் திட்டத்தை ஹிஸ்புல்லா நிறுத்துவாரா? அதற்கு உத்தரவுபிறப்பிப்பார்களா? தமிழ் மக்களின் காணிகள் குறித்த பிரச்சினைகள் அடங்கிய ஆவணம்என்னிடம் இருக்கிறது. தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒன்றைக் கூறுகிறேன். ஓரிடத்திற்குஅணிதிரண்டு எம்மோடு இணைந்து அதற்கெதிராக வருமாறு அழைக்கின்றேன்.

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் கெவிலியாமடு பகுதியில் தான் நிர்மாணித்தகுளத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சுமணரத்தின தேரர் குளத்தின்மீது உணவு தவிர்ப்பு போராட்டத்தை 25 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும்குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாகுடிநீரை பலகோடி ரூபாய்களுக்கு அரேபியர்களுக்கு விற்பனை செய்கின்றார். அதனால்தமிழ் மக்களின் வளர்ப்பு கால்நடைகளுக்கு நீரில்லாததினால் கால்நடைகளுக்கு நீர்வழங்குவதற்காக நான் கெவிலியாமடு பகுதியிலுள்ள விகாரைக்கு அருகில் குளமொன்றைஅமைத்து வருகின்றேன். ஆனால் வனஇலாகா அதிகாரி ஒருவர் அதனை நிறுத்தும்படிகூறியுள்ளார்.

அதேபோல மங்களகம பொலிஸார் பல்வேறு காரணங்களைக் கூறி இலட்சரூபாய்களில் கப்பம் கோருகின்றனர். அதனால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பல வாரங்களாகநிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பானபொலிஸ் அதிகாரி மற்றும் ஜனாதிபதி வரை அறியப்படுத்தியுள்ளேன். இதுவரை எமக்குஅர்த்தபுஷ்டியான தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைகெவிலியாமடுவில் குளத்தின் மீது உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளேன்.இனவாத, மதவாதமற்ற இந்த போராட்டத்தை ஊடகங்கள் மக்களிடம் கொண்டுசேர்க்கும்படிகோருகிறேன்.

https://www.ibctamil.com/srilanka/80/106506

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர்

போறபோக்கில கிழக்கு தமிழர்களின் தனிபெரும் தலைவராக அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மாறினாலும் ஆச்சரியமில்லை.

அதேபோல வடக்கில்  கிளிநொச்சி பகுதியில் தேர்தலில் நின்றால்  தமிழ் அரசியல்வாதிகளைவிட  அதிக பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர்களை கட்டுபணம் இழக்க வைப்பார் இராணுவ உயர் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பந்து...

பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமை தாங்குபவர்களே தலைவர்கள்...பிரச்சனைகளை உருவாக்கி  அதில் தம் வசதியையும் வயிறையும் வளர்ப்பவர்களல்ல தலைவர்கள்...

நேற்றைய எதிரிகளாய் இருந்தாலும்,கையறு நிலையில் இருக்கும் இன்றைய  தமிழர்களுக்கு ஏதாவது ஒருவகையில்  கைகொடுக்கும் சிங்களவர்கள்....  இன்றைய தமிழ்கட்சிகளைவிட ஆக்கபூர்வமானவர்கள்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... சிங்கம் கிளம்பிரிச்சையா.... கிளம்பிருச்சு...

தமிழ் மக்களை சிங்கள இனவாத பிக்கரிடம் அனுப்பி வைத்ததே இந்த ஹிஸ்புல்லா குறூப் தான்.

இவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாட்டால்...இப்ப இணக்க அரசியல் பேசும் சம்பந்தர் குழம்பப் போறார்... :grin:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

நீதி கிடைக்கும் வரை போராடுவேன் – அம்பிட்டியே சுமணரத்ன தேரர்

 

IMG_8057-720x450.jpg

மட்டக்களப்பு எல்லை கிராமமான கௌலியாமடு பன்சல்கல விகாரை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு வனபரிபாலன திணைக்களம் அறிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளக்கட்டில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

விகாரையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் 75 வீதம் முடிவடைந்த நிலையில் புனரமைப்பு ஒப்பந்தகாரரிடம் பொலிஸார் இலஞ்சமாக இலட்சக்கணக்கில் பணம் கேட்டனர்.

இதனால் மாதக்கணக்கில் புனரமைப்பு பணிகளை இடைநிறுத்தியிருந்தேன்.

எனினும், மீண்டும் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வனவரிபாலன திணைக்களத்தினர் அதனை நிறுத்துமாறு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

எனினும், இதற்கு இன்றுவரை நியாயமான பதில் கிடைக்கவில்லை.

எனவே நியாயம் கிடைக்கும் வரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் குளக்கட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நீதி-கிடைக்கும்-வரை-போரா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.