Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் இளந்தளிர் - 2007

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும்

இளந்தளிர் - 2007

tyo2wg0.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சமர் தொடங்கிட்டு என்று சிக்னல் காட்டினம் போல..! எனி சொல்லவும் வேணுமோ..??! :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சார் நீங்களும் வந்து பார்க்கிறதுதானே

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சார் நீங்களும் வந்து பார்க்கிறதுதானே

ஒரு *****.. ஒரு பிரேக் டான்சு.. ஒரு பொலிவூட் டான்சு..ஆக மிஞ்சிப் போனா ஓகன்.. கிற்றார்.. உதுகளை வாசிக்கிறது.. இதைவிட்டா என்ன நிகழும்..! ஆக மிஞ்சி மிஞ்சிப் போனா ****..! இதையெல்லாம் வந்து பார்த்து தான் அவங்க வளர்க்கனும் என்றில்ல..! வீட்டுக்கு வீடு போட்டி போட்டுட்டு இதுதானே வளர்க்கிறாங்க..! ஏதோ கலை பண்பாடு என்று ஏதோ கொஞ்சோண்டு என்றாலும் பரப்பப்படுது என்றதை விட.. உதில என்ன இருக்கு கப்பி மேம்..!

10 - 25 பவுணுக்கு.. வேலை வைக்கிறதென்று முடிவோடதான் இருக்கீங்க போல..! உந்தக் காசைக் கொண்டு போய் உங்கினை தமிழ் நகைக்கட வழிய சீட்டுப்பிடியுங்க கப்பி மேம் தங்கமாவது மிஞ்சும்...! :(:(:D

**** சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

நெடுக்ஸ் சார் நீங்களும் வந்து பார்க்கிறதுதானே

நெடுக்ஸா ..... ........ இளந்தளிருக்கா ...... உஹும் அவர் போய் பாக்க மாட்டார் கறுப்பி .... இது புலத்து இளைஞர்கள் நடத்துறதல்லா ... அவர் எப்படி போய் பார்ப்பார் ;) ;) B)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸா ..... ........ இளந்தளிருக்கா ...... உஹும் அவர் போய் பாக்க மாட்டார் கறுப்பி .... இது புலத்து இளைஞர்கள் நடத்துறதல்லா ... அவர் எப்படி போய் பார்ப்பார் ;) ;) B)

புகலிடத்து இளையவர்கள் ரெம்பவே மாற்றங்களை தேட வேண்டியவர்களாக உள்ளனர்..! புகலிடத்தில் உள்ள இளையவர்கள் சிலரின் உந்துதலுக்கு உட்பட்டு செயற்படுகின்றனரே தவிர தங்களை தங்கள் சமூகத்தை சரியாக அளவிட்டு அதற்கு தேவையானதை வழங்குபவர்களாக இல்லை..! அரசியல் போராட்டங்களாக இருக்கட்டும் இப்படியான களியாட்டங்களாக இருக்கட்டும்.. மாற்றங்கள் இல்லாத குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் நிலைதான்..! ஆக மிஞ்சிப் போனா மேற்குலகை கொப்பி அடிச்சு தங்களை தங்கள் சமூகத்துக்குள் வேறுபிரித்துக் காட்ட முனைகின்றனரே தவிர அவர்களுக்கு என்று தனித்துவமான சிருஷ்டிப்புக்களுக்கு வாய்ப்பிருந்தும் பாவிப்பது கிடையாது..! :(:D

மே மாதத்த்துக்குரிய இளையவர்களின் நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை 6 விளம்பரங்கள் கிடைத்திருக்கிறது. எல்லாத்திலும் உள்ள ஒற்றுமை என்றால்... Single - 10 Family - 15-25 பவுண்... அதென்ன இவ்வளவு காலமும் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இல்ல இல்ல குளிருக்க போர்த்துக் கொண்டிருந்தவர்கள்.. எனித்தான்...???! :D:(:lol:

தமிழீழம் என்ற ஒரு இலட்சியத்தை வகுத்துக் கொண்டதும் இளைஞர்கள் தான்.. சயனைட் குடித்து போராட்டத்தை காட்டிக் கொடுப்பில் இருந்து பாதுகாத்தவனும் இளைஞன் தான்.. அதுவும் சொகுசான வாழ்வு வாழ்ந்த இளைஞர்கள் தான்..! அவர்களால் மாற்றங்களை தேட முடிந்தது மட்டுமன்றி மக்களைக் கூட சிந்திக்க வைக்க முடிந்தது..! ஆனால்.. இங்கு.. மக்கள்(பெற்றோர்) சிந்திக்க வைக்க வேண்டிய நிலையில் இளையோர் பலர்..! அதுவும் நவீன உலக ஆதிக்கத்துள் வாழ்ந்தும்..சிருஷ்டிப்புச் சிந்தனையற்றவர்களாக.. ஒருவரை ஒருவர் பிரதிபண்ணியபடி..???! :P :lol:

Edited by nedukkalapoovan

ஓ ... அப்ப எந்தவிதமான மாற்றங்களை புலத்து இளையவர்கள் தேட வேண்டும் எண்டு நினைக்கிறீங்கள்?

ரெம்ப கஸ்டபட்டு செய்யிற ஒரு நிகழ்வை களியாட்டம் எண்டு சொல்லுறீங்கள் .... ஒவ்வொன்றையும் முன் நிண்டு செய்து பாக்கனும் ..அபபத்தான் புரியும்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ... அப்ப எந்தவிதமான மாற்றங்களை புலத்து இளையவர்கள் தேட வேண்டும் எண்டு நினைக்கிறீங்கள்?

ரெம்ப கஸ்டபட்டு செய்யிற ஒரு நிகழ்வை களியாட்டம் எண்டு சொல்லுறீங்கள் .... ஒவ்வொன்றையும் முன் நிண்டு செய்து பாக்கனும் ..அபபத்தான் புரியும்..... :D

1. திட்டமிடல் தொடங்கி நிறைவு வரை இளையவர்களின் கையில் இருக்க வேண்டும் வெளியார் தலையீடுகள் இருக்கக் கூடாது.

2.இளையவர்களுக்கு தாங்கள் ஒழுங்கமைக்கும் நிகழ்வின் இலக்கு என்ன என்பது பற்றிய சரியான அறிவுத் தேடல் இருக்க வேண்டும்.

3.நடைமுறை உலகில் தாங்கள் சார்ந்த சமூகத்துக்கு தேவையானதை அளிப்பவையாக இருப்பதுடன் சிந்தனைகளை மேம்படுத்துபவனவாக இருக்க வேண்டும்.

4. பாரம்பரிய அடையாளங்களை சரியான வடிவில் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் வேண்டும்.

5. நவீனத்துவங்கள் உலகியல் மாற்றங்களை உள்வாங்கி கலப்படமின்றி வழங்கக் கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.

6.மக்களை நிகழ்காலத்துக்கு ஏற்ப அல்லது சிறப்பான எதிர்காலத்துக்கு இட்டுச் செல்ல வகையில் நிகழ்வுகள் வழிநடத்த வேண்டும்.

7. வெட்டிப் புகழ்சிக்கும் மேடையில் கோப்பைகள் வாங்கவும் நானும் நிகழ்சி செய்தேன் என்று பீற்றவும் நிகழ்சிக்களுக்கு செல்லுதலை நிறுத்த வேண்டும்.

8. மேற்குலக கலைவடிவங்களை படிப்பது மட்டுமன்றி அவற்றுக்குள் தனித்துவங்களைப் புகுத்தி எமக்கென்று சிரிஷ்டிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இளையராஜாவும் சிம்பனியும் போல..!

9. இளையவர்களின் சிந்தனை தாயகத்தை உறவாடுவதோடு நெருங்கிச் செல்ல வேண்டும். அதுமட்டுமன்றி 21ம் நூற்றாண்டுக்கு அவசியமான நவீனத்துவங்களை பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அவற்றை பாவிக்கவும் வழிகாட்டுபனவாக இருக்க வேண்டும்.

10. புலம்பெயர்ந்த இளையவர்கள் என்ற பாகுபாடு தங்களை வேறுபடுத்துவதற்காக அன்றி தனி அடையாளத்தோடு தங்களை தாயக இளசுகளோடு இணைக்க வல்லனவாக இருக்க வேண்டும்..!

11. அறிவியல் சார்ந்து நிகழ்சிகள் உதாரணங்களாக வேண்டும்.

12.அடுத்தவரை அல்லது இன்னொரு இனத்தவரை அவர்களின் கலை வடிவங்கலை கொப்பி பண்ணுதல் நக்கல் அடித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

13. சினிமாவை முதன்மைப்படுத்துதல் நிறுத்தப்பட வேண்டும்.

14. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வு குறித்தும் உண்ணிப்பாக அவதானித்து தேவையான செயற்பாடுகளை தாங்களாக வகுத்து பிரச்சனை எதிர்கொள்ள சமூகத்தை வழிகாட்ட வேண்டும். அதற்கு தலைமம தாங்க வேண்டும்..!

15.நாகரிகம் முற்போக்கு என்ற போர்வையில் அநாகரிகங்களை நிலைநாட்டுதலை தவிர்ப்பதோடு தங்கள் நாகரிக எடுகைக்கான விளக்கங்களை அவர்கள் அளிக்கவல்லவர்களாக இருக்க வேண்டும்..!

16. ஒரு வடிவ கலை நிகழ்வுகளை மீள மீள ஒப்பிப்பதை நிறுத்த வேண்டும்.

17. பணத்தை விளம்பரத்தை புகழை முதன்மைப்படுத்தும் நிகழ்வுகளை நிறுத்த வேண்டும்.

18. நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குபவர்கள் சமூகத்துக்கு வழிகாட்டத்தக்க வகையில் தங்களுக்குள்ள பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். மேடையில் ஒன்று செயற்பாட்டில் இன்னொன்று என்று இருப்பது தவிரக்கப்பட வேண்டும்.

19. புகழ்பெற்ற அல்லது தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தலைக்கணம் பிடித்த கூட்டத்தை நிகழ்வுகளுக்கு அழைப்பதை நிறுத்துவதோடு முழுக்க முழுக்க இளையவர்களை கொண்டிருக்கும் நிகழ்வுகளாக இருக்க வேண்டும்.

20. தாயகத்தில் இருந்து இளைஞர்களை வரவழைத்து அவர்களுடன் எதிர்கால உலகை அதன் அரசியல் பொருளியல் அறிவியல் தொழில்நுட்பவியல் மாற்றங்களை தமிழ் சமூகம் எப்படி எதிர்கொள்வது.. எதிர் கொள்வதில் உள்ள பிரச்சனைகள் என்ன.. அவற்றைக் களைவது எப்படி என்று கருத்துக்களைப் பரிமாறுவதுடன் நீண்ட கால செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.

21. இளையவர்களுக்குள் உள்ள அனைத்து வேறுபாடுகளும் களையப்படுவதோடு தமிழ் இளையோர் அமைப்பு சமூகத்தலைமைத்துவத்தை பிரதிநித்துவம் செய்யக் கூடிய அளவுக்கு தங்களின் ஆளுமை திறமை கட்டுக்கோப்பு ஒழுக்கம் என்பவற்றை வளர்த்துக் கொள்ளவும் அதை சமூகத்தில் பிரதிபலிக்கவும் வேண்டும்..!

22. இளையோர் நிகழ்வுகளை சமூகத்தின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்கள் நோக்கியும் விரிபுபடுத்த வேண்டும்.

23.சமூகத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்சியான உதவிகளை வழங்கக் கூடிய நிரந்தர அமைப்பு ஒன்றையும் மக்கள் தொடர்பையும் கொண்டிருக்க வேண்டும். மக்களின் முறைப்பாடுகளுக்கு ஏற்ப தீர்வுகளை அல்லது வழிகாட்டுதலை செய்ய முன்வர வேண்டும்.

24. சமூகத்தைப் பாதிக்கச் செய்யும் குழுச் செயற்பாடுகளை நிறுத்த ஆலோசனைகள் வழங்க வேண்டும். பொலிஸாரோடு சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்..! மற்றச் சமூகங்களின் தனித்துவங்களை மதிக்கவும் அவர்களை அரவணைக்கவும் அவர்களுக்கு அச்சுறுத்துவதை நிறுத்தவும் வழிகாட்ட வேண்டும்

25.இளையவர்களே இளையவர்களை சரியான திசை நோக்கி நகர்த்த திட்டமிடலுடன் செயற்பட வேண்டும். இளையோர் வன்முறைகளை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் போதைப்பொருள் பாவனை மற்றும் இதர சமூகவிரோத செயற்பாடுகளை தடுக்க பிரச்சாரங்களோடு நடவடிக்கைகளையும் உதவிகளையும் செய்ய வேண்டும்..!

இப்படி.. நிறைய அடுக்கிக் கொண்டு போகக் கூடிய அளவுக்கு புலம்பெயர் இளையவர்கள் மத்தியில் பல குறைபாடுகள் தென்படுகின்றன..!

நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது புகலிடத்தைப் பொறுத்தவரை பெரிய காரியமல்ல. நிகழ்வு ஒன்று சமூகத்துச் சொன்ன விடயம் என்ன அதனால் சமூகம் பெற்றுக் கொண்டது என்ன என்பதுதான் முக்கியம். வெறும் பொழுதுபோக்கிற்காக நிகழ்வுகளை நடத்துவதால் பணம் திரட்டுவதால் ஈழத்துப்படத்தை வைத்து நிகழ்வு நடத்து மட்டும் தான் இளையோரின் பணி என்றால் அது அர்த்தமற்ற ஒன்று. அவர்களின் ஆளுமைக்கு இடமளிக்காத ஒன்று..! :P :(:(

நெடுக்சார் மெலே சொன்ன 25 விடயங்களையும் பின்பற்ரி ஒரு நிகழ்ச்சியை ஏன் நீங்கள் செய்துகாட்டக்கூடாது. எல்லாத்தையும் சொல்லலாம் செய்துகாட்டிறது ரொம்பக்கஷ்டம்

ஆக மிஞ்சி மிஞ்சிப் போனா ****..!

இதைவாசிக்க மனதுக்குமிகவும் கஷ்டமாக இருந்தது நீங்கள் ஒழுங்கான நடனத்தை பார்கவில்லை அல்லது நடனத்தை பார்க்கசெல்லும்பொழுதே பரத்தையாட்டம என்ற சிந்தனையோடுதான் உள்நுளைகின்றீர்கள்போல் தெரிகிறது

**** சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வாறான நிகழ்வுகள் எதற்க்காக நடைபெறுகின்றன? இதில் சேர்க்கப்படும் பணம் எதற்கு பயன்படுத்தப்படுகின்றது? யாருக்க்காவது தெரிந்தால் சொல்லுங்க?

இவ்வாறான ஒரு சில நிகழ்வுகளை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. சத்தியமாக சொல்கின்றேன் அந்த நிகழ்வுகளை எனது கலாச்சார நிகழ்வுகள் அல்லது எனது சமூகத்தவரினது நிகழ்வு என்று வேற்று இன நண்பர்களுக்கு காட்டக்கூடிய ஒரு தரம் எந்த ஒரு நிகழ்வுகளிலும் இருக்கவில்லை. அதை ஒரு புல தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பினார்கள். எதற்காக அதை ஒளி பரப்பினார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை? இலங்கைத்தமிழனின்/ ஈழத்தமிழனின் கலை நயம் இவ்வளவு தான் என்பதை உலகத்தமிழருக்கு காட்டவா?

இவ்வாறான நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் அந்த நிகழ்வுகளது தரத்தினை மெருகூட்டப்பட்ட பின்னர் மேடையேற்ற வேண்டும்.

சீ ஜ டீ வீ என்ற ஒரு தொலைக்காட்சியில் ஒரு இலண்டனில் தமிழரால் தயாரிக்கப்படும் ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தைப்பார்த்தேன்.....அட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்... அனைவரது பதிலையும் எதிர்பார்த்து.....

இவ்வாறான நிகழ்வுகள், எந்த விதத்தில் இளையோரது முன்னேற்றத்துக்கு வழிவகுகின்றது அல்லது தமிழீழ போராட்டத்துக்கு உதவி புரிகின்றது? இந்த நிகழ்வை நடத்துவதால் இளையோர் எந்த ஒரு புதிய அறிவை அல்லது அனுபவங்களை (புல வாழ்க்கைக்கு தேவையான) பெறுகின்றார்களா? இது வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு முறையாகவே எனக்கு தென்படுகின்றது. அதாவது இயலாமை.

புல இளையோர் தமிழ் கற்கலாம் என்று எவராவது பதில் தந்து விடாதீர்கள்... ஏனென உங்களுக்கே தெரிந்திருக்கும்.

அது சரி இந்த இளையோர் அமைப்பு எதற்காக தொடங்கப்பட்டது? கறுப்பி உங்களுக்கு தெரியுமா? இவர்கள் சாதித்தது என்ன?

நெடுக்ஸ் நிறையத்தான் சொல்லியிருக்குறீங்கள் .. இவ்வளவு மாற்றங்களையும் இளையவர்கள் தேடவேண்டும் என்று நினைக்கிறீங்கள்..... :rolleyes:

1. திட்டமிடல் தொடங்கி நிறைவு வரை இளையவர்களின் கையில் இருக்க வேண்டும் வெளியார் தலையீடுகள் இருக்கக் கூடாது

இதில் வெளியார் என்று யார சொல்லுறீங்க? பெரியாக்களையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நிறையத்தான் சொல்லியிருக்குறீங்கள் .. இவ்வளவு மாற்றங்களையும் இளையவர்கள் தேடவேண்டும் என்று நினைக்கிறீங்கள்..... :lol:

இதில் வெளியார் என்று யார சொல்லுறீங்க? பெரியாக்களையா? :rolleyes:

பெரியாக்கள் மட்டுமில்ல தாயகத்தில் அது செய்தன் இது செய்தன் அதில இருந்தன் இதில இருந்தன் அந்தப் பல்கலைகழக முன்னால் பேராசிரியர் பின்னாள் அதிகாரி.. இப்படிச் சொல்லிக் கொண்டு.. பலர்...! இவர்கள் எவரும் தலையிடக் கூடாது. வேணும் என்றால் அவர்கள் ஒரு பொது அமைப்பை உருவாக்கி அதன் கீழ் இளையவர்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட்டு தங்கள் பீட்பைக்ஸை வழங்கி வழிநடத்தலாம். ஆனால் அவர்கள் இளையவர்களின் சுயாதீன சிந்தனையில் சிருஷ்டிப்பில் குறுக்கிடக் கூடாது.. அப்போதுதான் இளையவர்களுக்கு சுய தேடலும் ஆளுமையும் தேவைகளை உணர்ந்து செயற்படும் பக்குவமும் தோன்றும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு சொல்ல மட்டும்தான் தெரியும்.. எல்லாம் தியறிதான்.. செயலில் ஒண்டும் கிடையாது. செய்யிறவங்களையும் செய்யவிடாது!!

அது சரி இந்த இளையோர் அமைப்பு எதற்காக தொடங்கப்பட்டது? கறுப்பி உங்களுக்கு தெரியுமா? இவர்கள் சாதித்தது என்ன?

கீழுள்ள இணைப்பில் விளக்கமாகப் போட்டுள்ளார்களே..

http://www.tyo-uk.org/Tyous.html

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு சொல்ல மட்டும்தான் தெரியும்.. எல்லாம் தியறிதான்.. செயலில் ஒண்டும் கிடையாது. செய்யிறவங்களையும் செய்யவிடாது!!

சும்மா கூளிங் கிளாஸ் போட்டு படம் போட்டிட்டு வந்து நாங்கள் ஒன்றும் அளந்து கட்டிக் கொண்டிருக்கல்ல..! அவசியமானதைச் செய்கிறம் சொல்லுறம். என்ன செய்யிறம் செய்தம் என்றதை அடுத்தவைக்குச் சொல்லனும் என்றது எமது அகராதியில கிடையாதது. விளம்பரம் தேவையில்ல செய்யிற மனிதாபிமானப்பணிக்கு. மனிதாபிமானம் மனிதர்களுக்கு மட்டும் தான்..! சுயநலவாதிகளுக்கும் விளம்பரம் தேடிகளுக்கும் நிச்சயம் உதவி கிடையாது..மனிதாபிமானம் காட்டும் எண்ணமும் எம்மிடம் இல்லை..! :P :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமானதைச் செய்கிறம் சொல்லுறம். என்ன செய்யிறம் செய்தம் என்றதை அடுத்தவைக்குச் சொல்லனும் என்றது எமது அகராதியில கிடையாதது. விளம்பரம் தேவையில்ல செய்யிற மனிதாபிமானப்பணிக்கு. மனிதாபிமானம் மனிதர்களுக்கு மட்டும் தான்..! சுயநலவாதிகளுக்கும் விளம்பரம் தேடிகளுக்கும் நிச்சயம் உதவி கிடையாது..மனிதாபிமானம் காட்டும் எண்ணமும் எம்மிடம் இல்லை..! :P :icon_idea:

எவர் எவர் என்ன செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்பதையெல்லாம் "அவன்" அறிவான் என்று யாரோ எழுதிய ஞாபகம்... உண்மையானால் உங்களுக்கும் (நமக்கும்) பொருந்தும்.. B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.