Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டம்

September 28, 2018

leciurer.jpg?zoom=3&resize=335%2C234

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி, இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/2018/97512/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதநாயகி மரணத்திற்கு காரணம் செந்தூரனே: தாயார்பகிரங்க குற்றச்சாட்டு!

September 29, 2018
42669932_2176058765758069_20016977348258

“போதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தன. அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார். போதநாயகியின் இறப்பிற்கு செந்தூரனே காரணம்” இவ்வாறு போதநாயகியின் தாயார் முதன்முறையாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் உயிரிழப்புடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய வவுனியா – ஆசிக்குளம், கற்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்ற பெண் விரிவுரையாளர் கடந்த 21 ஆம் திகதி திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? ஏன்பது கண்டறிந்து ஒரு முடிவு தெரிய வேண்டும். ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார்? என்பது கண்டறியப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்பன தெரிய வேண்டும்” .என்று கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக தொடர்பாடல் மற்றும் மொழிகள் துறைத் தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ் தெரிவித்தார்.

“பேதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தன. அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்.

 

போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பாக கேள்வியுற்ற செந்தூரன், அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தார். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று முரண்பட்டு இறுதி கிரியைக்குக்கூட அவர் வரவில்லை” என்று போதநாயகியின் தாயார் தெரிவித்தார்.42707317_2176058872424725_75283884436011

 

http://www.pagetamil.com/17485/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்ணியம் சம்பந்தபட்ட அமைப்புக்கள் குறட்டை விட்டு  கொண்டு இருக்கினமாக்கும் அவைக்கு ரஜனி திரணகம போன்ற கை லெவல் ஆட்களுக்குத்தான் சவுண்டு விடுவினம் ஆக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இந்த பெண்ணியம் சம்பந்தபட்ட அமைப்புக்கள் குறட்டை விட்டு  கொண்டு இருக்கினமாக்கும் அவைக்கு ரஜனி திரணகம போன்ற கை லெவல் ஆட்களுக்குத்தான் சவுண்டு விடுவினம் ஆக்கும் .

 

22 hours ago, கிருபன் said:

போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டம்

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/2018/97512/

இவை பெண்ணியம் தான். ரஜினி திரனகம பற்றி எழுதிறவை உங்கள் காலத்து மனித உரிமைகாரர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

இவை பெண்ணியம் தான். ரஜினி திரனகம பற்றி எழுதிறவை உங்கள் காலத்து மனித உரிமைகாரர்.

நான் சொல்வது புலம்பெயர்ஸ் பெண்ணியவாதிகள் கள்ளுக்கடைக்கு சிவப்பு பெயின்ட் அடிச்சது போல் உதட்டுக்கு அசிங்கமான சிவப்பு கலரில் பொருந்துமோ பொருந்தாதோ என்று தெரியாமல் அடிச்சுக்கொண்டு வந்து தமிழ் டிவி யில் மாத்திரம் பெண்ணியம் பேசும் ஆட்களை.

அழகான படிச்ச பெண் அநியாயாமாக செத்து போச்சு.. கஸ்டப்பட்டு படிப்பிச்ச தகப்பன் தாயையாவது நினைத்து பார்த்திருக்கலாம்.. 

அவன் கவிஞர் என்டும்  தேசியவாதிஎன்னும்முகமூடிக்ள்ளும் ஒழிந்து தப்பி விடுவான்.. 

இன்னும் 1-2 மாதங்களிற்கு பின் அடுத்த பெண்ணுக்பு ரூட் விடவும் தொடங்குவான் உன் மரணத்தால் சாதித்தது என்ன..? 

  • கருத்துக்கள உறவுகள்

BC1_CCA56-257_A-4_C28-_B366-_D5_CAB0_FBC

Edited by Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முச்சக்கர வண்டிச் சாரதியிடம் சிரித்தபடி விடைபெற்ற, போதநாயகியின் வழக்கு, நீதிமன்றம் செல்கிறது!

October 5, 2018

Potha.jpg?resize=600%2C400

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர்  போதநாயகி நடராஜாவின் இறப்புத் தொடர்பான வழக்கு வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் காவற்துறையினர் வழக்கை முன்னெடுக்கவுள்ளனர். போதநாயகியின் பெற்றோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு காவற்துறையினருக்கு உத்தரவிட விண்ணப்பம் செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி நடராஜா (29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. எனினும் விரிவுரையாளரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அதனைப் பொறுப்பேற்கும் போது, அவரது பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

அதனால் விரிவுரையாளரின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை முன்கொண்டு செல்வதில் காவற்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்கொலை தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற வகையில் காவற்துறையினர் வழக்கை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. எனினும் திருகோணமலை வளாக சமூகம் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டமும் அதற்கு தாயாரை அழைத்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் வழக்கை முன்கொண்டு செல்ல காவற்துறையினர் தீர்மானித்தனர்.

அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி தானாக முன்வந்து காவற்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், “விரிவுரையாளரை பெரும்பாலான நாள்கள் நானே ஏற்றிச் சென்று அவரது தங்குமிடத்தில் இறக்குவேன். 20ஆம் திகதி வியாழக்கிழமை அவர் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இறக்குமாறு கேட்டார். பிற்பகல் 2.10 மணியளவில் அவரை கடற்கரையில் இறக்கினேன்.

ஆயிரம் ரூபா தாளை வழங்கினார். நான் மாற்றித் தருமாறு கேட்டேன். அவர் அந்தப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணத்தை மாற்றி நான் கேட்டுக்கொண்ட 400 ரூபா பணத்தை வழங்கினார். ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று அவரைக் கேட்டன். சிரித்துவிட்டுச் சென்றார்” என்று தெரிவித்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பிரகாரம் விரிவுரையாளர் கடந்த 20ஆம் திகதி இரவுதான் தண்ணீருக்குள் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பழுதடைந்ததை வைத்து சட்ட மருத்துவ அதிகாரியால் கணிப்பிடப்பட்ட நேரத்தின் அடிப்படையிலேயே அவர் இரவு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. மரணம் நடந்த சமயத்தில் செந்தூரனின் நடத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அத்துடன், கடந்த 19, 20ம் திகதிகளில் போதநாயகியின் கணவர் செந்தூரன் அலுவலகத்தில் விடுப்பு பெற்றிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கிய வாக்குமூலத்தில், போதநாயகி தற்கொலை செய்ததாக தாயார் குறிப்பிட்டிருந்தாலும், திருகோணமலையில் செந்தூரனின் கொடுமைகளை அம்பலப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பின் பின்னணிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் நலன் சார்பில் வவுனியா மற்றும் திருகோணமலை சட்டத்தரணிகள் வரும் 22ஆம் திகதி நீதிமன்றில் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.

இதேவேளை, போதநாயகியின் குடும்பத்துக்கு கடந்த ஒரு வார காலமாக கடும் அழுத்தங்கள் வழங்கப்படுவதுடன் சிலரால் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/2018/98331/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரிவுரையாளர் போதநாயகியின் வீட்டிற்கு சென்ற அனந்தி

 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.

DSC06403.jpg

இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அவர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் தாயாரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்திருந்தார்.

DSC06412.jpg

இந் நிலையில் விரிவுரையாளரான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவரான சு. செந்தூரன் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் இம்மாதம் 22 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

podanayagi.jpg

இதேநேரம் தாயாரினால் தனது மகளின் இறப்பில் மகளின் கணவரின் மேல் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துடன் சட்டமா அதிபரின் மூலமாக விசாரணையினை தீவிரப்படுத்துமாறு கோரி தனது சார்பில் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கோரிக்கை கடிதம் ஒன்றினையும் கையளித்திருந்தார். 

 

http://www.virakesari.lk/article/42276

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.