Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி! (2 ஆம் இணைப்பு)

indoneshiya.jpg

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுனாமி தாக்கியுள்ளது.

சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!( 1 ஆம் இணைப்பு)

இந்தோனேஷியாவின் சுலாவேசி பிராந்தியத்தில் 7.5 ரிச்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷிய அனர்த்த முகாமை நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது இன்றைய தினத்தில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இன்று காலை 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி சுமார் 500 பேர்வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/இந்தோனேஷியாவில்-பாரிய-நி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் சுனாமி; இதுவரை 48 பேர் பலி

Editorial / 2018 செப்டெம்பர் 29 சனிக்கிழமை, மு.ப. 11:02 Comments - 0

image_66d33e075b.jpg

இந்தோனேசிய கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பலு நகரத்தை, சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் இதுவரை 48 பேர் உயிரிழந்தனர் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுப் பகுதியின் கடற்கரையில் இருந்து 56 கிலோமீற்றர் தூரத்தில் கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம், இன்று (29) அதிகாலை ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாகப் பதிவானது.

இதையடுத்து, இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டடங்கள் இடிந்த நிலையில், மக்கள் வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் சுலாவேசியின் கடலோர நகரான பலுவை, திடீரென சுனாமி தாக்கியது.

பல அடி உயரத்துக்கு வேகமாக வந்த அலைகள், ஊருக்குள் பல மீற்றர் தொலைவுக்கு உள்ளே புகுந்தன. அதில் கடற்கரையோரம் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்தன. வாகனங்கள் மற்றும் பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால், மக்கள் அச்சத்தில் உறைந்து அலறியடித்து ஓடினர். சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட நிலையில், சுனாமி தாக்கியதால், மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என, அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

image_9ac26fa99e.jpgimage_08bbbd3dfd.jpg

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இந்தோனேசியாவில்-சுனாமி-இதுவரை-48-பேர்-பலி/150-222745

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன் போல சுனாமி தாக்கி உள்ளது சுனாமி எச்சரிக்கை அரசால் வாபஸ் பெறபட்ட பிறகு சுனாமி தாக்கி உள்ளது .யோசிக்க வேண்டிய விடயம் .கடலில் சுனாமி வருவதை உணர்த்தும் மிதப்பிகள் வேலை செய்யவில்லையாக்கும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி – உயிரிழப்புகள் 384 ஆக அதிகரிப்பு….

September 29, 2018

1 Min Read

இந்தோனேசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை என்று இந்தோனேசியா பேரிடர் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவின் மத்திய பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.

இணைப்பு3- இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினையடுத்து சுனாமி – உயிரிழப்புகள் 48 ஆக அதிகரிப்பு

indo.jpg?zoom=3&resize=335%2C191

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினையடுத்து சுனாமி தாக்கியதில்    ஏற்பட்ட உயிரிழப்புகள் 48 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/97547/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகினர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது.

இந்தோனீஷியாGetty Images

முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அம்முகமை தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் வெறும் கைகளால் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

டாங்காலா என்னும் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை எனவே அந்நகரின் சேதங்கள் குறித்து அதிக கவலைகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.

இந்தோனீஷியாEPA

சாலைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், பாலங்கள் இடிந்துவிட்டமையாலும் தேடுதல் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1.6மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

"இது ஒரு பேரழிவு ஆனால் இது மேலும் மோசமானதாகவும் இருக்கலாம்" என செஞ்சிலுவை சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டோங்கலா தீவில் வெள்ளியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்பு சிறு சிறு அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.

பாலு தீவின் தற்போதைய நிலை என்ன?

பாலு நகரில் ரோ ரோ என்ற விடுதி ஒன்றில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த 24 பேரை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளை கொண்டு மீட்டுள்ளனர்.

உதவிகள் கோரி மக்கள் கதறும் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே உள்ளது ஆனால் மீட்புப் பணியில் ஈடுபடுத்த பெரிய இயந்திரங்கள் ஏதும் இல்லை என அந்த விடுதியின் உரிமையாளர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

335,000 மக்கள் தொகை கொண்ட அந்நகரில் இன்னும் பலரை காணவில்லை, மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் சாலைகளில் பலியானவர்களின் உடல்கள் கிடக்கின்றன மேலும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதால் காயமடைந்தவர்களுக்கு தற்காலிக கூடாரங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தனை பலிகள் ஏன்?

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் மாலை 6.03க்கு 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயார் செய்து கொண்டிருந்த மக்கள் 3 மீட்டர் உயரத்துக்கு வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்தோனீஷியா

மக்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

உயிர்பிழைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தோனீஷியாEPA

"நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம் இங்குள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. உணவு, குடிநீர் மற்றும் சுத்தமான நீர் தேவைப்படுகிறது; அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் எங்களுக்கு உணவில்லை" என நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 39 வயது அன்சர் பாச்மிட் தெரிவித்தார். 

"எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு போதிய நேரம் இல்லை நான் சுவர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டேன்..எனது மனைவியும், குழந்தையும் உதவிக்கேட்டு அழுது கொண்டிருந்தனர் அவர்களுக்கு என்வாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என நிலநடுக்கத்தில் சிக்கிய நபர் ஒருவர் செய்தி முகமை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

 

https://www.bbc.com/tamil/global-45698109

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2018 at 12:14 PM, பெருமாள் said:

வில்லன் போல சுனாமி தாக்கி உள்ளது சுனாமி எச்சரிக்கை அரசால் வாபஸ் பெறபட்ட பிறகு சுனாமி தாக்கி உள்ளது .யோசிக்க வேண்டிய விடயம் .கடலில் சுனாமி வருவதை உணர்த்தும் மிதப்பிகள் வேலை செய்யவில்லையாக்கும் .

பà¯à®°à®¿à®¯ à®à¯à®©à®¾à®®à®¿

கடலுக்கு அடியில் ஏதோ நடந்துள்ளது.. இந்தோனேஷியா சுனாமி வித்தியாசமானது.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது, இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.

இதனால் சுனாமி ஏற்பட்டது. சுலசேஸி தீவு முழுக்க இதனால் நீர் புகுந்தது. இந்த சுனாமி மிகவும் வித்தியாசமானது, இதன் ஆற்றல் ஆச்சர்யமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 1200 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தோனேஷியாயாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது நிலத்தின் அடுக்குகள் கிடைமட்டமாக நகர்வது காரணமாக உருவானது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. 2004ல் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது மேல்கீழாக அடுக்குகள் நகர்வதால் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இதுதான் கடல் நீரை மொத்தமாக வெளியே கொண்டு வந்து கொட்டும். அதுதான் அப்போதும் நடந்தது.

ஆனால் தற்போது கிடைமட்டமாக ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் தண்ணீரை வெளியே கொண்டு வந்து கொட்டியது. 5 மீட்டர் வரை எப்படி அலையை உயர செய்தது என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இதுதான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் சுனாமியை உண்டாக்கியது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் கடலுக்கு அடியில் பெரிய மாற்றம் ஒன்று நடந்து இருக்க வேண்டும், அதன் காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று இவர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.


Read more at: https://tamil.oneindia.com/news/international/indonesia-tsunami-literally-surprised-every-researcher-the-world-330966.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனீசிய சுனாமி: இடிபாடுகளில் உயிருள்ளவர்களைத் தேடும் பணி தொடர்கிறது

இந்தோனீசியாவின் பாலு நகரத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உண்டான பாதிப்புகள் பெரியளவில் இருப்பது தெரிய வருகிறது.

இதுவரை சுமார் 832 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், சடலங்களை ஒன்றாகப் புதைக்கும் நடவடிக்கையை தொடங்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளில் பலரும் உயிருடன் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கருதுகின்றனர்.

நிலநடுக்கத்தையடுத்து, அவ்வப்போது அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாலு நகரத்தில் உணவகம் மற்றும் ஷாப்பிங் சென்டர் கட்டட இடிபாடுகளை அகற்ற கனரக இயந்திர வாகனங்களுக்காக மீட்புப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.

"தொலைத் தொடர்பு, கனரக வாகனங்கள் மிகவும் குறைந்தளவிலேயே இருக்கின்றன… அதிக அளவிலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன… மீட்புப்பணிகளுக்கு இது போதாது" என தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு முகமையின் செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று 7.5 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயாராகிக்கொண்டிருந்த மக்கள் 6 மீட்டர் உயரத்துக்கு அலை எழுந்ததை பார்த்து பதற்றப்பட்டு குரல் எழுப்பிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்ட அதிபர் ஜோகோ விடோடோ, மீட்புப் பணிகளை இரவும் பகலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சர்வதேச உதவி மற்றும் நிவாரணங்களை பெற அதிபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

நோயாளிகளும் சடலங்களும்

ரெபெக்கா, பிபிசி, பாலு

பாலுவில் உள்ள மம்பொரொ கிளிக்கிற்கு வெளியே உடைந்த கால்களோடு ஸ்ட்ரெச்சர் ஒன்றில் படுத்திருந்தார் 5 வயது சிறுமி ஒருவர். "சிறுமியின் குடும்பத்தினர் எங்கே என்று தெரியவில்லை. எங்கு வசித்தார் என்பதும் அவருக்கு நினைவில்லை" என்கிறார் மருத்துவர் சசனோ.

அவரது கிளினிக்கில் மின்சாரம் இல்லை. மருந்துகளும் குறைந்தளவிலேயே உள்ளன.

ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வரிசையாக சடலங்கள் பைகளில் சுற்றிவைக்கப்பட்டுள்ளன. அங்கு காற்று முழுவதிலும் சடலங்களின் துர்நாற்றம் நிறைந்திருந்தது.

நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அவை மொத்தமாக புதைக்கப்படும் என்கிறார் சசனோ. "சடலங்கள் வாடை வரத்தொடங்கியுள்ளன. அவர்களின் உறவினர்களுக்காக காத்திருக்க நினைத்தோம். ஆனால், இனிமேலும் காத்திருக்க முடியாது."

கடற்கரை ஓரத்தில் மீனவ கிராமங்கள் இருந்த இடங்களில் எல்லாம், தற்போது இடிபாடுகளின் மிச்சமே இருக்கிறது.

சுனாமி அலைகளால் மக்களின் கார்களும் படகுகளும் அடித்து செல்லப்பட்டு சேமடைந்தன. இந்த இடிபாடுகளுக்கு இடையில் மக்கள் வெளியிலேயே உறங்குகின்றனர்.

மீட்புப் பணிகளில் என்ன சிக்கல்?

 

சிதைந்த சாலைகள், சேதமடைந்த விமான நிலையம், தொலைதொடர்பு இல்லாமை என இவையெல்லாம் சேர்ந்து மீட்புப் பணிகளை கடினமாக்கி உள்ளன. நகரின் உட்புற பகுதிகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறது.

"இந்த சுகாமியின் தாக்கம் என்ன என்பது இன்னும் நிச்சயமாக தெரியவில்லை" என்று அதிபர் தெரிவித்துள்ளார்.

பாலு நகரில் ரோ ரோ என்ற விடுதி ஒன்றில் இடிபாடுகளுக்கு அடியில் உதவிகள் கோரி மக்கள் கதறும் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அங்கிருந்து 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என உதவியாளர் ஒருவர் சொன்னதாக ஏ எஃப் பி செய்தி முகமை கூறுகிறது.

குழந்தை உட்பட பலரின் குரல்கள் கேட்பதாக அவர் தெரிவித்தார்.

"அவர்கள் உதவி கோரி வருகின்றனர். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கியுள்ள அவர்களின் மனநிலையை சரிப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்துவருகிறோம். குடிநீர் மற்றும் உணவும் வழங்கினோம். ஆனால், அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு இடிபாடுகளில் இருந்து வெளியே வர வேண்டும்."

வேறு என்ன சவால்கள்?

பாலு நகரில் திறந்த வெளியில் மக்கள் உறங்குகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், திறந்த வெளியில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ராணுவ மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள ராணுவத்தினர், நிவாரணப் பொருட்கள் பெற்றும், காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியும் வருகின்றனர்.

 

"மிகக் குறைந்த பொருட்களே இருப்பதால், உணவு, குடிநீர், மருந்து பொருள்களை எடுக்கலாம் என சேதமடைந்த கடைகளில் மக்கள் தேடுகின்றனர்" என்கிறார் 'சேவ் தி சில்ட்ரன்' அமைப்பின் திட்ட இயக்குனர் டாம் ஹவெல்ஸ்.

"எங்களுக்கு வேறு வழியில்லை. உணவு வேண்டும்" என பொதுமக்களில் ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.

இதற்கிடையில் சடலங்களை புதைக்க பெரும் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

https://www.bbc.com/tamil/global-45703789

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.