Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலி மீது ஆனை

Featured Replies

யாழ் களத்தின் உறவுகள் பலபேரிற்கு மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு கடவுள் நம்பிக்கை பற்றி விவாதம் தொடக்க முயல்வது ஆகும். இந்த விவாதப் பொருள் பரந்து பட்டது தான். புதிது புதிதாகப் பல முனைகளில் எமது மனம் இந்த விடயம் பற்றி (சாதகமாகவோ பாதகமாகவோ) சிந்திப்பது உண்மைதான். எனினும் யாழ் களத்தில் இந்த விடயத்தில் ஏனோ ஒரே மாவு தான் திருப்பத்திருப்ப அரைக்கப்படுகின்றது. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

உதாரணத்திற்கு, புராணக் கதைகளினை ஆதாரமாகக் கொண்டு இந்து சமயத்தைத் தாக்குவது நாம் இக்களத்தில் அடிக்கடி காணக்கூடியதாக உள்ள ஒன்று. இது தொடர்பில் எனது கருத்தினைப் பதிவு செய்வதே இப்பதிவினது நோக்கம்.

ஒருவர் ஒரு ஓவியத்தை வரைந்தாலோ, கவிதையை எழுதினாலோ, சொற்பொழிவு ஆற்றினாலோ, பார்ப்பவர், படிப்பவர், கேட்பவர் எவ்வாறு அதை உள்வாங்குகின்றார் என்பது பார்;ப்பவர், படிப்பவர், கேட்பவரின் தன்மையைப் பொறுத்தே அமைகின்றது. உதாரணத்திற்கு, ஒரு திரைப்படத்தில் ஒரு வைத்தியர் ஒரு நோய்பற்றிப் பகுப்பாய்வு செய்யும் காட்சி வருகின்றது என்றால் அக்காட்சியினை ஒரு வைத்தியரும் வேறு ஒருவரும் பார்க்கிறார்கள் என வைத்துக் கொள்வோமேயாயின், அக்காட்சியினைப் பார்க்கும் வைத்தியர் அக்காட்சியை ஆழ்ந்து உள்வாங்குவதற்கான சாத்தியம் மற்றவரைக் காட்டிலும் அதிகம் என்பது பலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாதம். இதற்கான காரணம் வைத்தியரிற்கு அக்காட்சி தொடர்பில் இருக்கின்ற அனுபவமும் அறிவும் ஈடுபாடும் ஆர்வமுமே ஆகும். இது போன்றதே புராணக் கதைகளும். இக்கதைகளை ஒருவர் எவ்வாறு உள்வாங்குகின்றார் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தே அமையும்.

குளிக்கப்போன உமாதேவி, தனது உடலில் இருந்த அழுக்கை எடுத்துப் பிள்ளையார் செய்ததாய் பிள்ளையாரின் விசித்திர உருவத்தை விளக்கும் ஒரு கதை திருப்பத் திருப்ப வலம் வருகின்றது. இக்கதை பற்றிய எனது கருத்திற்குள் செல்லுமுன்னர் ஒரு சிறிய உதிரிக் கருத்து.

சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகிய மூன்று சயம குரவர்கள் எவ்வாறு கடவுளை நோக்கினர் என நாம் பார்க்கின், முதலாமவர் குழந்தையாய் அழுது பெற்றோராய் இறைவனைப் பார்த்துப் பால் கேட்டர். இரண்டாமவர் "மச்சான் என்ர ஆள், man she's so beautiful , அவளிற்குக் கொஞ்சம் நெல்லு வாங்கினன், கொண்டந்து தாறியடா பிளீஸ்" என்ற பாணியில் நண்பனாய் இறைவனைப் பார்த்தார். மூன்றாமவர் ஆசானாய், குருவாய், வழி காட்டியாய் காப்பவராய் இறைவனைப் பார்த்தார். எங்களில் பலர் கோவிலில் சென்று தோடுடைய செவியன் என்று தொடங்கி, நீள நினைந்தடியேன் என்று வளர்ந்து கூற்றாயினவாறு எனத் தொடர்கிறோம். இவர்கள் பதிகங்களை நாம் பாடுவதால் இவர்கள் பார்த்தது போல் தான் நாமும் இறைவனைப் பார்க்கிறோம் என்று அர்த்தம் இல்லை. மாறாக, ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர்கள் எங்கள் தன்மைக்கேற்ப நாங்கள் எமது பாணியில் கடவுள் நம்பிக்கையினை எமக்கேற்றவாறு அமைத்துக் கொள்ளலாம் என்பதே இவர்களின் பதிகங்கள் எமக்கு நினைவு படுத்துவன.

இனிப் பிள்ளையார் விடயத்திற்கு வருவோம். பிள்ளையாரின் உருவ அமைவு விசித்;திரமானது. ஐந்து கைகள், ஆனை முகம், கொழுத்த மனித உடல், அந்தக் கொழுத்த உடல் பயணிக்க நலிய எலி வாகனம் என விசித்திரங்கள் தொடர்வதனால், இவ்வுருவ அமைவு பற்றி பலரும் பேச விழைகின்றனர். மனிதனின் அடிப்படைக்குணமே

தனக்குப் புரியாதனவற்றை முதலில் கேலி செய்வது அல்லது தடைசெய்வது என்ற வகையில் தான் அமைகிறது. எனினும் அனைவரும் அவ்வாறு இல்லை. புரியாதனவற்றைப் புரியவில்லை எனக்கூறி யாராவது புரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டு, அவர்கள் கூறும் விளக்கத்தைத் தர்க்கித்துப், பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்ள முனையும் மதிக்கப்பட வேண்டிய மனிதர்களும் இருக்கவே செய்கின்றார்கள். இந்த வகையில் விசித்திரமான பிள்ளையார் உருவம் பற்றி நிறையவே கேள்விகள் இயல்பாக எழுந்திருக்கும் தொடர்ந்தும் எழும். இந்த அடிப்படையில் பல புராணக் கதைகள் தமது பேசு பொருளாகப் பிள்ளையாரை எடுத்துக் கொண்டுள்ளமை புரியக் கூடியதாக உள்ளது. கடினமான விடயங்களிற்குத் தானே விளக்கங்கள் அதிகம் தேவை.

||அப்பா நான் ஏன் உங்களது திருமணப் படத்தில் இல்லை?|| எனக் கேட்கும் குழந்தைக்குப் பதிலளிக்கும் பெற்றோரின் பதில்கள் பலதரப்பட்டன. குழந்தையின் புரிதல் நிலை தொடர்பில் பெற்றோர் கொண்டுள்ள அபிப்பிராயத்தின் அடிப்படையில் பதில்கள் மாறுபடும். இந்நிலையில், முற்றாக வளர்ந்த அறிவாளி ஒருவர், வளர்ச்சி நிலையின் ஆரம்பத்தில் உள்ள குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் அளித்த மேற்படி பதிலைத் தனக்களிக்கப்பட்ட பதில்கள் போன்று நேரடி விளக்கம் செய்து கொள்வாரேயாயின் அப்பதில்கள் தொடர்பான அவரது கருத்துக்கள் நிட்சயம் கேலித்தனமானவையாகவே இருக்கும். வளர்ந்த அறிவாளி குழந்தைகளிற்கான பதில்களைப் படித்து விட்டு தர்க்கம் செய்ய விழைபமையானது அறிவாளியின் தர்க்கங்களைக் கேட்போரிற்கு அந்த அறிவாளியின் அறிவு பற்றித் தான் சந்தேகங்களை எழுப்புவதற்குச் சாத்தியம் அதிகம். இதுபோலத் தான் பிள்ளையார் பற்றிய நக்கல்களும்.

மிருகங்களைவிட மனிதன் உயர்ந்தவன் என்ற மமதையிலேயே மனிதன் எப்போதும் திரிகின்றான். இருந்தும் மிருகங்களில் இருந்து தான் பலவற்றை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். தொடர்ந்து கற்று வருகின்றோம். மனிதனின் பல கண்டுபிடிப்புக்களிற்கான மூலகாரணமாக மிருகங்கள் அமைகின்றன. மனிதனிற்கு இயற்கை தொடர்பாக ஏற்படுகின்ற பல குழப்பங்களிற்கு மருகங்களின் வாழ்வியலில் இருந்து புரிதல்கள் ஏற்படுகின்றன. இவற்றிற்கான உதாரணங்களை இங்கு நான் அடுக்கத் தேவையில்லை. அனைவரிற்கும் இது தெரியும். இந்நிலையில் பிள்ளையாரின் தலை ஒரு மிருகத்தின் தலைபோல் இருப்பதற்கான காரணங்களை நாம் ஆராய விளைவதற்கு பல ஆக்கபு+ர்வமான திசைகள் தெரிகின்றன அல்லவா? எனது புரிதலை இங்கு நான் திணிக்க முனையவில்லை. எல்லாம் எனக்குப் புரிகிறது என நான் பொய் சொல்லவுமில்லை. ஒரு சாத்தியத்தை மட்டும் தொட்டுச் செல்கின்றேன்.

இனி கொழுத்த உடல் பயணிப்பதற்கான நலிய எலி வாகனம். படம் பார் பாடம் படி என்பது நாம் பாலர் வகுப்பில் கற்றுக் கொண்ட ஒன்று. வளர்ந்தவர்களும் கூறுகின்றார்கள், ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளிற்குச் சமன் என்று. இந்நிலையில் பிள்ளையாரின் உருவத்தை எமது அறியாமையின் பிரகாரம் நக்கல் செய்வதற்குப் பதில் இப்படம் கூறக் கூடிய செய்திகளை ஆராய்தல் ஆரோக்கியமானது. கடவுளை நம்மில் பலர் எப்போ நினைக்கின்றோம? துன்பங்கள் மிகுந்து கிடக்கையில் தானே. ||குருவியின் தலையில் பனங்காய் வைத்தது போல இத்தனை கஸ்ரங்களை எவ்வாறு ஒருவர் தாங்குவது?|| என்ற வசனத்தை நாங்கள் கேட்டிருக்கின்றோம் அல்லவா. இப்போ, இவ்வாறான ஒரு சூழ்;நிலையில் பிள்ளையாரைக் குப்பிடும் ஒருவர், பிள்ளையார் படம் கூறும் எலி தாங்கும் சுமையை ஒரு உத்வேகமாக நம்பிக்கைக் கீற்றாகப் பற்றிக் கொள்வதற்கும் சாத்தியம் உள்ளது அல்லவா?

நான் ஏற்கனவே கூறியது போல, நான் இங்கு பிரசங்கம் செய்ய முயலவுமில்லை எனக்கு எல்லாம் புரிகிறது எனப் பொய் சொல்லவுமில்லை. ஒரு விடயத்தை ஒருவர் எவ்வாறு அணுகுகின்றார் என்பது எத்துணை முக்கியமானது என்பதனை மட்டுமே நான் கூற விழைகின்றேன். நாம் சிந்திக்காத பல திசைகள் இருக்கலாம் என்பதை நாம் ஒத்துக் கொள்வதே எமது புரிதல்களிற்கான முதற்படி.

உலகத்;தில் நாம் காண்கின்ற கேட்கின்ற எமக்குப் புரியாத விடயங்களை நக்கல் செய்து நமது தராதரம் பற்றி நமக்கு நாமே ஒரு பொய்யான மாயையினை உருவாக்குவதற்குப் பதில் இவற்றில் இருந்து நாம் எதையேனும் கற்றுக் கொள்ள முனைவோமேயாயின் இவ்வுலகு மகிழ்ச்சி மிக்கதாய் மாறும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கடவுள் நம்பிக்கை என்பது கூட மகிழ்ச்சியான வாழ்வியல் தொடர்பானது தானே!

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரின் உருவம் என்ன சிந்தனைகளைக் கொண்டு வரும் என்ற விளக்கத்திற்கு நன்றி.. ஆனால் பலர் பிள்ளையாருக்குக் கீழே எலி இருப்பதையே பார்வையிலிருந்து தவறவிட்டுவிடுவார்கள்.. மேலும் பிள்ளையாரைப் பார்த்தவுடன் தலையில் மூன்றுதரம் குட்டிக் கும்பிட்டுவிட்டு போகிற காரியம் சரியாகவேண்டும் என்றுதான் பலர் யோசிப்பர்.. ஆக பிள்ளையாரைவிட போகிற காரியம் முக்கியம் என்பதுதான் உண்மை!

  • தொடங்கியவர்

பிள்ளையாரின் உருவம் என்ன சிந்தனைகளைக் கொண்டு வரும் என்ற விளக்கத்திற்கு நன்றி.. ஆனால் பலர் பிள்ளையாருக்குக் கீழே எலி இருப்பதையே பார்வையிலிருந்து தவறவிட்டுவிடுவார்கள்.. மேலும் பிள்ளையாரைப் பார்த்தவுடன் தலையில் மூன்றுதரம் குட்டிக் கும்பிட்டுவிட்டு போகிற காரியம் சரியாகவேண்டும் என்றுதான் பலர் யோசிப்பர்.. ஆக பிள்ளையாரைவிட போகிற காரியம் முக்கியம் என்பதுதான் உண்மை!

எனது முன்னை நாள் ஆசிரியர் ஒருவர் கூறுவார், எடே நீ படித்தாலும் சோறு தான் உண்பாய்

படிக்கா விட்டாலும் சோறு தான் உண்பாய். என்ன, படித்தால் டைனிங் ரேபிளில் மின் விசிறியின்

கீழ் இருந்து உண்பாய், இல்லாவிடின் குசினிக்குள் பலகையில் இருந்துண்பாய். அவ்வளவு தான்

வித்தியாசம் என்று.

படிப்பபைக் கூட மிகப் பெரும்பான்மையானோர் அறிவு விருத்திக்காய்ப் படிப்பதில்லை. அது

தரக்கூடிய பலாபலன்களிற்காகத் தான் படிக்கிறார்கள். இருப்பினும் எம்மையும் அறியாது, அறிவு

விருத்தி போன்ற சில நல்ல உப பலன்களும் படிப்பதால் ஏற்படுகின்றன.

இப்படியான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது போலத் தான் நீங்கள்

மேலே கூறுகின்ற விடயமும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேடிப் பிடித்த பிள்ளையார் கதைகள்!

விநாயகர்

(தொகுப்பு: குடந்தய் வய்.மு.கும்பலிங்கன்)

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்த பின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

கணபதி பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக்கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறுவிதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்காநதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அந்தக் குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்த வில்லை. பிரம்மவைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனி பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், °கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது. கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை °கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

"சுப்ரபேத ஆகமம்" என்ற நூல் கூறுவதாவது; சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

(ஏ.எ°.கே. அய்யங்கார் எழுதிய, "பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)

2. விநாயகர் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

ஞானசம்பந்தரும், "பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே" என்று பாடுகிறார்.

(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் "ஞான விநாயகர்" என்னும் கட்டுரையில்+ பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், "தன்னை நினையத் தருகிறான்" என்ற கட்டுரையில் பக்கம் 17)

(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்கடமுழுக்கு விழா மலர் 8+9+1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் பக்கம் 62)

5-ஆம் நூற்றாண்டில் விநாயகர்

வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோடொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.

யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.

(மறைமலைஅடிகள் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில்+ பக்கம் 190)

6. விநாயகரின் மனைவியர் பட்டியல்

விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர் க்ரு விக்கினத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)

7. யானைத் தலையர்

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)

(மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த "அபிதான சிந்தாமணி")

http://kirukku.blogspot.com/2006/10/blog-post.html

  • தொடங்கியவர்

பிள்ளையார் பற்றி பல நபர்கள் பலவாறு பேசுகின்றார்கள் என்றும், பல புராணக் கதைகளின்

பேசுபொருளாகப் பிள்iளாயார் உள்ளார் என்றும், இந்நிலைக்கு என்ன காரணமாக இருக்கும்

என்ற அடிப்படையிலும் தான் எனது பதிவினை நான் இட்டிருந்தேன். நான் வைத்த வாதத்தை

நீங்கள் இணைத்திருக்கும் இந்த புராணக் கதைகள் மற்றும் இதர பேச்சுக்களின்

உதாரணங்களின் பட்டியல் எவ்வாறு தர்க்கின்றது என்பது எனக்குப் புரியவில்லை.

சற்றுத் தெளிவு படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐங்கரன் வீடியோவில் படம்பார்த்தவர்களுக்குத் தெரியும் படம் தொடங்கமுன்னர் ஒரு பிள்ளையாரின் உருவம் வரும். சில கோடுகளைக் கொண்டு அழகாக வரையப்படும் அந்த உருவம் ஒரு மொடேன் ஆர்ட் போல இருக்கும். இதுதவிர பிள்ளையாரின் வேறும்பல மொடேன் ஆர்ட் களை இணையத்தில் காணலாம். அதுபோல இன்னொருவனின் கருத்தும் புதுமையாகவுள்ளது.

ஆனாலும், எலியைப் பற்றிக் கூறிய விடயங்களில் சிலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. எலி பிள்ளையாரை எப்படி கஸ்டப்பட்டுக் காவியது என்றெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. எனது எண்ணத்தில் எலியானது தேவைப்படும்போது பிள்ளையாருக்கேற்ற சைசில் வளர்ந்து பிள்ளையாரை காவிக்கொண்டு போகும். தேவையற்ற நேரத்தில் சைசைக் குறைத்து ஒடுங்கி ஒரு ஓரமாக உட்கார்ந்து விடும் (கற்பனைக்கு அளவேது). எலி பிள்ளையாரை கஷ்டப்பட்டு தாங்குகிறது என்ற கருத்தில் கடவுள் தொடர்பான உருவகத்துடன் ஒரு முரண்பாடு வருகிறது. கடவுள் அன்பே உருவானவர் எந்த உயிர்களையும் வருத்தமாட்டார் என்பது பொதுவான கோட்பாடு. அந்த வகையில் எலியை வருத்தும் ஒரு கடவுளின் மீது ஒரு கடவுளுக்குரிய மதிப்பு வராது தானே? மேலும் பிள்ளையாரை கஷ்டப்பட்டுத் தாங்கும் எலியை மிகவும் இப்படி முன்னிலைப் படுத்தும் போது இங்கே கடவுள் யார் என்று குழப்பம் வேறு வந்து விடும்.

மேலும் பிள்ளையாரின் தலை ஏன் யானைமுகமாக உள்ளது என்று நான் சிந்திக்கவில்லை. ஆனால் அவரின் தலை யானைமுகமானால் உடலின் தோற்றத்திற்கு விளக்கம் கிடைக்கிறது தானே? யானைஉடலுடன் ஒருவர் நிமிர்ந்து நின்றால் அது அப்படித்தானே இருக்கும்?

தெய்வ நம்பிக்கையை, மகிமையை, தத்துவத்தை, அற்புதங்களை, அனுபவங்களை நாம் உணர முடியும், பெறமுடியும், ஆனால், இதை மற்றவர்களிற்கு உணர்த்துவது மிகக் கடினம்...

இங்கு வேறு எதையும் என்னால் எழுத முடியவில்லை...

கீழே சில அழகிய விநாயகர் பாடல்கள் உள்ளன, விரும்பியவர்கள் இங்கே சொடுக்கி அவற்றை கேட்கவும்...

பிள்ளையார் கவசம்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=271115

விநாயகனே வினை தீர்ப்பவனே

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=256581

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் பற்றி பல நபர்கள் பலவாறு பேசுகின்றார்கள் என்றும், பல புராணக் கதைகளின்

பேசுபொருளாகப் பிள்iளாயார் உள்ளார் என்றும், இந்நிலைக்கு என்ன காரணமாக இருக்கும்

என்ற அடிப்படையிலும் தான் எனது பதிவினை நான் இட்டிருந்தேன். நான் வைத்த வாதத்தை

நீங்கள் இணைத்திருக்கும் இந்த புராணக் கதைகள் மற்றும் இதர பேச்சுக்களின்

உதாரணங்களின் பட்டியல் எவ்வாறு தர்க்கின்றது என்பது எனக்குப் புரியவில்லை.

சற்றுத் தெளிவு படுத்த முடியுமா?

இணைத்த கதைகள் பிள்ளயார் உருவான கதைகளைத் தவிர வேறொன்றையும் சொல்லவில்லை.. பிள்ளையாரின் உருவத்திற்கும், பிள்ளையாரின் முக்கியத்துவத்திற்கும் பின்னாலுள்ள தத்துவங்களை பலர் பல்வேறு வியாக்கியானங்களோடு தந்திருப்பர்.. எனினும் என் பார்வையில் எதுவும் தட்டுப்படவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

வினாயக தத்துவம்

டார்வினின் ஆராய்வின்படி amoebas என்ற ஓரணு உயிரிலிருந்து படிபடிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று ஒவ்வொரு படியாக முன்னேற்றம் கண்டு பூரண மனிதனாக வளர்ந்து இறைவனின் படைப்பில் ஆறறிவு பெற்ற மனிதனே சிறந்தவன் என்று பெயர்பெற்றான். இந்த வளர்ச்சிக்கு உறுதுணயாக நின்ற இந்தபேரருளுக்கு நம்முடைய ரிஷி முனிவர்கள் விக்னேஸ்வரர் என்று பெயர் அளித்தனர். வினாயகரை வழிபடும் அன்பர்கள் அருளைச்சொரிந்து தம் ஊழ்வினைப்பயன் களையும் மாற்ற வல்லவர் கணபதி என்று உறுதியாக நம்புகிறார்கள்.

வினாயகரும் சுண்டெலியும்

இந்துமத தெய்வங்களுக்கு தத்தம் வாஹனங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நம் வாழ்க்கை இறைவன் கைகளில் என்பதை உணர்கிறோம்.ஆட்டுவிக்கும் பேரருளானின் கைப்பாவைகளன்றோ நாம்? ப்ரஹ்மாண்டமான யானைமுகத்தோன் தனக்கு சற்றும் பொருந்தாத சின்னஞ்சிறு எலி மீது அமர்வது நம்மை சிந்திக்க வைக்கிறது. யானை அறிவையும், வலுவையும் கொண்ட தும்பிக்கையோன் துதிக்கையால் தடைக்கற்களை நீக்க வல்லவன். யானைமுகம் பரந்து விரிந்த பேரறிவையும், சுண்டெலி சிற்றறிவையும் குறிக்கிறது. மனிதன் முயன்றால் தன் சின்னஞ்சிறு அறிவையும், கண்ணோட்டத்தையும் பரந்து விரிந்த ஒன்றாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிகிறோம். ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரியும் எலி உலகியல் வாழ்வில் அலையும் நம் மனம் என்றால்,அம்மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நாம் வாழ்க்கையில் முன்னேறலாம். கீழான அலைந்து திரியும் சுண்டெலியையும் தன் வாஹனமாக்கிகொண்டு அருளும் வினாயகப்பெருமான் கீழான மாறுபாட்டுடன் கூடிய உலகியல் இச்சைகளிலிருந்து நம்மை விடுவித்து உயரிய பேரின்ப வீடு பேற்றிற்குவழி வகுப்பார் என்பது திண்ணம்.

வினாயகரின் பரந்து அகன்ற காதுகள்

மக்களில் பெரும்பான்மயோர் பிறர் பேச்சை செவி கொடுத்துக் கேட்டு மிதமாகப்பேசி தம் உள் ஒளியை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதையே வினாயகரின் பரந்து விரிந்த காதுகள் உணர்த்துகின்றன. வினாயகரின் பரந்த காதுகள் தெளிந்த உயர்ந்த ஞானத்தைப்பெற்றவன் இறைவனை உணரமுடியும் என்னும் அரிய கருத்தை உணர்த்துகிறது.

வினாயகரின் வயிறு

கருவுற்ற பெண்பொன்று காட்சியளிக்கும் வினாயகரின் பானை வயிறு ஒன்றிரண்டு உயிர்களுக்கு மட்டும் அல்லாது பூவுலகமனைத்திற்கும் ப்ராணசக்தியளித்து காத்து ரட்சிப்பவன் தானே என்று பறை சற்றுவது போன்று அமைந்திருக்கிறது. உயர்ந்த பரிபக்குவமடிந்த மனிதன் கிருஷ்ணபகவான் சொன்னவாறு சுகதுக்கங்கள், லாப நஷ்டங்கள் மான அவமானங்கள் எல்லாவற்றையும் சமமாக செரித்துக்கொண்டு நிர்மலமாக வாழ்வை எதிர்கொள்வான் என்றும் உணர்த்துகிறார்..

வலது கை

அபய முத்திரையை தாங்கும் வினாயகரின் வலது கை நற்பணி செய்து தூய வாழ்க்கை வாழும் எவரையும், தம்மை சரண் அடையும் எவரையும் தான் காத்து இம்மை மறுமைக்குரிய பேற்றை அளிப்பதாக உறுதி அளிக்கிறது.

திருப்பாதங்கள்

ஒரு காலை நிலத்தில் ஊன்றியும், மற்றோர் காலை மடித்தவாறு அமர்ந்திருக்கும் இறைவன் நாம் வாழ்வை உணர்வு பூர்வமாக அன்றி அறிவுபூர்வமாக வாழ வேண்டும் என்று உணர்த்துகிறார்.

மோதகம்

இறைவன் கையில் கொழுக்கட்டைகளை ஏந்தி காட்சி தருவது வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் உலகில் எலலா உயிர்களிலும் பொருந்தியுள்ள ஆத்மதத்துவத்தை உணர்ந்து எல்லோருக்கும் இனிமை பயக்கும் முறையில் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. கொழுக்கட்டையின் மேல் பாகம் உலகவாழ்வு என்னும் மாவுப்பொருளாகவும், உள்ளிருக்கும் இனிப்பு பூரணம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் உள் நின்று ஒளிரும் ஆன்மதத்துவத்தையும் குறிக்கிறது.

வினாயகர் ஒரு கையில் பாசத்தை ஏந்தி நிற்கிறார். பாசம் உலகியல்வாழ்வில் பற்றற்று தம் கடமையை இறை நம்பிக்கையுடன் ஆற்றுவோருக்கு இறைவன் அனைத்து நலங்களையும் தருவான் என்பதை தெளிவுறுத்தவே. வினாயகர் மற்றொரு கையில் அங்குசத்தை ஏந்தி இருக்கிறார். அங்குசம் வாழ்வில் உண்டாகும் தடைகளை பொடிபொடியாக்குகிறது. பாசம் பற்றையும், அங்குசம் சினத்தையும் குறிக்கிறது. மனிதன் தன்னை தன் ஆன்மாவை நல்வழிப்படுத்திக்கொள்ள பற்றையும் , சினத்தையும் அறவே விட்டொழிக்கவேண்டும்.

வினாயகப்பெருமான் குண்டலினி சக்தியின் இருப்பிடமான மூலதார சக்கரத்தின் அதி தேவதையாகத் திகழ்கிறார். சுருண்டுப்படுத்த்திருக்கும

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், எலியைப் பற்றிக் கூறிய விடயங்களில் சிலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. எலி பிள்ளையாரை எப்படி கஸ்டப்பட்டுக் காவியது என்றெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. எனது எண்ணத்தில் எலியானது தேவைப்படும்போது பிள்ளையாருக்கேற்ற சைசில் வளர்ந்து பிள்ளையாரை காவிக்கொண்டு போகும். தேவையற்ற நேரத்தில் சைசைக் குறைத்து ஒடுங்கி ஒரு ஓரமாக உட்கார்ந்து விடும் (கற்பனைக்கு அளவேது). எலி பிள்ளையாரை கஷ்டப்பட்டு தாங்குகிறது என்ற கருத்தில் கடவுள் தொடர்பான உருவகத்துடன் ஒரு முரண்பாடு வருகிறது. கடவுள் அன்பே உருவானவர் எந்த உயிர்களையும் வருத்தமாட்டார் என்பது பொதுவான கோட்பாடு. அந்த வகையில் எலியை வருத்தும் ஒரு கடவுளின் மீது ஒரு கடவுளுக்குரிய மதிப்பு வராது தானே? மேலும் பிள்ளையாரை கஷ்டப்பட்டுத் தாங்கும் எலியை மிகவும் இப்படி முன்னிலைப் படுத்தும் போது இங்கே கடவுள் யார் என்று குழப்பம் வேறு வந்து விடும்.

எலி பிள்ளையாரைக் காவவேனுமென்ற அவசியமில்லை. சேரமானும், சுந்தரரும் முறையே பல்லக்கிலும், வெள்ளையாணையிலும், கைலாசம் செல்லும்போது விநாயகர் தனது துதிக்கையாலேயே ஒளவையாரை அவர்களுக்கு முன் அங்கே கொன்டுவந்து சேர்த்தார். ஆகவே பஞ்சபூதங்களின் விரிவான கணபதிக்கு வாகனமாகிய எலியும், பூணுலான பாம்பும் ஒரு குறியீடுகளேயாகும்.

ஆன்மீகமானது தன்னால் தானேயுணரவேண்டியது. பகுத்தறிவால் அதை விவாதிக்கலாமேதவிர அனுபவிக்க முடியாது. ஒரு நாற்ரை நட்டால் அது முளைவிட சிலகாலம் பின் பலன்தர பல வருடங்கள் எடுக்கிறது. நோயென்று வந்தால் வைத்தியர் சொன்னதின் பேரில் பலமாதங்கள் பத்தியமிருக்கிறோம். ஆனால் ஆனமீகத்தைத்தேடி ஒருஅரை மணித்தியாலம் புலனடக்கி தியானம் செய்ய முயல்வதில்லை. ஆன்மீகம் மிக எளிமையானது. அதனாலேயே அது கொஞ்சம் கடினமானதும்கூட. குருகூட வழிகாட்டலாமேதவழர உணரவைக்க முடியாதது.

தந்தை பெரியாருக்கு அன்றைய காலகட்டத்தில் பார்ப்பனருக்கு எதிராக ஏதாவது ஓர் ஆயுதத்தை எடுக்க வேண்டியநிலை. அவர் எடுத்த ஆயதம் இந்துப் புராணங்களை இழிவுபடுத்துதல். (நேற்றைக்கு நடந்த நிகழ்வுகளையே இன்றைக்கு தலைக_ழாக மாற்றிப் போடும்போது) யுகயுகமாக நடந்து வரும் இதிகாச புராணக் கதைகளில் பல உருவாவதும் திரிபுபடுத்தப் படுவதும் இயல்பானதே.

தந்தை பெரியார் மிக மிக எளிமையாக வாழ்ந்தார் உண்மைதான்.

அவர் சிஃச்யர்களைப் பாருங்கள்!!!

தி.க வீரமணி அவர்கள் எவ்வளவு எளிமையானவர்?

எம்.யி.ஆர் தாய் மூகாம்பிகைக்கு தங்கவாள் பரிசளித்தார்.

கலைஞரின் எளிமை கொள்கையும் எல்லோருக்கும் தெரிந்ததே.

அரசியல் போன்று ஆன்மீகத்திலும் நழுவல்திலகமாகவே இருக்கிறார்.

அவர் குடும்பத்தவர் கோவில் போய் அர்ச்சனை செய்வினம் ஆனால் உடன்பிறப்பு க்களுக்கும் தொண்டர்களுக்கும் பகுத்தறிவுப் பிரச்சாரம்.

யெயலலிதா அவர்கள் சொல்லிவேலயில்ல, டாய்லெட் வசதியுடன்டென்ட்;போட்டு; மகாமக தரிசனம் பெற்றவர். குருவாயுரப்பன் தரிசனத்துக்கு கேரளவிசிட் பண்ணுபவர்.

இவ்வளவு யுகமாக ஒரு விடயம் நிலைத்து நிக்கிறதெனில் அதில் ஏதோவொன்று இருக்க வேண்டும். இல்லையெனில் எப்பவோ அழிந்திருக்கும்.

கொஞ்சம் புரிந்து கொள்ள முயலுங்கள். முயற்சித்துப் பாருங்கள்.

கண்ணதாசன்கூட சொன்னார் இல்லை, இல்லையென சொல்பவனுக்கு அறிவு தேவையில்லை. எதையும் மறுத்துக் கொண்டேயிருக்கலாம். இருக்கிறது என்பவனுக்குத்தான் தலைவலி. எல்லாவற்ரையும் நிருபிக்க வேண்டும். இவரும்கூட ஆரம்பத்தில் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உண்மையைத் தேடிப்புறப்பட்டவர்தான். கடைசியில் மதங்களையும் மூடநம்பிக்கைகளையும் கடந்த நிலையில் புனித பைபிளின் மலைப்பிரசங்கத்தை கிறித்தவர்களே பாராட்டும்வண்ணம் மிக அழகாக எழுதியவர். :icon_idea::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மேல் கூறிய எனது கருத்துக்களில் முதலாவது பந்தி வேறொரு நன்பருடையது. எனக்கு அதைச் சரியாக கட்டம் போடத் தெரியவில்லை.

தயவு செய்து யாரும் குறை நினைக்க வேண்டாம். :lol::lol:

  • தொடங்கியவர்

மாப்பிளை மற்றும் சுகி,

கடவுள் நம்பிக்கை உணரப்படவேண்டியதே அன்றி போதிக்கப்படக்கூடியது அல்ல என்ற உங்களது

கருத்தோடு நான் பு+ரணமாக உடன் படுகின்றேன். எனது பதிவானது,

இங்கு சிலர் புராணக் கதைகளை நேரடியாக விளக்கப்படுத்திக் கொண்டு அதை மட்டுமே

ஆதாரமாக வைத்து செய்யும் வாதங்கள் பற்றியது மட்டுமே. இது தான் எனது ஒரே நோக்கம்

என்பதனையும் எனது பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். எனவே உங்களின்

கருத்தில் எனக்கு பு+ரண உடன்பாடு.

பண்டிதர்,

நீங்கள், எனது இப்பதிவு தொடர்பில் இரு விடயங்களில் தர்க்கிக்கின்றீர்கள்.

1) எலிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எலி பிள்ளையாரை ஓவரேக் பண்ணிவிடும் அல்லோ

என்பது. 2) எலியை பிள்ளையார் வருத்துகிறார் என்பது.

ஒரு விஞ்ஞானி தனது கண்டுபிடிப்பு பற்றி விளக்கம் கொடுக்கும் போது அனைவரது பார்வையும்

அவரது கண்டுபிடிப்பில் தான் குத்தி நிற்கும். அதனால் கண்டுபிடிப்பு அதனைக் கண்டுபிடித்த

விஞ்ஞானியை ஓவரேக் செய்கிறது என்று கொள்ள முடியாது.

அடுத்து, எலியைப் பிள்ளையார் துன்புறுத்துகிறார் என்பது. ஒரு சிறிய உருவத்தின்

மீது ஒரு பெரிய உருவம் இருக்கின்றது என்ற அந்த ஓவியத்தின் வெளிப்பாட்டின் பிரகாரம்

நீங்கள் அவ்வாறு கூறுகின்றீர்கள். எனது கண்களிற்கு, சிறிய உருவம் பெரிய உருவம்

என்பதோடு அவ்வுருவங்கள் பற்றிய சில detailsம் தெரிகிறது.

எலியின் சிறு உருவம் தாங்கக் கூடிய சுமையாக நாங்கள் வரித்துக் கொண்டுள்ள எல்லையை,

எங்களது மனதில், பிள்ளையார் உருவம் பலமடங்கு மீறுவதால் எலி வருந்துகிறது என நாங்கள்

வருத்தப் படுகின்றோம். ஆனால், சிறுவயதில் எங்கள் வீட்டில் பு+னை எலி பிடித்ததைக் கூர்ந்து

அவதானித்துள்ளேன். எலியைப் பு+னை கடிக்கின்ற வேளையில், எலி முழிகள் பிதுங்கி, வாய்

திறந்து, வாலினை ஒரு வகையாக உயர்த்தி ஆட்டித் தான் மடியும். எலியினது distress

கோலம் அவ்வாறு தான் இருக்கும். பிள்ளையாரின் கீழே உள்ள எலி உருவம் அவ்வாறு

இல்லையே.

எமது அன்றாட வாழ்வில் பல விடயங்கள் எம்மால் தாங்கக்கூடிய எல்லையை மீறிய சுமைகள்

என நாம் கருதுகின்றோம். எனினும் அவ்வாறான ஒரு சுமை பற்றி அதன் முடிவில் பிறரிற்கு

நாம் கூறக் கூடியதாக உள்ளது என்றால் அந்தச் சுமையை நாம் தாங்கி விட்டோம் என்று

தானே அர்தம், இல்லாவிடின் எமது system breakdown ஆகி இருக்குமே. எனினும் நாம்

அக்கடின சுமையைச் சுமக்கையில் எவ்வளவிற்கெவ்வளவு அரவணைப்பும்

உத்வேகமும் நம்பிக்கை ஊட்டலும் எமக்குக் கிடைக்கின்றதோ அவ்வளவு இலகுவில் எம்மால் அதைச் சுமக்க

முடியும்.இந்தக் கோணத்தில் தான் நான் மேற்படி பிரதிபலிப்பை விளக்க வெளிக்கிட்டேன். எனினும் இது தான் சரியான

அறுதியான முடிவு என்றோ எனக்கு எல்லாம் புரிகிறது என்றோ நான் அடம் பிடிக்கவில்லை.

எவ்வாறு புராணக் கதைகள் நேரடி விளக்கம் கொள்ளப்படக் கூடாது என வாதிடுகின்றேனோ

அவ்வாறானது தான் ஒரு ஓவியத்திற்கான அறுதியான முடிவான விளக்கம் என்று நாம்

எதனையும் கூற விளைவதும். சமயகுரவர்கள் எமக்குச் சொல்லும் செய்தி போல ஒவ்வொருவர்

ஒவ்வொரு வடிவில் இறை நம்பிக்கையை வகுத்துக் கொள்ளலாம். அது அவரவர் உணர்வு

தொடர்பானது. நீங்களே கூறியது போல பிள்ளையாரின் உருவங்கள் கூட எத்தனை

வடிவங்களி;ல் உள்ளது என்பதும் இதனால் தான் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு புராணக் கதைகள் நேரடி விளக்கம் கொள்ளப்படக் கூடாது என வாதிடுகின்றேனோ

அவ்வாறானது தான் ஒரு ஓவியத்திற்கான அறுதியான முடிவான விளக்கம் என்று நாம்

எதனையும் கூற விளைவதும். சமயகுரவர்கள் எமக்குச் சொல்லும் செய்தி போல ஒவ்வொருவர்

ஒவ்வொரு வடிவில் இறை நம்பிக்கையை வகுத்துக் கொள்ளலாம். அது அவரவர் உணர்வு

தொடர்பானது. நீங்களே கூறியது போல பிள்ளையாரின் உருவங்கள் கூட எத்தனை

வடிவங்களி;ல் உள்ளது என்பதும் இதனால் தான் என்பது எனது கருத்து.

கடவுளரின் தோற்றங்களையும் நோக்கங்களையும் ஆதியில் எவரும் விளக்கமாக எழுதி வைக்கவில்லை. சிலவேளை எழுதி வைத்தவை அழிந்து போயிருக்கலாம் அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். எனவே கடவுளரின் வடிவங்களுக்குத் தத்துவ முலாம் பூசியதும், புனிதப் படுத்தியதும் காலவோட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.. ஒவ்வொரு கால கட்டத்திலும், அக்கால நடைமுறைகளுக்கேற்பவும், சமூக காரணங்களுக்காகவும் வேறுவேறான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். எனவே கடவுளரின் தோற்றங்கள் சொல்லும் செய்தி என்ன என்பது நீங்கள் கூறியபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். இதனால் ஒருவரின் வியாக்கியானத்தை இன்னுமொருவரால் சரியான ஆதாரங்களின்றி மறுத்துரைக்கமுடியாது..

ஆனை எலியின் மீது இருப்பதனால் எலிக்குப் பாதகமில்லை என்பது யதார்த்தத்திற்குப் புறநடையானது. எலி மூச்சுவிடமுடியாமால் மரணித்துவிடும் என்பதே உண்மையானது! எனினும் நீங்கள் தந்திருக்கும் தத்துவ விளக்கம் பொருந்தித்தான் வருகின்றது.. வாழ்க்கையில் துன்பம்மேல் துன்பம் வந்தாலும் துவளாமல் எதிர்கொள்ளவேண்டும் என்பது தேவையான சிந்தனைதான்..

  • தொடங்கியவர்

ஆனை எலியின் மீது இருப்பதனால் எலிக்குப் பாதகமில்லை என்பது யதார்த்தத்திற்குப் புறநடையானது. எலி மூச்சுவிடமுடியாமால் மரணித்துவிடும் என்பதே உண்மையானது! எனினும் நீங்கள் தந்திருக்கும் தத்துவ விளக்கம் பொருந்தித்தான் வருகின்றது.. வாழ்க்கையில் துன்பம்மேல் துன்பம் வந்தாலும் துவளாமல் எதிர்கொள்ளவேண்டும் என்பது தேவையான சிந்தனைதான்..

எயிட்ஸ் போன்ற வருத்தங்கள் கூட அனைவரையும் ஒருவாறு தாக்குவதில்லை.

சில வகைப் புற்று நோய்கள் ஒரு வரை இத்தனை நாடகளிற்குள் கொன்றுவிடும்;,

இது தான் நடைமுறை அனுபவம் என வைத்தியர்கள் கூற சில மனிதர்கள் வருடக்கணக்கில்

வைத்தியரின் காலக்கெடுவை வென்று வாழ்கின்றார்கள். நடைமுறையோடு இது ஒத்துப்போகவில்லை

ஆனால் எம் கண்முன்னே நடப்பதால் ஒத்துக் கொள்கின்றோம் என வைத்தியரும் கூறுகிறார்.

பு+மி அதிர்வினால் கட்டிடங்கள் சிதைந்து போகிறது. பல நாட்களின் பின்னர் சிறு குழந்தை

(பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு மூதாட்டி) கட்டிட சிதைவுகளிற்குள், அத்தனை

அறுந்த மின் கம்பிகள், நச்சு வாயுக்கள், தூசுகள் முதலிய சூழலிற்குள் உணவோ நீரோ

இன்றி வாழ்ந்து உயிருடன் மீட்கப் படுகிறது. இது நடைமுறைச் சாத்தியமற்றது ஆனால் நம்

கண்முன்னே நடப்பதால் ஏற்றுக் கொள்கின்றோம் என அனைவரும் மூக்கில் விரலை

வைக்கின்றோம். அண்மையில் கனடாவில் ஒரு ஆறுவயதுப் பாலகன் பலமாடிக் கட்டிடம் ஒன்றில்

இருந்து தவறி விழுந்து விடுகின்றான். அவனைத் தாங்கிப் பிடிக்க மரங்களோ தடைகளோ ஏதுமில்லை.

நேரே வந்து நிலத்தில் விழுகின்றான். அவனது உடல் அடையாளம் கூடத் தரையில் பதிகிறது.

எனினும் அவன் உயிர் தப்புகின்றான். காலில் மட்டும் சிறு என்பு முறிவு. பார்த்த அனைவரும்

கூறுகின்றனர். இது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. எம் கண்முன்னே நடப்பதனால் ஒத்துக்

கொள்கின்றோம் என்கின்றோம்.

தேடல்கள் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.

மொத்தத்தில் எமக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பதற்காக அவ்விடயத்தைத் தடை செய்வதும்

நக்கல் செய்வதும் பற்றியது தான் எனது பதிவு.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எயிட்ஸ் போன்ற வருத்தங்கள் கூட அனைவரையும் ஒருவாறு தாக்குவதில்லை.

சில வகைப் புற்று நோய்கள் ஒரு வரை இத்தனை நாடகளிற்குள் கொன்றுவிடும்;,

இது தான் நடைமுறை அனுபவம் என வைத்தியர்கள் கூற சில மனிதர்கள் வருடக்கணக்கில்

வைத்தியரின் காலக்கெடுவை வென்று வாழ்கின்றார்கள். நடைமுறையோடு இது ஒத்துப்போகவில்லை

ஆனால் எம் கண்முன்னே நடப்பதால் ஒத்துக் கொள்கின்றோம் என வைத்தியரும் கூறுகிறார்.

பு+மி அதிர்வினால் கட்டிடங்கள் சிதைந்து போகிறது. பல நாட்களின் பின்னர் சிறு குழந்தை

(பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு மூதாட்டி) கட்டிட சிதைவுகளிற்குள், அத்தனை

அறுந்த மின் கம்பிகள், நச்சு வாயுக்கள், தூசுகள் முதலிய சூழலிற்குள் உணவோ நீரோ

இன்றி வாழ்ந்து உயிருடன் மீட்கப் படுகிறது. இது நடைமுறைச் சாத்தியமற்றது ஆனால் நம்

கண்முன்னே நடப்பதால் ஏற்றுக் கொள்கின்றோம் என அனைவரும் மூக்கில் விரலை

வைக்கின்றோம். அண்மையில் கனடாவில் ஒரு ஆறுவயதுப் பாலகன் பலமாடிக் கட்டிடம் ஒன்றில்

இருந்து தவறி விழுந்து விடுகின்றான். அவனைத் தாங்கிப் பிடிக்க மரங்களோ தடைகளோ ஏதுமில்லை.

நேரே வந்து நிலத்தில் விழுகின்றான். அவனது உடல் அடையாளம் கூடத் தரையில் பதிகிறது.

எனினும் அவன் உயிர் தப்புகின்றான். காலில் மட்டும் சிறு என்பு முறிவு. பார்த்த அனைவரும்

கூறுகின்றனர். இது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. எம் கண்முன்னே நடப்பதனால் ஒத்துக்

கொள்கின்றோம் என்கின்றோம்.

தேடல்கள் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.

மொத்தத்தில் எமக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பதற்காக அவ்விடயத்தைத் தடை செய்வதும்

நக்கல் செய்வதும் பற்றியது தான் எனது பதிவு.

நீங்கள் சொன்ன எல்லா உதாரணங்களுமே அறிவியல் ரீதியாக நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்டவையே. ஆனால் ஒருவர் கடலின் அடியில் 2 நாள் இருந்து விட்டு வந்தேன் என்று கூறினால் நம்பமாட்டேன். அடியோடு மறுப்பேன்.

அதுபோல சிலர் கடவுள் என்பவரும் இருக்க முடியாது என்கிறார்கள்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கும்போது "ஆ"வென்று வாயைப் பிளக்கின்றோம்.. காரணம் நடக்கமுடியாதது நடந்துவிட்டதே என்ற உணர்வினால்தான்.. அதற்காக அதிசயங்கள் ஒவ்வொரு நாளும் நடப்பதில்லை. நம்பமுடியாதவை நடந்துவிட்டன என்று கூறி சிலவற்றை நம்பப் பண்ணுவது (முக்கியமாக மதவிடயங்களில்) எப்போதும் வேலை செய்யாது.. சில மதப் பிரச்சாரங்களில் கண்பார்வை இழந்தோர் திரும்பவும் பார்வை பெற்றதாகவும், பிறவியிலேயே நடக்கமுடியாதோர் திரும்பவும் நடக்கக் கூடியவர்கள் ஆகியதாகவும் காட்டிப் பிரச்சாரம் செய்வார்கள்.. இவையெல்லாவற்றையும் நம்பக்கூடியவர்கள் தர்க்கரீதியான சிந்தனை (rational thinking) அற்றவர்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

தேடல்கள் இன்றி உண்மைகள் தெளிவாகாது.. எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கினால்தான் பல விடயங்களுக்கு விடைகள் கிடைக்கும்.. புனிதமாகக் கருதுபவற்றைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது என்ற சிந்தனை பலரிடம் உள்ளதால்தான் பலவிடயங்கள் "விலக்கப்பட்டவை" (taboo) என்று விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதில்லை.

  • தொடங்கியவர்

எனது கருத்தை நான் சரியாகக் கூறவில்லை போலும்...

நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கும்போது "ஆ"வென்று வாயைப் பிளக்கின்றோம்.. காரணம் நடக்கமுடியாதது நடந்துவிட்டதே என்ற உணர்வினால்தான்.. அதற்காக அதிசயங்கள் ஒவ்வொரு நாளும் நடப்பதில்லை. நம்பமுடியாதவை நடந்துவிட்டன என்று கூறி சிலவற்றை நம்பப் பண்ணுவது (முக்கியமாக மதவிடயங்களில்) எப்போதும் வேலை செய்யாது.. சில மதப் பிரச்சாரங்களில் கண்பார்வை இழந்தோர் திரும்பவும் பார்வை பெற்றதாகவும், பிறவியிலேயே நடக்கமுடியாதோர் திரும்பவும் நடக்கக் கூடியவர்கள் ஆகியதாகவும் காட்டிப் பிரச்சாரம் செய்வார்கள்.. இவையெல்லாவற்றையும் நம்பக்கூடியவர்கள் தர்க்கரீதியான சிந்தனை (rational thinking) அற்றவர்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

தேடல்கள் இன்றி உண்மைகள் தெளிவாகாது.. எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கினால்தான் பல விடயங்களுக்கு விடைகள் கிடைக்கும்.. புனிதமாகக் கருதுபவற்றைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது என்ற சிந்தனை பலரிடம் உள்ளதால்தான் பலவிடயங்கள் "விலக்கப்பட்டவை" (taboo) என்று விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதில்லை.

அதிசயங்களைக் காட்டி மதம்மாற்றம் செய்ய முயல்வதற்காய் நான் குறிப்பிட்டவற்றைக் குறிப்பிடவும் இல்லை,

மதத்தால் தான் அவை நடந்தன என்றும் எங்கும் நான் மறந்தும் சொல்லவும் இல்லை.

மதமாற்ற பிரச்சாரங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

நீங்கள் கூறினீர்கள் ஆனை எலி மீது இருப்பது நடைமுறைக்கு ஒத்து வராது அப்படி ஆனை இருந்தால் எலி மூச்சுத் திணறி இறந்து விடும் என்று. அதனால் தான் கூறினேன் எமக்குப் புரியாத பல விடயங்கள், அதாவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நாங்கள் அடித்துக் கூறுகின்ற பல விடயங்கள், எம் கண்முன்னே நடந்து கொண்டுதான் உள்ளன என்று குறிப்பிட்டேன். எமக்குத் தெரிந்தன பற்றி என்றுமே நாம் தேடுவது இல்லையே.

  • தொடங்கியவர்

நீங்கள் சொன்ன எல்லா உதாரணங்களுமே அறிவியல் ரீதியாக நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்டவையே. ஆனால் ஒருவர் கடலின் அடியில் 2 நாள் இருந்து விட்டு வந்தேன் என்று கூறினால் நம்பமாட்டேன். அடியோடு மறுப்பேன்.

அதுபோல சிலர் கடவுள் என்பவரும் இருக்க முடியாது என்கிறார்கள்.

ஒரு வேளை எனது கருத்தை நீங்கள் out of context ஆக எடுக்கிறீர்களோ என

எண்ணத் தோன்று கிறது.

கடவுள் இருக்கிறாரா இல்லையான என்பது எனது விவாதம் இல்லை. அது ஒவ்வொருவர்

உணரவேண்டியது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளேன். எனது வழக்கு, புராணக் கதைகளை

நேரடியாக அர்த்தப் படுத்திக் கொண்டு அதை ஆயுதமாகப் பிரயோகித்து நக்கல் அடிப்பவர்கள்

பற்றியது மட்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சரியாக விளங்கினால் இன்னுமொருவனின் வாதம் இது தான்,

சர்ச்சைக்குரிய விவதங்களில் prior கூடாது!

அதாவது ஒரு சர்ச்சைக்குரிய விடயம் வரும்போது அது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே கண்ட கேட்ட கருத்துக்கள் எம்மை தவறாக வழிநடத்தலாம் என்பதால் அவற்றை விலக்கி புதுமையாக சிந்திக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

இப்பதிவினை எழுத வேண்டும் என எனக்குத் தோன்றியமைக்கான காரணம், ஒரு யாழ் கள

உறவு ஏதோ ஒரு பகுதியில் எழுதியிரந்தார்:

; "குளிக்கப்போன உமாதேவி தனது உடலில் இருந்த

அழுக்கை உருட்டி பிள்ளையாராக்கி காவலிற்கு வைத்து விட்டுக் குளித்தாராம். அந்நிலையில்

அங்கு வந்த சிவன் உள்ளே செல்ல முனைய பிள்ளையார் சிவனோடு போர் செய்தாராம்.

அதனால் சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டாராம். உடனே உமாதேவி அழுதாரம்.

சரி பாவமென்று சிவன் அதால போன ஆனையைப் பிடித்து அதன் தலையை வெட்டி

பிள்ளையாரிற்குப் பு+ட்டினாராம்"

இப்படி ஒரு புராணக் கதையை எழுதி விட்டு, பின்னர் அதன் அடிப்படையில் அந்த உறவு

பின்வருவன போன்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்:

1) ஏன் பிள்ளையார் விசயத்தைச் சிவனிற்கு விளக்கவில்லை

2) தலையை பிள்ளையாரிற்குக் கொடுத்த ஆனை பாவமெல்லோ

இவர் மட்டுமன்றி அவ்வப்போ புராணக் கதைகளின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கையை

கேலி செய்வதும் களத்தில் நடக்கின்ற ஒன்று. அந்த அடிப்படையில் தான் எனது கருத்தினை

நான் எழுதியிருந்தேன்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

front.gif

படம் 1

30_cm_ganesh_on_rat_1.jpg

படம் 2

இந்தத் தலைப்பு மக்கள் குழுமம் ஒன்றின் மத நம்பிக்கையை பரிகசிக்கும் நோக்கில் இடப்படவில்லை என்று எம்மளவில் கருதிக் கொண்டு இந்தப் பதிலமைகிறது..!

இன்னுமொருவனின் ஆதங்கம் எலி மீது எப்படி பிள்ளையார் என்ற மனித உடலையும் யானைத்தலையையும் கொண்ட உருவம் இருக்க முடியும் என்பதாக இருந்தால்..

மேலே உள்ள படங்கள் இரண்டையும் நோக்குங்கள். படம் 1 இல் எலி சிறியதாகவும் பிள்ளையார் பெரியதாகவும் பிள்ளையார் அருகில் எலி இருப்பது போலவும் தீட்டப்பட்டுள்ளது.

படம் 2 இல் பிள்ளையாரை தாங்கக் கூடிய அளவுக்கு எலியின் பருமனும் அதிகரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

ஆக பிள்ளையார் எலியில் அமர வேண்டும் என்றால் எலியளவுக்கு அவர் சிறிதாக இருந்திருக்க வேண்டும்..அல்லது எலி பெரிதாக மாற்றப்படிருக்க வேண்டும்.. எலியாய் மாற்றப்பட்டது ஒரு அசுரன் என்பது புராணங்களில் உள்ள கருத்து. ஆக அந்த எலி பிள்ளையாருக்கு ஏற்ற வகையில் அவரால் மாற்றப்பட்டிருக்கலாம்..!

fish-with-human-face.jpg

படம் 3 - மனிதத் தலையுடன் கூடிய மீன்.

carp-human-face.jpg

படம் - 4

படம் 3,4 இல் உள்ள மீன்கள் மனிதத்தலை போன்ற தோற்றம் கொண்டதற்காக அந்த மீன்கள் மனிதன் அளவா இருக்கின்றன..இல்லையே..! அதுபோலவேதான் ஆனைத் தலை கொண்ட பிள்ளையார் பெரிய ஆளா இருக்கனும் என்ற அவசியமில்லை. எலியும் நீங்கள் சொல்லுறாப் போல சின்னனாவே இருக்கனும் என்றதில்லை. மெளஸ் சிறிது றற் பெரிது. கொழும்பு நகரில் பூனையளவு எலிகள் கூட உண்டு..! ஆக லொஜிக் பேச வெளிக்காட்டால் நிறைய பேச வேண்டி வரும்..!

நம்பிக்கைதானே. கடவுள் நம்பிக்கை இருப்பதில் தப்பில்லை. கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளை விதைப்பதும் வளர்ப்பதும் தான் தப்பு. அதை அனைத்து மதங்களும் தம் தம் பங்கிற்கு செய்யத் தவறவில்லை. இருந்தாலும் இந்த எலி மீது ஆனை விடயத்தில் உள்ள மாறுபாடான பார்வைகளைத் லொஜிக் பேசி அலசுவதிலும் தவிர்ப்பது நல்லம். காரணம் எலி என்பது ஒரு கொடிய அசுரன். தீமைகளை செய்கின்றவன். ஆயினும் தன்னைத் திருத்தி மன்னிக்கக் கோரும் போது அவன் மன்னிக்கப்படுகிறான் என்பதைத்தான் அந்த உருவம் சொல்கிறதே தவிர எலி மீது பிள்ளையார் உட்காந்திருக்காருப்பா என்று சொல்லுறதல்ல அதன் நோக்கம்..!

சிலர் ஏதோ லொஜிக் பேசுறதா எண்ணிக்கொண்டு தங்களின் அறியாமைகளை தான் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் மதங்கள் பழிப்புக்களையும் மிஞ்சி மீதமிருக்க முடிகிறது..! :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதிவினை எழுத வேண்டும் என எனக்குத் தோன்றியமைக்கான காரணம், ஒரு யாழ் கள

உறவு ஏதோ ஒரு பகுதியில் எழுதியிரந்தார்:

; "குளிக்கப்போன உமாதேவி தனது உடலில் இருந்த

அழுக்கை உருட்டி பிள்ளையாராக்கி காவலிற்கு வைத்து விட்டுக் குளித்தாராம். அந்நிலையில்

அங்கு வந்த சிவன் உள்ளே செல்ல முனைய பிள்ளையார் சிவனோடு போர் செய்தாராம்.

அதனால் சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டாராம். உடனே உமாதேவி அழுதாரம்.

சரி பாவமென்று சிவன் அதால போன ஆனையைப் பிடித்து அதன் தலையை வெட்டி

பிள்ளையாரிற்குப் பு+ட்டினாராம்"

இப்படி ஒரு புராணக் கதையை எழுதி விட்டு, பின்னர் அதன் அடிப்படையில் அந்த உறவு

பின்வருவன போன்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்:

1) ஏன் பிள்ளையார் விசயத்தைச் சிவனிற்கு விளக்கவில்லை

2) தலையை பிள்ளையாரிற்குக் கொடுத்த ஆனை பாவமெல்லோ

இவர் மட்டுமன்றி அவ்வப்போ புராணக் கதைகளின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கையை

கேலி செய்வதும் களத்தில் நடக்கின்ற ஒன்று. அந்த அடிப்படையில் தான் எனது கருத்தினை

நான் எழுதியிருந்தேன்.

ஆ .. இங்கு நடக்கின்ற சமய விவாதங்களை சொல்லுகிறீர்களா, நான் அந்தப் பக்கம் போவதில்லை.

உங்களுக்கு ஒரு விடயம் தெரியும்தானே, நித்திரை கொள்ளுபவர்களையும் அது போல நடிப்பவர்களையும். அப்படி சிலர் என்ன பயன் என்று பார்க்காமல் விவாதம் செய்வதற்ககவே விவாதம் செய்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த முயல்வது பயன்தருமா என்பது சந்தேகமே.

நாத்திகன் என்று கூறிக்கொள்பவர்கள் கடவுளை எதிர்ப்பது ஏன்? அவர்கள் கடவுள் நம்பிக்கையை அல்லவா எதிர்க்கவேண்டும். மாறாக அவர்கள் "அன்பே சிவன் என்றால் அவன் கையில் எதற்கு சூலாயுதம் என்கிறார்கள்". இன்னும் எமது புராணக் கதைகளை சாடுவது தான் நாத்திக வாதம் என்கிறார்கள்.

மேலும், ஆத்திகர்கள் கூட சமயத்தை சமயமாக பார்க்காமல் புராணத்தோடு போட்டூக் குழப்புகிறார்கள்.

என்ன செய்வது?

எமது சிந்து வெளி நாகரீகம் நன்றாகத்தான் மற்ற நாகரீகங்களுக்கு இணையாகத்தான் இருந்தது ...ஒரு கி.பி. 1500 வரைக்கும். அதன்பிறகு மேற்குலகு சடசட என அறிவியலில் முன்னேற எம்மவர் மட்டும் அப்படியே இருந்து விட்டனர். விளைவு இன்று இப்படி எந்த முன்னேற்றமும் இல்லாமல் சமயம் மூடநம்பிக்கை களெல்லாம் அப்படியே 1500 ம் ஆண்டு அளவிலேயே நிற்கிறது.

இது ஏன்?

  • தொடங்கியவர்

இந்தத் தலைப்பு மக்கள் குழுமம் ஒன்றிம் மத நம்பிக்கையை பரிகசிக்கும் நோக்கில் இடப்படவில்லை என்று எம்மளவில் கருதிக் கொண்டு இந்தப் பதிலமைகிறது..

நெடுக்காலபோவான், நான் மத நம்பிக்கையைப் பரிகசித்து எழுதவில்லை. மாறாக, சில

மத எதிர்பபாளர் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்வோர், சில புராண கதைகளிற்கு நேரடி

விளக்கம் செய்து கொண்டு அதன் அடிப்படையில் மதநம்பிக்i உடையவர்களைப் பரிகசித்து

வருகின்றார்கள். அவர்களைப் பற்றியதே எனது பதிவு. மற்றபடி எனக்கு கடவுள் நம்பிக்கை

உண்டு என்பது எனது பதிவில் வெளிப்படையாகவே தெரிகிறது.

இன்னுமொருவனின் ஆதங்கள் எலி மீது எப்படி பிள்ளையார் என்ற மனித உடலையும் யானைத்தலையையும் கொண்ட உருவம் இருக்க முடியும் என்பதாக இருந்தால்.

எலி மீது எவ்வாறு பிள்iளார் இருக்கின்றார் என்பது எனது ஆதங்கமில்லை. நான் ஏன்

அவ்விவகாரத்தைக் குறிப்பிட்டேன் என்றால், கடவுள் நம்பிக்கை பற்றி நக்கல் பேசும் பலர்

கைவசம் எடுக்கும் ஒரு வாதம் இந்த எலி மீது ஆனை விடயம். அதனால் தான் அது கூட

பார்ப்பவரைப் பொறுத்தது என்ற எனது கருத்தைப் பதித்திருந்தேன்.

இருந்தாலும் இந்த எலி மீது ஆனை விடயத்தில் உள்ள மாறுபாடான பார்வைகளைத் லொஜிக் பேசி தவிர்ப்பது நல்லம். காரணம் எலி என்பது ஒரு கொடிய அசுரன். தீமைகளை செய்கின்றவன் ஆயினும் தன்னைத் திருத்தி மன்னிக்கக் கோரும் போது அவன் மன்னிக்கப்படுகிறான் என்பதைத்தான் அந்த உருவம் சொல்கிறதே தவிர எலி மீது பிள்ளையார் உட்காந்திருக்காருப்பா என்று சொல்லுறதல்ல அதன் நோக்கம்..!

கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவரிடம் பேசுவது போன்று கடவுள் நம்பிக்கை

இல்லாத ஒருவரிடம் நாம் பேச முடியாது. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு உணர்வு அது

ஒவ்வொருவரும் தாம்தாம் தாமாக உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது என்பதனை

தெளிவாகப் பலதடவை நானும் இன்னும் பலரும் இத்தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளோம்.

எனினும் புராணக் கதையை நேரடியாக அர்த்தப் படுத்திக் கொண்டு, தாங்கள் கூறுவது போன்ற

ஒரு விளக்கம் மட்டுமே அதற்கு இருக்கமுடியும் என்பது போல் பேசி அந்த அடிப்படையில்

கடவுள் நம்பிக்கையை நக்கல் அடிப்பவர்களிடம் நாங்கள் இன்னொரு புராணக் கதையைக்

குறிப்பிடுவது எத்துணை விநயமானது என்பதில் சந்தேகமே. பொதுவாக, கடவுள் நம்பிக்கையினை

நக்கல் செய்பவர்கள் கொண்டுள்ள அடிப்படை எண்ணம் என்னவெனில் சிந்திக்கத் தெரிந்த,

ஒரு மனிதனால் கடவுள் நம்பிக்கையினைக் கொண்டிருக்க முடியாது என்பதே. இன்னொரு

வகையில் பார்த்தால் கடவுள் நம்பிக்கை உடையோர் அனைவரும் மூடர்கள் என்பது இவர்கள்

கருத்து. அந்த அடிப்படையில் தான் மேற்படி லொஜிக் சம்பந்தமான சம்பாசனைகள்

தேவைப்படுகின்றன. மற்றும் எம்முள்ளேயும் தேடல்கள் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பது

எனது கருத்து. இதனை எனது கடவுள் நம்பிக்கை தடை செய்வதாக நான் உணரவில்லை.

மதங்கள் பழிப்புக்களையும் மிஞ்சி மீதமிருக்க முடிகிறது..!

எனினும் நீங்கள் சொன்னது போல், இத்தனை ஆண்டுகளாக இந்து சமயம் நிலைத்திருக்கின்றது

என்றால், அதுவே பல செய்திகளைக் கூறுகின்றது என்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ எப்பவோ படித்தது..

"கடவுள் உணரத்தக்கவரே தவிர, நம்பத்தக்கவரல்ல. குருட்டுத்தனமான நம்பிக்கை என்றுமே தோல்வியில்தான் முடியும். வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை உணர்வதே சரியானது. அதற்கு கடவுள் என்று பெயர் வைத்து பின்னால் நம்பிக்கை தோற்று விட்டது என்பது தவறு. நம்புகிறவர்கள் கடவுளை புரிந்து கொள்ள மாட்டார்கள்."

  • கருத்துக்கள உறவுகள்

சமயங்கள் சொல்லும் தத்துவங்கள் வேறு சமய நம்பிக்கை வேறு என்று பாகுபடுத்த முடியும் என்றே கருதுகின்றேன்.. உலகில் உள்ள எல்லா மதங்களும் தத்துவங்களைக் கொண்டுள்ளன.. எனினும் பலர் தத்துவங்களை அடிப்படையாக வைத்து மதத்தை நம்புவதில்லை.. அப்படி நம்புவர்கள் உண்மையில் மதங்கள் சொல்லும் வழிப்படி ஒழுகுபவர்களாக இருக்கவேண்டும்.. எத்தனை பேர் அப்படி உள்ளனர்? மதங்களின் வழிப்படி நடக்காதோர் ஏன் மதநம்பிக்கையை இறுக்கிப் பிடிக்கின்றனர் (உ.ம். புத்தமதத்தின்படி நடந்து கொள்ளாத சிங்களவர் ஏன் புத்தமதத்தை இறுக்கிப் பிடிக்கின்றனர்)?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.