Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறமொழி கலவாத தமிழ் .......!  👍

  • 2 weeks later...
  • Replies 479
  • Views 91.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    எந்த மொழியிலும் இல்லாத சிறப்புக்கள், அன்னைத் தமிழில் .

  • ஆணவம் அடங்கிய அந்த நேரம்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte

**இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருமா.?**
தமிழில் புள்ளியுடைய இரண்டு மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருமா.? வரும் என்றால் எங்கே வரும்.?
இந்த ஐயத்திற்குப் பலரிடையே தெளிவான அறிதல் இல்லை. தற்போது பரவலாகப் பரவி வரும் பிழைகளில் இரட்டை மெய்யெழுத்துகளைத் தயங்காமல் இடுவதும் ஒன்று.
**’கற்ப்பதற்கு’** என்று எழுதுகிறார்கள். **‘அதற்க்காக’** என்று எழுதுகிறார்கள். **‘முயற்ச்சி’** என்றுகூட எழுதுகிறார்கள்.
இவை முற்றிலும் பிழையானவை.
ஒரு வல்லின மெய்யெழுத்தினை அடுத்து இன்னொரு தனி மெய்யெழுத்து வரவே வராது. ***கற்பதற்கு, அதற்காக, முயற்சி*** என்று எழுதுவதுதான் சரி.
தற்காலக் கதாசிரியர்கள் சிலர் சொல்ப்படி, அல்ப்பம், கல்க்கண்டு என்றுகூட எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதும் பிழையே.
அப்படியானால் தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் ஒன்றாக வருவதில்லையா.? இரண்டு மெய்யெழுத்துகளைச் சேர்ந்தாற்போல் பார்த்த நினைவிருக்கிறதே.
உண்மைதான்.
தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருவதும் உண்டு. ஆனால், அவை மூன்றே மூன்று மெய் எழுத்துகளை அடுத்துத்தான் வரும். வல்லின மெய்யை அடுத்து வரவே வராது.
அம்மூன்று எழுத்துகள் எவை ? ய், ர், ழ் ஆகியவையே அம்மூன்று மெய்கள். அம்மூன்று இடையின மெய்களை அடுத்து மட்டுமே இன்னொரு ஒற்றெழுத்து புள்ளியோடு வரலாகும்.
திருக்குறளிருந்தே எடுத்துக்காட்டினைக் காண்போம்.
அடக்கம் அமரருள் உய்க்கும் – ய்க் என இரண்டு மெய்கள்
செல்வத்தைத் தேய்க்கும் படை
அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து
(தேய்ந்து, ஓய்ந்து, ஆராய்ந்து, ஆராய்ச்சி என வருதல் காண்க.)
தாள் சேர்ந்தார்க்கல்லால் – ர்ந் என இரண்டு மெய்கள்
சேர்ந்தார்க்கு – ர்க் என இரண்டு மெய்கள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு
(உயர்ச்சி, தளர்ச்சி, அவர்க்கு, பயிர்ப்பு, உயர்த்தினர் என வருதல் காண்க.)
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – ழ்ச் இரண்டு மெய்கள்
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு – ழ்ந் என இரண்டு மெய்கள்
(மகிழ்ச்சி, நிகழ்ச்சி, சூழ்ச்சி என வருதல் காண்க.)
ஆகவே, ய் ர் ழ் ஆகிய மெய்களை அடுத்துத்தான் இன்னொரு தனி மெய்யெழுத்து தோன்றுமேயன்றி வேறெங்கும் தோன்றாது......!
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீரா மோரா .....கவி. காளமேகத்தின் சிலேடை.....!  😁  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய.........!   🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலிர்க்க வைக்கும் சிலேடைகள்.......!  🙏

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சந்திரோதயம்  · 
Rejoindre
 
Bala Bala  ·   · 
 
 
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா:
(இன்று - 24th Jun - கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம்)
1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார். அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன். சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.
கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது. “நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.
சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது. அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன். அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி. தாராளமான புன்னகை. ‘பெண்டிக்ட் சொல்யூஷன்’ (Benedict Solution) வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான், காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.
“விசு, என்ன ட்யூன் ?”
“அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”
“வாசி! ”
விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார். “பாடிப் பாரு !”
“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !””அடுத்த அடி. ?””தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ?
சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.
பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”
“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!” “சரியா ?”
“Perfect !”
விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி…. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “)
உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.
இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”
“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ?
சீதா — நேர் நேர்;
ஜானகி — நேர்நிரை;
ஜனகா — நிரைநேர்;
வைதேகி — நேர் நேர் நேர் ….
(இது புரிவதற்கு தமிழ் இலக்கணம் சற்றுத் தெரிய வேண்டும். தமிழில் பேசவே / தமிழ் தெரிந்து கொள்ளவே விரும்பாத இன்றைய ஆண்டிராய்ட் தலைமுறையினருக்குப் புரிய வாய்ப்பில்லை)
இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”
மறுநாள் ரிக்கார்டிங்குங்கு கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார். அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .
அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.
அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும், தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையும், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார்…
எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.
( Bala shares.....))
 
Aucune description de photo disponible.
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பேசு என்னும் வார்த்தைக்கு தொல்காப்பியர் கொடுத்துள்ள சொற்கள் பேசு, பகர் (ஆதாரத்துடன் பேசு செப்பு (பதில் தெரிந்து பேசு) கூறு (வரிசைப்படி பேசு) உரை அர்த்தத்துடன் பேசு) நவில் (நயமாகப் பேசு) இயம்பு (இசைபடப் பேசு) பறை (வெளிப்படையாகப் பேசு சாற்று (அங்கீகரித்துப் பேசு)'

"பேசுதல்" என்பதற்கு... இத்தனை அர்த்தங்களா?
தமிழின் பெருமை..... 🙂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பேச்சு ......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதவன் கண்டு பிடிச்சதைத்தாண்டா படிச்சவன் படிக்கிறான்......m .r . ராதா ........கேளுங்கள் நன்றாக இருக்கும்......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin de fleur et texte qui dit ’தமிழின் பெருமை அரும்பு நனை முகை மொக்குள் Thipan Rama முகிழ் மொ மொட்டு போது மலர் பொதும்பர் பொம்மல் செம்மல்’

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, temple et texte qui dit ’ஊருண்டு தாயுண்டு பேருண்டு மனமுண்டு உறவுண்டு அன்புள்ள சுகமுண்டு தந்தைக்கு உற்றார் தாளாத பாசம் பெற்றாரும் உண்டு..உன் உண்டு.. தத்துவம் நீருண்ட தவறென்று மேகங்கள் சொல்லவும் நின்றாடும் ஒளவையின் கயிலையில் நீ தமிழுக்கு வாழ இடமும் உரிமை உண்டு உண்டு.. 24/7’

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de jouet pour enfant, cuillère en bois, harpe et texte qui dit ’தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகள் சில தப்பட் டை Thappaddai முரசு Murasu பறை Parai கொம்பு Kompu மத்தளம் Maththalam நாதசுரம் Nathasuram வீணை Veenai தாளம் Thalam கிடுகிட் டி Kidukiddy தவில் Thavil யாழ் Yari கடம் Kadam உருமி Urumi பம் பம்பை பை Pampai மிருதங்கம் கம் ருதங்க Mirutangam எக்காளம் எக்க Ekalam தப்பு Thappu டுக்கை Udukkai கிலுகிலுப்பை Kilukiluppai நாமுழவு Namulavu புல்லாங்குழல் Pullankulal சங்கு கு ங் Sangu குடமுழா Kudamula மகுடி Mahudi’

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது........!  👍

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாதா? கவலையை விடுங்கள் !
நானும் இப்படித்தான் கத்துக்கிட்டேன் !
நம் அருமையான தமிழ் பாடல்களில் உதாரணத்தோடு உங்களுக்கு :
அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
சினைப்பெயர்:
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
பொருட்பெயர்:
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
இடப்பெயர்:
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!
காலப்பெயர்:
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!
பண்புப்பெயர்:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
தொழில் பெயர்:
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!
இறந்த காலப் பெயரெச்சம்:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!
எதிர்காலப் பெயரெச்சம்:
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?
இடவாகுபெயர்:
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
எதிர்மறைப் பெயரெச்சம்:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
குறிப்புப் பெயரெச்சம்:
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.
வன்றொடர்க் குற்றியலுகரம்:
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
இரண்டாம் வேற்றுமை உருபு:
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.
மூன்றாம் வேற்றுமை உருபு:
உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
பெயர்ப் பயனிலை:
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்...
அவ்ளவுதான்.. நீங்க இன்னைலிருந்து தமிழ் வாத்தியார் .!
  • இது என்னோட பதிவுன்னு சொன்னா.. நம்பவா போறீங்க !😎
  • நீங்க தமிழ் வாத்தியார் ஆவுறதுக்கு சுட்ட பதிவெல்லாம் என்னோட பதிவுன்னு வேண்டியிருக்கு 🥰😍😂
Voir la traduction
Peut être une image de 1 personne et sourire
 
 
 
Toutes les réactions :
176176
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலேடை அணியும் சில பாடல்களும்........!  👍

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலேடை அணியும் சில பாடல்களும்......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கி.வா.ஜ  அவர்களின் நகைச்சுவையுடன் கூடிய சிலேடைகள்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ் எனக்குப் பிடிக்கும்.......!  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாப்பா பாப்பா கதைகேளு, காக்கா நரியின் சீனக் கதை கேளு......!  😂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பேச்சு ..........!  👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.