Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடு தூதர்கள் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகளின் தூதுவர்கள் ரணிலை சந்தித்து பேசியுள்ள அதேவேளை, சீனத்து தூதுவர் புதிய பிரதமர் மகிந்தவை சந்த்தித்து, தனது நாட்டு ஜனாதிபதியின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

image_1540644387-82693684ba.jpg

image_1540644463-47f1d8a57b.jpg

image_1540644375-79948ba888.jpg

மகிந்தவை சந்தித்த முதல் வெளி நாட்டு தூதுவர் சீனத்தூதர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

image_1540651983-0d5101ccfb.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சீன ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீன தூதுவர் ஆ சாங் சுவான், மஹிந்த ராஜபக்ஷவை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சீனத் தூதரக உயர் அதிகாரிகளும் அவருடன் சென்றுள்ளனர்.

Edited by Nathamuni

இலங்கை புதிய பிரதமர்: வாழ்த்து தெரிவித்த சீனாவும், மெளனமாக இருக்கும் பிற நாடுகளும்

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் ஞாயிறு காலை வரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. சமீபத்திய சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக கொழும்பில் உள்ள சுவிசர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், சீனத் தூதுவர் மட்டுமே இதுவரை உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றது குறித்து வெளிநாட்டுத் தூதவர்களைச் சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்துவார் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் நடந்துள்ள மாற்றம் குறித்த சர்வதேச நாடுகளின் எதிர்வினை என்ன என்பது குறித்து பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் நட்பு ரீதியான நாடுகள் கூட இன்னமும் எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லையே. அதற்கான காரணம் என்ன என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மகிந்த சமரசிங்க, ''புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. அதன்பின்னர் வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள். அதுவரை பொறுத்திருப்போம்'' என்று கூறிக்கொண்டு வெளியேறினார்.

மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தாலும், அரசியலமைப்பின் பிரகாரம் ''நானே பிரதமர்'' என ரணில் விக்ரமசிங்க கூறிவருவதுடன், அலரி மாளிகையில் இருந்து வெளியேறவும் மறுத்து வருகிறார்.

_104053474_photo.jpg

வெளிநாட்டுத் தூதுவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சனியன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொல்வதற்கான முயற்சி குறித்து உரிய விசாரணை நடத்தாமை, கொழும்பு துறைமுகத்தின் மேற்குக் கப்பல் தளத்தை இந்தியாவிற்கு தரும் பரிந்துரை நிராகரிக்கப்பட்டமை, பொருளாதாரத்தை வலுப்படுத்திய தவறியமை, ஆகிய காரணிகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமிக்க நேரிட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகள் வாழ்த்து தெரிவிப்பது வழமை என்றாலும், இலங்கையில் நடந்த மாற்றம் வழமைக்கு மாறானது என்பதால் சர்வதேச நாடுகள் இதனை உன்னிப்பாக அவதானித்தே தமது அறிக்கைகளை வெளியிடுவர் என பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் பிபிசி.க்குத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46007901

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி வாலாக்கள் தெரியாதது மாதிரி நடிக்கின்றனரா?


 அல்லது


மகிந்த & சீன போட்ட கேம் இவ்வளவு நாளும் மற்றவர்களை சுற்றிய டெல்லி வாலாக்கலேயே, கேரள நம்பூதிரி மாவியாக்களையே சுற்றி மூச்சடைக்கப்ப பண்ணிவிட்டதா?

3 minutes ago, Kadancha said:

மகிந்த & சீன போட்ட கேம் இவ்வளவு நாளும் மற்றவர்களை சுற்றிய டெல்லி வாலாக்கலேயே, கேரள நம்பூதிரி மாவியாக்களையே சுற்றி மூச்சடைக்கப்ப பண்ணிவிட்டதா?

தமிழின விரோதம், தங்களுக்கு கிடைக்கும் விசேட அன்பளிப்புக்கள் - இந்த இரண்டுமே இந்திய இராஜதந்திர/அரச  அசுரர்களின் பிரதான கவனமாக இருப்பது வழமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.