Jump to content

அன்றொரு நாள் யாழ்ப்பாணத் திறந்தவெளியரங்கில்..

Recommended Posts

80களில் யாழ்ப்பாண திறந்தவெளியரங்கில்.. கே. எஸ். ராஜா - கே. ஜே. ஜேசுதாஸ்- குரல் ஒலித்தது. வலைத்தளம் ஒன்றில் கேட்க்கக் கிடைத்தது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். அந்த நாள் நினைவு வரும்..

http://www.esnips.com/doc/953c366c-80df-4c...jatha-in-Jaffna

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply

ஆகா பிரமாதம். அந்த நாட்களினை என்னவென்று சொல்வது நான் இந்நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அப்ப பெல் பொட்டம்ஸ் என்ற டவுஸர் பிரபல்யமாக இருந்த ஆண்டு. ஓல் படித்துவிட்டு ஏல் முதலாம் ஆண்டு படிக்கும் காலங்கள். சாமட்ட கெமிஸ்ரி, ஞானத்திட்ட, சைவௌந்தியிடம் பிசிக்ஸ், வெக்டர் வேலாயுதம், ஈசன் வேலணை மாஸ்டரிடம் கணிதபாடம்கள் படிப்பினை விட பழைய எம்.ஜி.ஆர் படங்கள் அதைவிட இளையராஜாவின் ஜேசுதாசின், பாலாவின் பாடல்கள் யாழ் பூங்காவில் ஒலிபரப்பாகும் போது எம் காதுகளில் ரீங்காரமிடும் சினிமாப்பாடல்கள். அப்ப பண்ணைக்கடலுக்கு சைக்கிளில் போய் காத்துவேண்டிவிட்டு வரும் காலம். விழமீன் பிடித்த கையோடு வேண்டிக்கொண்டு வந்து உப்புச்சொதி இடியப்பத்துடன் சாப்பிடும் அந்த நாட்கள்.

எனக்கு சுதந்திரம் கிடைத்த நாட்களில் பெல்பொட்டம்ஸும் போட்டு, புது மணிக்கூடு கட்டி, புது ரலி சைக்கிளில் லைட்டுகள், ஊத்தை துடைக்கும் குஞ்சானுகள் கலர் கலரில் டயரில் போட்டு பொலீசுக்கு பயந்து லைட்டும் போட்டுக்கொண்டு திரிந்த காலமைய்யா. லைட்டு இல்லையென்றால் பொலீஸ் காத்தினை துறந்து விட்டு சைக்கிளை தலையில் காவச் சொன்ன நேரம்.

எப்படி ஐயா மறப்பது. காதலிக்க வெளிக்கிட்ட ஆண்டு, கையில காசு புளங்க வெளிக்கிட்ட காலம். பொடியன் ஈ பக்கல்டி போவான் என்று நம்பி எம்மை எப்படியும் திரியுங்கோ என்று சுதந்திரமாக திரிய விட்ட ஆண்டு இந்த புரோகிராம்.

எப்படி அனுபவிச்சிருப்பம். ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். :D<_<

Link to comment
Share on other sites

அந்தக் காலத்திலேயே 1980 ல், யாரோ இந்த நேரடி நிகழ்ச்சியை இவ்வளவு தெளிவாக ஒலிப்பதிவு செய்து, இசைத்தட்டை இவ்வளவு காலமாக பாதுகாத்து வந்துள்ளார்களா? நம்பமுடியவில்லை...

Link to comment
Share on other sites

அருமையாக உள்ளது, பொன்னி இனைப்புக்கு நன்றி

நீங்கள் எல்லாரும் சொல்வதைக் கேட்கச் சந்தோஷமாய் இருக்கிறது. Puli_Pasarai யின் அந்தக்கால நினைவுகள் அருமையிலும் அருமை.

மாப்பிள்ளை.. அந்தக்காலத்தில் ஈச்சமோட்டை றீகல் சவுண்ட் சேவிஸ்காரர் வட்ட மைக்கை கட்டிவிட்டுவிடுவார்கள். எத்தினை மைல்களுக்கும் பாட்டு கேட்கும். இப்போதைய நவீன சவுண்ட் சேவிஸ் எல்லாம் கிட்ட நிக்கேலாது..

நன்றி

<_<:lol:

Link to comment
Share on other sites

மாப்பி 1978, 79 ஆம் ஆண்டுகளில் நியூவிக்கரர்ஸ், ஸ்கைரோஸ் பூபாலசிங்கம் கடைக்கு பக்கத்தில....ரெக்கோட் பண்ணின அல்பா கசட்டுகளில் இன்றும் நான் பழைய பாடல்கள் பதிவுசெய்ததுகளினை வைத்திருக்கிறேன். இன்று எம்.பி3 ல் வராத பாட்டுகள் ஐயாவிடம் இருக்கிறது என்றால் பாருங்கள். அன்று சிட்னி போன நேரம் என்னிடம் ராகம் மியூசிக் உரிமையாளர் சொன்னார் தனக்கு எம். பி3 அடித்து தரமுடியுமோ என்று. அப்படி சார் எமது காலம்.

றிகோ வில ரோல்ஸ், சுபாஸ் கபேயில் புரியாணி, பூபால்சிங்கத்தில் குமுதம், ஆனந்தவிகடன், பாலமித்திரா அதைவிட கப்பி ரெக்ஸில் விதம் விதமான உடுப்புகள். நவீன் சென்ட்டுகள்.

ஆமியும் தெரியாம பூமியும் தெரியாம சைக்கிளில் வலிந்து சரக்குக்கு சைட் அடிச்ச காலம் ....எல்லாம் சரி அதுக்கு வட்டி குட்டியுமாய் சேர்த்து குசினியில் தோசைக்கு மா குளைக்கிறன். வாசிங் மெசின் இருந்தும் கையால வேறு தோய்கணும் ஏன் சீனாக்காரனின் உடுப்பு வாசிங்மெசினில போட்டா பழுதாகிவிடும்.

எமக்கு ஒரு தமிழீழம் பாயில படுத்தாலும் ஒரு தனிசுகம் இல்லையா? பணம் என்னய்யா பணம் அந்த அடிப்படை சுதந்திரம் போயிட்டுது. அப்ப ஒரு நாள் என்னொரு பாடகர் மலேசியா வாசுதேவன் சித்திரா இசைக்கச்சேரி செய்ய வந்தார்கள். ஆனா வாசு நல்லா குடிச்சுப்போட்டு பாடமுடியாம சத்தி வேறு மேடையில எடுக்க வெளிக்கிட்டவர். அட என்ன கண்றாவி என்றா அவர் அப்படி எடுக்க வெளிக்கிட நம்மட சனம் தட்டிச்சினமே ஒரு தட்டு ஏன் அவையள் நினைச்சினம் அவர் படத்தில சிவாஜி வசந்த மாளிகையில குடிமகனே பாடின மாதிரி இவரும் பாடப்போறார் என்று.

இப்படி ஒரு சுவை.....கடலை விக்கிற ஆட்கள், கரம் சுண்டல் தேங்காய், மாங்காய் போட்டு ஆகா மீண்டும் வராது, வராது...வந்தாலும் இப்படி வருமா. <_<

ஐயா.. நீங்கள் சொல்ல சொல்ல கண்ணீர் வருகிறது.. கடந்த காலத்தை நினைக்க..

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

பொன்னி மிகவும் ஒரு அருமையான இணைப்பு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

நான் கேட்க்கலை ஆனா எல்லோரும் நல்லா இருக்கிறத சொல்ல்ரீங்க ரொம்ப நன்றி எல்லோறுக்கும்

Link to comment
Share on other sites

பொன்னி மிகவும் ஒரு அருமையான இணைப்பு மிக்க நன்றி

நன்றி ஜமுனா..நனவிடை தோய்தல் என்று எஸ்.பொ. எழுதியது இதைத்தான்

:icon_idea:

Link to comment
Share on other sites

நன்றி ஜமுனா..நனவிடை தோய்தல் என்று எஸ்.பொ. எழுதியது இதைத்தான்

:icon_idea:

நனவிடை தொய்தல் என்றால் என்ன

:blink:

Link to comment
Share on other sites

நனவிடை தொய்தல் என்றால் என்ன

:icon_idea:

நனவிடை தோய்தல் என்றால் எங்கள் எங்கள் பழைய நினைவுகளில் அமிழ்ந்து போதல்..அதாவது மீள பழைய நினைவுகளை நினத்துக்கொள்ளல்.. எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை (ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்) தன் பழைய நினைவுகளை பல ஆயிரம் பக்கங்களில் "நனவிடை தோய்தல்" என்று நூல் வடிவில் எழுதியிருக்கிறார்... ஜமுனா.,.

:blink:

Link to comment
Share on other sites

சின்னன்ல நாங்கள் சாட்டி கடட்கரைக்கு சென்று உடன் நன்டு வறுத்து, நொங்கு இறக்கி, பன்ங்கள்ளும் அடித்துவிட்டு, இனிப்பான சாட்டித்தண்ணியையும் குடித்து, குளித்து விட்டு வரும் வழியில் நாவற்பழம் புடுங்கிரது, ஈச்சம் பழம் புடுங்கிறது. மண்டதீவுக்க சைக்கிள் ஓடி ஓடி திருஞ்சு எத்தனை லோ லோ பண்ணியிருப்பம்.

எங்கட அப்பர் சோடா பக்ரறி போடுவதற்காக வேண்டிய பெரியகானி இன்றும் அங்கு சாட்டியில் இருக்கிரது. அது ஒரு காலத்தில மாவீரர் குடும்பத்துக்கு இலவசமாக் கொடுப்பேன். ரைம் வரும்போது.

முனியப்பர் கோவிலில பெரிய எட்டு மூலை பட்டம் கட்டி கச்சான் கொறித்தபடி அப்படி பட்டம் விட்ட காலம். ஆமியும் இல்லை பொலீஸும் வராது.

காரைநகர் பீச், சேந்தான் குளத்தில அப்ப காங்கேசன் பக்டறியில ரெயினிங் செய்யேக்க கள்ளு அடிக்கிற்து,

கூவில் கள்ளு குடித்துவிட்டு சைக்கிள் ஓடினா ஒடுற திசைக்கு ஒப்பசிட்டா உங்க பைக் திரும்பும். அப்படி ஒரு டேஸ்டான் கள்ளு. கூழ் காச்சி அடிக்கோணும். அதோட எம். ஜி.ஆர் பாட்டு வேற எடுத்து விட்டு கள்ளுக்கொட்டிலே என் முன்னல் குந்தியிருந்து கை தட்டி ரசிச்ச கால்ம்.

ஆகா எல்லாம் எனி வருமா?

Link to comment
Share on other sites

அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பொண்ணியின்,

செல்வனே, செல்வனே, செல்வனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, இல்லையே

அது ஏன் செல்வனே என் செல்வனே.

பாடம் படிப்பு கிறிக்கட் ஆட்டம் அதைவிட வெறு கூத்து,

இதைத்தவிர வேறு எதைக்கண்டோம்.

புத்தகம் பையிலே புத்தியோ தன் பாட்டிலே,

பள்ளியை விட்டதும் ஒதுங்குவோம் கந்தையாவின் கடையில. :lol:

கடமையும் வந்தது, சிறைவாழ்க்கை என்ர கல்யானமும் வந்தது,

பாசம் என்றும், நேசம் என்றும்,

வீடு என்ரும் மனைவி பில்ளை என்றும்,

நூறு பந்தம் பிரச்சனைகள் வந்த பின்பும் தேடுகின்ற அந்த பழைய அமைதி என்கே? :lol:

பிள்ளைகளும் வளர்ந்தன அப்பன் போன வழியில் போக வெளிக்கிட்டன,

அனுபவம் என்றும், புத்திமதி என்றும்,

நூறு கதைகள் நாங்கள் சொல்லி திருத்த வேண்டிய காலமிது, காலமிது

எம்மட சுயனல வாழ்க்கையிது, போலி வாழ்க்கையிது.... :lol:

அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பொண்ணியின்,

செல்வனே, செல்வனே, செல்வனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, இல்லையே

அது ஏன் செல்வனே என் செல்வனே. :P

Link to comment
Share on other sites

நனவிடை தோய்தல் என்றால் எங்கள் எங்கள் பழைய நினைவுகளில் அமிழ்ந்து போதல்..அதாவது மீள பழைய நினைவுகளை நினத்துக்கொள்ளல்.. எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை (ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்) தன் பழைய நினைவுகளை பல ஆயிரம் பக்கங்களில் "நனவிடை தோய்தல்" என்று நூல் வடிவில் எழுதியிருக்கிறார்... ஜமுனா.,.

:rolleyes:

தகவலுக்கு நன்றி

:unsure:

Link to comment
Share on other sites

அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பொண்ணியின்,

செல்வனே, செல்வனே, செல்வனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, இல்லையே

அது ஏன் செல்வனே என் செல்வனே.

பாடம் படிப்பு கிறிக்கட் ஆட்டம் அதைவிட வெறு கூத்து,

இதைத்தவிர வேறு எதைக்கண்டோம்.

புத்தகம் பையிலே புத்தியோ தன் பாட்டிலே,

பள்ளியை விட்டதும் ஒதுங்குவோம் கந்தையாவின் கடையில. :rolleyes:

கடமையும் வந்தது, சிறைவாழ்க்கை என்ர கல்யானமும் வந்தது,

பாசம் என்றும், நேசம் என்றும்,

வீடு என்ரும் மனைவி பில்ளை என்றும்,

நூறு பந்தம் பிரச்சனைகள் வந்த பின்பும் தேடுகின்ற அந்த பழைய அமைதி என்கே? :)

பிள்ளைகளும் வளர்ந்தன அப்பன் போன வழியில் போக வெளிக்கிட்டன,

அனுபவம் என்றும், புத்திமதி என்றும்,

நூறு கதைகள் நாங்கள் சொல்லி திருத்த வேண்டிய காலமிது, காலமிது

எம்மட சுயனல வாழ்க்கையிது, போலி வாழ்க்கையிது.... :unsure:

அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே பொண்ணியின்,

செல்வனே, செல்வனே, செல்வனே

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, இல்லையே

அது ஏன் செல்வனே என் செல்வனே. :P

நன்றி puli_pasarai.. என்னையும் உங்கள் கவிதையில் சேர்த்துக் கொண்டதிற்கு.. கவிதை மிக நன்றாக இருக்கிறது. உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது. உங்கள் நினைவுகளை நூல் வடிவில் பதிவு செய்யலாம். சுவையாக இருக்கும்.

மீண்டும் நன்றி

:)

Link to comment
Share on other sites

புலிமாமா என்ன பற்றியும் ஒரு பாட்டு பாடும்

Link to comment
Share on other sites

மகராஜா ஒரு மகராணி, அந்த இருவருக்கும் இந்த சுட்டி, ஜமுணா பொன்ணு ராணி,

ஜமுணா என்ர, இந்த சின்ன பொண்ணு, கங்காரு தேசத்தில இருந்து கருத்தாட வருவாவாம்,

புத்தம் புதிய, துப்பாக்கியோட ,சுடாம வெருட்டுவாவாம்,

கோபம் வந்தா, பூலாந்தேவி மாதிரி கொதிச்சு விடமாட்டா,

ஆனா நியாயம் இருந்தா, எண்டைக்குமே போசம் பண்ண மாட்டா!

மகராஜா ஒரு மகராணி, அந்த இருவருக்கும் இந்த சுட்டி ஜமுணா பொன்ணு ராணி, :lol:

Link to comment
Share on other sites

ஜை புலிமாமா என்டா புலி மாமா தான் பாட்டு சூப்பர் த ங் கி யூ புலி மாமா

:blink::mellow::blink: :P :D

Link to comment
Share on other sites

ஜை புலிமாமா என்டா புலி மாமா தான் பாட்டு சூப்பர் த ங் கி யூ புலி மாமா

:lol::lol::lol: :P :lol:

ஜமுனா நீங்களும் பாட்டுடைத் தலைவன்/தலைவி ஆகிவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்

:lol:

Link to comment
Share on other sites

ஜமுனா நீங்களும் பாட்டுடைத் தலைவன்/தலைவி ஆகிவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்

:rolleyes:

நன்றி பொன்னி

:P :D:lol:

Link to comment
Share on other sites

மகராஜா ஒரு மகராணி, அந்த இருவருக்கும் இந்த சுட்டி, ஜமுணா பொன்ணு ராணி,

ஜமுணா என்ர, இந்த சின்ன பொண்ணு, கங்காரு தேசத்தில இருந்து கருத்தாட வருவாவாம்,

புத்தம் புதிய, துப்பாக்கியோட ,சுடாம வெருட்டுவாவாம்,

கோபம் வந்தா, பூலாந்தேவி மாதிரி கொதிச்சு விடமாட்டா,

ஆனா நியாயம் இருந்தா, எண்டைக்குமே போசம் பண்ண மாட்டா!

மகராஜா ஒரு மகராணி, அந்த இருவருக்கும் இந்த சுட்டி ஜமுணா பொன்ணு ராணி, :lol:

புலிமாமா அப்போ எனக்கு பாட்டு இல்லையா............? :lol:

Link to comment
Share on other sites

வானுயர்ந்த யாழ் கள சோலையிலே,

வர்ண ஜாலமாய் நீ நடந்த பாதையிலே,

மழைத்துளிகள் போல் உறுப்பினர்கள் விரிந்திருக்கு,

வண்ண மலர்களாய் நீ ஆடி வந்தாய் என்னை பாடவைத்தாய்!

பாடுகின்றேன் உந்தன் பாதைகளை, நீ பவனி வந்த கோலங்களை!

வர்ண நிறன் ஏழு எனறாய், அதினிலிலும் மனிதருக்கும் ஏழு நிறங்கள் என்றாய்.

கோபம் ஒன்றை நீ அறியாய், நானோ அதில் முற்றாய் மூழ்கிவிட்டேன்!

உன் மனதில் தான் எத்தனை வண்ண நிறம், எண்ண எண்ண இனிக்குமே அந்த நிறம்,

ஜானகியை மணம் செய்ய இரானம் வளைத்த வில்லும் நீயோ,

அல்ல போரினை முடிக்கவந்த பார்த்தீபன் தான் இந்த வானவில்லோ!!!.

வணங்குகிறேன் உங்கள் முன்னே,

மறுபிறவி எனக்கில்லை என்று,

என் ஜாதகத்தில் இருந்த துண்டு,

மானிட நாய் பிறந்து விட்டேன் கோபம் என்ற கொடிய புயலில் மீது,

அப்பன் மேல் ஏன் தானோ சத்தியம் வேறு செய்து விட்டேன்,

கோபன் இன்றித்தான் வருவேன் எனி,

இதை மனதிலே வைத்து தான் விலகுகிறேன்.

வாழ்க களம், வளர்க தமிழ் என்று வாழ்த்தியுமே விடை பெறுகின்றேன் சில காலம்.!!! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் திரைப் படப்பாடல்களை வசனங்களை மாற்றி எழுதும் புலிப்பாசறையின் வசனங்கள் நன்றாகவும், ரசிக்கத்தக்கனவையாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள் புலிப்பாசறை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.