Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்கார் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சர்கார்
நடிகர் விஜய்
நடிகை கீர்த்தி சுரேஷ்
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்
இசை ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு கிரிஷ் கங்காதரன்
 
 
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்பேட்டில் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள்.
 
முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவின் ஆட்கள் தான் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை விஜய் அறிந்துக் கொள்கிறார். மேலும் பலருடைய ஓட்டுகளும் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதை ஏன் மக்கள் கேட்கவில்லை என்று விஜய் ஆவேசப்படுகிறார். 
201811061127140977_1_Sarkar-3._L_styvpf.jpg
 
 
விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வழக்கு தொடர, பழ.கருப்பையாவால் முதலமைச்சர் பதவிக்கு போகமுடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் பழ.கருப்பையா விஜய்யை பழிவாங்க நினைக்கிறார். ஆனால், விஜய்யோ பழ.கருப்பையாவை எதிர்த்து தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த நினைக்கிறார்.
 
இறுதியில், விஜய்யை பழ.கருப்பையா பழிவாங்கினாரா? பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
துறுதுறுவென இருக்கும் மிகவும் இளமையான விஜய்யை இப்படத்தில் பார்க்க முடிகிறது. நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கள்ள ஓட்டு போட்டவுடன் மக்களுடன் பேசுவது, பழ.கருப்பையாவுடன் நேருக்கு நேர் பேசும் காட்சிகள் விசில் பறக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிளரவைத்திருக்கிறார்.
 
201811061127140977_2_Sarkar-22._L_styvpf
 
நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்யை பார்த்தவுடன் காதல் வசப்படுவது, அவருடன் பயணிப்பது என அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். பழ.கருப்பையாவிற்கு மகளாக வரும் இவர், தந்தைக்கு அறிவுரை கூறுவது, விஜய்யை எதிர்ப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். 
முதலமைச்சராக வரும் பழ.கருப்பையாவின் நடிப்பு அபாரம். மிகவும் சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். இவருக்கு உதவியாளராக வரும் ராதாரவி, விஜய்யை தூண்டி விடுவது, பின்னர் அவர் யார் என்று தெரிந்தவுடன் பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார்.
 
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கள்ள ஓட்டு விவகாரம், கந்து வட்டி பிரச்சனை என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். யாரை வைத்து என்ன சொன்னால் எப்படி படம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர். விஜய்யிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. 
 
201811061127140977_3_Sarkar-5._L_styvpf.
 
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவுடன் பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய்யை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார் கிரீஷ். பல இடங்களில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.
 
மொத்தத்தில் ‘சர்கார்’ நின்னு ஜெயிப்பான். 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: சர்கார்

உதிரன்சென்னை
downloadjfif

கார்ப்பரேட் உலகின் நம்பர் ஒன்னாக வலம் வருபவர் ஜி.எல். சிஇஓ சுந்தர் ராமசாமி (விஜய்). இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். விஜய்யின் வாக்கு இன்னொருவரால் கள்ள ஓட்டாகப் போடப்பட்டது தெரிந்ததும் அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49 (பி) பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி அமைக்கவும் உத்தரவிடுகிறது. இதனிடையே விஜய்க்கு வழக்கு விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தங்கள் ஓட்டும் கள்ள ஓட்டாகப் போடப்பட்டதால், எங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர். இதனை ஏற்ற நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் மறுதேர்தல் நடத்த உத்தரவிடுகிறது.

இதனால் அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் மாசிலாமணி (பழ.கருப்பையா) காலை 8 மணிக்கே பதவி ஏற்க அவசரமாக ஆயத்தமாகிறார். ஆனால், பதவியேற்பு விழா பாதியிலேயே முடிய, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பழ.கருப்பையாவை எதிர்த்து விஜய் அதே தொகுதியில் களமிறங்குவதாக சபதமிடுகிறார். அந்த சபதம் என்ன ஆனது, பழ.கருப்பையா வென்றாரா, ஆட்சியமைத்தது யார், ஜி.எல். சிஇஓ விஜய் ஏன் வாக்களிப்பதில் அவ்வளவு தீவிரம் காட்டுகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

தன் வாக்குக்காகப் போராடும் இளைஞன் ஒருவன் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் போராடினால் என்ன ஆகும் என்ற சுவாரஸ்ய ஒன்லைனைப் பிடித்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

படம் முழுக்க விஜய்யின் ராஜ்ஜியம்தான். ஸ்டைல், மாஸ், வசன வெளிப்பாடு, சண்டைக்காட்சிகள், நடனம் என்று எல்லாவற்றிலும் ஒரு படி மேலே போய் அசத்தி இருக்கிறார். விஜய்யின் கோபமும், ஆவேசமும் இதில் கொஞ்சம் தூக்கல்தான். ஆனால், அந்த உணர்வுகள்தான் விஜய்யை இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறது. தனி ஒருவனாக விஜய் 'சர்கார்' படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார். அலுப்பூட்டாமல் படம் பார்க்க விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸே முழுமுதல் காரணம்.

ஓ.எம்.ஜி பொண்ணு பாடலில் மட்டும் டூயட் ஆடும் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே பாவம். விஜய்யுடன் ஒரு செட் பிராபர்ட்டி போல வந்து போகிறார். யோகி பாபுவுக்கும் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. பாட்டுக்கான லீட் கொடுக்கவே பயன்பட்டிருக்கிறார்.

ராதாரவி தனக்கே உரிய தேர்ந்த நடிப்பில் அசால்ட்டாய் ஸ்கோர் செய்கிறார். விஜய்யை மிஞ்சும் அளவுக்கு அநாயசமாகப் பேசிக் கவர்கிறார். பழ.கருப்பையா பக்குவமான நடிப்பில் மிளிர்கிறார்.

வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம். தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

துளசி, கல்யாணி, பிரேம், லிவிங்ஸ்டன், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் எனப் பலரும் ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள்.

க்ரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். அமெரிக்கா, சென்னையின் அழகையும், ஆயிரக்கணக்கான மக்களையும் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். அறிமுகப் பாடலான ஏவுகணை தேவையே இல்லாத ஆணி. சிம்டாங்காரன் பாடலில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பாடல்கள் கதையோட்டத்துக்கு வேகத்தடையாகவே இருந்தன.

''அவன் கார்ப்பரேட் கிரிமினல்...நான் கருவுலயே கிரிமினல்'', ''அஸ்தியைக் கரைக்குற கடல்ல அப்பாவைக் கரைச்சோம்'' உள்ளிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்- ஜெயமோகனின் வசனங்கள் மனதில் பதிகின்றன.

ஒரு விரல் புரட்சியாக தனக்காகப் போராடும் விஜய், தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கச் சொல்வது, மறு தேர்தலுக்குக் காரணியாய் அமைவது, தானே வேட்பாளராகக் களத்தில் குதிப்பது எல்லாம் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் அம்சங்களாக உள்ளன. 234 தொகுதிகளிலும் போட்டி என்பதும் திரைக்கதை நகர்வுக்கு சரியான உத்திதான். அதில் பியூஷ்மனுஷ், சபரிமாலா, பேராசிரியை சரஸ்வதி என்று நிகழ்கால ஆளுமைகளை, சமூக ஆர்வலர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் சரியான உத்தி.

நெல்லை தீக்குளிப்பு சம்பவம், கண்டெய்னர் பணம் ஆகியவையும் திரைக்கதையின் பொருத்தமான இடத்தில் கோக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு, வெள்ள மீட்பு என்று நடப்பு சம்பவங்கள் கைத்தட்டலுக்காகவே காட்சிகளாகவும், வசனங்களாகவும் அமைத்திருப்பது ஒரு கட்டத்தில் சோர்வை வரவழைக்கிறது. அதுவும் கழகம் இணையும் விழாவில் நடக்கும் அசம்பாவிதங்கள், அடுத்தடுத்து மாறும் அரசியல் காட்சிகள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பை நம்பியே மாற்றம் விதைக்க நினைப்பது ஆகியவற்றில் நம்பகத்தன்மை காணாமல் போய் செயற்கை மட்டுமே மிஞ்சுவதால் இரண்டாம் பாதியில் படத்துடன் ஒட்ட முடியவில்லை.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால் குறியீடுகள் மூலம் சமகால அரசியலை நினைவுகூர்ந்த விதத்தில் விஜய்யின் ‘சர்கார்’ ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் படமாக உள்ளது.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25433239.ece

ஒரு முறை பார்க்கலாம்..விஜய் க்காக மட்டும்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வில்லிக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்திருந்தால் என்ன தவறு? பழ. கருப்பையா கேள்வி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.