Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்- வர்த்தக சமூகம்

 

இலங்கை பாராளுமன்றத்தில் இன்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருந்தது என இலங்கையின் வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் உட்பட பல வர்த்தக அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன

இலங்கையின் அரசியல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம் என வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மிக மோசமான ஸ்திரதன்மையின்மையை ஏற்படுத்தியுள்ளன இதனை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது எனவும் வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது அபிவிருத்தியை பாதிக்கும் இலங்கையின் சமூக பொருளாதார நிலைமைகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

paril1.jpg

இலங்கையில் முழுநிர்வாகமும் முடங்கியுள்ளது அரச அலுவலகங்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் செயல் இழந்துள்ளன இதன் காரணமாக பாதிக்கப்படப்போகின்றவர்கள் இந்த நாட்டின் மக்களே என வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களே இதுவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமானவை எனவர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

http://www.virakesari.lk/article/44572

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான தமிழ் மக்களை இனவழிப்பு செய்யும்போது வராத வெட்க்கம் இப்ப வந்திருக்கு இனவாத சிங்களவர்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வர்த்தக சமூகத்தில்   இருப்பவர்கள் பலபேர் முன்னுக்கு ஓடும் குதிரையில் பணத்தை வாரி இறைத்தவர்களாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாத்தியார் said:

இந்த வர்த்தக சமூகத்தில்   இருப்பவர்கள் பலபேர் முன்னுக்கு ஓடும் குதிரையில் பணத்தை வாரி இறைத்தவர்களாக இருப்பார்கள்.

அநேகமானோர் ரணில் கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

அநேகமானோர் ரணில் கூட்டம் .

கடந்த தேர்தலில் இந்த நரிக்கலர் குதிரைதான் முன்னுக்கு ஓடியது :91_thumbsup:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.