Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியை இன்று சந்திக்கிறார் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை இன்று சந்திக்கிறார் ரணில்

 

ranil-wickramasinghe-maithripala-sirisenசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்தே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இருக்கவில்லை. அவர் பொலன்னறுவ சென்றிருந்ததால் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இன்று மாலை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், ரணில் விக்கிரமசிங்க, ஏனைய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுள்ளார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை சிறிலங்கா அதிபர் நிராகரித்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் நேரடியாகச் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/11/18/news/34662

 

ஸ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் : இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த மஹிந்த, மைத்திரி மற்றும் ரணில் கூட்டம்

Image

 

 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வை காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

தமது தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதை இதன்போது எடுத்துக் கூறியதாக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் வருகைதந்து அதனை நிரூபித்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதியிடம் கூறியதாக மற்றுமொரு ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

எனினும் இந்த விடயத்தை தாம் தெரிவிக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகம் வெறிச் சோடிக் காணப்பட்டதாகவும் அஜித் பீ பெரேரா மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை வகித்ததாக ஆளும் தரப்பைச் சேர்ந்த விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் தமக்குள்ள பெரும்பான்மையை நேரடியாக நிரூபிப்பதாக அஜித் பீ பெரேரா கூறியமை குறித்து பதில் அளித்த விமல் வீரவன்ச, அதற்கான நேரத்தை ஜனாதிபதி வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இணைப்பு 01

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மூல காரணமான மூவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நல்லாட்சி அரசாங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி குழுக் கூட்டத்திலேயே இவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சர்வ கட்சி குழுவின் சந்திப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் புறக்கணித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரினது அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை என நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இன்று நடைபெற்ற சர்வ கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பு என்ற அடிப்படையில் ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்க மாட்டார் என சபாநாயகரின் அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை சபாநாயகரைப் பின்பற்றி, மக்கள் விடுதலை முன்னணியும் இந்த சந்திப்பிரல் கலந்துக் கொள்ளாது என ஜே.வி.பி இன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பாளி என மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதியே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்க்க வேண்டியவர் என்ற அடிப்படையில் அவருடன் கலந்துரையாடுவதற்கு எதுவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

 

 

https://www.ibctamil.com/politics/80/109419?ref=bre-news

 

இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்: இணக்கமின்றி முடிந்த அனைத்து கட்சி கூட்டம்

_104391225_gettyimages-953909072.jpg

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்திருந்தார்.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணித்திருந்தது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்று கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினரிடம் தெரிவித்திருந்ததாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

_104391227_gettyimages-1051872648.jpg

அவ்வாறு நிலையியற் கட்டளையின் பிரகாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் எனவும் இந்த சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் தரப்பினர் கூறியதாக விமல் வீரவங்க குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே கருத்துகளை பெருமளவில் முன்வைத்திருந்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச இதன்போது குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இதேவேளை, 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அவர்களின் ஆதரவுக் கடிதங்களையும் எடுத்துக்கொண்டு, தாம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்து, தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர், ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

_104391229_gettyimages-955245960.jpg

ஐக்கிய தேசியக் கட்சியினால் இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பதிலை இன்றைய சந்திப்பில் வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை 10 மணிக்கு முன்னர் பதிலொன்றை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமக்குள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் மீண்டும் நாளை பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன், நாளைய தினம் அமைதியான முறையில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அனைத்து கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46255595

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.