Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

2s9uj2c.jpg

கல்லூரியில் படிக்கும்போது 'விடுதி நாள்' (Hostel Day)என்றொரு விழா ஒவ்வொரு வருடமும் எடுப்பது வழக்கம். அனைத்து ஐந்து வருட மாணவர்களும் உற்சாகமுடன் பங்கெடுத்து விடுதியே ஆட்டம், பாட்டம், விருந்து, இசை நிகழ்ச்சி, கொண்டாட்டமென 'தூள்' பறக்கும்..

70 களின் இறுதியில் பிரசித்திபெற்ற கிழேயுள்ள பாடலான "ஒன் வே டிக்கட்" One Way Ticket (Eruption)அப்பொழுதும் விடுதியின் திறந்தவெளி அரங்கத்தில் இம்மாதிரியே பாடப்பட்டது.. micro.gif

சுற்றி நின்று கைதட்டி ரசித்தவர்களில் நானும் ஒருவன்..! vil-music.gif

'பழைய நினைப்புடா பேரான்டி' என்பது போல இப்பொழுது கேட்டாலும் என் நாளங்களில்  புத்துணர்ச்சி!  

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Flashing Update:

 

இந்த "ஒன் வே டிக்கட் (One way Ticket)" பாடல் எந்தளவிற்கு அப்பொழுது பிரபலம் என்பதற்குச் சான்று இந்தக்காணொளி..:)

 

"அலைகள் ஓய்வதில்லை" படத்தில், கடற்கரை மணலில் அப்பொழுது பிரசித்தி பெற்ற காசட் ரெக்கார்டர், நேசனல் பனாசோனிக் 443 (National Panasonic RQ-443) என்ற மாடல் வழியாக "ஒன் வே டிக்கட்" பாடல் ஒலிப்பதாகவும், கார்த்திக் குழுவினர் அப்பாடலுக்கு ஆடி வருவதாககவும்,  இயக்குநர் பாரதிராஜா காட்சிப்படுத்தியிருப்பார்..

நீங்களும் நினைவுபடுத்தி பாருங்களேன்..! micro.gif&key=c11e08aaeb416eafd85ec48cfb

 

 

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது.. 1978´ம் ஆண்டு இறுதிகளில் வந்த பாடல் என எண்ணுகின்றேன்.
அப்போ... உள்ள இளைஞர்களை  கிறங்க வைத்த அருமையான பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

மேலே உள்ள பாடலும் அபாவின் வன் வே ரிக்கற்றும் ஒரே நேரத்தில் வந்து ஆங்கிலம் என்றால் குதிக்கால் குண்டியில் பட ஓட்டமெடுக்கும் எங்களை எல்லாம் முணுமுணுக்க வைத்தது.

இன்னமும் ஏதாவது ஆங்கிலப் பாட்டு கதை வந்தால் இந்த இரண்டு பாட்டையும் சொல்லி பிள்ளைகள் ஏளனப்படுத்துவார்கள்.
எதைச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்துவதென்று சும்மாவே இருந்துடுவேன்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ராமையா ஓகோ

இதுவரை கேளாதவர்கள் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.

Edited by ஈழப்பிரியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

images?q=tbn:ANd9GcRwrgh7fZ-3u46R4m0U6KQ   220px-Boney_M._-_Love_Sale_Sale_(US).jpg

 

இந்த அபா(ABBA) இசைக்குழு வந்த அதே சமயத்தில் போனியம்(Boney M) என்ற இசைக்குழு ஜெர்மனியிலிருந்து மிகப்பிரபலமானது.. 

அதிலுள்ள இசையையை வைத்து இந்தி மற்றும் தமிழிலும் காப்பியடித்து பாடல் இசை வெளியிட்டார்கள்..!:)

அந்த தமிழ்ப் பாடல் என்னவென்று போனியம்  "ரஸ்புட்டீன் (Rusputin)" பாடலைக் கேட்டால் கண்டுபிடித்துவிடுவீர்கள்..!

 

 

Edited by ராசவன்னியன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது இப்போ வெடித்து கிளம்பி இருந்தாலும் - பலகாலமாக நடப்பதுதான். சந்திரிகா காலத்தில் சுரேஷ் மட்டகளப்பில் ஒரு பார் அனுமதியை வாங்கி கொடுத்தார். அதே போல் எரி பொருள் நிலைய அனுமதிகளிலும் இது நடக்கும். உங்களை போலவே நானும் சிவாஜி ரஜனிகாந்த் போல சில “முதலாளிதுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு சிலரின் வாழ்வையாவது உயர்த்தலாம் என நம்பி போய், பின் நொந்த ஆள்தான்”.  எனது முயற்சிக்கு பார் லைசன்ஸ் தேவைப்படவில்லை, ஆனால் பிரதேச சபை அனுமதி தேவைப்பட்டது. அதை எடுக்கும் சமயம் - குடிவைகளை குடிக்க (எடுத்துப்போக) உள்ள லைசன்ஸ் எடுத்து தரலாம் என சிலர் அணுகினர். ஆர்வம் காட்டவில்லை ஆனால் விடயங்களை கேட்டறிந்து கொண்டேன். இதைத்தான் விக்கி தன் நியாயமாக சொல்கிறார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாக. ஆனால் இதில் ஒத்துகொள்ள மறுத்ததை விட பாரிய பிழைகள் உள்ளன. குறிப்பாக வலிந்து எமது சமூகத்தை போதைக்குள் தள்ளும் சூழலில்.
    • யாழ் களத்துக்கு வருவது அடியையும். துனியையும்  தெரிந்து கொள்ள தான்   மாறாக போய்  படுப்பதற்க்கு இல்லை     உங்களுக்கு அடியும் துனியும் தெரியும் என்றால்  தயவுசெய்து எழுதுங்கள் 🙏.   
    • ஜீவனை வென்ற சிறீதரன்! December 6, 2024 6:13 pm அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமானை 11 இற்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தரப்பில் காஸ் சிலிண்ட.ர் சார்பில் தெரிவான தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும், ரோஹித அபேகுணவர்தன எம்.பியும் இந்தத் தேர்வில் பங்குபற்றாத நிலையில் சிறீதரன் வெற்றி பெற்றிருக்கின்றார். இதேசமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற விவகாரக் குழுவுக்குப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புக்கும் தம்மைத் தெரிவு செய்ய சிறீதரன் விருப்பம் தெரிவித்த போதிலும், அந்தப் பொறுப்பைச் சாணக்கியனுக்கு வழங்குவதென தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாக அறியவந்தது.   https://oruvan.com/sridharan-the-conqueror-of-jeevan/
    • இனி மெண்டிஸ் குடிக்க ஏலாது போலை இருக்கே. 😲 இங்குள்ள, தமிழ் கடைகளில் உள்ள மெண்டிஸ் போத்திலை எல்லாம்,  வாங்கி... பதுக்கி வைக்க வேணும். 😂 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.