Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் முதன்முறையாக விசாலமான அரும்பொருட் காட்சியகம்: சிவபூமி அறக்கட்டளையின் மற்றொரு சிறப்புப் பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் முதன்முறையாக விசாலமான அரும்பொருட் காட்சியகம்: சிவபூமி அறக்கட்டளையின் மற்றொரு சிறப்புப் பணி

 
  

யாழ்.நாவற்குழியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவாசக அரண்மனைக்கு எதிர்ப்பக்கத்தில் மூன்று மாடிகள் கொண்டதாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால்
சிவபூமி அரும்பொருட் காட்சியகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த அரும்பொருட் காட்சியகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை(23-11-2018) பிற்பகல் இடம்பெற்றது.

சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி- ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மனித நேய அமைப்பின் தலைவரும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பொருளாளருமான திருமதி-அபிராமி கைலாசபிள்ளை பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டார்.

46691873_2126516097414356_87026536636313

சிவபூமி அரும்பொருட் காட்சியகத்தின் பிரதான கட்டடத்துக்கான அடிக்கல்லை பிரதம விருந்தினர் திருமதி-அபிராமி கைலாசபிள்ளை கைகளால் பெற்று செஞ்சொற் செல்வர் கலாநிதி- ஆறு.திருமுருகன் சம்பிராதயபூர்வமாக நாட்டி வைத்தார்.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் அதிபர் திருமதி- கலைவாணி குகதாஸ், கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் ஆசிரியர்கள், குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் பொறுப்பாளர், சிவபூமி அறக்கட்டளையின் செயலாளர், ஆன்மீக எழுத்தாளர் ஊரெழு அ.கனகசூரியர், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Sivapoomi.jpg

எதிர்வரும்- 2019 ஆம் ஆண்டின் முற்பகுதி முதல் சிவபூமி அரும்பொருட் காட்சியகம் செயற்பட ஆரம்பிக்குமென செஞ்சொற் செல்வர் கலாநிதி- ஆறு.திருமுருகன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதற்கமைய புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடத்துக்கு அருகில் சிவபூமி அரும்பொருட் காட்சியகம் திறந்து வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

46519904_2126515760747723_59646438767937

பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி அரும்பொருட் காட்சியகத்தின் மாடிக் கட்டடத்துக்கான நிதிப் பங்களிப்பினை திருமதி- அபிராமி கைலாசபிள்ளையின் குடும்பத்தினர் வழங்குகின்றனர்.

யாழ்ப்பாணப் பாரம்பரியப் பண்பாடு தொடர்பிலும், எமது முன்னோர்களின் வாழ்க்கை முறை குறித்தும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சிவபூமி அரும்பொருட் காட்சியகம் விளங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

20181123_170546.jpg

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ-ரவிசாந்-}

http://www.jaffnavision.com/2018/11/24/sivapoomi-museum-jaffna/?fbclid=IwAR2tg4ZPYaqieOPkUn8UjOAEQF4_1BVOQRj886n_hHJKyMuB-waEJcp7vyg

நல்ல முயற்சி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.