Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் இரத்தம் தோய்ந்த கரங்களுக்கு எம்மவரொருவர் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார் - கி. துரைராசசிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இரத்தம் தோய்ந்த கரங்களுக்கு எம்மவரொருவர் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்

_17705_1543316915_8DEFC778-F4B4-44EB-AADE-DCCD5CC10547.jpeg

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என தொடங்குபவர் 140 ஆயிரம் எமது உறவுகளை கொன்று குவித்த அரசுடன் இணைந்து எமது மக்களின் இரத்தம் தோய்ந்த அந்தக் கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார் என இலங்கைத் தரழரசுக் கடசியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இரத்தம் தோய்ந்த கரத்தை முத்தமிடுவதற்காகவா எங்களுடைய கரங்களால் உங்களுக்கு வாக்களித்தோம் என்பதை எமது மக்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு - செங்கலடி, பதுளை வீதியில் கொடுவாமடு கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடரந்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் தமிழர்களுடைய அரசியல் என்பது வரலாற்றுடன் கூடிய அரசியலாகும். நாம் அபிவிருத்தியை மாத்திரம் நோக்கியவர்களாக மேலாதிக்க சிங்களவர்களுடன் இணைந்து செயற்பட்டிருந்தோமானால் சிலாபம், கதிர்காமம், காலி போன்ற பிரதேசங்கள் போன்று எமது வடக்கு, கிழக்கு பிரதேசங்களும் சென்றிருக்கும்.

சிலாபத்தில் தமிழர்கள் இந்துக்கள் இருந்த காரணத்தினால் தான் முன்னேஸ்வரன் என்ற சிவன் ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஆலயமும், தமிழர்களின் எச்சசொச்சங்களும் மாத்திரமே இருக்கின்றன. சிலாபம் பிரதேசத்தில் 36 கிராமங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் எங்கே போய்விட்டார்கள்.

அங்கிருந்த அரசியல் தலைவர்கள் பெரும்பான்மை இனத்தவருடன் இணைந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியை மாத்திரமாக கொண்டு செயற்பட்டதன் காரணமாக பிரதேசம் அபிவிருத்தியடைந்துள்ளது. வாய்ப்புக்கள் வசதிகள் அங்கு உள்ளன. ஆனால் எங்களுடைய மொழி, இனம் மற்றும் கலாசாரம் அழிந்துவிட்டது. முன்னேஸ்வர ஆலயம் மாத்திரம் மிஞ்சியுள்ளது.

கதிர்காமத்திலே முருகன் இருக்கின்றார் கதிர்காம முருகனை வணங்கிய தமிழன் எங்கே? அவர்கள் ஏன் அழிந்தார்கள் போர்வந்து அழியவில்லை. அவர்கள் தங்களை மறந்தார்கள் வெறுமனே அபிவிருத்தியை மாத்திரம் நினைத்து அங்குள்ள சிங்கள பெரும் பான்மையுடன் இணைந்து தங்களுடைய நிலைகளை இழந்து காணாமல் ஆகிவிட்டார்கள் இதே போன்று காலியிலும் இந்த நிலமைதான் இருந்தது.

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்குரிய இனத்துக்கோ, மொழிக்கோ, நிலத்துக்கோ ஏற்ற திட்டங்களை முன்மொழியமாட்டார்கள் எனவே 1920ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு இந்த நாட்டில் அரசியல் தேவை என எமது தலைவர்கள் நினைத்தார்கள்.

சிங்களவர்கள் அவர்களுடைய இனத்தவரை எமது மண்ணில் குடியேற்றுவதற்கே முயற்சிப்பார்கள். அம்பாறை, திருகோணமலையில் எமது நிலங்களை இழந்துள்ளோம்.

நாங்கள் விழிப்பாக இல்லாமல் பெரும் தேசியத்தோடு சேர்ந்து அபிவிருத்திக்காக அலைந்து திரிந்ததன் காரணமாக 10 தலை இராவணன் ஆட்சியிலிருந்த மண்ணில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிரசுக் கட்சியிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சி மாறி அரசியல் செய்து அபிவிருத்தி செய்ய முயற்சித்தவர்கள் உள்ளார்கள். அவர்களுடைய நிலையை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யார் தடம்புரண்டு செல்கின்றாரோ அப்போது அவர்களை எமது மக்கள் அடையாளம் கண்டுவிடுவார்கள்.

எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என தனது உரையினை ஆரம்பிக்கும் போது ஒருவர் கூறித் தொடங்குவார் இப்போது எதைக் கூறித் தொடங்கப் போகிறார். எம்முடன் இருந்து சங்கு முழங்கியவர் அவர் இப்போது எமக்கு எதிராக சங்கு ஊதுகிறார். அவரால் தமிழரின் வாழ்வும் நிலமும் அழியப் போகிறது.

எமது 140ஆயிரம் உறவுகளை ஒரு வாரத்திலே கொன்று ஒழித்தது மஹிந்த ராஜபக்ஷவினுடை அரசு. எமது மக்களின் இரத்தம் தோய்ந்த அவரது கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் எம்முடையவர்கள். இந்த கரத்தை

முத்தமிடுவதற்கா எங்களுடைய கரங்களால் உங்களுக்கு வாக்களித்தோம் என்பதை எமது மக்கள் அவரிடம் கேட்க வேண்டும்.

நாங்கள் தமிழர்கள் எங்களுக்கு மானம் உண்டு எங்களுக்குரிய மொழி இனம் என்ற உணர்வு உண்டு இதற்கு பின்புதான் நாங்கள் கௌரவமான பாதுகாப்பான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வோம். இந்த அபிவிருத்தியில் சிங்கள பேரினவாதம் உள்ளே நுழைந்துவிட இடமளிக்க மாட்டோம்.

சிங்கள கட்சிகளுடன் இணைந்து செய்யப்படும் அபிவிருத்தி சிங்கள தேசியவாத விதைப்பாக அவர்களின் ஊடுருவலாக உள்வாங்கலாக அவை அமையும். இதற்கான வாயில்களாக எம்மைவிட்டு மாறிச் செல்பவர்கள் இருப்பார்கள்.

அரசாட்சியில் நாங்கள் இருக்கப்போவதில்லை ஆனால் எங்களுடைய மக்களுக்கான தேவைகளை கௌரவத்தோடு கொண்டுவருவோம் என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.battinaatham.net/description.php?art=17705

 

4 hours ago, கிருபன் said:

நாங்கள் தமிழர்கள் எங்களுக்கு மானம் உண்டு எங்களுக்குரிய மொழி இனம் என்ற உணர்வு உண்டு இதற்கு பின்புதான் நாங்கள் கௌரவமான பாதுகாப்பான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வோம். இந்த அபிவிருத்தியில் சிங்கள பேரினவாதம் உள்ளே நுழைந்துவிட இடமளிக்க மாட்டோம்.

மக்களை ஏமாற்ற வருடத்துக்கு ஓரிரு தடவைகள் தான் நீங்கள் இதை சொல்கிறீர்கள் என்பது எமது சந்தேகம்.

இல்லை என்றால் இதே கருத்தை அனுதினமும் வலியுறுத்தும், சந்திப்பார்களிடமெல்லாம் வலியுறுத்தும், நியாயத்தை ஆவணப்படுத்தி சந்திப்பவர்களிடமெல்லாம் கொடுக்கும் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களை எப்பவோ (சில வருடங்களின் முன்னரே) கூட்டமைப்பின் தலைவராக ஆக்கியிருப்பீர்கள்.

நீங்கள் ஒருநாளும் அப்படிச் செய்யேலை,.செய்யவும் நினைக்கேலை.  

எனவே, நீங்கள் மக்களை ஏமாற்றத் தான்  வருடத்துக்கு ஓரிரு தடவைகள் இதை சொல்கிறீர்கள். இதில் இப்ப சந்தேகமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

மக்களை ஏமாற்ற வருடத்துக்கு ஓரிரு தடவைகள் தான் நீங்கள் இதை சொல்கிறீர்கள் என்பது எமது சந்தேகம்.

இல்லை என்றால் இதே கருத்தை அனுதினமும் வலியுறுத்தும், சந்திப்பார்களிடமெல்லாம் வலியுறுத்தும், நியாயத்தை ஆவணப்படுத்தி சந்திப்பவர்களிடமெல்லாம் கொடுக்கும் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களை எப்பவோ (சில வருடங்களின் முன்னரே) கூட்டமைப்பின் தலைவராக ஆக்கியிருப்பீர்கள்.

நீங்கள் ஒருநாளும் அப்படிச் செய்யேலை,.செய்யவும் நினைக்கேலை.  

எனவே, நீங்கள் மக்களை ஏமாற்றத் தான்  வருடத்துக்கு ஓரிரு தடவைகள் இதை சொல்கிறீர்கள். இதில் இப்ப சந்தேகமே இல்லை.

 

கூட்டமைப்பின் தலைவராக சீ வி யா?....முதலில் அவரால் தொடங்கப்பட்ட்ட கட்சியை எவ்வளவு நாள் கொண்டு நடத்துறார் என்று பார்ப்போம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

கூட்டமைப்பின் தலைவராக சீ வி யா?....முதலில் அவரால் தொடங்கப்பட்ட்ட கட்சியை எவ்வளவு நாள் கொண்டு நடத்துறார் என்று பார்ப்போம் 

 

அதுக்குத் தான் இலங்கை இந்திய புலனாய்வாளர்கள் நிறைய இருக்கிறார்களே ஆனபடியால் எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை.

18 hours ago, ரதி said:

கூட்டமைப்பின் தலைவராக சீ வி யா?


அப்ப என்ன உங்கடை கருணாவையா போட முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:


அப்ப என்ன உங்கடை கருணாவையா போட முடியும்?

சீ வீ யை விட பிள்ளையானே நிர்வாகத் திறன் மிக்கவர் இவரே[பிள்ளையானே ] இப்படி என்டால் கருணா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.