Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடுமலை கௌசல்யா மறுமணம் - சங்கரின் குடும்பம் வாழ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
உடுமலை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்படத்தின் காப்புரிமை NATHAN G Image caption கௌசல்யா

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் மறுமணம் நடைபெற்றது.

 

பறை இசை முழங்கும் சமயத்தில் கௌசல்யா - சக்தி ஆகியோர் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார்.

சாதிய வன்முறைகள் மற்றும் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்ணுரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார் கெளசல்யா.

"சாதி ஒழிப்புக் களத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்," என்று திருமணத்துக்குப் பிறகு கௌசல்யா கூறினார்.

உடுமலை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார் Image caption கௌசல்யா - சக்தி

உறுதிமொழி ஏற்றபின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கௌசல்யா - சக்தி தம்பதி, அங்கிருந்த பறை இசைக் கலைஞர்கள் உடன் சேர்ந்து தாங்களும் பறையை இசைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் பழநியைச் கெளசல்யா ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 2015ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி சாதி இந்துக்களான கௌசல்யாவின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

கௌசல்யா - சக்தி

சங்கரின் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கொலை வழக்கில் கெளசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி - அன்னலட்சுமி உறவினர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜன் ஆறு பேருக்கு தூக்குதண்டை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அன்னலட்சுமி, அவரது சகோதரர் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா எனும் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபர் ஆகிய மூவர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கௌசல்யா கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பு ஆணவப்படுகொலைக்கு எதிராக வழங்கப்பட்ட ஒரு வரவேற்கப்பட்ட தீர்ப்பாக பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதினர். சங்கர் கொலைக்குப்பிறகு ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் கௌசல்யா வலியுறுத்தி வருகிறார்.

உடுமலை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்

இந்நிலையில் அவருக்கு தற்போது கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவருடன் மறுமணம் நடைபெற்றுள்ளது. சக்தி தமிழக பாரம்பரிய கலையான பறை இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்று சக்தி, கெளசல்யா இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் நடத்தி வைத்தார். உடன் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, எவிடன்ஸ் கதிர் மற்றும் செயற்பாட்டாளர்கள் உடனிருந்தனர்.

கௌசல்யாவே இதற்கு முன்னர் பல சாதி எதிர்ப்புத் திருமணங்களை நடத்திவைத்துள்ளதுடன், பல சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறார்.

https://www.bbc.com/tamil/india-46498406

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமூக சீர்திருத்தம் என்ற போர்வையில் வெள்ளைக்கார  கலாச்சாரங்களை தயவுசெய்யுது இறக்குமதி செய்து விடாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடுமலை கௌசல்யா: "என் மறுமணம் பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் சமூகப் பணி பதிலளிக்கும்"

அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ்
  •  
உடுமலை கௌசல்யாபடத்தின் காப்புரிமை FACEBOOK

"நான் சங்கரை திருமணம் செய்த போதும், எங்களை எதிர்த்தார்கள். தற்போது சக்தியை திருமணம் செய்த போதும், சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தனியாக முடிவெடுப்பதை பொதுச் சமூகம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை" என்கிறார் கோவையில் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா.

 

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யா, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று மறுமணம் செய்து கொண்டார்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவருடன் மறுமணம் நடைபெற்றுள்ளது. சக்தி தமிழக பாரம்பரிய கலையான பறை இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

"பெரும்பாலான மக்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள். சங்கரின் கிராமமும் எனக்கு முழு ஆதரவு அளித்துள்ளது" என்று பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறுகிறார் தற்போது உடுமலைப்பேட்டையில் உள்ள சங்கர் வீட்டில் இருக்கும் கௌசல்யா.

கேள்வி: எப்போது சக்தியை முதல் முதலில் பார்த்தீர்கள்?

பதில்: 2016ஆம் ஆண்டு பறையிசை நிகழ்வு ஒன்றில், முதல் முறையாக சக்தியை சந்தித்தேன். பறை கற்றுக் கொள்வதற்காக சென்றிருந்தேன். அவரும் சமூகப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

உடுமலை கௌசல்யாபடத்தின் காப்புரிமை NATHAN G

கேள்வி: சக்தியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவு எப்போது எடுக்கப்பட்டது?

ப: இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நாங்கள் இந்த முடிவினை எடுத்தோம். உடனையே சங்கரின் சகோதரர்களை பார்த்து இதுகுறித்து பேசினோம். அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தார்கள்.

கேள்வி: மறுமணத்திற்கு பிறகு உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது?

ப: நான் எப்போதும் நம்பிக்கையுடன்தான் இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக இப்படிதான் இருந்து வருகிறேன்.

கேள்வி: இன்னும் பயம் இருக்கிறதா?

ப: எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கள் பாதுகாப்பு குறித்து சக்தி வீட்டாரும், சங்கர் வீட்டாரும் கவலையில் உள்ளனர். எங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

கேள்வி: மறுமணத்திற்கு பிறகு எவ்வாறு உணர்கிறீர்கள்?

ப: அதே மாதிரிதான் உணர்கிறேன். மறுமணம் என் வாழ்க்கையில் நடந்த இன்னொரு நிகழ்வு. தொடர்ந்து சமூகப்பணி செய்வேன்.

உடுமலை கௌசல்யா

கேள்வி: ஃபேஸ்புக்கில் உங்கள் மறுமணம் குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

ப: ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சமூகப் புரிதல் இல்லை. அவர்களுக்கு நான் தொடரப் போகும் பணி பதிலளிக்கும்.

கேள்வி: நீங்கள் திருமணம் செய்து கொண்டது உங்கள் பெற்றோருக்கு தெரியுமா?

ப: நான் அவர்களிடம் சொல்லவில்லை.

கேள்வி: நீங்கள் சங்கர் வீட்டில் இருப்பீர்களா அல்லது சக்தி வீட்டிலா?

ப: சமூகப்பணி எங்கிருக்கிறதோ அங்கு இருப்பேன்.

https://www.bbc.com/tamil/india-46504354

Edited by பிழம்பு

16 hours ago, குமாரசாமி said:

சமூக சீர்திருத்தம் என்ற போர்வையில் வெள்ளைக்கார  கலாச்சாரங்களை தயவுசெய்யுது இறக்குமதி செய்து விடாதீர்கள்.

மத மற்றும் சாதி வெறிகொண்டு நடு வீதியில் கோரமாக படுகொலை செய்யும் பண்பாட்டை விட வெள்ளைக் கார பண்பாடு பல்மடங்கு மேல்.

வெள்ளைக்கார பண்பாடுதான் பல மில்லியன் கணக்கான எம்மைப் போன்ற ஏதிலிகளுக்கு உறைவிடம் கொடுத்து எமது வாழ்விற்கு வழிசேர்த்துள்ளது. 

தற்போதுள்ள மனித நாகரீக பண்பின் உச்சத்தில் வெள்ளைக்கார பண்பாடுள்ளது என்பது பல வழிகளில் நிறுவனமாகப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சமூக சீர்திருத்தம் என்ற போர்வையில் வெள்ளைக்கார  கலாச்சாரங்களை தயவுசெய்யுது இறக்குமதி செய்து விடாதீர்கள்.

ஏன் அண்ணா, அந்தப் பெண் மறுமணம் செய்தது பிழையா

இவர் திருமணம் செய்துள்ள ஆள் மீது பல குற்ற சாட்டுகள் உள்ளதாக சொல்கின்ற ர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடுமலை கெளசல்யா திருமணத்தை மட்டும் வசைபாடுவது ஏன்?

  •  
மறுமணம் ஆணவக் கொலைபடத்தின் காப்புரிமை Facebook

மறுமணம் என்பது தமிழகத்துக்குப் புதிதல்ல. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் கெளசல்யா திருமணத்தை மட்டும் வசைபாடுவது ஏன்? என பிபிசி நேயர்களிடன் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு அவர்கள் அளித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

வாதம் விவாதம்

ஆணாதிக்க சமுதாயம் இன்னமும் ஓய்ந்த பாடில்லை என்பது இங்குள்ள சில பதிவுகளை பார்த்தால் தெரியும் என்கிறார் தேவி ராமசாமி. அவர், " திருமதி கௌசல்யாவின் கணவர் சங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதலாயே சாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டதன் காரணமாக கைம்பெண் ஆனவர். மற்ற சாதாரண பெண்களைப்போல மூலையில் முடங்கிப்போய் அடங்காமல் இந்த சமுதாய அவலத்திற்கு எதிராக செயல்படும் முற்போக்கு சிந்தனையாளர்களுடன் கைகோர்த்து அந்த கொடுமைகளுக்கு எதிராக போராடி வருபவர். தன் கருத்தை ஒத்த ஒரு வாலிபனை எல்லோர் முன்னிலையிலும் மறுமணம் செய்து கொண்டதில் என்ன தவறு?" என்கிறார்.

Presentational grey line ஆணவக் கொலைபடத்தின் காப்புரிமை Twitter Presentational grey line

"அவர்கள் சங்கரை கொலை செய்தது குற்றமில்லையாம்...கெளசல்யா மறுமணம் செய்தது குற்றமாம் இதற்கு பெயர்தான் சாதிவெறி" என்கிறார் சாமி சாம்.

கெளசல்யாபடத்தின் காப்புரிமை Nathan G Presentational grey line ஆணவக் கொலை Presentational grey line

பெண்களை வெறும் உடமைகளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு இந்த பெண் யாரென்றுகூட தெரியாது நேரில் பார்த்துகூட இருக்கமாட்டார்கள். பின் ஏன் இந்த வன்மம்? இது வெறும் ஜாதிவெறி மட்டுமல்ல ஆணாதிக்கமும் பெண்களை மனிதர்களாக நினைக்காது பொருள்களாக என்னும் மனப்பாங்கும் இணைத்த ஒரு உளவியல் இது என்கிறார் கோமான் முகம்மது.

Presentational grey line Presentational grey line ஆணவக் கொலைபடத்தின் காப்புரிமை Twitter Presentational grey line

"உங்களில் எவர் ஒருவரால் சங்கரை திருப்பி அப்பெண்ணிடம் சேர்ப்பிக்க முடியுமோ அவர் மட்டும் கல்லெறியலாம்! வசைபாடலாம் திட்டலாம் ... இது திருமணம் என்பதைவிட பாதுகாப்புக்காகவே நடந்தது என்றே சொல்லலாம்" என்கிறார் அசோக் சுமன்.

Presentational grey line ஆணவக் கொலைபடத்தின் காப்புரிமை Twitter Presentational grey line

"ஏன் என்றால் ஒரு பெண் ஜாதி கட்டமைப்பையே எதிர்த்து அதை உடைப்பது மறுமணம் செய்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது." என்கிறார் நிரஞ்சன் தரணி.

கெளசல்யா

நாகரீகம் அடைந்த சமுதாயமாக மாறுவதற்கு தமிழகம் இன்னும் மிக மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியி௫க்கிறது என்பது மஹா நடராசனின் கருத்து.

https://www.bbc.com/tamil/india-46514100

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/10/2018 at 7:53 PM, ரதி said:

ஏன் அண்ணா, அந்தப் பெண் மறுமணம் செய்தது பிழையா

மறுமணத்திற்கு நான் எதிரியல்ல.
பறைதட்டி கும்மாளம் போடும் போது ஜீன்ஸ் எதற்கு? 
தமிழர்  உடைகளுக்கு பஞ்சமா?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

மறுமணத்திற்கு நான் எதிரியல்ல.
பறைதட்டி கும்மாளம் போடும் போது ஜீன்ஸ் எதற்கு? 
தமிழர்  உடைகளுக்கு பஞ்சமா?

நானும்,நீங்கள் இதைத் தான் சொல்லுவீர்கள் என என  எதிர் பார்த்தேன்...தெளிவு படுத்திக் கொள்ள கேட்டேன் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.