Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
December 12, 2018

DSC_0108.jpg?zoom=1.2100000262260437&res
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வட-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் இன்று புதன் கிழமை காலை போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று புதன் கிழமை(12.12.18) காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த அமைதி போராட்டத்தின் போது மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை உற்பட 8 மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்றிருந்தனர்.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட ,கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அரசியல் பிரதி நிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உற்பட ஆயிரக் கணக்கானவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பாக ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் எனவும்,குறித்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்?, புதைத்தவர்கள் யார்?,என்பது தொடர்பாக வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

மேலும் நாட்டில் இடம் பெற்று வரும் அரசியல் பிரச்சினை காரணமாக தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததோடு, குறித்த மனித எலும்பக்கூடுகள் தொடர்பாக ஆய்வுகளையும், வேளைத்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் ஐ.நா.சபைக்கு எழுதப்பட்ட மகஜர் ஏற்பாட்டுக் குழுவினரால் வாசிக்கப்பட்டதோடு,ஐ.நா.சபைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/106400/

Edited by பிழம்பு

5 hours ago, பிழம்பு said:
1 Min Read
December 12, 2018

DSC_0108.jpg?zoom=1.2100000262260437&res
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வட-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் இன்று புதன் கிழமை காலை போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று புதன் கிழமை(12.12.18) காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த அமைதி போராட்டத்தின் போது மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை உற்பட 8 மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்றிருந்தனர்.

நல்ல விடயத்துக்கான போராட்டம்! இன்னும் அழுத்தம் அதிகரிக்க வேண்டும்.

கூத்தமைப்பில் இருந்தும் ஒருத்தரையும் காணவில்லை கஜேந்திரனின் கட்சியிலிருந்து ஒருத்தரையும் காணவில்லை, விக்கியரின், அனந்தியின் புதுக் கடசிகளில் இருந்தும் ஒருத்தரையும் காணவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, நிழலி said:

நல்ல விடயத்துக்கான போராட்டம்! இன்னும் அழுத்தம் அதிகரிக்க வேண்டும்.

கூத்தமைப்பில் இருந்தும் ஒருத்தரையும் காணவில்லை கஜேந்திரனின் கட்சியிலிருந்து ஒருத்தரையும் காணவில்லை, விக்கியரின், அனந்தியின் புதுக் கடசிகளில் இருந்தும் ஒருத்தரையும் காணவில்லை

அங்கிருக்கும்  அநேகமான மக்கள் இராணுவத்திற்கு எதிராகவும் சிங்கள அரசிற்கு எதிராகவும் போரட மாட்டார்கள். காரணம்  பழையகால அச்சங்கள் இன்னும், இன்றும் இருக்கின்றது.

முக்கிய பெரும் கட்சிகள் முன்னெடுத்து செய்ய/செல்லவேண்டிய செயலை நாலுபேர் அனாதைகள் போல் செய்ய வேண்டியுள்ள துர்ப்பாக்கிய நிலை அங்கே நிலவுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நல்ல விடயத்துக்கான போராட்டம்! இன்னும் அழுத்தம் அதிகரிக்க வேண்டும்.

கூத்தமைப்பில் இருந்தும் ஒருத்தரையும் காணவில்லை கஜேந்திரனின் கட்சியிலிருந்து ஒருத்தரையும் காணவில்லை, விக்கியரின், அனந்தியின் புதுக் கடசிகளில் இருந்தும் ஒருத்தரையும் காணவில்லை

வெறும் எலும்புகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வில்லை இருவரும்

8 hours ago, குமாரசாமி said:

அங்கிருக்கும்  அநேகமான மக்கள் இராணுவத்திற்கு எதிராகவும் சிங்கள அரசிற்கு எதிராகவும் போரட மாட்டார்கள். காரணம்  பழையகால அச்சங்கள் இன்னும், இன்றும் இருக்கின்றது.

முக்கிய பெரும் கட்சிகள் முன்னெடுத்து செய்ய/செல்லவேண்டிய செயலை நாலுபேர் அனாதைகள் போல் செய்ய வேண்டியுள்ள துர்ப்பாக்கிய நிலை அங்கே நிலவுகின்றது.

வெறும் எலும்புகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வில்லை இருவரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.